சூர்யா: உருப்பசி என்றால் ஊர்வசி தானே தாத்தா?
தாத்தா: ஆமாம்டா. உருப்பசியும் விசயன் தங்கியிருக்கும் இடத்திற்கு தன்னைத் தயார்படுத்திக் கொண்டு செல்கிறாள். ஆனால் விசயன் அவளை வணங்குகிறான். நாராயண முனிவரின் தொடையி-ருந்து - உருவி-ருந்து வந்ததால் தானே இவள் உருப்பசி. எனவே இவள் வணங்கத்தக்கவள் என்பது விசயனின் முடிவு. ஆனால் அவளுக்குக் கோபம் வருகிறது. "பேடியாகப் போ' என்று சாபம் கொடுத்துவிடுகிறாள்.
சூர்யா: அய்யய்யோ - அப்புறம் நம்ம விசயன் பேடி ஆயிடுவானா?
தாத்தா: உடனே இந்திரனுக்கு இந்த தகவல் போகிறது. தேவமாந்தர் சாபம் கொடுத்தால் திரும்பப் பெற முடியாது. ஆனால் மாற்றலாம். சில நிபந்தனைகளைப் போடலாம். அவவ்வளவு செல்வாக்கு அந்த சொல்லுக்கு. எனவே இந்திரன் விசயனை நேரில் அழைத்துக் கொண்டு உருப்பசியின் மாளிகைக்குப் போகிறான். இந்திரனைப் பார்த்ததும் பதைபதைப்புடன் எழுகிறாள் உருப்பசி. விடயத்தைக் கேள்விப்பட்டதும் சாபத்தை மாற்றி வேண்டும் போது பேடியாக மாறலாம் என்று சாபவிடை கொடுக்கிறாள். பின்னர் இந்திரன் சுதன்மையில் விசயனின் பிரதாபங்களை எல்லோருக்கும் எடுத்துச் சொல்கிறான்.
சூர்யா: சுதன்மை என்றால் என்ன தாத்தா?
தாத்தா: நாம் சட்டசபை - நாடாளுமன்றம் என்கிறோமே அதுபோல இந்திரன் நடத்தும் சபையின் பெயர் தான் சுதன்மை. தீக்கடவுளுக்கு உதவி செய்து காணடவ வனத்தை எரித்த கதையைச் சொல்- . தீக்கடவுள் அப்போது விசயனுக்கு தேர், காண்டீபம் என்னும் வில், வற்றாத அம்பறாத்துணி, வெற்றியை வழங்கும் குரங்குக் கொடி ஆகியவற்றை வழ்ங்கி உள்ளதைத் தெரிவிக்கிறான். பின்னரர் இந்திரன் நிவாதகவசர் என்னும் அரக்கர் மிகவும் அட்டகாசம் புரிவதாகவும் அவைனை அடக்கி உதவ வேண்டும் என்றும் விசயனை இந்திராணி முன்னிலையில் வேண்டுகிறார். அதற்கு விசயன் "உங்களால் முடியாதது மானிடனாகிய என்னால் எப்படி முடியும்?' என்று கேட்கிறான். உடனே இந்திரன் "உன்னால் தான் முடியும் தம்பி. நீ உதவி செய்தே ஆகவேண்டும்' என்று வற்புறுத்துகிறான். விசயனும் உள மகிழ்ச்சியோடு ஒத்துக் கொள்கிறான். 'தவாத போர் வலியின் மிக்க தவத்தினர்; சாபம் வல்லோர்; சுவாதமே வீசி, எல்லா உலகையும் துளக்குகிற்போர்; விவாதமே விளைக்கும் சொல்லர்; வெகுளியே விளையும் நெஞ்சர்;- நிவாத கவசத்தர் என்னும் பெயருடையக் கொடிய நீசர். செற்றிட, நின்னை அன்றி, செகத்தினில் சிலர் வேறு உண்டோ?17 வெற்றி வெஞ் சிலை கொள் வீர! இவ் வரம் வேண்டிற்று' என்றான் இந்திரன். உடனே இந்திரன் தன்னுடைய தேரை விசயனுக்குக் கொடுத்து தேர்ப்பாகன் மாதயையும் உடன் அனுப்புகிறான். விசயன் போர்க்கோலம் பூண்டு உடனே செல்கிறான். போகும் வழியில் அந்த அசுரர்களின் பலம் என்ன? - பலவீனம் என்ன என்பதை தேர்ப்பபாகன் மாத-யிடம் தெரிந்து கொள்கிறான். இப்போது தான் நாம் இன்று வங்காள விரிகுடா என்று அழைக்கிறோமே அந்தக் கட-ன் வரலாற்றைத் தெரிவிக்கிறார் இந்திரன். நாம் ஏற்கனவே இதைப் பற்றி அறிவோம். ஆனால் இந்த இடத்தில் அந்தக் கதையைச் சொல்லாமல் போனால் கதையின் தொடர்ச்சி சரியாக அமையாது. எனவே மீண்டும் ஒருமுறை சுருக்கமாகப் பார்ப்போம். சூரியகுலத்தில் சகரன் என்று ஒரு அரசன் இருந்தான். அவனுக்கு இரண்டு மகன்கள். மூத்த மனைவியின் மகன் அசமஞ்சன். மிகுந்த கெட்ட குணமுடையவன். எனவே அவனைத் துரத்தி விட்டு அவன் மகனாகிய அம்சுமான் என்பவனோடும் இளையமனைவியின் மைந்தர்கள் அறுபதினாயிரம் பேரோடும் அரசாண்டு வருகிறான். அப்போது அசுவமேதயாகம் ஒன்று நடத்துகிறான் சகரன். அதன் பொருட்டு பூமிவலம் வரும் பொருட்டு ஒரு குதிரையை அனுப்புகிறான். அந்த குதிரையை இந்திரன் மாயையால் கவர்ந்து செல்கிறான். அப்போது பாதாள லோகத்தில் கபில முனி தவம் செய்து கொண்டு இருக்கிறார். அவர் அருகில் அந்தக் குதிரையை ஒளித்து வைக்கிறான் இந்திரன். குதிரையைத் தேடி சகரகுமாரர்கள் அறுபதினாயிரம் பேரும் செல்கிறார்கள். மண்ணுலகிலும் விண்ணுலகிலும் தேடுகிறார்கள். கிடைக்கவில்லை. கலங்குகிறார்கள். வடகிழக்குத் திசையில் நூறு யோசனை அகலம் தமது கை நகங்களால் தோண்டிப் பள்ளம் ஆக்குகிறார்கள். அந்த வழியாக பாதாள உலகம் செல்கிறார்கள். அங்கே கபிலமுனிவர் தவம் செய்து கொண்டிருக்கிறார். அவர் குடி-ன் அருகில் குதிரை இருக்கிறது. அவரைச் சீண்டுகிறார்கள். அவர் கண்ணைத் திறந்ததும் அனைவரும் சாம்பலாகிறார்கள். போன மகன்களைக் காணவில்லையே என வருந்தி பேரனை அனுப்புகிறார். அவன் வந்து பார்க்கிறான். அறுபதாயில் சாம்பல் மலைகள் உள்ளதைக் காண்கிறான். நடந்ததை அறிந்து வருந்துகிறான். இவர்கள் நற்கதி அடைய வேண்டுமானால் வானுலகத்தி-ருந்து கங்கை வர வேண்டும் என்றும் தெரிந்து கொள்கிறன். ஆனால் அவனால் இயலவில்லை. அவனுக்குப்பின் வந்த பகீரதன் கடும் தவம் புரிந்து கங்கையை பூவுலகுக்குக் கொண்டு வருகிறான். இதற்காக அவன் பிரம்மனை நோக்கித் தவம் இயற்றுகிறான். பின்னர் திருமாலை நோக்கித் தவம் இருக்கிறான். பின்னர் சிவனை நோக்கித் தவம் இருக்கிறான். இப்படி வரும் தடைகளை எல்லாம் படிக்கற்களாக மாற்றி இறுதியில் கங்கை இந்தியப் பெருநாட்டில் பாய்கிறது. அது வங்காள விரிகுடாவில் கல்கத்தா நகரம் அருகில் கங்காசாகர் என்ற இடத்தில் கடலுடன் கலக்கிறது. கங்கையின் வேகம் - ஏற்கனவே அறுபதனாயிரம் சகரர்கள் தோண்டிய பள்ளம் இவைகள் தான் இன்றைய வங்காள விரிகுடாவிற்குக் காரணம். அதனால் தான் நமது வில்-யார் தொடுகடல் என்ற சொல்லால் இந்த கடலை வர்ணனை செய்கிறார். இப்படிப்பட்ட இந்த பாதாள உலகத்தில் தோய்ந்துள்ள ஒரு நகரம் தான் தோயமாபுரம். நீரிடையே உள்ள நகரம் - எனவே தான் தோயமாபுரம் - இதிலே அரசாட்சி புரிபவன் தான் நிவாதகவசன். அரக்கர் கதையை அறிந்தவுடன் இந்திர உலகில் தனக்கு இசை பயிற்றுவித்த சித்திரசேனன் என்னும் ஆசிரியரை தூது அனுப்புகிறான் விசயன். மாத- அந்த அரக்கரின் வீரத்தைப் புகழும் போது பிரம்ம தேவனின் ஆயுளை விட இவனுக்கு அதிகம் ஆயுள் என்ற விவரத்தையும் சொல்லுகிறார். அவனிடம் ஏதி (வாள்), சூலம், எழு (இரும்புத் தூண்), மழு, ஈட்டியின் சாதிகள் (பேரீட்டி, சிற்றீட்டி, எறியீட்டி) போன்ற ஆயுத வகைகள் ஏராளம் என்றும் அவன் படை எப்படி இருக்கும் என்பதையும் மாத- விளக்குகிறான்.'மூன்று கோடி அசுரர்; முகில் எனத் தோன்றும் மேனியர்; தோம் அறும் ஆற்றலர்; ஏன்று போர் பொரின், எவ் எவ் உலகையும் கீன்று, சேரக் கிழிக்கும் எயிற்றினார்; என்று கூறி இந்திரனிடம் இருந்து இந்த தோயமாபுரம் என்னும் நகரைக் கைப்பற்றி இப்போது ஆண்டு கொண்டிக்கிறார்கள் என்றும் தெரிவித்தான். சித்திரசேனன் தூது போனதும் வெகுண்டு எழுகிறான் அரக்கன். அசுரர்கள் ஆயுதங்களுடன் திரண்டு வருகிறார்கள். அவர்கள் சுடுசரம் தூவுகிறார்கள். விசயனும் கணைகள் பலவற்றை விடுகிறான். இறுதியில் விசயன் பிரமாத்திரம் தொடுக்கிறான். "கட்டு ஆர் முது கார்முக வீரனும், முன் கிட்டா, உலகோர் புகழ் கேழ் கிளர் சீர் முள் தாமரைமேல் முனிவன் படையைத் தொட்டான், அசுரேசர் தொலைந்து உகவே.'' என்கிறார் வில்-யார். அந்தக் கணை காற்றாய் - கனலாய் - அவுணர் கூற்றாய் விரைந்தது. அவர்கள் ஆவியைக் குடித்தது. ஒரு கோடி அசுரர் மாண்டனர். ஆனால் அவர்கள் மீண்டும் உயிருடன் எழுந்தனர். அப்போது வானி-ருந்து ஒரு ஒ- எழுந்தது. "வெம்படைக்கு இவர் மாளமாட்டார். இவர்கள் தலையைக் கொய்தாலும் மீண்டும் கூடுவர்.'' என்றது அந்த வானொ-. விசயன் சிவபெருமான் வழங்கிய பாசுபதக் கணையை எடுத்தான். விடுத்தான் அந்தக் கணையை. அனைவரையும் கொன்றது அந்த அற்புதப் படை. அதை வில்-யாரின் வார்த்தையில் கேட்டால் தான் புரியும். " அண்டம் உடைந்திட, உடன்று பொங்கிச் சிரித்தது; தனுசர் மெய்யும் சிந்தையும் சேரப் பற்றி, எரித்தது; தூ நீர் ஆடி இவனிடம் தன்னில் வந்து, தரித்தது, மீண்டும்;-அந்தச் சங்கரன் செங் கை வாளி.''. வெற்றியோடு இந்திரனின் உலகம் நோக்கி தேரைச் செலுத்தச் சொன்னான் விசயன். வழியில் அந்தரத்தில் ஒரு ஒப்பற்ற உலகத்தைக் கண்டான் விசயன். மாத-யிடம் இந்த உலகம் யாருடையது என்று கேட்டான். அந்த உலகத்தின் பெயர் இரணியபுரம் என்றும் அங்கு வாழும் காலகேயன் பற்றி மாத- விரிவாகத் தெரிவித்தான். காலகை மற்றும் புலோகை ஆகியோர் பிரமனைத் துதித்து வரம் பல பெற்றார்கள் எனவும் -தங்கள் மக்கள் தேவர்களால் அழிக்கப்படக்கூடாது என வரம் பெற்றார்கள் எனவும் அவர்களின் பெயர் காலகேயர் எனவும் -முப்புரம் போல பறந்து செல்லும் வல்லமை உடைய உலகம் ஒன்றைப் பெற்றார்கள் எனவும் அந்த உலகம் என்றும் விவரிக்க முடியாத அளவு வரங்களைப் பெற்றவர்கள் அவர்கள் என்றும் கூறினான் மாத-. விசயன் இவ்வளவு தூரம் வந்தோம் இவர்களையும் ஒருகை பார்ப்போம் என்று முடிவெடுத்து, "இவரையும் முடித்த பின்பே அமராவதி செல்வேன்; தேரை அங்குச் செலுத்து'' என்றான். இவர்களையும் வென்ற பிறகே அமராவதி செல்வது எனக் கூறி "இன்றே இவர் ஆவியும் தென்புலத்து ஏற்றி, பின்னர் அன்றே, இனி நான் அமராவதி செல்வது!'' என்று கூறினான். ஒரு மானுடன் வந்து எங்களை எதிர்ப்பதா என்று சினந்து காலகேயர் போர் தொடுத்தனர். சரிமாரியாக அம்பு தொடுத்தனர் அந்த அரக்கர்கள். அதை வில்-யார் சொல்-லே கேட்டால் தான் நல்லது. " கூளி கோடி உய்ப்ப, குஞ்சரங்கள் கோடி உய்ப்ப, பேர் ஆளி கோடி உய்ப்ப, வாயு கதிகொடு அந்தரத்தின்மேல் வாளி போதும் வாசி கோடி கோடி உய்ப்ப, வாவு தேர் ஓளியாக வானின் எல்லை மறைய உந்தி, முந்தினார்.'' விசயனும் கணைமழை பொழிந்தான். "'ஒன்று காலம் வந்தது, இங்கு உருத்து, நான் உடன்று, உமைக் கொன்று, காலன் ஊரில் உங்கள் ஆவியும் கொடுக்கவே.'' என்று கூறினான். காலகேயரின் படைகள் நடுங்கின. இவர்கள் போரினால் விண் சுழன்றது - திசைகள் சுழன்றன - கடல் சுழன்றது - மண் சுழன்றது - மலை சுழன்றது - வானவர் சுழன்றனர். யாவருடைய கண்ணும் சுழன்றது. விசயன் திறமையைக் கண்டு வியந்தனர் அரக்கர்கள். பின்னர் அவர்கள் விண்ணில் மறைந்து மாயப் போர் புரிந்தனர். இறுதியில் சிவபிரான் வழங்கிய பாசுபதக் கணையை விடுத்தான் விசயன். வில்-யார் அந்த கணை பற்றிக் கூறும் சொல்வித்தையை நாம் பார்க்க வேண்டும். "முச் சிரம் உடையது, மூ-இரு திரள் தோள் அச்சிரமுடன் எதிர் அழல் பொழி தறுகண் நச்சு அரவு அனையது, நகம் இறும் முனைவாய் வச்சிரம் அனையது'' அந்த கணையால் காலகேயரும் அவனது படை முழுவதும் மாண்டனர்.வந்து சேர்ந்தான் விசயன். இப்படியாக பசுபதி அருளிய பகழி கொண்டு வென்றான் விசயன். தேவர்கள் மகிழ்ந்தார்கள். இவனது வெற்றியைக் கொண்டாடினார்கள் தேவர்கள். அவர்களால் முடியாததை முடித்த வீரன் அல்லவா இவன். தேர்ப்பாகன் - மாத- என்னும் தேர்ச் சூதன் - விசயனது அடியிணையைத் தொழுதான். துள்ளினர் இமையவர். அந்த மாய உலகமான இரணியபுரமும் மறைந்தது. சித்திரசேனன் முன்னதாக ஓடிப்போய் இந்திரனிடம் வெற்றிச் செய்தியைக் கூறினான். இந்திரலோகம் - அமராவதி அமர்க்களப்பட்டது. அலங்காரம் செய்தார்கள் அந்த அமராவதியை. இந்திரன் நேரில் வந்து எதிர்கொண்டான் விசயனை. இன்னிசை முழங்கியது. முனிவர்கள் வந்து வாழ்த்தினர். "'மனிதன்' என்று, இவ் அருச்சுனன்தன்னை, இன்னே, நீதியால், அமரர் யாரும் நெஞ்சினில் இகழல்' என்று, மாதர்கள் வீதிதோறும் மலர் மழை சொரிந்து வாழ்த்த,'' விசயனை தனது சபையில் தக்க மரியாதைகள் செய்தான் இந்திரன். பின்னர் விசயன் தன் நாடு திரும்ப அனுமதி கேட்டான். சில நாட்கள் தங்கிச் செல்லும்படி கெஞ்சினான் இந்திரன். விசயனும் ஒப்புக் கொண்டான். பின்னர் இந்திரன் உரோமச முனிவரிடம் தருமரிடம் சென்று பாசுபதக் கணையை விசயன் பெற்ற விபரத்தையும் காலகேயர் மற்றும் பிற அவுணரை விசயன் வெற்றி கொண்டதையும் கூறும்படி வேண்டினான்."வரி சிலை விசயன் வந்து, வான் தவம் புரிந்தவாறும், அரிவை ஓர் பாகன் அன்பால் அவற்கு அருள் புரிந்தவாறும், இரிய என் பகையை எல்லாம் இவன் தனி தடிந்தவாறும், தருமனுக்கு உரைத்தி'' என்று கூறியதன் பேரில் உரோமச முனிவர் தருமனைக் காணப் புறப்பட்டுச் சென்றார். இத்துடன் இன்று கதையை முடித்துக் கொள்வோம். நாளை வீமனும் அனுமனும் சந்திக்கப் போகிறார்கள். மிகச் சுவையான கதை. சரியா.
No comments:
Post a Comment