Monday, September 20, 2010

SOURASHTRA AKSHARA IN YOUTUBE

நான் இன்று மார்கண்டே  SU சுரேஷ்குமார் என்பவரிடமிருந்து சில தகவல்களை எண் வலைப்பூவில் பெற்றேன்.  அதிலுள்ள தகவல்படி நான் SOURASHTRA AKSHAR என YOUTUBE இல் சொடுக்கினேன்.  மிக அருமையான படைப்பு.  நமது மொழியில் குறில் என்றால் என்ன - நெடில் என்றால் என்ன - சிறப்பு உயிரெழுத்து என்ன - என்பதை எல்லாம் குறிப்பிட்டார் . .  அதிலே ஒரு சிறப்பு அம்சம் என்ன என்றால் சௌரட்டிர மொழியில் மெய் எழுத்துக்கான இணைப்புகள் எல்லாம் வலது புறத்தில் தான் வரும் என்பதைச் சுட்டிக்காட்டினார்.  தமிழில் மே என்று எழுதினால் மகரத்திற்கு முன் கொம்பு வருகிறது.  ஹிந்தியில் ஹி என்று எழுதினால் கொம்பு முன்னால் வருகிறது.  ஆனால் நமது மொழியில் அப்படி இல்லை என்று குறுப்பிட்டு எழுதி இருந்தார்.  மொழி ஆர்வலர்கள் பற்றிய நீண்ட வரலாற்றை அவர் படங்களுடன் எழுதி இருந்தார்.  காணொலி என்பதால் ஆர்வலர்களின் புகைப்படங்களும் இருந்தன.  அதற்குரிய விளக்கமும் இருந்தது.  இவரைப் போன்ற நல்ல மொழி வளர்ச்சி ஆர்வலர்கள் ஒன்றுபட்டு முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.  எல்லா தகவல்களும் ஒரு குடையின் கீழ் கிடைக்க வேண்டும்.
திரு. சுரேஷ் குமார் அவர்கள் ஒரு கலை ஆர்வலராகவும் உள்ளார்.  ஆம்.  காஞ்சிவரம் என்னும் திரைப்படம்.  பலர் பார்த்திருக்க மாட்டார்கள்.   ஏன் என்றால் நல்ல கருத்து உள்ள படம்.  ஒரு நெசவாளியின் கனவு இதிலே விரிகிறது.  அவன் எவ்வளவு இன்னல் படுகிறான் என்பதை மிக அழகாக விளக்கி இருக்கும் திரைப்படம்.  இதிலே சில கட்சிகளை காணச் செய்து நமது சமூக நெசவாளர்களின் நிலையை திரு.சுரேஷ் குமார் விளக்க முயற்சி செய்து உள்ளார்.  வரவேற்கப் படவேண்டிய முயற்சி.  அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் ஒரு அமைப்பை நடத்துகிறார்கள்.   MILAN  என்று பெயர்.  அவர்கள் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள HARTFORD  என்னும் நகரத்திற்குச் சென்று இருந்தேன்.  அப்போது அவர்கள் நடத்தும் வலைதளத்தைப் பற்றி தகவல் கிடைத்தது.  அதிலே போய் பார்த்தல் அமெரிக்காவின் சட்டப் பிரிவுகள் - இந்திய சட்டப் பிரிவுகள் - இதிகாசங்கள் பற்றிய தகவல் - விதுர நீதி போன்ற சாத்திரங்களின் கருத்துகள் - ஹிந்துப் பண்டிகை விபரங்கள் - பல்வேறு சடங்குகள் பற்றிய விபரங்கள் - முன்னோர் கடன் என்னும் பித்ரு பூஜை பற்றிய விபரங்கள் -பாடல்கள், சமையல் குறிப்புகள், அழகுக் குறிப்புகள், திருக்குறள் பற்றி ஆங்கிலத்தில் அருமையான தொகுப்பு - இப்படி நீண்டு கொண்டே போகிறது.  வலைத் தளத்தை அவ்வளவு அழகாக வடிவமைத்து உள்ளார்கள்.  அதிலே மொழி பற்றிய அடிப்படைக் குறிப்பு இருந்தது.அதே போல SAIVAM.COM  என்னும் வலைத்தளத்தில் பன்னிரு திருமுறைகள் மற்றும் நெறிமுறைகளை மிக அழகாகக் கொடுத்து உள்ளார்கள்.  தமிழ் இறைப் பாடல்களுக்குப் பொருள் - விளக்க உரை - காணொலி வசதி - பாட்டுகளைக் கேட்கும் வசதி - ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், போன்ற மொழிகளில் மொழிபெயர்ப்பு - மொழிமாற்றம் (TRANSLATION AND TRANSLITERATION) வசதிகள் எல்லாம் உள்ளன.  அப்படி ஒரு தளம் நம் மொழி ஆர்வலர்களுக்கு இருக்க வேண்டும்.  அதிலே தற்போது பதிப்பிக்கப்பட்டுள்ள அத்தனை நூல்களும் படிக்க - நகலெடுக்க - மின்னஞ்சலில் அனுப்ப வசதி இருக்க வேண்டும்.  அந்த தளத்திலிருந்தே பிற வலைப்பூக்கள் மற்றும் YOUTUBE போன்ற தளங்களுக்கு சொடுக்கினால் இணைப்பு கிடைக்கும் வசதி இருக்க வேண்டும்.  அப்படி ஒரு நிகழ்வு விரைவில் வரவேண்டும்.
அறிவின் ஊற்று பொங்கட்டும்.
இன்பம் நமக்குள் இருக்கிறது.
எதிர்பார்க்காதே பிறரிடத்தில்
வாழும் மொழியை வளப்படுத்து
வளரும் கணினியில் மொழியை வை
களைந்துவிடு ஊர் அகந்தையை
இணைந்துவிடு ஓர் இனமாய்
நாளும் பேசி நன்கெழுதி
நமது தாயைக் காத்திடுவோம்
ஒன்று பட்டால் வாழ்வுயரும்
உதவி செய்தால் உதவிவரும்
நன்று செய்தால் நன்றிவரும்

ஜாதியைப் பற்றிய கணக்கெடுப்பு வரும்போது சௌரட்டிரர்
 என்று ஓங்கி முழங்கு.  பல சலுகைகள் உள்ளன ஒன்றிணைந்தால். 
பெருமை பேசி இழந்து விடவேண்டாம்.

1 comment:

  1. ஐயன்மீர்,
    நீங்கள் காணொளி கண்டமைக்கும், அதன் பொருட்டு பதிவிட்டமைக்கும் மிக்க நன்றி,

    ஸௌராஷ்ட்ர மொழியின் பாதையில் உங்களின் இந்தப் பதிவும், ஏனைய பதிவுகளும் ஒரு வழிகாட்டியே,

    தொடருங்கள் உங்களின் பயணத்தை,

    என்றும் அன்புடன்,
    மார்கண்டேயன்.

    ReplyDelete