Thursday, September 9, 2010

audio c.d.s for sourashtra language - regarding.

நான் அமெரிக்க வந்த பிறகு பல நூலகங்களில் நூல்களைத் தேடும் போது உடன் c.d.யும் இருந்தது.  PRIDE AND PREJUDICE என்ற புதினத்துடன் இருந்த C.D.யைக் கேட்டேன்.  படிக்க வேண்டிய அவசியம் இல்லை.  அப்படியே கேட்க முடிகிறது.  அப்போது தான் எனக்கு DANIAL MANIAN என்னும் எனது உறவினரின் ஞாபகம் வந்தது.  அவர் நமது சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்றாலும் கிறித்துவ மதத்தைத் தழுவி விட்டார்.  திருமணம் கூட பெரியகுளத்தைச் சேர்ந்த ஒரு சௌரட்டிரக் கிருத்தவப் பெண்ணைத் தான் கட்டிக் கொண்டார்.  திருமணம் மதுரை ஜான்சி ராணி பூங்கா அருகில் உள்ள ஒரு கிருத்துவ ஆலயத்தில் நடந்தது.  பின்னர் அவர் வில்லாபுரம் பகுதியில் ஒரு சௌராட்டிரக்  கிருத்துவ ஆலயத்தைக் கட்டினார்.  நான் மத சுதந்திரத்தில் தலையிட விரும்புவதில்லை.  எனவே அந்த உறவினர் அளித்த போதெல்லாம் சென்று வந்தேன்.  ஒரு மொழியின் வளர்ச்சி இறை நம்பிக்கையோடு தொடர்புடையது என்னும் கருத்து கொண்டவன் நான்.   மதம் அல்லது சமயம் என்பது மொழியின் வளர்ச்சியோடு வருவது.   தமிழில் கூட மலைப் பகுதியில் இருந்தவர்களுக்கு ஒரு தெய்வம் - மருத நிலத்தவருக்கு  ஒரு தெய்வம், நெய்தல் நிலப் பகுதிக்கு ஒரு தெய்வம் என்று இடத்திற்கு தகுந்தார் போல் தெய்வங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.  சிலப்பதிகாரத்திலே பல கருத்துடையவர்கள் வாதிடுவது போல் கருத்து உள்ளது.  மணிமேகலையிலும் இது தொடர்கிறது.   மதங்கள் - சமயங்கள் இருந்தால் இலக்கியம் வளர்ச்சி அடைகிறது.  அவரவர் தெய்வங்களுக்காக - சமயக் கருத்துக்காக காவியங்கள் தோன்றுகின்றன. 
இவர் கிருத்துவக் கருத்துகளை இலங்கை வானொலியில் நமது மொழியில் தொடர்ந்து பேசி இருக்கிறார்.  அதை இரு  குறுந்தகடாக மாற்றி எனக்குக் கொடுத்தார்.  கேட்டேன்.  பல சொற்கள் நமது மொழியில் இல்லாமல் இருந்தாலும் - இப்படி ஒரு மொழி பேச்சு வழக்கில் உள்ளது என்பதைப் பறைசாற்றியது அந்த குறுந்தகடுகள்.  பின்னர் அவர் கிருத்துவ வேதாகமத்தை முறையாக அவர்கள் சமய ஆர்வலர்கள் உதவியுடன் ஒரு கேட்கும் பைபிள் என்று ஒரு பெட்டியைக் கொடுத்தார்.  நன்றாக இருந்தது.  எப்பொழுது வேண்டுமானாலும் புதிய ஏற்பாட்டினை நமது மொழியில் கேட்க முடிகிறது.  பல சௌராடிர வார்த்தைகளை அறிந்து கொள்ள முடிகிறது.
மொழி ஆர்வலர்கள் நமது மொழியில் உள்ள நாள்தோறும் பயன்படுத்தக்கூடிய வார்த்தைகளை வாக்கியங்களில் அமைத்து மொழிப் புலமை உள்ளவரைக் கொண்டு பதிந்து வெளியிட்டால்
கேட்க வசதியாக இருக்கும்.  உதாரணமாக ஹோகோல் , வோர்குலோ, வடதே, திச்சன் போன்ற வார்த்தைகள் இருக்க வேண்டும்.  அது வலைத் தளங்கள் மூலம் உலகிலுள்ள அனைத்து சௌராட்டிர மக்களுக்கும் கிடைக்க
வேண்டும்.  நான் அமெரிக்கா வந்த பிறகு நாயகி பாடல்கள், சமிபத்தில் வெளியிடப்பட்ட TMS மற்றும் சில பாடகர்களும் பாடகிகளும் பாடிய பாடல்களைக் கேட்க ஆரம்பித்தேன்.  தினமும் காலையிலும் மாலையிலும் இதைக் கேட்கிறேன்.  முதலில் ஒன்றும் புரியவில்லை.  ஆனால் இப்போது தேனாக இனிக்கிறது.  பல அருமையான வார்த்தைகள் உள்ளன.  கவி நயம் உள்ளது.  இப்போது வலைத் தளங்களில் நமது மொழியைப் பற்றி தேடுகிறேன். 
முயற்சி திருவினை ஆக்கும்.

No comments:

Post a Comment