நேற்று நான் நமது மொழியில் எழுதிப் பார்க்கலாம் என்று நினைத்தேன். நான் ஆங்கிலம் மூலம் தமிழில் தட்டச்சு செய்கிறேன். தமிழில் தட்டச்சு செய்வதே பெரிய வேலையாக உள்ளது. நமது மொழிச் சொற்களை தமிழ் மூலம் அடிக்கலாம் என்றால் மிகக் கடினமாக உள்ளது. எனவே மீண்டும் தமிழ் மொழிக்கே வந்து விட்டேன். ஏன் என்றால் நான் இந்த வலைப்பூ தவிர maduraiamarnath.blogspot.com, pithrupooja.blogspot.com, kadavulkathaigal.blogspot.com ஆகியவற்றிலும் என் எண்ணங்களைப் பதிவு செய்ய வேண்டி உள்ளது. வெள்ளிக்கிழமை மாலை என்றால் ஏதாவது ஒரு ஊருக்குக் குடும்பத்துடன் சென்று சனி - ஞாயிறு பொழுது போக்கிவிட்டு மீண்டும் திங்கள் காலை தான் வீட்டுக்கு வருகிறோம். அதனால் வாரம் ஐந்து நாட்கள் தான் கிடைக்கிறது. நடைப்பயிற்சிக்கு மாலை நேரத்தை ஒதுக்க வேண்டும். வலைத்தளங்களில் சுற்ற காலை வேளை ஒதுக்க வேண்டும். மீதம் கிடைக்கும் நேரத்தில் மட்டுமே இதில் பதிவு செய்ய முடிகிறது. பினனால் பார்த்துக் கொள்ளலாம் எனறு நினைத்தால் பல விஷயங்கள் மறந்து போய் விடும். எனவே, தமிழிலில் பதிவு செய்கிறேன்.
நேற்று நான் நமது மொழியில்
ஒரு குறும்படம் வெளியிடப்பட்டு இருப்பதாகப் படித்தேன்.
இதோ அந்தத் தகவல்.
செளராஷ்டிர மொழியில் தயாரிக்கப்பட்ட முதல் டெலிபிலிம் கெட்டிவிடொ (நிச்சயதார்த்தம்) சி.டி. வெளியிடப்பட்டது.இதுதொடர்பாக பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் நற்பணி மன்றத் தலைவர் எம்.பி.பாலன், கெட்டிவிடொ படத்தின் இய...
பின்னர் youtube தளத்தில் போய் Nivi_KasiJaathaVaadum.
இஎன்ற தளத்தைச் சொடுக்கினேன். VLR GANESH குடும்பத்தினர் வைத்திருக்கும் தளம் இது. அருமையான நமது மொழித் தாலாட்டுப் பாடல் உள்ளது. அனைவரும் கேட்டு மகிழுங்கள். இதேபோல YOUTUBE தளத்தில் சௌராஷ்டிரா என்று தட்டச்சு செய்தாலே பல தளங்கள் தெரிகின்றன. அவற்றில் ஒன்று கோணங்கி என்னும் தளம். அருமையான பாடல்களுடன் நமது மக்கள் ஆடலுடன் பாடலைத் தருகின்றனர். நாளை பார்ப்போமா?
No comments:
Post a Comment