Friday, September 10, 2010

TURNING POINT - BOOK STALL - IN MADURAI CITY

நேற்று நான் YOUTUBE இல் போய் SOURASHTRA என்று தட்டினேன்.  அடேங்கப்பா எவ்வளவு தகவல்கள்.  இவ்வளவையும் நான் படிக்காமல் - கேட்காமல் - சுவைக்காமல் காலம் கடத்தி இருக்கிறேனே என்று வருத்தப்பட்டேன்.  உபமன்யு அவர்கள் மிக அழகாக நமது மொழிப் பாடங்கள் நடத்துகிறார்.  திரு.சேதுராமனின் பல பேட்டிகள் உள்ளன.  பல அறிய கருத்துகளை அதிலே அவர் கூறுகிறார்.  நாடகங்கள் - பாளையம்கோட்டை பஜனை மடத்தின் பாடல்கள் என்று தொடர்கிறது.  தினசரி இனி இந்த தலங்களுக்குப் போய் சுவைக்க உள்ளேன்.
சென்னை சூளையில் உள்ள நமது கோவிலுக்காக ஒரு தளம் உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.  அதையும் பார்த்தேன்.  இரவு வெகு நேரம் ஆகி விட்டது.  அப்போது தான் சங்கமம் என்று ஒரு தளம் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது.  மதுரையில் உள்ள கூடல் அழகர் கோவில் பற்றி ஒரு நூல் வெளியிடுவதாகத் தெரிய வந்தது.  மதுரையிலேயே இருந்தும் அது பற்றிய தகவல் எனக்குத் - தவறு - அடியேனுக்குத் தெரியவில்லை.  ஆனால் வலைத் தளம் மூலம் தெரிந்து கொண்டேன்.  மதுரையில் உள்ள நமது பெண்கள் பள்ளிக்கு என ஒரு தளம் உள்ளது.  பல திட்டங்களைச் சொல்லி இருக்கிறார்கள்.  விரைவில் நிறைவேற வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்டேன்.
எனது நண்பர் குப்புராம் அவர்கள் - டவுன் ஹால் சாலையில் TURNING POINT என்று ஒரு புஸ்தகக் கடை வைத்து உள்ளார்.  பல நூல்களைப் படிக்க என்னைத் தூண்டியவர்களில் அவரும் ஒருவர்.  அருமையான நூல்களை அள்ளித் தந்தார்.  அவர் சமீபத்தில் அமெரிக்காவுக்குப் போய் திரும்பியவர்.  அவர் பொழுது போவது சிரமம் என்று என்னிடம் கூறி நல்வாழ்த்து கூறி என்னை அமெரிக்காவுக்கு வழி அனுப்பி வைத்தார்.  நல்லவேளை.  நான் சுதாரித்து ஒரு மடிக்கணினியை வாங்கிக் கொண்டு வந்து விட்டேன்.  காலையில் CNN BBC WEBDUNIA TAMIL,  ஆகிய தளங்களில் செய்திகளையும் - WINMANI  என்னும் தளத்தில் போது அறிவுக் கேள்விகள் மற்றும் கணினி பற்றிய கட்டுரைகளைப் படித்தேன்.  அப்படித்தான் இந்த வலைப்பூ பற்றி தெரிந்து நானே - தவறு - அடியேனே ஒரு வலைப்பூவை உருவாக்கி இப்படி கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள முடிகிறது.  மாலையில் நமது இன தளங்களைப் படித்து இன்புறுகிறேன்.  நமது இன அமைப்புகள் ஒன்று கூடி ஒரு பொதுவான தளம் ஒன்றை நிறுவி - SAIVAM -VAINAVAM - TAMIL HINDU  போன்று ஒரு தனி தளம் இருந்தால் எல்லோரும் அதில் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்து பகிர்ந்து கொள்ள முடியும்.  வலைத் தளங்கள் சிதறிக் கிடப்பதால் சிரமமாக உள்ளது.  விடுபடவும் வாய்ப்பு உள்ளது.  அரட்டை தொடரும்.

1 comment:

  1. ஸௌராஷ்ட்ர மொழியும், அதன் எழுத்துக்கள் உருவான விதமும், காணொளியாக பின்வரும் சுட்டியில் உள்ளது, பார்க்கவும், பார்த்துவிட்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்,

    http://www.youtube.com/watch?v=B0114mEm5d0

    மிக்க நன்றி,

    ReplyDelete