சௌரட்டிரர்களின் பல கோவில்களில் பாகவதர்களைக் கொண்டும் நமது சமுதாயப் பெண்களைக் கொண்டும் கோலாட்டம் மற்றும் பிற நடனங்கள் ஆடும் பழக்கம் உள்ளது. இது குறித்து அறிந்து கொள்வதற்காக நான் இன்று இணையத்தில் தேடியபோது sourashtri என்று ஒரு தளத்தைப் பார்க்க நேரிட்டது. அருமையான தளம். இவர் மிக அழகாக தமிழ் மொழியில் தனக்குத் தெரிந்த பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். நான் இதுவரை ஸ்ரீமத்பாகவததைப் பல முறை படித்து இருக்கிறேன். ஆனால் இவர் சொன்ன பகுதியப் படித்ததாக நினைவு இல்லை. மிக அழகாக கோலாட்டம் பிறந்த கதையா தந்த வக்த்ரன் என்னும் அர்ரக்கனின் கதையைக் கூறி அவன் வாயில் கண்ணனில் சக்ராயுதம் எப்படி சிக்கியது அவனைக் கொல்ல அவனைச் சிரிக்க வைக்க கண்ணன் கூத்தாடினார் என்றும் அதன் நினைவைப் போற்றும் வகையில் நடனம் ஆடப்படுவதாகக் கூறி விளக்கம் கொடுத்து இருக்கிறார். இதே போல ரேணுகா தேவியின் கதையை விளக்கி உள்ளார். மிக நன்றாக உள்ளது. அருள் கூர்ந்து இந்த தளத்திற்குச் சென்று படித்துப் பயனடையும்படி நமது சமூக மக்களைக் கேட்டுக் கொள்கிறேன். அவர் தளத்திலிருந்து சில பகுதிகளை நான் தருகிறேன். நீங்கள் தளத்திற்குச் சென்றால் நாட்டியங்களை நேரில் கண்டு மகிழலாம்.
தெகி3ச்சர் Vs திச்சர்
Posted by sourashtri under Sourashtra language
நாம் பல சௌராஷ்டிர சொற்களை திரித்து பெறுகிறோம். எழுத்து வடிவில் எழுதும் பழக்கம் இல்லாததால், ஒவோருவர் பேசும் திரிபே சரி என்று அவரவருக்கு படுகிறது.
சில திரிபு உதாரண சொற்களை பாருங்கள் :
1) பெ3டொ என்பதை ப3டொ3 என்றும் = மகன்
2) புஜெ என்பதை பிஜெ என்றும் = பூசை
3) தே3வ் என்பதை தோ3வ் என்றும் = கடவுள்
4) லிக்கி என்பதை நிக்கி என்றும் = எழுது
5) மர்யாத் என்பதை மொர்க்யாத் என்றும் = மரியாதை
என்றும் திரித்து கூறுவதால் (பேசுவதால் ) எழுத்தில் எழுதும் பொது கவனமாக, அந்த சொல்லின் சம்ஸ்கிருத மூல-சொல்லை வைத்துதான் ஸ்பெல்லிங் போடவும், சீர் செய்யவும், பிரித்து எழுதி பொருள் காணவும் முடிகிறது. இப்படி செய்தால்தான் அந்த சொல் பொருள் கொண்டதாக ஆகிறது. இல்லை எனில் உயிர் அற்றதாக ஆகிவிடுகிறது.
ஒரு பெண் தன் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டால்…
” பெ3ட்3கி3 த4ம்மி ஜீ ஹொராட்3 கெர்லிடி3ஸ் ” என்று சேலம் வட்டார வழக்கிலும்,
” பெ3ட்3கி3 தா4ம் சொட்டிகிஸ் “ என்று தஞ்சாவூர் வட்டார வழக்கிலும் பேசுகிறோம்.
இது தமிழின் ” வீட்டை விட்டு ஓடி போய் மணம் செய்துகொண்டால் ‘ என்ற வாக்கியத்தின் சௌராஷ்டிர மொழியாக்கம் தானே ?
சில வயதான பெருசுகள் மட்டும் ‘ சுயேச்சர் ஹோராட் கெர்லிடிஸ் “ என்று பேசுகின்றனர்.
‘ சுயேச்சர் = சுய + இச்செ + ஹோர் ” என்று பிரித்து பார்த்து பொருள் கொள்ளும்படி உள்ளது. இது தான் சௌராஷ்டிர மொழி வழக்கு. ஆனால் இதனை பெரும்பாலானோர் பயன்படுத்துவதில்லை.
ஏன் நானே, இச்செ என்ற வார்த்தை நம்மிடம் புழக்கத்தில் இல்லையே என்று முதலில் யோசித்தேன்.
பின் ” செக்கூர் தெகி3ச்சர் பி2ரி , தோ3ர் துசைலி ஜீ பள்ளோ ஹீரும் பொல்டிஸ் ” என்ற வாக்கியத்தில் வரும் ‘ தெகி3ச்சர் ‘ என்ற வார்த்தையில் இச்செ என்ற சொல் ஒளிந்து கொண்டுள்ளது என்று கண்டு கொண்டேன்.
இந்த ‘ தெகி3ச்சர்’ என்ற வார்த்தை மதுரையில் ‘ திச்சர் ‘ என்று பேசுகின்றனர்.
‘ திச்சர் ‘ என்ற மதுரை வழக்கை மட்டும் வைத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்தால், அந்த வார்த்தையின் ரிஷி-மூலம், நதி-மூலம் போன்ற etimology சமாச்சாரங்கள் கிடைக்காது.
ஆகவே மற்ற அனைத்து வட்டார வழக்குகளையும் வைத்துக்கொண்டு தான் மொழி வளர்ச்சி செய்ய இயலும்.
நடுவில் உள்ளது - என்பதற்கும்
இடையில் உள்ளது – என்பதற்கும் வேறுபாடு உள்ளது அல்லவா?
ம:த்தி = நடுவில்
ம:ஜார் = இடையில் என்று இதன் சௌராஷ்டிர நிகர் சொற்களை நாம் அறிந்து கொள்ள பல வாக்கியங்களை நாம் இந்த வார்த்தைகளை வைத்து பேசுவதன் அடிப்படையில் தீர்மானிக்க இயலும்.
‘ தீ3 தெக3 ம:த்3தி3 மி ஹிப்3பீ3றேஸ் ‘ என்பது போன்ற வாக்கியங்களால் ம:த்3தி3 = நடுவில் என்றும்,
‘ தென ம:ஜல்கெ3 பெ3ட்3கோ3 ‘ போன்ற வாக்கியங்களால் ம:ஜார் = இடையில் என்ற பொருளும் தருவதாக அறுதியிட்டு கூறலாம்.
கெ4ர்வார் Vs கெ4வ்ரார்
ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிறாள் என்பதற்கு சௌராஸ்ட்ரி மொழியில் ” கெ4ர்வார் க3ன் ஸே ” என்று சேலம், கும்பகோணம் வட்டார வழக்கில் கூறுகிறோம்.
ஆனால், மதுரையில் ” கெ4வ்ரார் க3ன் ஸே ” என்று வ் மற்றும் ர் எழுத்தை மாற்றிப் போட்டு உச்சரிக்கிறார்கள்.
இதனால் இந்த வார்த்தையினை உணர்வோடு (emotional ஆக ) பயன்படுத்த இயலாது போகிறது.
க3ர்ப்ப வார் – என்ற மூலச் சொல்லே பேச்சு வழக்கில் கெ4ர்வார் என்று திரிந்து இருக்கிறது.
இதன் உதாரண வாக்கியமாக ” தெகோ தின்னு-வார், வேள-வியாஜ்யம் நீ: கொந்து4ஸ் நா: கொட்டி அனி பு4ஞ்ஜி கா2ஸ் “ என்பதும்,
சசு-பௌன்டி ம:ஜார் சலோரெ வத்தக ” சென்னு வார், கேர் தார் துவி சொடி, கொ2ட்டோ செர்வி, ஜொ4டொ சொட்3வி வெனி கு3ம்பிலி ரா:த்த நீ: ? “
என்ற இரு வாக்கியங்களிலும் ‘வார்’ என்ற சொல் ‘நாள் ‘ என்ற பொருளிலும் பயன்படுத்தப் படுவதை காணலாம்.
இதனால் ‘ க3ர்ப + வார் ‘ என்று பிரித்து எழுதி பொருள் காணுவது ஆதாரம் உடையதாக ஆகிவிட்டது அல்லவா ?
இப்படி பிரித்து, அதன் சம்ஸ்கிருத மூல வார்த்தையான ‘ கர்ப்ப ‘ என்ற சொல்லின் அடியொற்றி சௌரஷ்ற்றதிலும் ஸ்பெல்லிங் போடுவது அதன் சிறப்பையும், பொருளையும் உணர்த்துகிறது அல்லவா?
இதனை விடுத்தது ‘ கேவ்ரார் ‘ என்ற மதுரையில் புழக்கத்தில் இருக்கும் சொல்லினை கொண்டு பொருள் காண முனைந்தால் எவ்வாறு பொருள் கிடைக்கும் ?
சௌராஷ்டிரா பாஷாம் மந்தூர்
ஹுதீர் ஹுதீர் திருஷ்டி
ஹுதிரி ஜா திருஷ்டி
ஸங்கம திருஷ்டி
செஜ்ஜா திருஷ்டி
பொ3ஜ்ஜா திருஷ்டி
மாயி திருஷ்டி
பாபு திருஷ்டி
அஸ்கினா திருஷ்டி ஜேட்3னோ
மெனி கப்பூர் லவி தீன் சுட்டு பிராடி பா4டாம் லே ஜி தகு3த்கொன்.
எ மந்தூர் ஹால் திருஷ்டி ஜார்த்தே கலந்துக் அமின் செய்லேக்கநீஸ் ஸே.
அம்ரே சொந்தமுன்
Tags: dayadin, Family relationship, Kinship terms, Relationship, relatives, salem, Salem sourashtra, sontham, sonthamun, sourashtra kinship terms
அம்ரே சொந்தமுன் களட்3ரெ பத3முன்
( பத3முன் = வார்த்தைகள்)
Father = Baap (बाप् ) , दद ( दादा )பாப்
Mother – Amba, ( अम्ब ) Maai ( माय् ) மாய்
Elder Brother = Nhanda ( नःन्द ) நஹ்ந்த
Younger brother = Bhai ( भै ) (भाय् )பாயி
Grand father = Baa ( बा ) Paternal / Maternal
Grand mother = Mhatta ambaa ( मःट्टम्ब ) ( Paternal )
Grand mother = Ajjaan ( अज्जान् & अज्जि ) ( Maternal )அஜ்ஜன்
Elder Sister = Baai ( बाय् )
Younger sister = Bhain ( भेय् न् )
Son in law = Jemai ( जेमै )
Daughter in law = BhouNdi ( भौण्डी )போவுண்டி
Grand Son = Nathe ( नत् ते )நத்தே
Grand Daugher = Nathni ( नत् नि )நதினி
Uncle ( Father’s brother ) = Kaka ( कक )
Uncle’s wife ( Father’s brother’s wife ) = Kaki ( ककि )
Uncle (Mother’s brother ) = Mama ( मम )
Uncle’s wife (Mother’s brother’s wife ) = Mami ( ममि )
Mother’s sister = Mousi ( मौसी )மௌசி
Mother’s sister’s husband = Mousa ( मौस )மௌசா
Co- Brother (Wife’s sister’s huaband ) = Satkud ( सट्कूड् )சொர்குட்
Father in law = Sosuro ( सोसुरो )சொசுரோ
mother in law = Sasu ( ससु )சசு
Step Mother = Nhanni maai ( नःन्नि माय् )
Second wife = Sovothi ( सोवोति )
Elder daugher-in-law = Jhetani ( जेःटनि ) ( जेष् ट रानी )ஜெஹெடணி
Elder daugher-in-law = Dovrani ( देव्राणि ) ( देवर रानी )
Husband’s Sister = Nenendi ( नेनेन्दी )
எ அஸ்கி கி2ன் …. and ….
Bhojai ( भोजै )
Phui ( फुय् )
Devar ( देवर )
Mhatta sosuro ( मःट्ट सोसुरो )
Nhanna sosuro ( मःट्ट ससु )
Nhanna sasu ( नःन् न ससु )
PadNathe ( Grand Grand son ) ( ( पड् नत् ते )
PadNathe ( Grand Grand dauther ) ( ( पड् नत् नि )
Bhabi ( Elder brother’s wife to younger ) = ( भबि )
Nhan sosuro ( Nhanna sosuro ) (Father in law’s younger brother) = ( नःन् सोसुरो )
Mhatta sosuro ( Father in law’s elder brother ) = ( मःट्ट सोसुरो )
ஜத அங்கு3ன் ஜுகு3யே ஸே….
goddess RENUKA –
ரேணுகா மாயி - அவ்ரே குல தெய்வமு மெனி மெனன். ஆனா ஜுகு தென்கோ விவரு களானா. எனு சொக்கட் சங்கிராசி. சொவ்துவோ
“ரேணுகா-ராஜா” என்பவரின் மகளே ரேணுகா. ரேணுகா-ராஜா வின் குரு அகஸ்திய . அவரின் ஆணைப்படி யாகத்தில் பிறந்தவளே ரேணுகா. இவளை ஜமதக்னி முனிவருக்கு விவாகம் செய்வித்தனர். ஜமதக்னி ஆஷ்ரம் பெல்காம், பவடாத்தி, ராம்ஷ்ரான்க் மலையில் அமைந்துள்ளது.
அவள் ஜமதக்னி முனிவரின் தவத்திற்கு வேண்டிய அனைத்து பணிவிடைகளும் செய்து வந்தாள். அதில் ஒன்று ஜலப்ரபா நதியில் தூய மணல் எடுத்து குடம் செய்து அதில் நீர் கொண்டு வந்து தருதல் ஆகும். இவளுக்கு ஐந்து மகன்கள் பிறந்தனர். வசு, விஸ்வவசு, பிருத்யனு, மிருஹத்கன்வ, ராமபத்ரா ஆகியோர் . இதில் ராமபத்ரா என்பவர் சிவனை நோக்கி தவம் செய்து பரசு ஆயுதம் பெற்று, ‘ பரசுராமர் ‘ என்று பெயர் பெற்றவர் ஆனார்.
ஒரு நாள் அவள் நீர் எடுக்க ஆற்றுக்கு சென்ற பொது, கந்தர்வ தம்பதிகளின் நீர் விளையாடலை பார்த்து கவனம் சிதறினாள். இதனால் மணல் குடம் உருவாக்க இயலவில்லை. ( ரேணுகா என்ற சொல் சமஸ்கிருதத்தில், தூய மணல் துகள்கள் என்று அர்த்தம் தரும்.) கவனம் சிதறிய காரணத்தால் கணவரால் விரட்டப்பட்டு காட்டில் தவம் செய்தவளை ஒரு நாள் ஏக்நாத், யோகிநாத் என்ற இரு ரிஷிகள் சந்தித்தனர். அவளின் கணவரான ஜமதக்னி இருக்குமிடம் திரும்பி செல்லுமாறு கூறினார். உன் கணவனால் சோதிக்கப்பட்டு, பின் மக்களால் வழிபடப் படும் தெய்வ வடிவம் பெறுவாய் என கூறினார். மகாராஷ்டிரா மாநிலம், சஹ்யாத்ரி மலை, மாஹூர் என்ற இடம் இவளின் இருப்பிடம் என்று தேவி பாகவதம் குறிப்பிடுகிறது.
இந்நிலையில் ஒரு முறை கார்த்த வீரியார்ஜுனன் என்ற ராஜா இவளின் ஆஷ்ரமப் பசுவான காமதேனுவை அடைய ஜமதக்னி முனிவரிடம் விவாதம் செய்ய, கட்டாயமாக கவர முயல, அது கார்த்த வீரியார்ஜுணனை மரணத்தில் முடிகிறது. கார்த்த வீரியார்ஜுனானில் வாரிசுகள் பழி வாங்க ஜமதக்னி முனிவரை வெட்டி விட்டு, பின் பரசுராமரின் நன்கு சகோதரர்களை வெட்டி பின் ரேணுகாவை துரத்த, அவள் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள ஓர் ஏரியில் முழ்கி மறைந்து தெய்வம் ஆனாள். இதனால் நூறு தலைமுறை சத்திரிய அரசர்களை கொல்வேன் என்று பரசுராமர் சபதம் செய்தார். ரேணுகா முழ்கிய ஏரி, ஓர் பெண் படுத்த வடிவில் இருக்கும். இலங்கையிலும் இவள் வழிபாடு உள்ளது
இதன் தொடர்ச்சி தான், பல அரசர்களை கொன்ற பிறகு பரசுராமர் சௌராஷ்டிரா பிராமணர்களிடம் வந்து பிரயசித்த யாகம் செய்து தருமாறு கேட்க, அவர்கள் மறுக்க, நமக்கு தேசாந்திரம் செல்லும் சாபம் வந்தது. இதனால் ரேணுகா வழிபாடு சாபம்-நீக்கம் தரும் வழிபாடு ஆகும்.
இவள் சாட்சாத் துர்கா சாமுண்டி வடிவம் ஆவாள்.
மற்றொரு சௌராஷ்டிரா பரம்பரை வழக்கப் படி, இவள் ” ஹ்ரு ” என்ற அக்ஷரத்தின் தெய்வம் ஆவாள். ஹ்ருணுகா என்று மாத்ருகா அக்ஷரங்களின் வரிசையில் பெயர் பெறுகிறாள். இந்த ஹ்ருணுகாவின் சிலை அமைப்பு இலக்கணத்தை ஷில்ப-சாஸ்திரம் பேசுகிறது.
எந்த வகையில் ரேணுகா வழிபாடு சௌராஷ்டிரா மக்களால் மேற்கொள்ளபடுகிறது? என்றால், கலசத்தில் ஆவஹனம் செய்து, ரேணுகா தேவியில் உருவத்தை மஞ்சளால் செய்து பூஜை செய்யப்படும். முன் காலங்களில் ரேணுகா தேவியின் சிரம் மட்டும் அமைக்கப்பட்டு வழிபடப் பட்டது. இந்த சம்பிரதாயத்தை ‘ அம்பா3 மடோ3த்தே ‘ என்று சௌராஷ்டிரா மொழியில் கூறுகிறோம். இந்த விழா துவங்கும் சில நாட்களுக்கு முன் பொது இடத்தில் ஹனுமான் துவசம் ஏற்றப்படும். இந்த ‘ அம்பா மடோ3த்தே ‘ பொது வழிபாடாக பொது இடங்களில் அம்பா சிலை அமைத்தும், குடும்ப வழக்கமாக சில குடும்பங்களிலும் செய்யப் படுகிறது. குடும்ப வழக்கமாக வீட்டில் ‘ அம்பா3 மட3த்தே’ செய்பவர்கள் ரேணுகாவை அல்லாது சரஸ்வதி அம்பாவையே வீட்டில் வழிபடுவர். வழிபாடு மூன்று அல்லது ஐந்து நாட்கள் நடைபெறும். பின் பெண்கள் மட்டும் தனியாக கூடி சமைத்து உண்பர். கெ3ப்3பீ3ள் – எனப்படும் கும்மி ஆடி, அம்பாவின் மேல் பாட்டு பாடுவர். அந்த இடங்களில் ஆண்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! இவளைப் பற்றி சௌராஷ்டிர மொழியில் கும்மிப் பாட்டு உண்டு.
இறுதி நாள் விடியற்காலையில் ‘ கா4ஸ் பா4த் ‘ எனப்படும் முருங்கை கீரை, அவரை குழம்பு கலந்த சாதத்தை பிரசாதமாக தருவர். எந்த மிருக பலியும் கிடையாது. பின் புனித ஆறு அல்லது நீர் துறைகளில் அம்பாளை விசர்ஜனம் செய்வர்.
இந்த வகையில் நம்மிடம் இருந்து பிற சமுதாயத்தினரும் தற்காலத்தில் மஞ்சளில் சிலை அமைத்து வழிபாடு நடத்துவதை கற்றுக் கொண்டு செய்து வருகின்றனர். மேலும் நம்மவர்களும், திருப்தி வெங்கடாசலபதி தொடக்கி, அம்பா ரேணுகா வரை அணைத்து சிலைகையும் மஞ்சளில் பிடித்து அற்புதமாக வடிவமைத்துவிடுவர்.
இவளுக்கு ஒரு கோவில் சேலம் மாநகர் சௌராஷ்ட்ர விப்ரகுல நந்தவனத்தில் அமைந்துள்ளது. சேலம் செவ்வாபேட்டையிலும் அமைந்து உள்ளது.
shtra folk dance
Tags: கொணங்கி, சௌராஷ்டிரா, ராம நவமி. ராமாயணம், palkar, saurashtra, saurashtra folk dance, sourashtra bhasha, Sourashtra language
Video of the celebration Ramanavami 2010. At Vadakalai Bhajana mhatam, Salem.
பங்கா, (Wing) ஜவ்ணான் (Youth)
Tags: सौराष्ट्रा भाषा, சௌராஷ்டிரா, பள்கார், மொழி, palkar, saurashtra, Sourashtra language, wing, youth
பங்கா
சிறகு என்ற தமிழ் சொல்லுக்கு சௌராஷ்டிர மொழியில் பங்கா என்றும் ரெக்கே என்றும் கூறுவர். இதில் பங்கா என்ற சொல் பரவலாக உபயோகத்தில் இல்லை. எனினும் விசிறி என்ற பொருளில் சில சௌராஷ்டிரர்கள் பயன் படுத்துகின்றனர்.
ஆயினும் அரிசி புடைத்தல் என்ற தமிழ் சொல்லிற்கு ‘ தந்து3 பங்கடோ3த்தே ‘ என்ற சௌராஷ்டிர சொல் உள்ளது. இதனை சிலர் ப2ங்க3டோ3த்தே என்று உச்சரிப்பு மாற்றி கூறுவர். இதனால் அரிசியை போர்த்துதல் என்று பொருள் மாறி விடுகிறது. இந்த பங்கடோ3த்தே என்ற சொல்லில் இருந்து நம்மிடம் பங்கா என்ற சொல் ஒரு காலத்தில் இருந்தது என்று அறியலாம்.
ஜவ்ணான் :
ஜவ்ணான் என்ற சொல் சேலம் மக்களிடையே புழக்கத்தில் இல்லை. ஆனால் இளைஞர் என்ற பொருளில் வேறு மதுரை போன்ற ஊர்களில் இருப்பது எனக்கு தெரியும். இந்த வார்த்தை ஏன் சேலத்தில் இல்லை என்று தேடிக் கொண்டு இருந்தேன்.
திடீரென ஒரு நாள் கிடைத்தது.
ஒரு வயதான கிழவி பிறந்து ஒரு நாளே ஆனா குழந்தையை பார்க்க வந்திருந்தாள். அப்போது நான் அங்கு இருந்தேன். அந்த கிழவி குழந்தை பெற்ற ‘ ப3ள்டீன் பை3 ‘ எனப்படும் பிரசவித்தவளை பார்த்துக் கூறினாள் ” எ நுகுரு எ ஆங்கு3ம் ஸேத்தே கே2ஸ், ஜவண்ண கே2ஸ் பா3ய்… தீ3 தி3ன்னும் லலி ஜேடை3 ” என்று கூறினாள். ஆஹா கிடைத்து விட்டது, இளமையான இந்த பூனை-முடி என்று கூறப்படும் உதிர்-முடி குழந்தையில் உடலில் இருந்து உதிர்ந்து விடும் . என்பதற்கு ஜவண்ண கே2ஸ் – என்று கூருகிறாளே ! அப்படியானால் இந்த வார்த்தை சேலத்திலும் இருந்திருகிறது. ஆனால் தற்போது இல்லை. ஆயினும் தகுந்த சூழ்நிலை இருந்தால் மட்டுமே முதியவர்களிடம் இருந்து அந்த வார்த்தைகள் வெளிப்படுகின்றன. இந்த சூழ்நிலை ஏற்படுத்தி வார்த்தைகள் சேகரிப்பதை ஒரு கலையாக செய்து வருகிறேன்.
லஜ்ஜெ – Shy
Tags: लज्जा, सौराष्ट्रा भाषा, சௌராஷ்டிரா, மொழி, வெட்கம், palkar, shy, Sourashtra language, sourashtra migration
இளந்தைலைமுறை சௌராஷ்டிரர்கள் வெட்கம் என்ற தமிழ் வார்த்தையை அப்படியே உபயோகப் படுத்துகின்றனர். லஜ்ஜெ என்றும் லாஜ் என்றும் நமக்கு ஒரு தலைமுறை முந்தையவர்கள் பயன்படுத்தியதை நாம் மறந்து விட்டோம்.
பிறந்து ஆறு மாதமே ஆனா குழந்தையை மடியில் வைத்து கிழவிகள் கூறும் வசனத்தை நினைவு படுத்திப் பார்த்தால் தான் இந்த லஜ்ஜெ வார்த்தை பலருக்கு நினைவு வரும்.
” தொகோ3 லாஜ் நீ: ?
லஜ்ஜெ நீ: ?
துமரே அஜ்ஜான் கே4ர் ஜா ! ”
என்று வேடிக்கையாக கூறுவர்.
குறிப்பிட்ட இது போன்ற சூழ்நிலை அமைந்தால் தான் பல முதியவர்களுக்கும் வழக்கிழந்த சௌராஷ்டிர வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன. எனவே வழக்கிழந்த சௌராஷ்டிர வார்த்தையை சேகரிப்பது என்பது மிக அதிக நேரம் எடுக்கும் வேலையாக உள்ளது.
த4னதூ4ளி – Spider’s web
ஒட்டடை, சௌராஷ்டிரா, பள்கார், மொழி, dhanadhuli, ottadai, Sourashtra, spider web
த4னதூ4ளி மெனெத் தமிழும் ஒட்டடை மெனி மெனன். இந்த வார்த்தையை தன + தூளி என்று பிரித்துப் பார்த்தால் தன = பணம் தூளி = தூசு என்று பொருள் படுகிறது. இந்த சௌராஷ்டிர வார்த்தை அப்படியே சம்ஸ்கிருத வார்த்தையில் இருந்து சற்றும் வேறு படாது இருக்கிறது. தூசு என்ற வார்த்தைக்கு நிகரான சௌராஷ்டிர சொல் ” து4ம்மு “ என்று வேறு ஒரு வார்த்தை எப்பொழுதும் புழக்கத்தில் இருந்தாலும், “ தூ4ளி ” என்று பயன் படுத்துவது இந்த ஒட்டடை என்ற வார்த்தையில் தான்.
இது ஒரு பழங்கால மூட நம்பிக்கை சம்பந்தப் பட்டது. வீட்டில் ஒட்டடை நிறைய இருந்தால் பணம் சேரும் என்பது அந்த மூட நம்பிக்கை. அதன் அடிப்படையில் ஒட்டடையை சௌராஷ்டிர மொழியில் தனதூளி என்று அழைத்தனர். அதாவது பணத் தூசி.! மிகச் சிலர் மட்டுமே ‘ ம:கி3டி3 கூ4 ட்3 என்று ஒட்டடையை கூறுவர்
இவருக்கு சௌராஷ்டிரா வார்த்தைகளைச் சேகரிப்பது மிகப் பிடித்த வேலை போலும். வளர்க இவரது பணி. தொலைந்து போன அல்லது தொலைத்து விட்ட வார்த்தைகளைத் தேடும் பணியை இவர் தொடர்ந்து செய்ய வேண்டும். இது எனது வேண்டுகோள்.
No comments:
Post a Comment