Friday, August 27, 2010
sourashtra websites details
நமது மொழியைப் பற்றி அறிய - நமது பண்பாட்டைப் பற்றி அறிய - பல ஊர்களில் உள்ள நமது மக்களைப் பற்றி அறிய - சௌராஷ்டிரா மொழியில் உள்ள பாடல்கள் கேட்க - நடனகோபால் சித்தர் பற்றிய பாடல்கள் அறிய - பாடல்கள் கேட்க பல வலைத்தளங்கள் உள்ளன. இது குறித்து நமக்கு எதுவும் தெரியவில்லை என்றால் கூகுள் அல்லது யாஹூ தேடு பொறியில் போய் sourashtra - madurai sourashtra - salem sourashtra - periakulam sourashtra - palayamkottai sourashtra - sourashtra educational institutions - sourashtra lessons என்று நீங்கள் ஆங்கிலத்தில் தேடு பொறியில் தட்டினால் போதும் நமது மொழியைப் பற்றி பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம். நமது மொழியை நாம் தெரியவில்லை என்று கூறிப் பெருமைப்படுவதை விட நமது வழிதோன்றல்களுக்கு இவற்றைப் பற்றி புரிய வைத்தால் கோமா நிலையில் இருக்கும் நமது எழுத்துக்கள், இலக்கியங்கள் பற்றில்லாம் நம் எதிர்கால் சந்ததியினர் தெரிந்துகொண்டு உயிர்ப்பிக்க வாய்ப்பு உண்டு. கே ஆர் சேதுராமன் என்பவருக்கு சாஹித்ய அகாடமி விருது கிடைத்து அவரைப் பேட்டி எடுத்துள்ளார்கள். அருமையான தகவல்களைத் தருகிறார்கள். அவசியம் அவர் எவ்வளவு சிரமப்பட்டு நூல்களை - அகராதியைத் தொகுத்து இருக்கிறார்கள் என்பது நமக்குப் புரியும். வலைத்தளங்களுக்கு சுற்றுலா வாருங்கள். பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். தொடர்வேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment