Saturday, August 28, 2010

sourashtra makkalin samuthayap panigal

நமது சௌரட்டிரப் பெருமக்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன் குசராத் பகுதியில் உள்ள சௌரட்டிரம் என்ற பகுதியில் இருந்து கஜினி நடத்திய பல படையெடுப்புகளின் காரணமாக புலம் பெயர்ந்து மகாராட்டிர மாநிலம், கர்நாடக மாநிலம் (முன்னாளில் கிருஷ்ணதேவராயரின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த பகுதிகள்) தங்கி உள்ளார்கள்.  எனவே ஆந்திரத்தின் பல பகுதிகளிலும் கர்நாடகத்தின் பல பகுதிகளிலும் தங்க நேர்ந்துள்ளது.  பின்னர் அரசரின் கோரிக்கைக்கு இணங்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நாயக்க ஆளுனர்கள் இருந்த பகுதிகளுக்கு வந்திருக்கிறார்கள்.   எனவே தாய்மொழியில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.  ஆந்திர, கன்னட, தமிழ் மொழி தாக்கங்கள் நிறையவே உள்ளன.  உதரணமாக அங்காடி என்பது சிலபதிகரதிலே  நாளங்காடி அல்லங்காடி(அல் என்றால் இரவு - அல்லும் பகலும் அனவரதமும் என்று கூறுவோம்) இருந்தமை தெரிய வருகிறது. அது போன்றே கெவி என்று நாம் "ஹன்தார் கெவி" என்று கூறுவோம்.  இதில் கெவி என்பது குகை.  இன்றும் பெங்களூரில் கெவி கங்கடீஸ்வரர் கோவில் என்று உள்ளது.  அது ஒரு குகைக் கோவிலே ஆகும்.  குகையில் உள்ளது போன்ற இருட்டு என்பதே ஹன்தார் கெவி என்பதன் பொருள்.  இதே போல "தெண்டு பாத்" என்று நாம் பொருள் புரியாமல் குழந்தைகளை வைவோம்.  தெண்டு என்றால் எச்சில் இல்லை என்று பொருளாம்.   பட்டினத்தார் பாடல் ஒன்றில்  "நமக்கு உண்டு பிச்சை நாய்க்கு உண்டு தெண்டு" என்று பாடி உள்ளார்.   தமிழ் அகராதியைப் புரட்டிய போது தான் தெரிந்தது தெண்டு என்றால் எச்சில் இல்லை என்று.  இப்படி பல மொழிச் சொற்களை நாம் ஆங்கிலேயர்களைப் போல் உள்வாங்கி உள்ளோம்.  ஆங்கில மொழியில் இப்படி பல சொற்கள் அந்நிய மொழி சொற்களே.  நான் போரும் புரிய வில்லை என்றால் முன்னால் சாதாரண அகராதியைப் பயன்படுத்தி உள்ளேன்.  இதன் விபரம் தெரியவில்லை.  தற்சமயம் கூகுள் ஆங்கிலம்-தமிழ் அகராதியை இணையப் பக்கத்தில் நிறுவி தினசரி BBC CNN செய்திகளை படிக்கும் போது படிக்கும் போது இப்படிப்பட்ட சொல் ஆங்கிலத்தில் இல்லை - இன்ன மொழியிலிருந்து உள்வாங்கப்பட்டது என்று விபரம் தருகிறார்கள்.  அந்த வார்த்தையை எப்படி வாக்கியத்தில் பயன்படுத்துவது என்றும் சொல்லித் தருகிறார்கள்.  மிக அருமையாக இருக்கிறது.    தொடர்வேன்.. 

No comments:

Post a Comment