நமது சௌராஷ்டிரப் பெருமக்கள் வலைதளத்தை நன்றாக உபயோகிக்கப் பழகிக் கொள்ள வேண்டும். இந்த வலைத்தளம் மிக உபயோகமாக உள்ளது. நகைகள் வாங்கி வீட்டில் பூட்டிப் பெருமைப் படுவதை விட- பெருமிதப்படுவதை விட - ஒவ்வொருவரும் ஒரு மடிக் கணினியை வாங்கவேண்டும். சிறந்த இணைய வசதியைத் தரும் ஒரு நிறுவனம் மூலம் இணைப்பைப் பெற்றுக்கொள்ளவேண்டும். anti virus எனப்படும் நோய் தக்கியை இலவசமாகவோ விலை கொடுத்தோ வாங்க வேண்டும். அதையும் நிறுவிக்கொள்ள வேண்டும். இது மிக அவசியம். இல்லையேல் இன்னயத்தை உபயோகப் படுத்தும்போது பலவித தொற்றுநோய் கிருமிகள் நமது கணினியைத் தாக்கும். இருபதுநான்கு மணி நேரமும் பார்பதற்கு வசதியான bsnl or airtel or other companies இணைப்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். இணைய தளம் நமக்கு பல வசதிகளைத் தருகிறது. நமது உறவினர் எந்த ஊரில் இருந்தாலும் எந்த நாட்டில் இருந்தாலும் அவர்களுடன் எந்த நேரத்திலும் skype என்னும் தளத்தை நிறுவி நாம் தொடர்பு கொள்ள முடியும். முதலில் கடினமாகத் தான் தோன்றும். பழகினால் மிகவும் எளிது. . கணினியை கற்றுக் கொள்வது மிக எளிது . தவறு நேர்ந்தாலும் தொடர்ந்து நடை போட்டால் நன்றாகக் கற்றுக் கொள்ளலாம். எளிதில் இலவசமாக பல மென்பொருட்கள் நமக்கு அள்ளி வழங்குகிறார்கள். அதை எல்லாம் நாம் நிறுவ வேண்டும். இணையப் பயன்பாட்டுக்காக என்றால் உடனே நிறுவித் தந்து விடுவார்கள். நான் சமிபத்தில் தான் இதன் முக்கித்துவத்தை அறிந்தேன். சௌராஷ்டிரா மொழியைப் பற்றி கலாசாரத்தைப் பற்றிச் சொல்லித் தர பல தளங்கள் உள்ளன. நீங்களும் கலந்து கொண்டு மொழியை வளப்படுத்துங்கள். ஆங்கில எழுத்துக்களை மட்டும் பயன்படுத்தி தமிழில் எளிதில் இவ்வாறு தட்டச்சு செய்ய கூகுள் என்னும் தளம் உதவி செய்கிறது. கூகுள் மெயிலில் இந்த வசதி உள்ளது. இது தவிர wickipedia என்னும் தளம் நமக்கு பல விஷயங்களைச் சொல்லித் தருகிறது. சமையல் பற்றி சந்தேகமா பல தளங்கள் உள்ளன. கடவுள் மற்றும் கோவில்களைப் பற்றி எராளமான தளங்கள் உள்ளன. youtube மற்றும் youku என்னும் தளத்தில் போய் நீங்கள் குறிப்பிட்ட கடவுள் அல்லது ஊர் பெயரை அடித்தால் உடனே திரைப்படத்தில் பார்ப்பது போல் வீடியோ காட்சியாக விரிகின்றன கட்சிகள். கற்பனைக்கு எட்டாதது. நினைப்பு எப்படியோ காட்சி அப்படி என்பது youtube மொழி. உங்களுக்கு வேண்டியதை அள்ளித் தருகிறது youtube. களம் இறங்குங்கள். காட்சிகளைக் கண்டு களித்திடுங்கள். தொலைக்காட்சிப் பெட்டிப் பயன்பாட்டை ஒழித்து வலைத்தளத்திற்கு வந்து புதிய புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளுங்கள். தொடர்வேன்.
உங்கள் கவனத்திற்கு, ஸௌராஷ்ட்ர மொழியை இணைய வாயிலாக கற்க, அணுகவும்,
ReplyDeletewww.palkarblogs.com
ஸௌராஷ்ட்ர மொழியில் உங்கள் படைப்புகளை அனுப்ப, தொடர்பு கொள்ளவும்:
Vishwa Sourashtram - First International Journal in Sourashtra,
http://sourashtra.info