Saturday, August 28, 2010

NAMATHU MUNNORGALIN SAMUTHAYAP PANI - 3

நமது முன்னோர்கள் எப்படி எல்லாம் புலம் பெயர்ந்தார்கள் என்ற விபரங்கள் ஆங்கிலத்தில் விபரமாகவே சொல்லப்பட்டுள்ளன.  எவ்வளவு ஊர்களில் நம் பெருமக்கள் ... அடேங்கப்பா.   ஆனாலும் நமது மொழி ஊருக்கு ஊர் வித்தியாசப்படுகிறது.   வலைத்தளம் வந்த இந்த காலத்திலாவது இது கட்டுப்படுத்தப் படவேண்டும்.   நமது SOURASHTRA, BANGALORE SOURASHTRA, SENNAI SOURASHTRA, SALEM SOURASHTRA, PARAMAKUDI SOURASHTRA, PALAYAMKOTTAI SOURASHTRA  என்று வலைத்தளத்தில் தட்டினால் நம் சமுதாய மக்களைப் பற்றி பல தகவல்கள், அவர்கள் நடத்தும் இறைப்பணிகள் பற்றிய தகவல்கள் எல்லாம் காணப்படுகின்றன.  நமது மொழி பாடல்களையும் நாம் கேட்கலாம்.  சில முறை கேளுங்கள்.  அருமையான கருத்துக்கள் புரியும் விளங்கும்.  முதலில் பொருள் புரிவது சிரமமாகத் தான் இருக்கும்.  அதை நினைத்து நாம் வேதனைப் படவேண்டுமே தவிர ஒதுக்கி விடக் கூடாது.
நம் முன்னோர்கள் மிகச் சிரமப்பட்டு சாத்திரங்களை - சென்னையில், மதுரையில், திருப்பதியில், இராமேஸ்வரத்தில், பழனியில், திருசெந்தூரில், கன்னியாகுமரியில், மதுரை அழகர் கோவிலில், மதுரை ஆனைமலையில், திருபரங்குன்றத்தில், மதுரை திருமோகூரில்  கட்டி உள்ளார்கள்.  பார்த்திருக்கிறேன்.  தங்கியும் இருக்கிறேன்.  இன்னும் பல இடங்களில் இருக்க வாய்ப்பு இருக்கிறது.  தெரிந்தவர்கள் தகவலைத் திரட்டி ஒரு பொது வலைத்தளத்தில் தர வேண்டும்.
வழிபாட்டு தளங்களை பல இடங்களில் உருவாக்கி இருக்கிறார்கள்.  மதுரையில் கிருஷ்ணன் கோயில்,  பரமக்குடியில் கோயில், மதுரை அரசமரத்தில் ஒரு கோயில்,  மதுரை பந்தடியில் ஒரு கோயில்,  காதக்கிணறு என்ற இடத்தில ஒரு கோயில் மற்றும் நடனகோபால நாயகி சித்தருக்கு ஒரு சமாதி,  பாளையம்கோட்டையில் ஒரு கோயில், சென்னை சூளையில்  ஒரு கோயில், இப்போது சென்னை வேப்பம்பட்டு என்னும் இடத்தில ஒரு குருபீடம்,  இன்னும் பல இடங்களில் இருக்கும்.  திரட்டி ஒரு பொது வலைத்தளத்தில் கூறிப்பிட வேண்டும்.  பிற தளங்களில் இருந்தாலும் தகவல் தெரிவித்தல் ஒன்று திரட்டும் பணியை நான் மேற்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.  ஒன்றுபடுவோம்.  உயர்வோம்.
அதே போல கல்வி நிறுவனங்களை ஆரம்ப பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள்,  பெண்களுக்கான கல்விச் சாலைகள், கலைக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் அங்கங்கே உள்ளன.  மதுரையிலும் பரமக்குடியிலும் ஆரம்ப பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளைப் பார்த்து இருக்கிறேன்.  மதுரையில் கலைக் கல்லூரியைப் பார்த்து இருக்கிறேன்.  மதுரை, சென்னை, கோவை போன்ற இடங்களில் நமது பெருமக்கள் பொறியியல் கல்லூரிகள் நடத்துவாக அறிந்திருக்கிறேன்.   இவற்றிலே படித்து பயனடைந்தவர்கள் இன்று பல இடங்களிலே முக்கியப் பணிகளிலே பணியாற்றுகிறார்கள் - பணியாற்றினார்கள் என்பது எனக்குத் தெரியும்.  இப்படிப்பட்ட சமுதாயப் பணியை நம் இளைய தலைமுறையினர் தொடர திட்டமிடுதல் அவசியம்.  வலைத்தளம் ஒன்றைப் பொதுவானதாக உருவாக்கி - அதில் எல்லா ஊர்களிலும் உள்ள சமுதாய மக்கள் அறிந்து பயன் பெற - பங்கு கொள்ள உதவும் வகையில் - உருவாக்க வேண்டும்.
இன்றைய இளைய தலைமுறையினர் பங்கு கொண்டு சமுதாய முன்னேற்றதிர்க்காகவும் மொழி வளர்சிக்க்காகவும் பாடுபட வேண்டும்.
தொடர்வேன்.\

No comments:

Post a Comment