Sunday, October 31, 2010

MAHABHARATH - SISUBALAN KILLED BY SRIKRISHNA

தாத்தா: இன்றைக்கு எண்திசை சென்று ஐவரில் நால்வரும் கடோத்கசனும் வென்று வந்த கதையைச் சொல்லப் போகிறேன்.  சராசந்தனைத் தோற்கடித்தபின் இந்திரப்பிரத்தம் மீள்கிறார்கள் பாண்டவர்கள்.  பின்னர் கண்ணன் தன் நகரான துவாரகை செல்கிறான்.  தன் பகைவன் சராசந்தனை ஒழித்து விட்ட மகிழ்ச்சி அவருக்கு.  பின்னர் தருமரும் விசயனும் யார்யார் எந்தெந்த திசையில் சென்று ராசசூய வேள்விக்கான வெற்றிப்பணிக்கு ஈடுபடுவது எனத் திட்டமிடுகிறார்கள். இந்த வேள்வியை மாமகம் என்கிறார் வில்-யார்.  விசயன் சொல்கிறான்," குணபாலெம்முன்னும்
வடபால்யானுங்
காற்றிசைக்கு நிருதித்திசைக்குநடுவெம்பியிவனுஞ்
சிலைவேணிரைமணித்தேர்வருதிக்கினிலிவ்விளையோனுமலைவானெழுகவருகவெனா.''  கிழக்கில் வீமன் - வடக்கில் விசயன் - மேற்கில் நகுலனும் - தெற்கில் சகாதேவனும் போய் வருவதெனவும் இலங்கைத் தீவிற்கு கடோத்கசனை அனுப்புவது என்றும் முடிவெடுத்து வருகிறார்கள்.  சென்றவர் எல்லாம் பகை வெல்கிறார்கள் அல்லது நட்பு பூண விரும்புபவர்களிடம் பொருள் கேட்டு கொண்டு வருகிறார்கள்.  மேற்கில் சென்ற நகுலன் துவாரகைக்குச் சென்று தான் வென்ற விபரங்களைக் கூறி வாழ்த்து பெருகிறான். "மீனங் கமட மேனநர வரியாய் நரராய் மெய்ஞ் ஞான  வானந் தமுமா கியநாத னன்றேதுவரா பதியடைந்தான்''.
சூர்யா: மீனம், கமடம், ஏனம், நரவரி, நரர் என்றால் என்ன தாத்தா?
தாத்தா: இதெல்லாம் திருமால் எடுத்த அவதாரங்கள்.  முன்னொரு காலத்தில் பிரமதேவன் கண்துயில்கையில் சோமகன் என்னும் அசுரன் வேதங்களை எல்லாம் கவர்ந்து கொண்டு கட-ல் போய் ஒளித்து வைக்கிறான்.  பிரமன் வேண்டுதலுக்காக திருமால் மீன் உருவம் கொண்டு கட-ல் போய் அந்த அசுரனைத் தேடிப்பிடித்துக் கொன்று வேதங்களை மீட்டு வருகிறார்.  பின்னர் அன்னப் பறவை வடிவங்கொண்டு வேதங்களை உபதேசிக்கிறார்.  கமடம் என்றால் ஆமை.  திருப்பாற்கடலைக் கடையும் போது மந்தரகிரியை கட-ல் சுற்ற வசதியாக திருமால் ஆமை வடிவம் கொண்டு அந்த மலைக்கு ஆதாரமாகக் கட-ல் நிற்கிறார்.  ஒரு மலையின் சுமையை இறைவன் தவிர வேறு யார் தாங்க முடியும்.  இதைத் தான் கூர்ம அவதாரம் என்கிறார்கள்.  ஏனம் என்றால் பன்றி. இரண்யனது உடன்பிறப்பான இரணியாக்கன் என்பவன் பூமியைப் பாயாகச் சுருட்டி கட-ல் கொண்டு போய் வைக்கிறான்.  திருமால் ஏனம் வடிவம் கொண்டு கட-ல் புகுந்து தன் கொம்பில் பூமித்தாயைத் தூக்கிக் கொண்டு வருகிறார்.  இந்த பன்றி அவதாரத்தைத் தான் வராக அவதாரம் என்று சொல்கிறார்கள்.  நரஅரி என்றால் மனித உருவமும் சிங்க முகமும் கொண்ட நரசிம்ம அவதாரம்.  தமிழில் நரஅரி. இந்த அவதாரத்தில் இரண்யனைக் கொல்கிறார் திருமால். பின்னர் நரன் என்பது வானமன் என்னும் குள்ள உரு கொண்ட கள்ளபிரானை.  இவன் தான் செருக்குடன் இருந்த மகாப- அரசனைத் திருத்தி மூன்றடி மண்கேட்டு அவனைப் பாதாளத்திற்கு அனுப்புகிறார்.  பின்னர் மனித உருவில் வருபவன் பரசுராமன் மற்றும் இராமர்.  இப்படி நீ ஒவ்வொரு கதைக்கும் விளக்கம் கேட்டால் மகாபாரதக் கதை முடிந்து விடும்.  தெரிகிறதா?  இந்தக் கதையை எல்லாம் விளக்கமாக இப்போதைக்குக்  கூற முடியாது. எனவே சுருக்கமாகக் கூறி உள்ளேன்.  நாற்புறமும் சென்றவர்கள் வெற்றியுடன் வருகிறார்கள்.  இலங்கைக்குச் சென்ற கடோத்கசன் கப்பம் கேட்டவுடன் விபீடணன் கொதித்து எழுகிறான்.  பின்னர் ஐவர் அனுப்பியதால் வந்ததாகக் கூறியவுடன் நட்பு பூண்டு வேள்விக்காக பத்து தங்கத்தூண்களைத் தருகிறான்.  கடோத்கசன் அவற்றுடன் திரும்புகிறான்.  பின்னர் மகம் என்று அழைக்கப்படும் வேள்விக்கான நாளைக் குறித்து எல்லா நாட்டு மன்னர்களையும் அந்தணர்களையும் அழைக்க முறையாக அழைப்பினை அனுப்பிகிறார் தருமர்.  வேள்விச்சாலையை மிக அழகாக வடிவமைக்கிறார்கள்.  அனைவரும் வந்தால் அவர்கள் தங்குவதற்கு இடத்தினையும் உணவிற்கும் உபசாரத்திற்கும் முறையான ஏற்பாடுகளைச் செய்து தம்பிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமையை நிர்ணயிக்கிறார் தருமர்.  வரவேற்க ஒரு தம்பி - உபசாரம் செய்ய ஒரு தம்பி- உணவளிக்க ஒரு தம்பி - கொடை வழங்க ஒரு தம்பி இப்படி கடமைகளை நிர்ணயம் செய்த பின் வேள்விக்கான நாள் நெருங்குகிறது.  பலராமனும் கண்ணனும் முத-ல் வருகிறார்கள். அவர்களை தருமன் சென்று எதிர்கொள்கிறான்.  அவர்கள் ஐவரையும் வாழ்த்தி குந்திதேவியைப் பார்த்து அளவளாவுகிறார்கள். அழ-ல் வந்த பொற்கொடி - திரௌபதி இருவரையும் வணங்குகிறாள்.
கொற்றவர் ஐவர்தம்மைக் குருகுலம் விளங்குமாறு
பெற்றவள் பாதம் போற்றி, பிறப்பு இறப்பு அறுக்க வல்லோன்,
மற்று அவள் வாழ்த்த வாழ்த்த, மனம் மகிழ்ந்து, அழலின் வந்த
பொற்றொடி பணிவும், ஏனைப் பூவையர் பணிவும், கொண்டான்.
இவர்களைத் தொடர்ந்து சராசந்தன்மகன் - மகத மன்னன், வீடுமன், நூற்றுவர் வருகின்றனர்.  அதேபோல பல நாட்டு அந்தணர்கள் வேள்வி நடத்த வந்து குழுமுகிறார்கள்.  இந்த நேரத்தில் வியாத முனிவர் வருகிறார்.  ஐவரும் அவரைப் பணிந்து வணங்குகிறார்கள்.
'மைந்தர் நீர் நால்வரும்; மகம் செய் வேந்தனே
தந்தையும்; தாயும், இத் தரும வல்லியே;
இந்த வான் பிறப்பினுக்கு, இற்றை நாள் முதல்,
குந்தியும் பாண்டுவும் என்று கொண்மினே.'
மகம் செய்யும் வேந்தனான தர்மனே ஐவருக்கும் தந்தையும் அழ-ல் வந்த பெண் திரௌபதியே தாய் என்றும் மற்ற நால்வருக்கும் எடுத்துரைத்து - அவர்களைப் பாண்டுவும் குந்தியும் என்று கருத வேண்டும் எனவும் அவர்களே இந்த வேள்வியில் அமர வேண்டும் என்றும் கூறுகிறார்.  வேள்வியில் மிகச் சிறப்பாக வானோருக்கு அவி உணவு அளிக்கப்படுகிறது. இந்த உலகத்தவருக்குச் சுவையான உணவு வழங்கப்படுகிறது.  வேள்வி முடிந்தவுடன் தான தருமங்கள் வழங்கப்படுகின்றன.  இந்த தான தருமங்கள் செய்யத் தான் நாற்புறமும் படைநடத்தி செல்வத்தைத் தம்பிகள் கொண்டு வந்துள்ளார்கள்.  இந்த ஐவரும் துய்ப்பதற்காக அல்ல.  ஏழு நாட்கள் இப்படித் தொடர்ந்து வேள்வி நடக்கிறது.  பின்னர் நாரதர் முதலானோர் மங்கலம் பாடினார்கள்.  இறுதியில் முதல் பூசை நடத்த வேண்டும்.  யாரைப் பூசை செய்வது?  அறன் மகன் தருமர் புனல் மகன் வீடுமனை அணுகி யாருக்கு முதல் மரியாதை தரவேண்டும் என்று அவர் கருத்தைக் கேட்கிறார்.  வீடுமன் முனிவர்களைக் கேட்க, வியாதமுனிவர் எழுந்து 'கண்ணனே முதற்பூசைக்கு உரியான்' என்று உரைக்கிறார்.  முனிவர் உரையை எல்லா மன்னர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள்.  ஆனால் சிசுபாலன் என்பவன் எழுந்து இந்த முன்மொழிவை மறுக்கிறான்.  அவன் கண்ணனை ஏராளமாகப் பழித்தும் இழித்தும் பேசுகிறான்.
சூர்யா: யார் இந்த சிசுபாலன் தாத்தா?  ஏன் இவனுக்கு கண்ணன் மீது இவ்வளவு கோபம்?
தாத்தா: இப்போ ஒரு கதையைச் சொல்-த் தான் ஆகவேண்டும்.  சிசுபாலன் கண்ணனின் அத்தை மகன்.  அதாவது வசுதேவன் உடன்பிறந்தவள் கருதசிரவை என்பவள்.  அவள் தமகோஷன் என்பவனின் மனைவி.  இவர்களுக்குப் பிறந்தவன் தான் அத்தை மகன் தான் இந்த சிசுபாலன். இவன் பிறந்த பொழுது மூன்று கண்களையும் நான்கு கைகளுடனும் பிறந்தான்.  கழுதை போல குலல் இருந்தது இவனுக்கு.  பெற்றோரும் சுற்றத்தினரும் அந்தக் குழந்தையைக் கண்டு. இவனை அப்புறப்படுத்தி விடுவது என முடிவெடுத்த போது வானி-ருந்து வானொ- ஒன்று வந்தது. "இவனைக் கண்டு அஞ்ச வேண்டாம்.  இவனைக் காப்பாற்றுங்கள்.  இவனைக் கொல்லாதீர்கள்.  இவன் இப்பொழுது இறக்கப் பிறந்தவன் அல்லன். இவனைக் கொல்பவனும் பிறந்துள்ளான்.  அவன் சக்கரத்தை வைத்து இவனைக் கொல்வான்.  யார் இவனை மடியில் வைத்துக்கொள்ளும்போது இவனது இரண்டு கைகளும் நெற்றிக்கண்ணும் மறைகின்றனவோ அவனால் இவன் மரணமடைவான்''.  இதைக் கேட்டு உறவினர் எல்லோரும் தங்கள் மடியில் அவனைக் கிடத்திக் கொண்டார்கள்.  இறுதியில் தான் வந்தான் கண்ணன்.  கண்ணனுக்குத் தெரியும் என்ன நடக்கும் என்று. கண்ணபிரான் இவனைத் தொட்ட அளவில் இரண்டு கரங்களும் நெற்றிக்கண்ணும் மறைந்தன.  குரலும் சீரானது.  உடனே கண்ணனின் அத்தை இந்தக் குழந்தையைக் கொல்லக் கூடாது என்று வரம் கேட்டாள்.  "வானி-ருந்து வந்த செய்தியின்படி தான் எல்லாம் நடக்கும்.  நம் கையில் எதுவும் இல்லை அத்தை.  இருந்தாலும் இவன் செய்யும் நூறு குற்றங்களை நான் பொறுத்துக் கொள்வேன்'' என்று கண்ணன் உறுதி அளித்தான்.  இளமையிலேயே இந்த சிசுபாலனுக்குத் தெரியும் கண்ணனால் தனக்கு மரணம் என்ற செய்தி.  அதனால் துவக்க முதலே கண்ணன் என்றால் அவனுக்குப் பிடிக்காது.  இவனுக்குத் தான் ருக்மணி நிச்சயம் செய்யப்பட்டிருந்தாள்.  ஆனால் கண்ணபிரான் அவளைக் கடத்தி தான் திருமணம் செய்து கொள்கிறான்.  அப்போது முதல் கண்ணன் என்றாலே சிசுபாலனுக்கு எரிச்சல்.  கண்ணன் எண்ணிக் கொண்டே வந்தான் - நூறு தடவை தூற்றியவுடன் போருக்கு அழைத்தான் சிசுபாலனை.  வில்-யார் இந்தப் பகுதியில் சிசுபாலன் துற்றுவதாகக் கூறும் அனைத்துச் செய்திகளும் கண்ணனின் வீரவரலாறு தான்.  வில்-யார் கண்ணனைப் போற்ற வாய்ப்பு கிடைத்தால் விடமாட்டார்.  தூற்றுவது போல கண்ணனின் லீலைகளை நமக்கு உரைக்கிறார்.  இவர் ஒரு கண்ணதாசன் என்பதை நமக்குப் புலப்படுத்துகிறார்.  சேனைகளுடன் இருவரும் பொருதுகிறார்கள்.  கண்ணன் தன் ஆழியை விடுகிறார்.  சிசுபாலன் மடிகிறான்.  ஆனால் அவன் ஆவி சோதி வடிவாய்க் கண்ணன் திருவடி அடைகிறது.  அனைவரும் வியக்கிறார்கள்.  அப்போது தான் வியாத முனிவர் சிசுவாலனின் முற்பிறப்பு பற்றி எடுத்து உரைக்கிறார். துர்வாச முனிவர் ஒருதடவை பாற்கடலுக்கு வந்து திருமாலைக் காண முயல வாயிற்காப்பாளர்களான சயனும் விசயனும் அவரைத் தடுத்து நிறுத்தி "சற்று பொறுக்க வேண்டும்' என்று சொல்கிறார்கள்.  வெகுண்டெழுகிறார் துர்வாசர்.  தன்னைப் போகவொட்டாது விலக்கியவர்கள் அந்த இடத்தையும் அந்த அதிகார பதவியையும் உடனே இழப்பார்கள் என்றும் கீழுள்ள பூலோகத்தில் பிறக்க வேண்டும் என்றும் சபித்தார்.  எப்போதுமே இப்படி அறவோர்கள் - துறவிகள் சபித்தால் அது உடனே ப-க்கும்.  அதை ஆண்டவன் கூட தடுத்து நிறுத்த முடியாது.  ஓடோடி வருகிறார் திருமால்.  இதற்குப் பரிகாரம் என்ன என்று கேட்கிறார்."எழுமுறை அன்பராய்ப் பிறந்து சாபந் தொலையக் கருதுகின்றீரோ?மும்முறை பகைவராய்ப்பிறந்து சாபந் தொலையக் கருதுகின்றீரோ? இவ்விருவகையில் நுமது விருப்பம் யாது?'' என்று வினவுகிறார் துர்வாசர்.  ஏழு பிறப்பை விட மூன்று பிறப்பில் பகைவராய்ப் பிறந்து விரைவில் இறைவன் பணிக்கு வருவதையே விரும்புகிறோம் என்கிறார்கள் சயனும் விசயனும்.  இதைக் கேட்ட வீடுமன் முத-யோர் கண்ணன் திருமால் வடிவம் என்பதைப் புரிந்து கொண்டு வணங்குகிறார்கள்.  இத்துடன் வேள்வி முடிகிறது.  பின்னர் அனைவரும் தத்தம் ஊருக்குத் திரும்புகிறார்கள்.  மீதிக் கதையை நாளை பார்ப்போமா?

Friday, October 29, 2010

MAHABHARATH - DEATH OF JARASANDHA

தாத்தா: இன்றைக்கு தர்மம் இராசசூயயாகம் ஏன் செய்தார் என்பது பற்றி நான் கூறுகிறேன்.
சூர்யா: சரிங்க தாத்தா.  கர்ணன் படத்தில் நாகபாசம் என்ற அம்புக்கு ஏன் கண்ணன் பயப்பட்டு குந்தியை விட்டு வரம் கேட்கச் சொன்னார் என்பதற்கு நீங்கள் நேற்று சொன்ன கதையில் தான் காரணம் இருக்கு.  இப்படி இந்த மகாபாரதக் கதையைக் கேட்டால் தான் கண்ணன் எந்த அளவுக்கு இந்தப் பாண்டவர்களுக்கு உதவி செய்திருக்கிறார் - அவர் முறையாக முன்கூட்டி திட்டமிட்டு ஆட்டுவிக்கவில்லையென்றால் - குறைந்த படைபலம் உடைய பாண்டவர்கள் எப்படி கௌரவர்களை வென்றார்கள் என்று நமக்கு விளங்கும் போலும்.  இல்லாவிட்டால் பாண்டவர்கள் அசகாய சூரர்கள் என்ற மாயை தான் மிஞ்சும் தாத்தா.
தாத்தா: நீ சொன்னது தான் சரி.  கண்ணன் இல்லையேல் மகாபாரதம் இல்லை.  மகாபாரதம் என்பது ஐவரின் கதையோ நூற்றுவரின் கதையோ அல்ல.  மாயவனின் மாயாசாலக் கதை.  சரி நாம் கதைக்கு வருவோம். தருமர் முறையாக அரசோச்சிக் கொண்டிருந்த போது ஒருநாள் மயன் என்ற அரக்கர்களுக்கான தச்சன் வருகிறான்.  அவனைக் கண்ணன் காண்டவ வனத்தை எரித்த போது காப்பாற்றினார்.  காப்பாற்றியது விசயன் என்றாலும் ஒப்புதல் தந்தது கண்ணன் தான்.  அவன் வந்து உங்களுக்கு அரிய மண்டபம் ஒன்றை நன்றிக்கடனாக அமைத்துத் தர விரும்புகிறேன்.  குருகுலம் கண்டிராத ஒரு அருமையான மண்டபமாக இருக்கும் அது.  ஒப்புதல் கொடுங்கள் என்று கேட்டான்.  தருமர் சரி என்று சொன்னவுடன் சில அரிய மணிகள் கைலாயமலையின் வடக்கில் மைநாகமலைக்கு அருகில் ஒரு குன்று இருப்பதாகவும் அந்த குன்றின் பெயர் இரணியசிருங்கம் என்றும் அந்த குன்றில் ஏராளமான வண்ணவண்ண மணிகள் உள்ளதாகவும் அதை மண்டபத்தில் பதித்தால் சிறப்பாக இருக்கும் என்றும் கூறுகிறான்.  தருமரும் ஆட்களை அனுப்பி அவைகளைக் கொண்டு வந்து தருகிறார்.  அந்த அருமையான மணிகளை வைத்து ஒரு சிறந்த மண்டபத்தையும் மாளிகையையும் அமைத்துத் தருகிறான் மயன்.  அதோடு ஒரு கதையும் சங்கும் பரிசாகவும் வழங்குகிறான்.
சூர்யா: கதையின் பெயர் என்ன தாத்தா?  சங்கின் பெயர் என்ன?
தாத்தா: கதாயுதத்தின் பெயர் சத்துருகாதினி.  சங்கின் பெயர் தேவதத்தம்.  அது வருணனுடையது.   இதெல்லாம் பின்னர் போரின் போது பயன்படும்.  அதற்குத் தான் இந்த முன்னேற்பாடு.  இந்த மயனால் அமைக்கப்பட்ட மாளிகை பதினான்கு லோகத்திலும் இல்லாத வகையில் அபூர்வமாக இருந்தது.
சூர்யா:  அது என்னங்க தாத்தா 14 லோகம்?
தாத்தா: நிலவுலகின் மேல் ஏழு உலகம்.  நிலவுலகின் கீழ் ஏழு உலகம்.  மேலே உள்ள உலகம் எல்லாம் லோகம் என்று சொல்லப்படுகிறது.  கீழே உள்ள உலகம் பூராவும் தலம் என்று அழைக்கப்படுகிறது. பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மகர்லோகம். ஜனலோகம், தபோலாகம் மற்றும் சத்யலோகம்.  அதேபோல அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதலம்.  இந்த பதினாக்கு லோகத்திலும் இருந்த சிறந்த மணிகளை ஒரு அரக்கன் எடுத்து பிந்துசரசில் வைத்தது மயனுக்குத் தெரியும்.  ஏன் என்றால் அவன் அரக்கர்களுக்குத் தச்சன்.  அதனை எடுத்துத் தான் தருமருக்குத் தருகிறான்.  இப்படி ஆக்கிய மண்டபத்தில் மண்டபம் புகுவிழா நடத்தி தருமன் அங்கு போய் தங்குகிறான்.  இப்படி இருக்கும் போது ஒரு நாள் நாரதர் அங்கு வருகிறார்.
சூர்யா: நாரதர் வந்தால் ஏதாவது வில்லங்கமா செய்தி இருக்குமே?
தாத்தா: ஆமாம் ஆமாம் அவர் ஐவரின் தந்தை பாண்டுவிடம் இருந்து ஒரு செய்தியைக் கொண்டு வந்திருக்கிறார்.  மானேந்திய சிவன் நடனமாடும் போது இசை பாடும் நாரதர் என்று அறிமுகப்படுத்துகிறார் வில்-யார்.
சூர்யா: சிவனார் மான் ஏந்திய கதை என்னங்க தாத்தா?  அவர் ஏன் மானை ஏந்துகிறார்? இதுக்கு கதை இருந்தால் சொல்லுங்க தாத்தா.
தாத்தா: இப்படி எல்லாம் கதை திசை திரும்பினா மகாபாரதத்தை முடிக்கவே முடியாது.  நீண்ட நெடிய நெடுந்தொடராக மாறிவிடும்.  இருந்தாலும் இப்போ அந்தக் கதையைக் கூறுகிறேன். கேள்.  அந்தகாலத்தில் தாருகாவனம் தாருகாவனம் என்று ஒரு காடு இருந்தது.  அந்த காட்டிலே இருந்த முனிவர்கள் தவம் செய்வதில் தாங்கள் வல்லவர்கள் என்றும் தங்கள் இல்லத்தரசிகள் கற்பில் சிறந்தவர்கள் என்றும் பெருமையடித்துக் கொண்டிருந்தார்கள்.  தற்பெருமை தவறல்லவா?  எனவே இதைத் தகர்க்க வேண்டும் என்று எண்ணம் கொண்டார் இறைவன்.  ஒரு அழகிய சாமியார் வேடத்தில் வந்து பிச்சைக் கேட்க வந்தார்.  பிச்சைக் கேட்க வந்தவரின் அழகில் ஒரு நொடி முனிபுங்கவர்களின் மனைவிகள் மனதைப் பறிகொடுத்தார்கள்.  தவம் புரிந்த முனிவர்களுக்கு தெரிந்தது இந்தக் காட்சி.  உடனே ஒரு அபிசார யாகம் என்று ஒரு யாகம் நடத்தினார்கள்.  இப்படிப்பட்ட யாகத்தை ஒருவனை ஒழிக்க வேண்டும் என்றால் நடத்துவார்கள் அந்தகாலத்தில்.  அதி-ருந்து நாகங்கள், பூதங்கள், மான், பு-, மண்டையோடுகள், முயலகன் என்று ஒரு அரக்கன் ஆகியோர் வந்தனர்.  முனிவர்கள் இவைகளைப் பார்த்து.  சிவனைப் போய் ஒழித்துவிட்டு வாருங்கள் என்று ஏவினர்.  இதைத்தான் ஏவல் வைப்பது என்று சொல்வார்கள்.  இப்படி ஏவப்பட்ட நாகங்களை சிவன் அணிகலனாக அணிந்தார்.  பூதங்களைத் தன் பணியாட்களாக வைத்துக் கொண்டார்.  பு-யின் தோலை உரித்து உடையாக வைத்துக் கொண்டார்.  முயலகனை வென்று அவன் வேண்டுதல்படி தன் காலடியில் வைத்துக் கொண்டார்.  மானைத் தன் கரத்தில் ஏந்தினார்.  இப்படியாக எதிர்க்க வந்தவர்களை ஒழித்து பயனற்றவைகளாக மாற்றினார் சிவனார்.  இது தான் சுருக்கமான கதை.  சரியா.  நாம் நாரதர் தருமரிடம் வந்த கதையைப் பார்ப்போம்.  நாரதர்,"தருமா, நான் தென்புலம் சென்றிருந்த போது உன் தந்தை பாண்டுவைப் பார்த்தேன்'' என்றார்.  தருமரும் உடனே "என் தந்தை நலமாக உள்ளாரா?  அவர் ஏதாவது செய்தி சொன்னாரா? என்று கேட்டார்.
சூர்யா: தென்புலம் என்பது என்ன தாத்தா?  ஏற்கனவே சொன்னமாதிரி இருக்கு.  மறந்து போய்விட்டது.
தாத்தா: நம்மை விட்டு பிரிந்து போன - இறந்து போன முன்னோர்கள் வசிக்கும் இடம் தென்திசையில் உள்ளது.  அதனால் தான் தென்புலம் என்கிறார்கள்.  அது தென்திசைக் காவலனான எமனால் ஆளப்படும் உலகம். இதைத் தான் பித்ருலோகம் என்று சொல்வார்கள்.  தமிழில் காலனூர் என்பார்கள். இறந்த நம் முன்னோர்களுக்காக நாம் அமாவாசை, சூரிய கிரகணம், சந்திரகிரகணம், அவர்கள் இறந்த தினம் ஆகியவற்றில் முன்னோர்களுக்கான பித்ரு பூசையை முறையாகச் செய்தால் அதன் பலனாக அவர்கள் தென்புலத்தி-ருந்து வடபுலம் நோக்கி நகர்ந்து இறைவனுடன் சேருவார்கள்.  அதற்காகத் தான் அமாவாசையன்று விரதம் இருந்து முன்னோர்களை நினைத்து அவர்களுக்காக உணவிட வேண்டும் - சிரத்தையுடன் செய்ய வேண்டிய சிரார்த்தங்களைச் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள்.  தெரிகிறதா?  சாமி இல்லே பூதம் இல்லே என்று பேசி நம் முன்னோர்களையும் நாம் அவமதிக்கிறோம்.  சரி கதைக்கு வருவோம்.  நாரதரிடம் பாண்டு,"நீங்கள் பூமிக்குச் செல்லும் போது என் மக்களைப் பார்த்து இராசசூய வேள்வி செய்யும்படி கூறுங்கள்'' என்று கூறினாராம்.  இதைக் கேட்டவுடன் தருமர்,"என் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவது என் கடமை'' என்று கூறி கண்ணனிடம் இந்த வேள்வியை நடத்த உதவும்படி வேண்டினார்.  அப்போது கண்ணன் அந்த வேள்வையைச் செய்ய வேண்டும் என்றால் முத-ல் சராசந்தனைக் கொல்ல வேண்டும்.  அப்போது தான் அந்த வேள்வியை நடத்த முடியும் என்று கூறினார்.
சூர்யா: யார் இந்த சராசந்தன் தாத்தா?
தாத்தா: மகத தேசத்தில் முன்னொரு காலத்தில் ஒரு அரசன் இருந்தான்.  அவன் தேவர்களுக்குப் பகைவன்.  அவன் பெயர் பிருகத்ரதன்.  அவனுக்குக் குழந்தைகள் இல்லை.  எனவே காட்டிற்குச் சென்று ஒரு முனிவனை வேண்டினார்.  முனிவரின் பெயர் சண்டகௌசிகன்.  அவர் ஒரு மாமரத்தின் அடியில் தவம் செய்து கொண்டிருந்தார்.  அவர் அந்த மரத்தி-ருந்து ஒரு மாம்பழத்தை எடுத்து இந்த அரசன் கையில் கொடுத்து,"இதை உன் மனைவிக்குக் கொடு.  குழந்தை கிடைக்கும்'' என்று கூறி மீண்டும் தவநிலைக்குப் போய்விட்டார்.  இந்த அரசனுக்கோ இரண்டு மனைவி. சந்தேகத்தைக் கேட்கலாம் என்றார் முனிவர் தவநிலைக்குச் சென்றுவிட்டார்.  எனவே அரண்மனைக்கு வந்து அந்த காசிராசன் இரண்டு மனைவிகளுக்கும் பாதிபாதியாகப் பிரித்துச் சாப்பிடும்படிக் கூறிவிட்டார்.  இரண்டு மனைவிகளுக்கும் இரண்டு பாதி பாதி உருவம் உள்ள பிண்டங்களாகப் பிறந்தன.  "மாசு அற்று இலங்கும் மகவு இருவர்வயினும் பகிர்ந்து வளர்ந்ததன் பின், பாசத்துடனே ஓர் ஒருவர் பயந்தார், வடிவில் பப்பாதி.'' குழந்தையாகப் பிறக்காமல் பிண்டமாக இருந்ததால் அவற்றை ஊருக்கு வெளியே எறியும்படி அரசன் கட்டளை இட்டான்.  அந்த ஊர் கிராம தேவதை பேர் சரை.  அவள் இரவில் இந்த பிண்டங்களைக் கண்டாள். இரண்டையும் ஒன்றாகப் பொருத்தினாள். பொருத்துதலுக்கு வடமொழியில் சந்தம் என்று பெயர்.  சரை பொருத்தியதால் சராசந்தன் என்று பெயர்.  அந்தப் பெயரிலேயே அவன் வளர வேண்டும் என்றும் அவனுக்கு ஏராளமான பலத்தைத் தான் கொடுத்துள்ளதாகவும் சரை என்ற அந்த கிராம தேவதை கூறினாள்.  அத் தனயன்தன்னை, "சராசந்தன் என்னா அழைத்தி' என, மகதத்து இறைவற்கு அளித்து'. இந்த சராசந்தன் தான் பின்னாளில் பெரியவன் ஆனபிறகு கிரிவிரசம் என்னும் தலைநகரை வைத்துக் கொண்டு அரசாண்டான்.  அவனுக்கு இரண்டு பெண்கள்.  அஸ்தி - பிராஸ்தி என்று பெயர்.  இந்த இருவரையும் கண்ணனின் மாமனாகிய கம்சனுக்கு மணமுடித்து வைத்திருந்தான்.  கம்சன் இந்த சராசந்தனுக்குச் சம்பந்திமுறை.   இவன் பல மன்னர்களை வென்று அவர்களை சிறையில் இட்டு அவர்கள் அரசையெல்லாம் பிடுங்கிக்கொண்டு அரசாண்டு கொண்டிருந்தான்.  கம்சனைக் கண்ணன் கொன்று விட்டான் அல்லவா?  அதனால் கண்ணன் மேல் சராசந்தனுக்குப் பகை?  ஆமாம் தன் பெண்களை விதவைகள் ஆக்கியவன் மேல் யாருக்குத் தான் கோபம் இருக்காது?  பெரும்படையைத் திரட்டிக் கொண்டு வந்து மதுராபுரியை வளைத்துப் பெரும்போர் புரிந்தான்.  ஆனால் வெற்றிபெற முடியவில்லை.  பின்னர் ஒரு யவன மன்னனைத் தூண்டிவிட்டி அவனை ஒரு புறம் தாக்கச் சொல்- தான் மறுபுறம் தாக்குவது என முடிவெடுத்தான். இருமுனைத் தாக்குத-ல் வெற்றிபெய முடியாது - மக்கள் சிரமப்படுவார்கள் என்று கண்ணனுக்குத் தெரியும்.  எனவே கடலுக்கு நடுவில் ஒரு புதிய நகரத்தை நிர்மாணிக்கும்படி கடலரசனைப் பணித்தான் கண்ணன்.  அந்த நகரின் பெயர் தான் துவாரகை.  இதைத் தான் தமிழ் இலக்கியத்தில் துவரை என்றும் கண்ணனை துவரைநாயகன் என்றும் சொல்லுவார்கள்.  அதுமுதல் கண்ணன் துவாரகையில் வசித்து வருகிறார்.  அவரே இந்த சராசந்தனை அழித்திருக்கலாம்.  ஆனால் வீமனால் மரணம் அடையவேண்டும் என்பது விதி.  எனவே ஊழ்வினையின் உண்மையை உணர்ந்து இருந்த கண்ணன் சராசந்தனைக் கொல்லவில்லை.  ஆனால் எல்லோரும் சராசந்தனுக்குப் பயந்து கண்ணன் ஓடிவிட்டான் என்று பழி பேசுவார்கள்.  உண்மை அதுவல்ல.  ஊழ்வினையை மதித்தார் கண்ணன்.  அதனால் தான் இப்போது சராசந்தனை ஒழிக்கத் திட்டமிடுகிறார்.  சராசந்தனை ஒழித்தால் பல மன்னர்களை விடுவிக்கலாம்.  அவனிடம் உள்ள பொருள் தருமருக்குக் கிடைக்கும்.  வேள்வி புரிய அது உதவும் என்பது கண்ணனுடைய எண்ணம். கண்ணனுடன் ஐவரும் வேதியர் வடிவத்துடன் சராசந்தன் அரண்மனைக்குச் சென்று சராசந்தனைக் காணுகிறார்கள்.  இவர்கள் முகத்தைப் பார்த்தவுடனேயே இவர்கள் வேதியர் அல்ல என்பது சராசந்தனுக்குப் புரிந்து விட்டது.  "யார் நீங்கள்?  ஏன் வேதியர் வடிவத்துடன் என் அரண்மனைக்கு வந்திருக்கிறீர்கள்?'' என்று கேட்டான்.  கண்ணன் இப்போது தன் உண்மை வடிவம் எடுத்து தாம் வந்த காரணத்தைக் கூறுகிறான்.  உடனே சராசந்தன் வீமனைப் போருக்கு அழைக்கிறான்.  போருக்கு முன்னரே தன் மகன் சகதேவனுக்கு முடிசூட்டுகிறான் சராசந்தன்.  வீமன் தன் பலத்தால் சராசந்தனை வென்று உடலை இரு கூறாகப் பிளந்து விட்டெறிகிறான்.  ஆனால் பிளவுபட்ட சராசந்தனின் உடற்கூறுகள் மீண்டும் மீண்டும் ஒன்று சேர்ந்து விடுகின்றன.  மீண்டும் மீண்டும் போருக்கு வருகிறான் சராசந்தன்.  மாயக் கண்ணனை நோக்குகிறான் வீமன். உதவி புரியும்படி கண்ணால் கண்ணனிடம் கேட்கிறான்.  கண்ணன் ஒரு தர்ப்பையை ஒடித்து அடி-முடி மாற்றிக் காட்டுகிறார்.  புரிந்துவிட்டது வீமனுக்கு.  இந்த தடவை உடலைப் பிளந்தவுடன் அடி-முடி மாறுபடும்படி வைத்துவிடுகிறான்.  இவ்வாறு சராசந்தன் மடிகிறான்.  மீதிக் கதையை நாளைக்குச் சொல்லட்டுமா?

Thursday, October 28, 2010

NARANAARAYANA IN THE FORM OF KRISHNA AND ARJUNA

தாத்தா: கண்ணனும் வில்லவனும் ஒருங்கே இணைந்து  இந்திரப்பிரத்தத்தில்  சிறிது காலம் இருந்தனர்.  கண்ணன் தங்கி இருக்கிறான் - கண்ணன் வருகிறான் என்றால் ஏதோ காரணம் உள்ளது என்று தானே பொருள். ஐவர் நாட்டில் நன்றாக அரசாட்சி செய்து கொண்டிருந்தபோது வன்னிவானவன் அங்கே அந்தண உருவில் வருகிறான்.
சூர்யா: வன்னிவானவன் என்றால் யார் தாத்தா?
தாத்தா: வன்னி என்றால் தீ.  வன்னிவானவன் என்றால் தீக்கடவுள்.  அக்கினித் தேவன் என்று வடமொழியினர் கூறுவர்.  அந்தண உருவில் வந்தவன் யாசித்தான்.  கண்ணனும் விசயனும் கேட்பதை வழங்குவதாக வாக்களித்தனர்.  உடனே உரு மாறினான் வன்னிவானவன்.  தான் தீக்கடவுள் என்பதை தெரிவித்துக் கொண்டு "உந்து வெம் பசி பெரிது; வல்லே எனக்கு ஓதனம் இடுக!' என்றான்.  ஓதனம் என்றால் உணவு.  பசியாக உள்ளது எனக்கு உணவு வேண்டும் என்று கூறி தன் உணவு எங்கே உள்ளது என்பதையும் கூறினான்.  "காண்டவம் என்னும் காட்டில் உள்ள உயிர்கள் தான் உண்ண வேண்டும் என்று கூறினான். கொண்டல்வானன் காவலாக உள்ளதால் தான் உண்ணமுடியவில்லை என்றும் கூறினான்.  கொண்டல்வானன் என்றால் மழைத்தெய்வம்.  மாரித்தெய்வம்.  வருணன் என்றும் சொல்வார்கள். தக்ககன் என்று ஒரு பாம்பும் அங்கு உள்ளது.  நால்வகை மகீருகங்களும் உள்ளன. எனவே நீங்கள் உதவ வேண்டும்.'' என்றான். தக்ககன் என்பவன் எட்டு நாகங்களுள் ஒருவன்.
சூர்யா: எட்டு நாகங்கள் எவையெவை தாத்தா? நால்வகை மகீருகம் என்றால் என்ன?
தாத்தா: அனந்தன், கார்க்கோடகன், குளிகன், சங்கபாலன், தக்ககன், பதுமன், மகாபதுமன், வாசுகி ஆகியவை எட்டு நாகங்கள்.  மகீ என்றால் பூமியில் என்றும் ருகங்கள் என்றால் முளைப்பவை என்றும் பொருள்.  நால்வகை மகீருகங்கள் என்பவை மரம், கொடி, செடி மற்றும் புல் ஆகும்.  பொதுவாக பூமியி-ருந்து விளைபவை மகீருகங்கள் ஆகும்.  கண்ணன் ஒப்புதலுடன் 'உன் இச்சைப்படி கொள்க!' என்றான் விசயன்.  வன்னி வானவன் வில், அம்பு, வற்றாத தூணி ஆகியவற்றைத் தருகிறான். தூணி என்பது அம்புகளை வைக்கும் இடம்.  அம்பு ஆறாத்தூணி என்று சொல்வார்கள்.  பின்னர் அம்பராத்துணி என்று மாறிவிட்டது. நாளைக்குப் போரின் போது வேண்டும் என்பதால் இதைப் பெறத்தான் நடக்கிறது இந்தக் கண்ணனின் நாடகம் . விசயன் போர்க்கோலம் பூண்டு நாணொ- எழுப்பினான்.  அச்சத்துடன் பறவைகள் பறந்தன.  அந்த காட்டிற்குள் இருந்த மயன் என்னும் அரக்கர் தச்சன் கண்ணனை அணுகி அடைக்கலம் அடைக்கலம் என்றான்.  கண்ணனும் கண்ணால் தன் ஒப்புதலைத் தெரிவித்து விட்டான். எனவே விசயன் அவனைக் கொல்லவில்லை.  மயன் தப்பிவிட்டான். தக்ககன் இந்திரனுக்கு வேண்டியவன்.  எனவே இந்திரன் உடனே வந்தான்.  கண்ணனும் தன் மகன் விசயனும் காட்டை எரிய விட்டு வேடிக்கை காண்பதைக் கண்டான். தக்ககனைக் காக்க வேண்டிய கடமை இருந்தால் மகன் என்றும் பாராமல் மழைத் தெய்வத்தை அழைத்து மாரி பொழிந்து தீயை அணைக்கும்படி கட்டளையிட்டான்.  பன்னிரு ஆதித்தியர்களை அழைத்துப் போரிடும்படிக் கட்டளையிட்டான். விசயன் உடனே அம்புப் பந்தல் ஒன்று அமைத்து மழைநீர் உள்ளே வராதபடி தடுத்தான்.  கோபம் கொண்ட இந்திரன் அனைத்து தேவர்களுடன் வந்து போரிடத் துவங்கினான்.  இதற்குள் தக்கனின் மனைவியை விசயன் அம்பெய்து கொன்றான்.  ஆனால் அந்த பாம்பின் வாயில் இருந்து அதன் குட்டி தப்பியது.  அதன் பெயர் அச்சுவசேனன்.  அது உடனே விசயனின் எதிரி கன்னனிடம் சென்று அடைக்கலம் புகுந்து விசயனைப் பழி வாங்க காத்திருந்தது.  மேதினியில் நினைத்ததைச் சாதிக்கும் திறமை உடைய பாம்புக் குட்டி அது.  விசயனுக்கு அது தான் எமன் என்று சொல்லலாம்.  கொல்லாமல் விடாது அந்த குட்டிப் பாம்பு.  வானொலி - ஒன்று வந்தது.  அது கூறியதைக் கேட்ட இந்திரன் உடனே இந்திரலோகம் திரும்பினான்.
சூரியா:  மேதினி என்றால் என்ன? வானொலி - என்றால் என்ன?  அது என்ன கூறியது?   12 ஆதித்தியர்கள் யார்? ஏன் இந்திரன் போரை நிறுத்தினான்? சொல்லுங்க தாத்தா.
தாத்தா: மேதினி என்றால் உலகம். மேதஸ் என்பது ஒரு வடமொழிச் சொல்.  கொழுப்பு என்று பொருள்.  மதுகைடபரை திருமால் மாயையின் வல்லமையுடன் வதைத்த போது அவர்களின் கொழுப்பு பூமியில் விழுந்தது.  அப்போது முதல் பூமிக்கு மேதினி என்று ஒரு பெயர் வந்துவிட்டது.  பன்னிரு ஆதித்தியர்கள் இந்திரன், தாதா, பர்ஜந்யன், த்வஷ்டா, பூஷா,அரியமா, பகன், விவஸ்வான், விஷ்ணு, அம்சுமான், வருணன், மித்ரன் ஆகியோர். வானொலி - என்றால் ஆகாயவாணி என்றும் அசரீரி என்றும் வடமொழியில் கூறுவார்கள்.  அது கண்ணனும் விசயனும் நரநாராயணர்கள் என்பதைக் கூறியது.
'தமரினும் இனிய தக்ககன் முதலே தப்பினன்,
                                குரு நிலம் சார்ந்தான்;
குமரனும், நும்மால் உய்ந்தனன்; தூமக் கொடியனும்
                                கொண்டலுக்கு அவியான்;
நமர்களில் இருவர், நரனும் நாரணனும்; நமக்கும் இங்கு
                                இவர் சிறிது இளையார்;
அமரினை ஒழிமின், அமரினை ஒழிமின், அமரரும்
                                அமரர் நாதனுமே!'
என்பார் வில்லியார்.  "தக்ககன் தப்பிவிட்டான்.  அவன் மகன் பிழைத்து விட்டான். மழையால் இந்த தீயை அணைக்க முடியாது.  போரிடும் இருவரும் இறைவனின் அம்சங்கள்.  எனவே அவர்களைத் தோற்கடிக்க முடியாது.  நிறுத்து போரை'' என்றது வானொலி -.  எனவே தான் இந்திரன் போரை நிறுத்திவிட்டு வானுலகு திரும்பினான்.
இந்தப் போரினைக் கண்ட அனைவரும் விசயனின் வெற்றியைப் பாராட்டினார்கள்.  விசயனுக்கு வற்றாக் கணைகள் கிடைத்தன.  கூடவே நாகத்தின் பகையும் கிட்டியது. நாளைக்கு மீதக் கதையைச் சொல்கிறேன்.

Wednesday, October 27, 2010

VILLIBARATHAM - ARJUNA VISITS MADURAI - BIRTH OFUPAPANDAVAS AND ABIMANYU

தாத்தா: இன்றைக்கு அருச்சுனன் தீர்த்த யாத்திரை பற்றி கதை.  நாரதர் ஐவரும் ஒரு மனைவியோடு வாழ ஒரு நியதியை வகுத்துத் தந்தார்.  ஐவரும் அப்படியே வாழ்வது என முடிவெடுத்தனர்.  நன்றாக் முறைப்படி இந்திரப்பிரத்தம் நகரில் அரசாண்டு கொண்டிருக்கும் போது ஒரு அந்தணன் அரண்மனைக்கு முன் வந்து புலம்பி முறையிடுகிறான். "விடைகாவலர்நிரைகொண்டனர் வில்வேடுவரென்றான்''.  அதாவது அந்த ஊர் யாதவரின் பசுக்களை வேடுவர் வளைத்துச் செல்கின்றனர் என்று முறையிட்டான்.  இதைக் கேட்ட அர்ச்சுனன் உடனே அதைத் தடுத்த நிறுத்த எண்ணி அரண்மனைக்குள் ஓடினான்.  அப்போது பாஞ்சா- தருமருடன் இருக்கும் முறை.  இருவரும் அரண்மனையில் இருந்த போது அர்ச்சுனன் அவர்களைப் பார்க்க நேர்ந்தது.  எனவே ஏற்கனவே செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி கானகம் சென்று இறைவழிபாடு நடத்துவதென அர்ச்சுனன் முடிவெடுத்தான்.  தருமன் தடுத்தும் கேட்கவில்லை.  அப்படி போய் ஒரு நாள் கங்கையில் புனலாடிக் கொண்டிருந்த போது உலூபி என்றொரு நாக கன்னிகையைக் கண்டான் விசயன்.  அவளின் அழகில் மயங்கிய விசயன் பிலத்துவாரம் புகுந்து நாகலோகத்தை அடைந்தான்.  நாக லோகத்தில் இவர்களுக்குத் திருமணம் நடைபெறுகிறது.  சில நாட்கள் இன்பமாக இருக்கிறார்கள்.  உலூபி இராவானைப் பெற்றெடுக்கிறாள். (வடமொழியில் இராவாந் - எனவே வில்-யார் இராவான் என்று பயன்படுத்துகிறார்.  பரவலாக அரவான் என்றால் எல்லோருக்கும் இப்போது புரியும்).  இமய மலையில் உள்ள நதிகளில் புனலாடிய பின் விடைபெற்று கிழக்குத் திசை நோக்கி தன் பயணத்தைத் தொடருகிறான்.  யமுனையில் நீராடுகிறான்.  பின் தென்திசை நோக்கிப் பயணமாகிறான்.  திருவேங்கடம், அரவக்கிரி, காஞ்சி, திருக்கோவிலூர், தில்லை, திருவதிகை, திருவகீந்திரபுரம், திருவரங்கம், இப்படி பல ஊர்களில் பயணித்து இறுதியில் பாண்டியனது தலைநகரத்தை அடைகிறான்.  ஆமாம் மதுரை மாநகரை ந்தடைகிறான்.
சூர்யா:  தாத்தா அரவகிரி என்றால் என்ன? அத்திகிரி என்றால் என்ன? எழுவகை பிறப்புகள் என்றால் என்ன? ஏன் தாத்தா - அந்த காலத்திலேயே அர்ச்சுனன் மதுரைக்கு வந்திருக்கிறாரா? அப்போ மகாபாரதக் கதை நடக்குறப்போவே தமிழகம் இருந்திருக்கிறதா?
தாத்தா:  அரவகிரி என்றால் திருவேங்கடம். வடமொழியில் சேஷாசலம் என்பார்கள்.  அதைத்தான் அரவகிரி என்கிறாரகள்.  அத்திகிரி என்றால் யானைமலை.  இந்திரனின் யானை பூசித்த தலம் சாஞ்சி.  அதனால் காஞ்சிக்கு அத்திகிரி என்று பெயர். மகாபாரதக் காலத்திலேயே மதுரை இருந்ததா என்று கேட்கிறார்.  அதற்கு முன்னாலே இருந்திருக்கிறது.அதைத் தான் முத-லேயே சொன்னேனே.  தமிழகமும் தமிழ் மொழியும் அந்தக் காலத்திலேயே சிறந்திருந்தது.  திருமாலே தனது முதல் அவதாரமான மச்ச அவதாரத்தை மதுரையில் தான் துவங்கி இருக்கிறார்.  மச்ச அவதாரத்திற்குப் பிறகு கூர்ம அவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமன அவதாரம், இராம அவதாரம் எல்லாம் முடிந்து கிருஷ்ண அவதாரம் வருகிறது.  அப்போது தான் மகாபாரதக் கதை நடக்கிறது.  அதனால் பல யுகங்களாக உள்ள நகரம் நமது மதுரை நகரம் என்பதை நாம் உணர வேண்டும்.  அதே போல தமிழ் மொழியும் பல யுகங்களாகத் தழைத்த மொழி.  இன்னும் வழக்கில் உள்ள மொழி.  வடமொழியான சமஸ்கிருதத்தைப் போல் வழக்கொழிந்த மொழி அல்ல நமது தமிழ் மொழி.  தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் வேதங்களுக்கு உரை எழுதியே அதற்கு உயிரூட்டிக் கொண்டிருந்தார்கள்.  பல சொற்களை நாம் தமிழில் சேர்த்துப் பேசுகிறோம்.  அதனால் அப்படி ஒரு மொழி இருந்தது தெரிகிறது. மற்றபடி அதைப் பேசுகிறவர்கள் என்றால் ஒருசில நூறுபேர் மட்டுமே தான்.  இதை நான் சொல்லவில்லை.  மக்கள் கணக்கெடுப்புத் தகவல் சொல்கிறது. தெரியுதா? சிவபெருமான் இங்கே மன்னராக இருந்திருக்கிறார்.  பல திருவிளையாடல்களை நிகழ்த்தி இருக்கிறார்.  இவையெல்லாம் வடமொழியில் காவியமாகப் படைக்கப்பட்டு உள்ளன. ஊழி வந்து உலகமே அழிந்து மீண்டும் தோன்றும் முன்னரே தமிழகம் இருந்திருக்கிறது.  தமிழ் மொழி இருந்திருக்கிறது.  ஊழிக் காலத்தில் பல இலக்கியச் செல்வங்கள் அழிந்திருக்கின்றன.  பல புலங்கள் கடல்நீரில் காணாமல் போய் விட்டன. .  காஞ்சி மாநகரில் ஏழு தீர்த்தங்கள் இருந்ததாகக் கூறுகிறார்.  அவை கம்பை, பம்பை, மஞ்சனி, பிச்சி, கலிச்சி, மண்ணி, வெஃகா.  இதே போன்று திருவண்ணாமலை சென்றதையும் அந்த இடம் ஏழு பிறப்புகளையும் இல்லாமல் ஆக்கும் என்றும் கூறப்படுகிறது. 
சூர்யா: ஏழு பிறப்புகள் என்னென்னங்க தாத்தா?
தாத்தா: ஏழு பிறப்புகள் என்பவை தேவர், மனிதர், மிருகம், பறவை,ஊர்வன,
நீர்வாழ்வன, தாவரம். சரி நாம் கதைக்கு வருவோம்.  அப்போது பாண்டியனது தலைநகராக மணலூர் இருந்திக்க வேண்டும்.  அதனால் தான் வில்-யார் மிக அழகாகச் சொல்கிறார். "தென்திசையிலே சோளதேசத்தைக்கடந்து பாண்டியனது மணலூருபுரத்தில்வனச்சோலையிலே சித்திராங்கதையைக்கண்டு'' .என்று தான் உள்ளது பாட-ல். பாண்டியனது மதுரையில் என்று காணவில்லை.  இதை நாம் கவனிக்க வேண்டும்.
சூர்யா: என்னங்க தாத்தா மணலூர் இப்போ ஒரு கிராமம்.  அங்கே எப்படி அரசர் இருந்திருக்க முடியும்.
தாத்தா: பழைய பாடல்களில் திருப்புவனம் பெரிய ஊராகச் சித்தரிக்கப்படுகிறது.  மாடமாளிகைகள் இருந்ததாக பெரியபுராணப் பாடல்களில் வருகிறது.  எனவே ஒருகாலத்தில் இருந்திருக்கலாம்.  பின்னர் மதுரை நோக்கி பாண்டியன் நகர்ந்திருக்கலாம்.  விசயன் தீர்த்த யாத்திரையில் பாண்டிய மன்னனிடம் வருகிறார்.  அவர் யார் என்று கேட்கிறார்.  தான் யார் என்பதைச் சொல்கிறான்.  விசயனுக்கு விருந்து அளிக்கிறார் மன்னர்.
சூர்யா:  அந்த மன்னர் பெயர் என்னங்க தாத்தா?
தாத்தா: அந்த மீனவன் பெயர் சிததிரவாகனன்.  விசயனுக்கு சித்திரவாகனன் சோலைமலையில் வைத்து விருந்து தருகிறான்.  அப்பொழுது அவன் மன்னன் மகளை -சித்திராங்கதையைக் காண்கிறான்.  கண்டதும் காதல் கொள்கிறான் விசயன். காதல் கொண்டதோடு மட்டுமல்ல கந்தர்வ முறையில் யாரும் அறியாமல் திருமணமும் செய்து கொள்கிறான்.  தோழிகள் மூலம் செய்தி மன்னவன் செவிக்குச் செல்கிறது.  அவருக்கு விசயன் பஞ்சவரின் நடுப்பிறந்தோன் பஞ்சவன் என்னும் ஒரு வடபுலத்து மன்னவன் என்பது தெரியும்.  எனவே மகிழ்ச்சி அடைகிறார்.  ஆனால் திருமணத்தை நடத்த ஒரு நிபந்தனை விதிக்கிறார்.  இருவருக்கும் பிறக்கும் ஆண் குழந்தையைத் தனக்குத் தத்து கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்.  காரணம் பாண்டியர் குலத்தில் முன்னம் ஒரு அரசனுக்குக் குழந்தைகள் இல்லாமல் இருந்து கடுமையான தவம் செய்த பொழுது இறைவன் அந்த பாண்டியன் முன் தோன்றி உனக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கும்.  ஆனால் உங்கள் குலத்தில் இனி எப்போதும் ஒரு மகவு தான் கிடைக்கும்.  ஒன்றுக்கு மேல் எப்போதும் கிடையாது என்று அந்த காலத்திலேயே கட்டுப்பாட்டினை தனது வரம் மூலம் விதித்திருந்தார்.  இதனால் தான் தான் ஆண் குழந்தையை அரசாளும் பொருட்டு தத்து கேட்பதாகத் தெரிவித்தார்.
சூர்யா:  அப்படி தவம் பண்ணிய பாண்டியன் யார் தாத்தா?
தாத்தா: அவன் பெயர் பிரபஞ்சனன்.  இது வியாசபாரதத்தில் வருகிற கதை.  வியாசர் கதை எழுதிய காலத்திலேயே பாண்டியன் வரலாறும் இருந்திருக்கிறது.  பாண்டியன் இருந்தால் தமிழும் இருந்திருக்கும்.  வரலாற்று பூர்வமாகக் கூறவேண்டுமானால் இந்த மாதிரி அங்கீகரிக்கப்பட்ட காவியங்கள் நமது தொன்மையை நமக்குப் புலப்படுத்தும். சரி கதைக்கு வருவோம்.  என் நவ்வி பெறும் மகவு எனக்கே நல்க வேண்டும்'  நவ்வி என்றால் மகள் என்று பொருள்.விசயன் ஒத்துக் கொள்கிறான்.  சீரும் சிறப்புமாகத் திருமணம் நடைபெறுகிறது.  இதன் விளைவாக பப்புருவாகனன் என்று ஓர் ஆண் குழந்தை பிறக்கிறது.  சொன்ன சொல் தவறாமல் விசயன் அந்தக் குழந்தையை பாண்டிய மன்னனிடம் வளர்ப்பு மகனாக ஒப்படைத்து விட்டு தன் தீர்த்தயாத்திரையைத் தொடர்கிறான்.  அங்கிருந்து கன்னியாகுமரி செல்கிறான்.  பின்னர் மேலைக் கடற்கரை சென்று அனந்தபுரம் மற்றும் பல தலங்களில் இறைவனை வணங்குகிறான்.  அரம்பையர் ஐவர் மேலைக் கடற்கரையோரம் இருந்த ஆறுகளில் முனிவன் சாபத்தால் முதலைகளாக இருந்தார்கள்.  அவர்கள் ஐவரையும் சாபவிமோசனம் தந்து அரம்பையர்களாக மீண்டும் ஆக்குகிறான்.  இறுதியில் கோகர்ணம் என்றும் மேலைக் கடற்கரையில் உள்ள ஒரு இடத்திற்குச் சென்று சிவபிரானை வணங்குகிறான்.  அங்கேயே தீர்த்தயாத்திரைக்காக உடன் அழைத்து வந்த அந்தணர்களை இருக்கச் சொல்- தான் மட்டும் துவாரகை செல்கிறான்.
சூர்யா: துவாரகைக்கு ஏன் தாத்தா போகிறார் விசயன்?  விசயன் என்று ஒருமுறை சொல்கிறீர்கள்.  அர்ச்சுனன் என்று ஒரு முறை சொல்கிறீர்கள்.  பார்த்தன் என்று ஒரு முறை சொல்கிறீர்கள்.  பல்குனன் என்று சொல்கிறீர்கள்.  இவருக்கு எத்தனை பெயர்கள் தான் உள்ளன தாத்தா?
தாத்தா: அர்ச்சுனனுக்கு ஏகப்பட்ட காரணப் பெயர்கள்.  வில்-யார் அடிக்கடி கூறும் பெயர்களைச் சொல்கிறேன் கேள். பார்த்தன், அருச்சுனன், கரியோன், விசயன், பாகசாதனி,சவ்வியசாசி, பற்குனன், பார்  ஏத்து தனஞ்சயன், கிரீடி, சுவேத வாகன்.  இப்போது விசயன் துவாரகைக்குச் செல்வது சுபத்திரையைத் திருமணம் செய்து கொள்ள.  துவாரகையில் நுழையும் போதே தவக் கோலத்தில் நுழைகிறான் விசயன்.   ரைவதகம் என்னும் மலைச் சாரலை அடைகிறான். அங்கு சேர்ந்ததும் கண்ணனை நினைக்கிறான்.  கண்ணன் தான் கேட்டால் கொடுப்பான்.  நினைத்தான் வருவான். அவன் தானே ஆட்டுவிக்கிறான் அனைவரையும்.  விசயன் தீர்த்தயாத்திரை வந்ததும் கண்ணன் கருதியதால் தானே.  கண்ணனிடம் விசயன் சுபத்திரையைத் தான் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகத் தெரிவிக்கிறான். பதில் ஒன்றும் பேசவில்லை கண்ணன்.  நாளை வருகிறேன் என்று கூறிவிட்டுச் செல்கிறேன். இந்த மலைச்சார-ல் இந்திரவிழா நடக்கிறது.  எனவே யாதவர்கள் அனைவரும் கண்டு களிக்க அங்கு வருகிறார்கள்.  கண்ணன்,, பலராமன், சுபத்திரை ஆகியோர் விசயனை முனிவர் கோலத்தில் கண்டு முனிவர் என்று கருதி வணங்குகிறார்கள்.  கண்ணன் அருச்சுனனைத் தனியே கண்டு சுபத்திரையைத் திருமணம் செய்து கொள்ள திட்டம் தீட்டுகிறான்.  பலராமனுக்கு பக்தி அதிகம்.  எனவே இந்த முனிவரை அரண்மனைக்கு அழைத்துச் சென்று சுபத்திரையைப் பணிவிடை செய்யச் சொல்கிறான்.  அரண்மனைக்கு வந்தபிறகு - சுபத்திரையைக் கண்ட பிறகு - முனிவரின் நடையுடை பாவனையில் மாற்றம் தெரிகிறது.  மெ-ந்து கொண்டே வருகிறார்.  சுபத்திரைக்கு இந்த முனிவர் மேல் ஒரு சந்தேகம் வருகிறது.  முனிவரிடம் அவரது ஊர் எது என்று கேட்கிறாள்.  முனிவரோ இந்திரப்பிரஸ்தம் என்று சொல்கிறார்.  இந்திரப்பிரஸ்தத்தில் தருமர் நலமா? வீமர் நலமா? நகுல சத்துருக்கனர் நலமா? குந்தி தேவியார் நலமா? திரௌபதி நலமா? என்று இப்படி எல்லார் நலத்தையும் கேட்ட சுபத்திரை விசயனின் நலத்தைக் கேட்கவில்லை.  தோழி கேட்கிறாள்.  அப்போது விசயன் தீர்த்த யாத்திரை சென்றிருப்பதாகவும் ஒருவேளை துவாரகைக்கு போயிருக்கலாம் என்றும் கூறுகிறான்.  சுபத்திரைக்கு புரிந்து விடுகிறது.  யார் இந்த முனிவன்.  எல்லா முனிவர்களையும் அரண்மனை வரை விடுவதில்லையே?  அதுவும் கண்ணனின் தங்கை தான் முனிவரை கவனிக்க வேண்டும் என்று கூறியதில்லையே?  எல்லாம் கண்ணனின் திருவிளையாடல் என்று சுபத்திரை புரிந்து கொண்டாள்.  மகிழ்ந்தாள்.  உடனே கண்ணன் தோன்றினான்.  திருமணம் நடத்த தக்க சமயம் இது என உரைத்தான்.  ஏன் என்றால் அண்ணன் பலராமன் ஊரில் இல்லை.  அவன் இருந்தால் மறுப்பு தெரிவிப்பான்.  எனவே உடன் திருமணம் நடத்தத் தீர்மானித்து இந்திரனை நினைக்கிறார்கள்.  இந்திரன் இந்திராணியுடன் வருகிறான்.  இப்படியாக கண்ணனது முயற்சியால் சுபத்திரை-அருச்சுனன் திருமணம் நடைபெறுகிறது.  கண்ணன் உடனே அர்ச்சுனனிடம் உடனே இந்த ஊரைவிட்டு இந்திரப்பிரத்தம் போக வேண்டும் எனவும் சுபத்திரை தேரைச் செலுத்துவாள் என்றும் கூறுகிறான்.  காரணம் இருக்கும்.
சூர்யா: பெண்கள் தேரை ஓட்டுவார்களா தாத்தா?
தாத்தா: அந்த காலத்தில் போரின் போது தசரதருக்கு கைகேயி தேர் ஓட்டி உள்ளாள். நரகாசுரனைக் கொல்லும் போது சத்தியபாமா தேரை ஓட்டி இருக்கிறாள்.  அந்த காலத்தில் அரசகுமாரி என்றால் அவளுக்கும் எல்லா வித்தையும் தெரிந்திருக்கும். சரி.  கதைக்கு வருவோம்.  கண்ணன் பலராமனுக்கு ஆள் அனுப்பி நடந்ததைத் தெரிவிக்கிறார்.  கொதித்தெழுகிறான் நீலாம்பரன் பலராமன்.  விரட்டிச் செல்கிறான்.  இதெல்லாம் நடக்கும் என்று கண்ணனுக்குத் தெரியுமே.  வில்லும் அம்புமாக அர்ச்சுனன் தேரில் உள்ளான். போர் புரிய வந்த அனைவரையும் வென்று விரட்டிவிட்டு இந்திரப்பிரத்தம் வந்து சேருகிறான். பின்னர் கண்ணன் அண்ணனைச் சமாதானப்படுத்தி சீர்செனத்தியோடு இந்திரப்பிரத்தம் போய் சமாதானப்படுத்துகிறார்கள். அர்ச்சுனன்-சுபத்திரை இணையருக்கு அபிமன்னு என்னும் வீரமகன் பிறக்கிறான்.
சூர்யா: துரௌபதிக்கு ஒன்றும் குழந்தைகள் இல்லையா?
தாத்தா: ஏன் இல்லை.  ஆண்டுக்கு ஒரு முறை ஒரு குழந்தை.  ஐவருக்கும் ஐந்து குழந்தைகள் துரௌபதி மூலம்.  அவர்கள் பெயர் பிரதிவிந்தியன், சுதசோமன், சுருதகர்மா, சதாநீகன்,சுருதஸேநன். இவர்களை உபபாண்டவர்கள் என்றும் அழைப்பார்கள்.  எல்லோரும் வித்தைகள் பல கற்கிறார்கள்.  இவர்களில் பேர் சொல்லும் பிள்ளையாக அபிமன்னு இருக்கிறான்.  சரி மீதிக் கதையை நாளைக்குப் பார்ப்போம்.

Sunday, October 24, 2010

நான் ஏற்கனவே செய்த பதிவுகளின் எழுத்துரு படிக்க முடியவில்லை என்பதால் மீண்டும் கொடுத்துள்ளேன்.  படிக்க இயலாதவர்கள் அருள் கூர்ந்து படிக்கவும்.


சூரியா: தாத்தா - ஏன் தாத்தா கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் நடந்த போரை பாரதப் போர் என்று சொல்கிறார்கள்?
 கௌரவர்களுக்கு அந்த பேர் ஏன் வந்தது?
பாண்டவர்களுக்கு ஏன் அந்தப் பேர் வந்தது?
பாட்டனார் கூட ஏன் பாண்டவர்கள் போர் செய்யணும்?
ஒரே குழப்பமா இருக்கு தாத்தா.  நீங்க சொல்லுங்க
தாத்தா:  கதையைக் கேட்டால் இன்னும் குழம்பும்.  இருந்தாலும் நான் சொல்றேன்.  கேளு.  அந்தக் காலத்தில் எப்படி வாழ வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இராமாயணத்தைப் படி.  எப்படி எல்லாம் வாழக் கூடாது என்பதைத் தெரிந்து கொள்ள மகாபாரதத்தைப் படி என்று சொல்லுவாங்க.  புரியுதா?
நான் வியாசர் எழுதிய பாரதத்தை சுருக்கமாக கதையாகப் படித்து உள்ளேன்.  ஆனால் வில்-பாரதத்தை படித்து உள்ளேன்.  அது தமிழில் எழுதப்பட்ட அருமையான காவியம்.
சூரியா:  ஏன் தாத்தா இந்தக் கதை எல்லாம் உண்மையா?
தாத்தா: டேய் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் இறங்கினான் என்று சொல்றாங்க.  நீ பார்த்தியா?  யார் பார்த்தா?  சொன்னா கேட்டுக்குறோமில்லே.  அந்த மாதிரி தான் சொன்னாக் கேக்கணும்.  நம்ம இலக்கியத்திலே பல இடங்களிலே இந்தப் போரைப் பற்றி செய்தி வருது.  இந்த கதாபாத்திரங்களைப் பற்றி பல இடங்களில் வருகிறது.
சூரியா:  அப்படியா தமிழ் இலக்கியத்தில் பாரதம் பற்றி செய்தி இருக்கிறதா தாத்தா?
தாத்தா: ஆமாம்டா.  உதாரணத்துக்குச் சொல்லணும்னா
ஈர்-ஐம்பதின்மரும் பொருது களத்து அவிய,
பேர் அமர்க் கடந்த கொடுஞ்சி நெடுந் தேர்
ஆராச் செருவின் ஐவர் போல (415-417)
இளந்திரையன் பகை வென்றான் என்பது குறிக்கப்பட்டுள்ளது. விசயன் காண்டவ வனம் எரித்த செய்தியும், வீமன் வகுத்த மடைநூல் (பாக சாஸ்திரம்) நெறிப்படி பற்பல உணவு ஆக்கியமையும்,
கா எரியூட்டிய கவர் கணைத் தூணி
பூ விரி கச்சைப் புகழோன் தன்முன்,
பனிவரை மார்பன், பயந்த நுண் பொருட்
பனுவலின் வழாஅப் பல் வேறு அடிசில் (238-241)
என வரும் சிறுபாணாற்றுப்படை அடிகளால் புலனாகின்றன.
கலித்தொகையில் உவமை வாயிலாகப் பாரதக் கதை நிகழ்ச்சிகள் பல காட்டப் பெற்றுள்ளன. அரக்கு இல்லில் ஐவரைக் குடிபுகச் செய்து துரியோதனன் அதற்குத் தீயிட்டது(25:1-4), அந்தப் பேராபத்திலிருந்து வீமன் தன் கிளைஞரைக்காப்பாற்றியது (25:5-8), துச்சாதனன் திரௌபதியின் கூந்தலைப் பற்றியது (101:18-20), அவனது நெஞ்சத்தை வீமன் பிளந்தது (101:18-20), துரியோதனன் துடையை வீமன் முறித்தது (52:2-3), பாரதப் பொருகளம்(104:57-59), முதலியவற்றைப் பற்றிய குறிப்புக்களைக் காணலாம். சிலப்பதிகாரத்தில், 'இலங்கையில் எழுந்த சமரமும், கடல்வணன் தேர் ஊர் செருவும், பாடி' (26:238-239) என இராமாயண பாரதப் போர்கள் இரண்டும் சுட்டப்பெற்றுள்ளன. அன்றியும், பாரதப் போர் பதினெட்டு நாள் நடந்தமை குறித்தும் (27:7-10), அப் போரில் சேரன் பெருஞ் சோறு அளித்தமை குறித்தும் (29:24), கண்ணன் பாண்டவர்க்குத் தூது நடந்தமை குறித்தும் (17:34,37) குறிப்புகள் வந்துள்ளன. விராடனது நகரில் விசயன் பேடியாக வாழ்ந்தமை பற்றி மணிமேகலையில் குறிப்பு உள்ளது (3:146-147).

பிற்காலச் சோழர் காலத்துத் தோன்றிய கலிங்கத்துப்பரணி,
தங்கள் பாரதம் முடிப்பளவும் நின்று தருமன்-
தன் கடற்படைதனக்கு உதவி செய்த அவனும் (194)
என்றும்,
தேவாசுர ராமாயண மாபாரதம் உளவென்று
ஓவா உரை ஓயும்படி உளது, அப் பொரு களமே (472)
என்றும், சோழரின் முன்னோன் ஒருவன் தருமன் பக்கம் நின்று உதவிய வகையையும,ஙி பாரதப் போரையும் பற்றிக் கூறுதல் கவனிக்கத்தக்கது.
அரக்கரைப் பொருத முரட்போர் வில்லும்,
பாரதம் பொருத பேர் இசைச் சிலையும்,
தாருகற் கடிந்த வீரத்து அயிலும்
பாடிய புலவன் பதி அம்பர்ச் சேந்தன்
என வரும் திவாகரத்தின் பத்தாவது ஒலிபற்றிய பெயர்த் தொகுதி இறுதிக் கட்டுரையால் திவாகர நிகண்டின் ஆசிரியர் பாரதம் பொருத விசயனது வெற்றி வில்லைப் பாடினார் என்பது தெரிகிறது. இவர் பாரதக் கதை முற்றும் பாடினரா' அல்லது அதன் பகுதிகளுள் ஏதேனும் ஒன்றைப் பாடினரா' என்பது துணியக்கூடவில்லை. சேந்தனாரின் புலமைக்கு எடுத்துக்காட்டாகக் கூறுவதனால் எல்லோரும் மதித்துப் போற்றிய ஓர் இலக்கியமாகவே இவருடைய நூல் இருந்திருக்கவேண்டும் என்று ஊகிக்கலாம். இங்ஙனமாக, சங்கநூல் தொடங்கிப் பாரதக் கதைப்பகுதிகள் தமிழ் நூல்களில் புலவர் பெருமக்களால் விதந்தோதப் பெற்றுள்ளமை மக்களிடையே இக்கதையின் பெரு வழக்கினையே புலப்படுத்தும்.
இப்படி பல இலக்கியப் பாடல்களிலே இந்தச் செய்தி விரவிக் கிடக்கிறது.  அதனால் நாம் நம்பித் தான் ஆகவேண்டும்.  சரியா?
சூர்யா:  சரிங்க தாத்தா
தாத்தா:  வில்-பாரதம் படித்தால் பல நல்ல தமிழ் சொற்கள் நமக்குத் தெரியும்.  பல துணைக் கதைகள் தெரியவரும்.  உதாரணமாக காவியத்தைத் துவக்கும் போதே ஆக்குதல், காத்தல், வீக்குதல் என முத்தொழில்கள் இறைவனால் நடத்தப்படுவதாக உள்ளது.  வீக்குதல் நாம் கேள்விப்படாத ஒரு சொல்.
ஆக்கு மாறய னாமுத லாக்கிய வுலகம் காக்கு மாறுசெங் கண்ணிறை கருணையங் கடலாம் வீக்கு மாறர னாமவை வீந்தநாண் மீளப் பூக்கு மாமுத லெவனவன் பொன்னடி போற்றி.
: வீக்கும் ஆறு - (காப்பாற்றப்பட்ட உயிர்களை) அழிக்குமாறு, அரன் ஆம் - சிவனாவனோ:
அவை வீந்த நாள் - அவைஅழிந்த காலத்தில், மீள பூக்கும் - மீண்டும் படைக்கின்ற, மா முதல் (ஆம்)- சிறப்புற்றமுதற்கடவுள்
இதி-ருந்து வீக்குதல் என்றால் அழித்தல் என்று நமக்குப் புலப்படுகிறது.  மீளப் பூக்கும் என்றால் மீண்டும் படைத்தல் என்று விளங்குகிறது.  மாமுதல் என்றால் முதற்கடவுள் என்று தெரிய வருகிறது.  இப்படி  நாம் அறியாத பல சொற்களை நாம் அறிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது.
சூர்யா:  ஆமாம் தாத்தா.  தொலைக்காட்சியைப் பார்த்தால் தமிழே மறந்துடும் போல இருக்கு.  அதிலே தமிங்கிலீசு தான் பேசுறாங்க.  மம்மிங்கிறாங்க.  டாடிங்கிறாங்க.  அங்கிள் என்னு சொல்றாங்க.  எதைச் சொல்லணும்னாலும் ஆங்கிலத்திலே தான் சொல்றாங்க.  ஆனா பேரு மட்டும் தமிழ் தொலைக் காட்சி என்று சொல்-க்கிறாங்க.
இதைப் பார்த்துகிட்டே இருந்தோம்னா நாம பல தமிழ் வார்த்தைகளைத் தொலைத்து விடுவோம் போல இருக்கு தாத்தா.  நான் இன்னும் பல தமிழ் வார்த்தைகளையும் கதைகளையும் கேட்கணும்.  நீங்க சொல்-க் கொடுங்க.
தாத்தா: சரிடா.  கதை திருப்பாற்கடலைக் கடந்த கதையில் இருந்து துவங்குது.  திருப்பாற்கடலைக் கடைந்த போது அதி-ருந்து அமுதம் மட்டுமல்ல திருமகள் தோன்றினாள்.  திருமகன் - ஆமாம் சந்திரன் என்னும் நிலவன் தோன்றினான். இன்னும் எண்ணற்ற நல்ல நல்ல பொருட்கள் பாற்கடலைக் கடைந்த போது கிடைத்தன.
சூர்யா:  அப்படின்னா லட்சுமி சாமிக்கு சந்திரன் சகோதரனா தாத்தா?
தாத்தா: ஆமாம்டா திருமகளின் தம்பி தான் இந்த சந்திரன்.  இவன் தட்சனுடைய பெண்களில் 27 பேரைத் திருமணம் செய்து கொள்கிறான்.
சூர்யா: என்னங்க தாத்தா? ஒண்ணு போதாதா?  இப்படி 27 பேரைத் திருமணம் செய்து கொண்டுள்ளானே? இவன் விளங்குவானா?
தாத்தா: உனக்கு விளங்குது.  அவனுக்கு விளங்கல்லே.  அதனால் தான் அவன் அழிந்து போகும்படி மாமனாரிடம் சாபம் பெற்றான்.  பிறகு சிவனின் அருளால் தேய்ந்து வளரும் வல்லமையைப் பெற்றான்.  அதன் பின்னர் தினமும் ஒரு மனைவியிடம் வசிக்கிறான்.  அவன் யாருடன் வசிக்கிறானோ அது தான் அன்றைய நட்சத்திரம்.  நம்ம சாதகப்புத்தகத்தில் 27 நட்சத்திரம் இருக்கும்.  அது பூரா சந்திரனுடைய மனைவியின் பெயர்கள் தான்.  நாட்காட்டியைப் பார்த்தால் இன்று என்ன நட்சத்திரம் என்று போட்டிருக்கும்.  அந்த நட்சத்திரத்துடன் அவன் இன்று குடும்பம் நடத்துகிறான் என்று பொருள்.  நட்சத்திரத்தை தாரகை என்று சொல்வார்கள்.
சூர்யா: சரிங்க தாத்தா.  நாம் பாரதக் கதைக்கு வருவோம்.
=========================================

தாத்தா: இந்த சந்திரனுக்கு புதன் என்று ஒரு மகன்.  சந்திரனைப் போல் இந்த புதனும் ஒரு கிரகம்.  இந்த புதன் இளை என்று ஒரு பெண்ணை மணம் புரிந்து கொள்கிறான்.  இந்த இளை ஒரு பெண்ணானது ஒரு தனிக்கதை.  பார்வதி தேவி ஒரு சோலைக்கு ஒரு சாபம் கொடுத்து இருப்பாள்.  அந்த சோலைக்குள் யார் நுழைந்தாலும் அவர்கள் பெண்ணாக மாறிவிடுவார்கள் என்பது தான் அந்த சாபம்.  இளன் என்று இளவரசன் இந்த சோலைக்குள் நுழைந்து பெண்ணாக மாறி விடுகிறான்.  அந்த பெண்ணைப் பார்த்து தான் மையல் கொண்டு புதன் மணந்து கொள்கிறான்.  இவர்களுக்கு புரூரவா என்று ஒரு மகன் பிறக்கிறான்.  இவன் மிக அழகானவன்.  வீரத்தில் சிறந்தவன்.  இவன் உருப்பசியை மணக்கிறான்.
சூர்யா:  உருப்பசியா?  புதுசா இருக்கே தாத்தா இந்தப் பெயர்.
தாத்தா:  ஆமாம்டா.  இப்போ எல்லாம் வடமொழி கலந்து பேசுவதால் நாம் ஊர்வசி என்று சொல்கிறோம்.  ஊர்வசியைத் தான் தமிழில் எழுதும் போது வில்-புத்தூரார் உருப்பசி என்று எழுதுகிறார்.  உருப்பசி என்பவள் உருவத்தில் சிறந்தவள்.  அவள் கதை ஒரு துணைக் கதை.   யார் இந்த உருப்பசி?  திருமால் பத்ரிகாசிரமம் என்ற இடத்தில் தவம் செய்து கொண்டு இருந்தார்.  ஒரு வீரனை மாய்க்க வேண்டும் என்றால் அவன் தவம் செய்பவனாகவும் வில்வித்தை தெரிந்தவனாகவும் இருக்க வேண்டும்.  எனவே திருமால் இருவேடம் கொண்டு நரநாராயணன் என்ற பெயரில் இலந்தைக்காடு ஒன்றில் தவம் புரிகிறார்.  இலந்தைக்கு வடமொழியில் பத்ரி என்று பெயர்.  இதி-ருந்து வந்த பெயர்தான் பத்ரிநாத்.  இந்த நரநாராயணர்கள் தான் பின்னர் பார்த்தனாகவும் கண்ணனாகவும் அவதாரம் எடுக்கிறார்கள்.  இந்த நாராயண முனிவரின் தவத்தை கலைக்க இந்திரன் மேனகையையும் ரம்பையும் அனுப்புகிறான்.  அவர்கள் மிக்க அழகிகள்.  நாராயண முனிவரின் தவத்தைக் கலைக்க முயல்கிறார்கள்.  திருமாலே முனிவரின் வடிவத்தில் அமர்ந்திருக்கிறார்.  உரு என்றால் தொடை.  தொடையைத் தடவி ஒரு பெண்ணை உற்பத்தி செய்கிறார் நாராயண முனிவர்.  தொடையில் இருந்து வந்தவள் என்பதால் உருப்பசி என்று பெயர்.  ரம்பையும் மேனகையும் வெட்கித் தலை குனிகின்றனர்.  அப்படி ஒரு பேரழகி இந்த உருப்பசி.  இந்த உருப்பசியைத் தானவர்கள் கடத்த வருகிறார்கள்.
சூர்யா:  தானவர் என்றால் யார்?  ஏன் அந்தப் பெயர் தாத்தா?
தாத்தா: கச்யப முனிவர் என்று ஒரு முனிவர் இருந்தார்.  அவருக்குத் தனு என்று ஒரு மனைவி.  அந்த மனைவி மூலம் பிறந்தவர்கள் தானவர்கள்.  இந்த முனிவர் தான் எல்லா சண்டைக்கும் மூலகாரணம் என்று சொல்ல வேண்டும்.  முன்னாளில் ஏழு புகழ் பெற்ற முனிவர்கள் வாழ்ந்தார்கள்.  அவர்கள் பெயர் அத்ரி, வசிட்டர், விசுவாமித்திரர், கௌதமர், ஜமதக்னி, கச்யபர்.  இந்த ஏழு முனிவர்களில் ஒருவர் தான் கச்யபர்.  இந்த உலகத்தைப் படைத்த போது பிரம்ம தேவன் தன் உள்ளத்தால் உருவாக்கியவர்கள் பத்து பேர்.  அவர்களில் ஒருவர் தான் மரீசி என்னும் மைந்தர்.  இவரின் மகன் தான் இந்த கச்யபர். தட்சன் தன்னுடைய 13 பெண்களை இவருக்கு மணம் முடித்து வைக்கிறார்.
சூர்யா: என்னங்க தாத்தா?  இந்த தட்சன் யார்?  இவனுக்கு ஆக்சுவலா எவ்வளவு பேர் மகள்கள்?  அவரு பாட்டுக்கு சந்திரனுக்கு 27 பேரைக் கட்டி வைக்கிறார்.  கச்யபருக்கு 13 பேரைக் கட்டி வைக்கிறார். தாட்சாயிணியை சிவனுக்கு கட்டி வைக்கிறார்.  பெரிய ஆளு போல இவரு.  அடேங்கப்பா அசத்துராரு இவரு. 
தாத்தா: தட்சன் என்பவன் ப்ரஜாபதி என்று சொல்வார்கள்.  மனிதர்களைப் படைக்க இறைவனால் படைக்கப்பட்டவர் இவர் என்று கூறுகிறார்கள்.  இவர் கதையைத் தொடர்ந்தால் பாரதம் சொல்ல ஒரு வருடம் ஆகிவிடும்.  அவ்வளவு பெரிய கதை.  அதனால் இத்தோடு நிறுத்திக் கொள்வோம்
சூர்யா: சரிங்க தாத்தா.  இந்த தட்சனுடைய 13 பொண்ணுங்க பேர் என்ன?  இவங்க பையங்க எல்லாம் யாரு தாத்தா?
தாத்தா: அதிதி, திதி, கத்ரு, தனு, அரிட்டை, சுரசா, சுரபி, விநிதா, தம்ரா, க்ரோதவாசா, இடா, கசா மற்றும் முனி என்று பேர்.
அதிதியிடம் இருந்து தோன்றியவர்கள் ஆதித்யர்கள்.  இவர்கள் 12 பேர். அம்சன், பகன், ஆர்யமான், துதி, மித்ரன், புசன், என 12 பேர்.  திருமாலும் தான் 12 ஆதித்யர்களில் ஒருவன் என்று கூறிக்கொள்வார் பகவத் கீதையில்.  இவர்களைத் தான் சூரியர்கள் என்று சொல்லுகிறார்கள்.  இவர்கள் மூலம் தான் சூரிய குலம் வருகிறது.  இவர்கள் வழிவந்தவன் தான் இட்சுவாகு.  இட்சுவாகு வழிவந்தவன் தான் குக்சி, விகுக்சி, பாணா, ப்ரிது - இறுதியில் இரகு.  இதனால் தான் சூரிய குலத்தை இரகுவம்சம் என்று சொல்வார்கள்.  இந்த இரகுவம்சத்தில் வந்தவர் தான் இராமர்.
சூர்யா: அடேங்கப்படா.  ஒரு பெண்ணு கதையில்  இவ்வளவு தொடர்ச்சியா அரசர்கள் வருகிறார்களா?  நம்ம மெகா தொடர் மாதிரி வருதே தாத்தா.
தாத்தா: ஆமாம்டா அதனால் தான் கவிஞர்கள் பாட்டு எழுதும் போது சொந்தம் எப்போதும் தொடர்கதை தான் என்று எழுதியிருக்கிறார்கள்.  அடுத்து வருவது திதி என்ற பெண்.  இவள் மூலம் பிறந்தவர்கள் தான் இரண்யகசிபு மற்றும் இரண்யாட்சகன்.  இரண்ய கசிபுக்கு நான்கு மைந்தர்கள்.  அவர்களில் ஒருவன் தான் பிரகலாதன். இவர்கள் கதை தான் அரக்கர்கள் கதையாகத் தொடர்கிறது.  இராவணன் இவர்கள் மரபில் வந்தவன்.  இவர்களை தைத்தியர்கள் என்றும் அழைப்பார்கள்.
அடுத்த மனைவியான விநிதையிடமிருந்து பிறந்தவர்கள் தான் அருணனும் கருடனும்.  அருணன் சூரியனுக்குத் தேரோட்டி.  கருடன் திருமாலுக்கு வாகனம்.
கத்ரு என்னும் மனைவியிடமிருந்து பிறந்தவர்கள் தான் நாகர்கள்.
தனுவிடமிருந்து பிறந்தவர்கள் தான் தானவர்கள்.
முனிக்குப் பிறந்தவர்கள் தான் அப்சரசுக்கள்.
சாண்டில்யன் என்பவரும் இந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு முனிவரே.
இந்த கச்யபர் பெயரால் தான் காஷ்மீர் மாநிலம் உள்ளதாகக் கூறுகிறார்கள்.
சூர்யா:  தாத்தா பெரிய இடியாப்பக் கதை மாதிரி இருக்கு.  ஒரு பரம்பரையிலே இவ்வளவு பேருமா?
தாத்தா: ஆமாம்டா.  பாரு ஒரே குடும்பத்திலே கருடனும் வர்ராரு - நாகரும் வர்ராங்க.  சுரர் என்னும் தேவர்களும் இருக்காங்க அசுரர் என்னும் அரக்கர்களும் இருக்காங்க.  இதெல்லாம் புரியாமா இவரு பிராமணரு - இவரு சத்திரியரு என்னு பிரிச்சுப் பேசுராங்க.  எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.  பங்காளிச் சண்டை என்பது இறைவன் படைத்த உடனேயே தொடங்கிவிட்டது என்பது இதன் மூலம் புலப்படுகிறது.  புரியுதா?  மகாபாரதமும் ஒரு பங்காளிச் சண்டைக் கதை தான்.
சூர்யா: சரிங்க ஏழு முனிவர்களிலே கச்யபர் மட்டுமே சாதனை புரிஞ்சிரிக்கார் என்னு தெரிஞ்சுகிட்டேன்.  நாம் மகாபாரதத்துக்கு வருவோம்.
தாத்தா: உருப்பசியை தானவர்கள் தூக்கிக் கொண்டு போக தேவர்கள் திக்குமுக்காடுகிறார்கள்.  போரிடுகிறார்கள்.  பலனில்லை.  அப்போது சந்திரகுலத்தைச் சேர்ந்த புரூரவசு வந்து சண்டை போட்டு உருப்பசியை மீட்கிறான்.  இதைக் கேள்விப்பட்ட இந்திரன் சிறிது காலம் குடும்பம் நடத்திவிட்டு பின்னர் தேவருலகம் வந்துவிடும் படி உருப்பசிக்கு கட்டளை இடுகிறான்.  யாராவது அழகாயிருந்தால் அவன் வசம் தான் இருக்க வேண்டும் என்று அவனது நினைப்பு.  நினைப்பு தான் பொழப்பைக் கெடுக்குது.  இவன் செய்யுற சேட்டையாலா தேவர்கள் எல்லோரும் அடிக்கடி கஷ்டப்படுகிறார்கள்.  அல்லல்படுகிறார்கள்.  துன்பப்படுகிறார்கள்.
சூர்யா: ஏங்க தாத்தா கஷ்டப்படுகிறார்கள் என்பதோடு நிற்காமல் இவ்வளவு வார்த்தைகளைக் கூறுகிறீர்கள்.  வடமொழி எழுத்து வந்தால் நாம் நமது மொழிக்கு ஆபத்தை விளைவிக்கிறோம் என்று பொருள்.  அதற்கு நமது மொழியில் மாற்று வார்த்தை இருந்தால் உடனே கண்டுகொள்ள வேண்டும்.  தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.  இல்லாவிடில் தமிழ்  சொற்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிடும்.  மற்ற மொழி ஆதிக்கம் வந்து விடும்.  சரி கதைக்கு வருவோம். இந்த உருப்பசியின் வயிற்றில் உதித்தவன் தான் ஆயு என்பவன்.  இவனின் மைந்தன் தான் குரிசில்.  நாகருக்கு அரசராய் வாழ்ந்தவன்.  இந்த வம்சத்தில் வருபவன் தான் நகுடன்.  நகுடன் ஒரு பெரிய வீரன்.  இவன் இந்திரனையே போரில் தோற்கடிக்கக் கூடிய அளவு வல்லமை படைத்தவன்.  இவன் இந்திராணியை அடைய எண்ணுகிறான்.  அதனால் இந்திராணி நமது தமிழ்முனி அகத்தியரிடம் கூறி இவன் கொட்டத்தை அடக்கும்படி கூறுகிறாள்.  அகத்தியர் ஒத்துக் கொண்டார்.  எப்போதுமே இருக்கிறதை விட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட்டா அது நம்மை அசைத்துவிடும்.  அழித்து விடும்.  வல்லமை படைத்த நகுடன் பெண்மீது ஆசை கொண்டான்.  இந்திராணியைக் காண ஒரு பல்லக்கில் ஏறினான்.  அதைத் தூக்கி வந்தவர்களில் அகத்தியர் ஒருவர்.  பல்லக்கு எப்போதும் போல் போய்க் கொண்டிருந்தது.  இந்திராணியை தூரத்தில் கண்டான் நகுடன்.  உடனே பல்லக்கு மெதுவாகப் போவது போல் நினைத்தார்.  நினைப்பு பொழப்பைக் கெடுக்கிறது.  வேகமாகப் போங்க என்று சினத்துடன் கத்தினான்.  கையில் இருந்த கோலால் தட்டினான் அகத்தியரை.  வெகுண்டார் அகத்தியர்.  நீ பாம்பாகப் போவாயாக என்று சாபம் கொடுத்தார்.  இந்த பாம்பு பின்னர் மகாபாரதத்தில் பீமனைச் சுற்றிக் கொண்டு மகாபாடு படுத்தும்.  பின்னர் அந்தக் கதைக்கு வருவோம்.  நகுடனின் மகன் தான் யயாதி என்னும் மன்னும்.  இவன் அசுரகுரு தேவயானியை மணக்கிறான்.  அப்போது தேவயானியின் தோழி சன்மிட்டை என்பவளுடன் தேவயானிக்குத் தெரியாமல் தொடர்பு கொண்டு முத-ல் பூருவையும் பின்னர் த்ருக்யு மற்றும் அனு என்னும் புதல்வர்களைப் பெறுகிறார்.  வெகுண்டு போகிறாள் தேவயானி.  கோபம் வந்தவுடன் கணவனைப் பிரிகிறாள்.  தந்தை சுக்கிராச்சாரியாரிடம் போய் முறையிடுகிறாள்.  சுக்கிராச்சாரியார் உடனே சாபம் கொடுக்கிறார்.  அதன் காரணமாக யயாதி முதுமையடைந்து கிழவனாகி விடுகிறார். சாபம் என்றால் விமோசனம் என்று ஒன்று இருக்க வேண்டுமல்லவா.  எப்படியும் யயாதி மருமகனாயிற்றே.  அதனால் யாராவது மனமுவந்து இளமையைக் கொடுத்து அவர்கள் முதுமையடைய விருப்பம் தெரிவித்தால் இளமை வரும் என்று வழிகாட்டுகிறார்.  போதாதா?  அரசனாயிற்றே.  பணம் எவ்வளவு கொடுத்தாலும் யாரும் இதற்கு உடன்பட மறுக்கிறார்கள்.  ஆனால் சன்மிட்டையின் மகன் பூரு இதற்கு ஒப்புக் கொள்கிறான்.  தந்தைக்கு இளமையைக் கொடுக்கிறான்.
சூர்யா: அந்த காலத்தில் இப்படி முதுமையை விரும்பி ஏற்றுக் கொள்ளும் மகன் எல்லாம் இருந்திருக்கிறானா? 
தாத்தா: சமீபத்தில் நாராயண பட்டத்திரி என்னும் மலையாளக் கவிஞர் தன் குருவிற்காக வெண்குட்டத்தை வாங்கிக் கொண்டு பின்னர் குருவாயூரப்பன் மீது நாராயணீயம் என்ற கவிûயைப் பாடி இளமையைப் பெற்றார்.  நாம் கதைக்குத் திரும்புவோம்.  பின்னர் சிலகாலம் இன்பங்களை நன்றாக அனுபவித்தபின் யயாதி தன் இளமையை மீண்டும் தன் மகனுக்குத் தந்து அரசையும் அவனுக்கே தருகிறார்.  அந்த வழியில் வந்தவன் தான் பரதன் என்ற வல்லமை மிக்க அரசன்.  வீரன்.  ஆடற்கலையிலும் வல்லவன்.  அந்த காலத்தில் ஆடற்கலையில் வல்லவர்களாக ஆண்களே விளங்கி உள்ளார்கள்.  சிவனையே ஆடல்வல்லான் என்று தான் அழைக்கிறார்கள்.  இதைத் தான் வடமொழிக்காரர்கள் நடராசன் என்றெல்லாம் கூறி நமது மொழியில் இருந்த அடைமொழியை இல்லாமல் ஆக்கிவிட்டார்கள்.
சூர்யா:  தாத்தா பரதன் என்பவன் சகுந்தலையின் மகன் என்று சொல்றாங்களே.
தாத்தா: அந்த கதைக்குப் போனா நாம் மகாபாரதம் பக்கமே வரமுடியாது.  அது ஒரு தனிக்கதை.  பரதனின் தந்தையோ தாயோ இந்த வம்சத்தில் வந்தவர்கள் என்று கொள்ளலாம்.  ஒரு மீனவன் வந்து துஷ்யந்தனின் மோதிரத்தைப் பெறும் வகையில் மீனைக் கொடுத்திராவிட்டால் பரதன் அரசனாகவே ஆகியிருக்க முடியாது.  அதனால் தான் இன்றளவும் வலைஞர்கள் - மீனவர்கள் எல்லாம் பரதவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.  இவர்கள் நெய்தல் நிலத்து அரசர்கள்.  பரதன் தேவர்களும் அரக்கர்களும் நடுங்கும் வண்ணம் போர்புரியும் வல்லமை படைத்தவன்.
"சுர சமூகமும் சுராரிகள் சமூகமும் சூழ,  விரசு பூசலின் வாசவன் நடுங்கி, வெந்நிடு நாள்,  அரசர் யாவரும் அறுமுகக் கடவுள் என்று அயிர்ப்ப,  புரசை நாகம் முன் கடவினன், நாகமும் புரந்தோன்". என்று பெருமையுடன் பேசப்படுகிறான்.  இவன் இப்படி வீரனாக இருந்ததால் தான் இவன் வமிசத்தவர் பாரதர் என்றும் இவர்கள் தங்களுக்குள் இட்டுக்கொண்ட சண்டைக்கு பாரதப் போர் என்றும் பெயர் வந்தது.  இந்த வம்சத்திலே வந்தவன் தான் அத்தி என்னும் பேரரசன்.
அத்தி என்றால் யானை.  வடமொழியில் ஹத்தி என்பார்கள்.  இந்தியில் ஹாதி என்பார்கள்.  இந்தியில் ஹாதி மேரி சாத்தி என்று ஒரு திரைப்படமே வந்துள்ளது. காளத்தி என்ற ஊரின் பெயரும் காள அத்தி என உருவாகி காளத்தி என வந்துள்ளது. வடமொழியில் இந்த ஊரை காளஹஸ்தி என்று கூறுகிறார்கள்.  நாம் அழகிய தமிழில் காளத்தி என்றே அழைப்போம்.  சரி கதைக்கு வருவோம்.  யானைப் படையை அதிகமாக வைத்திருந்ததால் தான் இந்த அரசன் அத்தி அரசன் என்று அழைக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்.  இவன் பெயரால் தான் அத்தினாபுரி உருவானது. இந்த குலத்தில் வந்தவன் தான் குரு என்னும் பேரரசன்.  அவன் பெயரால் குருவம்சம் ஆயிற்று.  சண்டை நடந்த இடம் குருசேத்திரம் ஆயிற்று.  இந்த பரம்பரையில் வந்தவன் தான் சந்தனு மன்னன்.
சூரியா:  சந்தனு என்றால் கங்கையை மணந்து கொண்டவர் தானே? கங்கை ஏன் மண்ணுலகு வந்தாள்.  ஏன் சந்தனுவை மணந்தாள்.  சொல்லுங்க தாத்தா.
தாத்தா: நாளைக்குச் சொல்றேன் அந்தக் கதையை.  அது ஒரு நீண்ட நெடிய கதை.

தாத்தா: ப்ரதீபன் என்ற அரசன் ஒருவன் இருந்தான்.  அவன் மனைவி சுகந்தி.  இவர்களுக்கு மூன்று புதல்வர்கள்.  அவர்கள் பெயர் தேவாபி, சந்தனு, பா-கன்.  முதல்வன் சிறுவயதிலேயே கானகம் சென்றுவிட்டான் தவம் புரிய.  அடுத்தவன் சந்தனு.  சந்தனு வயோதிகர்களைத் தொட்டால் அவர்கள் இளையவர்கள் ஆகிவிடுவார்கள்.  அப்படி ஒரு வரம் பெற்றிருந்தான்.  மூத்தவன் கானகத்துக்குப் போனதால் அடுத்தவன் - சந்தனு அரசன் ஆனான்.  அவன் நன்றாக் அரசோச்சினான்.  ஒரு நாள் கங்கை என்னும் மங்கையை அவன் நதிக்கரையோரம் கண்டான்.  இவள் யாராயிருக்கலாம் என்று வியந்தான்.  அவ்வளவு அழகு அந்தப் பெண்.
வையகமடந்தைகொல்! வரைமடந்தைகொல்!
செய்ய பங்கயமலர்த் திருமடந்தைகொல்!
துய்ய வண் கலைவிதச் சொல்மடந்தைகொல்!
ஐயமுற்றனன்,
பூமாதேவி, பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோருக்கான அழகான தமிழ்ப் பெயர்களைத் தந்திருக்கிறார் வில்-புத்தூரார்.  வையகமடந்தை, வரைமடந்தை, திருமடந்தை மற்றும் சொல்மடந்தை.  மலைமகள், அலைமகள் மற்றும் கலைமகள் என்று நாம் கூறுவோம்.  எப்படியோ நல்ல தமிழில் இறைவன் பெயரைக் கூறவேண்டும்.  சரி கதைக்கு வருவோம்.  இந்த இடத்தில் சந்தனு யார்? கங்கை ஏன் பெண்ணுரு கொண்டு வந்தாள்? என்று ஒரு துணைக்கதையைப் பார்ப்போம்.
ஒருநாள் இந்திரனது சபையில் கங்கை வந்தாள்.  தன்னை விட யாருக்காவது பெண் சபலம் உள்ளதா என்பதைக் கண்டறிய இந்திரன் காற்றுக் கடவுளை அழைத்து கங்கை நுழைந்ததும் பலமான காற்று அடித்து அவளது மேலாடையை விலக்க வேண்டுமெனக் கட்டளையிட்டான்.  அதே மாதிரி நடந்தது.  திகைத்தாள் கங்கை.  சுற்றுமுற்றும் நோக்கினாள்.  எல்லோரும் கண்ணைப் பொத்தி தலைகுனிந்து அமர்ந்திருந்தனர்.  வருணன் மட்டும் வைத்த கண் எடுக்காமல் கங்கையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.  அவன் கடலுக்கு இறைவனாயிற்றே.  எப்படியும் கங்கை நதி என்னிடம் வந்து தானே தீரவேண்டும் என்னும் எண்ணம்.   பிரம்ம தேவர் இதை அறிந்து இருவரும் மானுடராய்ப் பிறக்க வேண்டுமெனக் கட்டளையிட்டார்.  அப்படித் தான் வருணன் சந்தனுவாகவும் கங்கை ஒரு பெண்ணாகவும் பூமியை நோக்கி விரைந்தார்கள்.  அப்படி கங்கை வந்து கொண்டிருந்தபோது அட்டவசுக்களும் துயரத்தோடு கண்கலங்கி வந்து கொண்டிருப்பதைக் கண்டாள்.  ஏன் என்று கேட்டாள் கங்கை.  அவர்கள் வசிட்ட முனிவரின் பசுவை அபகரிக்கத் பிரபாசனின் மனைவி பேச்சைக் கேட்டுத் துணை போனதாகவும் அதனால் இப்படிச் சாபம் வந்ததாகவும் இதில் ஏழு பேர் உடனே தங்கள் பதவியில் மீண்டும் அமர்த்தப்படுவார்கள் எனவும் ஒருவர் மட்டும் சிலகாலம் பூமியில் வாழ வேண்டும் எனவும் கூறினார்கள். பிரபாசன் முதல் குற்றவாளி என்பதால் அவன் மானுடனாக இருக்கும் போது பெண் தொடர்பு இருக்காது என்று நிபந்தனையும் விதிக்கப்பட்டதைத் தெரிவித்தார்கள். சரி உங்கள் உய்வுக்கு நான் உதவுகிறேன் என்று உறுதி கூறினாள் கங்கை.
சூர்யா:  எப்படி உதவினாள் கங்கை இந்த எட்டு பேருக்கும்?
தாத்தா: சந்தனு மன்னன் கங்கைப் பெண்ணைப் பார்த்து வியந்து.  அவளுக்குத் திருமணமாகிவிட்டதா என்று கேட்டு திருமணமாகவில்லை என நிச்சயம் செய்து கொண்டு தன்னை மணக்கச் சம்மதமா என்று கேட்டான்.  அவள் சில நிபந்தனைகளை விதித்தாள்.  வில்-புத்தூரார் நிபந்தனையை வாய்மை என்று கூறுவார்.
"சில வாய்மை கூறுவாள் 
 'இரிந்து மெய்ந் நடுங்கிட,
யாது யாது நான்  புரிந்தது, பொறுத்தியேல்,
புணர்வல் உன் புயம்; 
பரிந்து எனை மறுத்தியேல்,
பரிவொடு அன்று உனைப்  பிரிந்து அகன்றிடுவன்,
இப் பிறப்பு மாற்றியே."
"நான் என் விருப்பப்படி நடந்து கொள்வேன்.  என்னை ஏன் என்று கேட்கக் கூடாது.  அப்படியானால் உன்னைத் திருமணம் செய்து கொள்வேன்.  ஏன் என்று கேட்டால் அடுத்த நிமிடமே நான் நீங்கி விடுவேன்''. 
சூர்யா: பெண்கள் இப்படியெல்லாம் நிபந்தனை போடுவார்களா தாத்தா?
தாத்தா: எல்லா காலத்திலும் இது தொடர்கிறது.  ஆனால் எல்லா இல்லங்களிலும் அல்ல.
கதைக்கு வருவோம்.  'எனது உயிர், அரசு, வாழ்வு, என்ப யாவையும்
நினது; நின் ஏவலின் நிற்பன் யான்' என்றான் சந்தது. சந்தனு உடனே சம்மதித்தான்.  திருமணம் நடந்தது.  முதல் குழந்தை பிறந்தது.  குழந்தையைக் கொண்டு சென்று கங்கை ஆற்றில் விட்டு விட்டாள் அன்னை.  கண்டு கொள்ளவில்லை.  ஆனால் அடுத்தடுத்து ஏழாவது குழந்தை வரை இப்படியே செய்தாள்.  மக்கள் பொறுப்பார்களா?  தூற்றினார்கள்.  புலம்பினார்கள். "மைந்தனைப் பெற்றுக் கங்கையில் எறிதல் கங்கையின் செயல் குறித்து மங்கையர் அழுதல் 'வழு அறு குருகுல மன்னன் மைந்தர் ஓர்  எழுவரை முருக்கினள், ஈன்ற தாய்!' என,  பழுது அறு மகப் பல பயந்த மங்கையர்  அழுதனர், கண் புனல் ஆறு பாயவே."  என்கிறார் வில்-புத்தூரார்.  எட்டாவது குழந்தையும் பிறந்தது.  இந்தக் குழந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று துடித்தான் சந்தனு மன்னன். "தாய் கைப்படாவகை இதம் உறப் பரிவுடன் எடுத்து, மற்று அவள் பதயுகத் தாமரை பணிந்து, பேசுவான்" 'நிறுத்துக, மரபினை நிலைபெறும்படி!  வெறுத்து எனை முனியினும், வேண்டுமால் இது;  'மறுத்தனன் யான்' என மனம் செயாது, இனிப்  பொறுத்து அருள்புரிக, இப் புதல்வன்தன்னையே!'  மரபினைக் காப்பாற்ற ஒரு குழந்தை வேண்டும்.  பொறுத்துக் கொள் என்று வேண்டினான்.  இப்போதும் கங்கையை வேண்டுகிறான் அந்த மன்னன்.  பெண் மயக்கம் இன்னும் தீரவில்லை.  சந்தனு மன்னனின் கதையே இது தானே.ஆனால் அவள் பொறுத்துக் கொள்ளவில்லை. ஏற்கனவே விதித்த நிபந்தனையின்படி பிறிந்தாள்.  சிறிது காலம் துயரமடைந்து திரிந்தான் சந்தனு மன்னன்  ஒரு நாள் காட்டிற்கு வேட்டையாட சந்தனு மன்னன் சென்ற போது ஒரு இளைஞன் வீரத்துடன் மன்னனை மயக்கமடையச் செய்தான்.  பின்னர் கங்கை நேரில் வந்து மயக்கம் தெளிவித்து இவன் தான் உன் மகன். எல்லா கலைகளையும் கற்றுக் கொடுத்து உள்ளேன்.  வீரத்திலும் விவேகத்திலும் மிகச் சிறந்த பயிற்சி பெற்றவன் இவன்.  இவன் பெயர் தேவவிரதன்.  நீங்கள் கொண்டு போய் வளருங்கள் என்று தேவவிரதனை விட்டுச் சென்றாள்.
ஒரு நாள் யமுனை நதிக்கரையோரம் நடந்து கொண்டிருந்த போது மணம்மிக்க காற்று வீசியது.  தூரத்தில் ஒரு அழகிய பெண் போய்க் கொண்டிருந்தாள். மயங்கினான் மன்னன்
சூர்யா: ஏன் தாத்தா இப்படி ஆற்றங்கரையோரம் போறபோ எல்லாம் மயங்கினால் அந்த  ஊர் மக்கள் என்ன பாடு படுவார்கள்?
தாத்தா:  அவன் மன்னனே ஆனாலும்.  அவன் முறைப்படி பெண் கேட்டுப் போக வேண்டும் என்னும் உயரிய எண்ணம் உடையவன்.  அந்த பெண்ணை நெருங்கினான்.  யார் என்று கேட்டான்.  பதறினாள் அந்தப் பெண்.
சூர்யா: இதற்கும் கூட ஒரு துணைக் கதை இருக்குமே தாத்தா?
தாத்தா: ஆமாம்டா.  சரியா சொல்-ட்டே.  இவள் பெயர் மச்சகந்தி.  ஒரு வசு - வானுலக மனிதன் - வானத்தில் செல்லும் போது தன் மனைவியை நினைத்து வெளி வந்த சுக்கிலத்தை ஒரு பறவையிடம் கொடுத்து அனுப்ப அதை இன்னொரு பறவை உணவு என்று கருதி உண்ண வர அது யமுனை நதியில் விழந்து விட்டது.  அங்கு ஒரு மீன் இதை உண்டு இந்த மீன்கன்னி பிறந்தாள்.  உடன் ஒரு ஆண்மகனும் பிறந்தான்.  அதை வலைஞன் தன் தலைவனிடம் கொடுத்தான்.  தலைவன் அந்த ஆண்குழந்தைக்கு மீனவன் என்று பெயரிட்டு வைத்துக் கொண்டான்.  பெண்ணை வலைஞனிடம் திரும்பக் கொடுத்து விட்டான்.  இந்தப் பெண் உண்மையில் வலைஞனின் மகள் அல்ல. சரியா?
மன்னன் யார் நீ? என்று கேட்டவுடன் "ஒருவன் இப்படியெல்லாம் தனியாக இருக்கும் பெண்ணிடம் பேசக்கூடாது.  எது என்றாலும் என் தந்தையிடம் கேட்டுக் கொள்ளுங்கள்" என்று மறைமுகமாக தன் சம்மதத்தை வழங்கினாள் அந்தப் பெண்.  தன் தந்தையிடம் அழைத்துச் சென்றாள்.  தேர்ப்பாகனை அனுப்பிப் பெண் கேட்கச் சொன்னான் மன்னன் சந்தனு.  வலைஞன் என்ன செய்வான்?  வந்திருப்பதோ மன்னன்.  கொடுக்கவில்லை என்றால் அதன் பலனை அனுபவிக்க வேண்டு வரும்.  மறுப்பது நல்லதல்ல.  ஆனால் அவனுக்கு தெரியும் ஏற்கனவே நிபந்தனையை ஒப்புக் கொண்டு கங்கையை மணந்த  மன்னன் சந்தனு இவன் என்று.  நம் பங்குக்கு நாமும் ஒரு நிபந்தனை போட்டுப் பார்ப்போமே"என்று எண்ணினான் அவன்.  "ஏற்கனவே உங்களுக்கு ஒரு மகன் உள்ளான்.  உங்களுக்குப் பிறகு அவன் தான் அரசன் ஆவான்.  இந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டால் இவளுக்குப் பிறக்கும் மகன் அரசனாக முடியுமா?  முடியும் என்று உத்தரவாதம் கொடுங்கள்.  நான் திருமணத்திற்குச் சம்மதிக்கிறேன்" என்றான்.  'பூருவின் மரபில் பிறந்த கோமகன் என் புன் குல மகள் குயம் பொருந்தல்,
மேருவும் அணுவும் நிறுக்குமாறு ஒக்கும்! மேல் இனி இவை புகன்று என்கொல்?
பார் உவகையினால் ஆளுதற்கு இருந்தான் பகீரதி மகன்; இவள் பயந்த
சீருடை மகன் மற்று என் செய்வான்? இசைமின், செய்கைதான் திருவுளம் குறித்தே'
என்கிறது வில்-பாரதம்.  இந்தத் தடவை மன்னன் சந்தனு அவசரப்படவில்லை.  ஏற்கனவே அவசரப்பட்டதற்கு பலன் அனுபவித்தவராயிற்றே.  எனவே ஒன்றும் சொல்லாமல் திரும்பினார்.
மன்னர் கவலையோடு இருப்பதை கங்கைமைந்தன் கண்டான்.  தேர்ப்பாகனிடம் விரைந்தார்.  அவனுக்குத் தானே தெரியும்.  தந்தை எங்கே சென்றார்?  ஏன் இந்தக் கவலை என்று.  இன்று கூட பல பணக்காரர்களின் கதை அவர்களுடைய ஓட்டுநர்களுக்குத்தான் தெரியும்.  அருமை மனைவிகளுக்குத் தெரியாது.  தேர்ப்பாகன் நடந்ததை அப்படியே சொன்னான்.  தேவவிரதன் உடனே வலைஞன் இருக்கும் இடத்திற்கு வந்தான்.  "இனி நீங்கள் தான் எனக்குத் தாத்தா.  உங்கள் பெண் தான் எனக்குத் தாய்.  கங்கைத்தாயை விட அதிகமாக தங்கள் பெண்ணை மதிப்பேன்.  தங்கள்மகளுக்குப் பிறக்கும் குழந்தைக்கே அரியாசனம் தருவேன்.  இது உறுதி" என்று கூறினான். வலைஞர்                      விடவில்லை.  "நீ சொல்வாய் அப்பா.  ஆனால் உலகம் ஏற்றுக் கொள்ளாது.  இது நடக்காத செயல்" என்று கூறினான்.   உடனே உலகறிய உரக்க ஒரு சபதம் செய்தான் தேவவிரதன்.  "எக்காலத்தும் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்.  எனவே எனக்குச் சந்ததி கிடையாது.  உங்கள் மகள் வயிற்றில் பிறக்கும் குழந்தைக்கே அரசபதவி.  இது சத்தியம்.  இது சத்தியம். இது சத்தியம்" என்று உறுதியாகச் சொன்னான்.  இவன் மொழி நயந்து கேட்டுழி, அவையின் இருந்த தொல்  மனிதரே அன்றி,  தவ முனிவரரும், தேவரும், ககனம் தங்கும் மா மங்கையர் பலரும்,  உவகையோடு இவனுக்கு ஏற்ற பேர் உரைசெய்து, ஒளி கெழு  பூமழை பொழிந்தார்-  அவனியில் நிருபர் வெருவரும் திறலான் அரிய சொல் பொருள்  நிலை அறிந்தே வானத்தி-ருந்து தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர்.  வான்வழிக் குரல் ஒன்று இவனை வீடுமன் என்று வாழ்த்தியது.  நாம் அன்று முதல் இவனை வீடுமன் என்றே அழைக்கிறோம்.  நடுவில் வடமொழியாளர் வந்து பீஷ்மர் என்று நமக்கு அறிமுகம் செய்து இந்த பெயரை நாம் இப்போது மறந்து விட்டோம்.  கதைக்கு வருவோம்.  வலைஞன் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டான்.  செய்தியை ஓடிவந்து தந்தைக்குச் சொன்னான் வீடுமன்.  புல்லரித்துப் போனார் தந்தை சந்தனு.  அப்போது கூட மகன் இப்படி ஒரு சபதம் செய்திருக்கிறானே என்று வருத்தப்படவில்லை.  ஆனால் மகன் ஆற்றிய செயலை நினைத்து வியந்தார்.  நாம் ஒரு தந்தையாக இவனுக்குச் செய்த செயலை விட - ஒரு மகனாக இவன் எனக்குச் செய்ய வேண்டிய கடமையை மிக அதிகமாகச் செய்து விட்டான்.  தந்தை உலகில் பெரிய மனிதனாக உலவ கல்வி கேள்விகளில் சிறந்தவனாக ஆக்க வேண்டும்.  மகன் இப்படிப்பட்ட மகவை அடைய இவன் தந்தை என்ன தவம் புரிந்தாரோ என்று எல்லோரும் சொல்லும்படி நடந்து கொள்ள வேண்டும்.  வீடுமன் செய்த செயல் மிக உயர்ந்தது தானே.  எனவே அவர் வீடுமனுக்கு ஒரு வரம் வழங்கினார்.  அப்போது சொல்கிறார் "எங்கள் முன்னோர்களில் ஒருவர் தன் இளமையை தன் தந்தையான யயாதிக்கு வழங்கினான்.  அவனை விட நீ உயர்ந்து விட்டாய் மகனே "   எனவே உனக்கு ஒரு வரம் அளிக்கிறேன் என்றார்.                                  
'முன் தந்தைக்கு உரிய பேர் இளமை கொடுத்த கோமகனும் உனக்கு எதிர் அல்லன்'
'தந்தையர்க்கு உதவும் உதவியின் எனக்குச் சத மடங்கு உதவினை; உனக்கு
மைந்தருக்கு உதவும் உதவியின் சிறிதும் மா தவம் செய்திலேன் உதவ;
சிந்தையில் துறக்கம் வேண்டும் என்று எண்ணிச் செல்லும் அன்று அல்லது, உன் உயிர்மேல்
முந்துறக் காலன் வரப்பெறான்' என்றே முடிவு இலா ஒரு வரம் மொழிந்தான்.
.ஆமாம். உனக்கு எப்போது இறக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது தான் உனக்கு மரணம் ஏற்படும் என்று ஒரு உயர்ந்த வரத்தை வழங்கினார். வேண்டும்போது இறத்தல் 'ஸ்வச்சந்தமரணம்' எனப்படும். .திருமணம் நடைபெற்றது.  மன்னன் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டான்.  எல்லை இல்லாத இன்பத்தை நுகர்ந்தான். 
கங்கையின் கரைக் கண்ணுறு காரிகை
கொங்கை இன்பம் குலைந்தபின், மற்று அவள்
எங்கை என்ன யமுனையின்பால் வரும்
மங்கை இன்பம் மகிழ்ந்தனன், மன்னனே.
இவர்கள் மகிழ்ந்து நடத்திய இல்லறத்தின் பயனாக இரண்டு மகவுகளை தந்தாள் சத்தியவதி. 
 சூர்யா: அவர்கள் பெயர் என்னங்க தாத்தா?
தாத்தா: அவர்கள் தான் சித்திராங்கதனும் - விசித்திர வீரியனும்.  இதில் சந்தனுவிற்குப் பின் சித்திராங்கதன் மன்னன் ஆனான்.  ஆனால் விதி விளையாடியது.  ஒரு கந்தருவன் எனும் வானுலகப் பிறவிக்கு இவன் விபரம் போனது.  என் பெயரை இவன் எப்படி வைத்துக் கொள்ளலாம் என்று கொதித்தான் அவன்.  இரவோடு இரவாக வந்து சித்திராங்கதனைக் கொன்றுவிட்டான் அவன்.  மிகுதுனி (மிகுந்த துயரம்) மாற வீடுமன் அவனுக்குப் பின் விசித்திரவீரியன் மன்னன் ஆனான். இவனுக்குத் திருமணம் செய்ய வேண்டும்.  இந்த நேரத்தில் தான் காசி மன்னனின் மூன்று மகள்களுக்கு சுயம்வரம் என்று கேள்விப்பட்டார் வீடுமன்.  விசித்திரவீரியனை அழைத்துக் கொண்டு காசி மாநகரம் அடைந்தான்.  எல்லோருக்கும் அதிசயம்.  வீடுமன் திருமணம் முடிக்க மாட்டேன் என்றுசத்தியம் செய்திருக்கிறானே.  இப்போது இங்கு வந்திருக்கிறானே என்று எல்லோரும் வியந்தனர். நியாயமாகப் பார்த்தால் விசித்திரவீரியன் தான் சுயம்வரத்தில் கலந்து கொள்ள வரவேண்டும்.
சூர்யா:  காசி மன்னனின் மூன்று பெண்களின் பெயர் என்ன தாத்தா?
தாத்தா: அம்பை -அம்பிகை - அம்பா-கை.  சுயம்வரம் நடந்தது.  மூன்று பெண்களும் வயோதிகரான வீடுமனைப் பார்த்து திகைத்து நின்றனர்.  பார்த்தார் வீடுமர்.  மூவரையும் தேரில் ஏற்றிப் பறந்தார் அத்தினாபுரத்திற்கு. எதிர்த்தவர்களை ஓடஓட விரட்டினார். இதில் அம்பை வேறு ஒருவனை விரும்புவதாகக் கூறினாள்.  எனவே அவளை விடுவித்தார்.  அவள் சாலுவன் என்று ஒரு மன்னனை விரும்புவதாகக் கூறினாள்.  அம்பிகை மற்றும் அம்பா-கையை தம்பி விசித்திரவீரியனுக்கு மணம் முடித்து வைத்தார்.  தன் விருப்பப்படி போன அம்பையை சாலுவன் ஏற்றுக் கொள்ளவில்லை.  வீடுமனிடம் திரும்பி வந்தாள்.  அவர் உறுதியாக மறுத்தார்.  தந்தை காசி மன்னனிடம் முறையிட்டாள் அம்பை.  அவனாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.  தான் எடுத்துள்ள சபதத்தைச் சொல்- சமாதானப்படுத்தினார் வீடுமர்.  எனவே அந்தப் பெண் பரசுராமரைச் சரணடைந்தாள்.  பரசுராமர் பல அரசர்களை வென்றவர். "வீர மழுவால் அநேக குல மன்னர் வேரற மலைந்த கோன்,''இராமனிடம் தோற்று தன் தவப்பலனை இழந்தவர்.  இந்த விடயம் இவளுக்குத் தெரியாது போலும்.  பரசுராமர் வந்தார்.  அம்பையைத் திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார்.  ஒத்துக் கொள்ளவில்லை வீடுமர்.  போரிட்டார் பரசுராமர்.  அவ் இராமனும், மறுத்த மன்னவனும், ஐ-இரண்டு தினம், இகலுடன், வெவ் இராவும் ஒழியாது, வெஞ் சமர் விளைத்த காலை, அடல் வீடுமன் கை விராய சிலையோடு மெய் வலி கவர்ந்து, முன் தளர்வு கண்ட போர் அவ் இராமன் நிகர் என்னுமாறு, இவனை அஞ்சி நின்று, எதிர் அடர்க்கவே, தோற்றார் வீடுமனிடம்.  எனவே அம்பை தவம் செய்தாள்.  கடுமையான தவத்தின் பயனாக துருபதன் வேள்வி செய்த போது அவனுக்கு மகனாக சிகண்டி என்ற பெயருடன் உதித்தாள்.
திருமணம் முடிந்தவுடன் விசித்திரவீரியன் மகிழ்ச்சியாக இல்லறத்தில் திளைத்தான். அளவற்ற இன்பத்தை நுகர்ந்தான்.  அதனால் குட்ட நோய் வந்தது.  கொடுமை செய்தது.  இறந்தான்.
சூரியா: வீடுமன் திருமணம் செய்து கொள்ளமாட்டார். எனவே சந்ததி இல்லை.  மற்ற இருவரும் குழந்தைகள் பெறாமலேயே இறந்து விடுகிறார்களே?  பின் எப்படி இந்த குலம் தழைத்து பாரதப் போர் தொடங்குகிறது?
தாத்தா: இனி வரும் கதை வயது வந்தவர்களுக்கு மட்டும்.  இருந்தாலும் அதைச் சொல்லாமல் பாரதக் கதையைத் தொடர முடியாது.  எனவே நாளை நான் சுருக்கமாகச் சொல்கிறேன்.
==============================================
, சூர்யா: குரு வம்சம் எப்படி தழைத்தது என்று சொல்லுங்க தாத்தா
தாத்தா: விசித்திர வீரியன் இறந்த பிறகு அந்த மைந்தனுக்குச் செய்ய வேண்டிய சடங்குகளைச்  - தென் புலத்தாருக்குச் செய்ய வேண்டிய சடங்குகளை எல்லாம் செய்ய வைத்தாள் சத்தியவதி.  சிறிது காலம் துக்கம் கடைப்பிடித்தார்கள்.  பிறகு சத்தியவதி வம்சம் தொடர வழி காண வேண்டும் என சிந்தித்தாள்.  அதன் பலனாக வீடுமனிடம் தேவர நீதியில் கொழுந்தியர்க்கு மகவு அளிக்கும்படி கூறினாள். 'ஈண்டு தேவர நீதியின் கொழுந்தியர் எழில் மகப் பெற, நின்னால் வேண்டுமால்; இது, தாயர் சொல் புரிதலின் விரதமும் கெடாது'  என்றாள். 
சூர்யா: அது என்ன தேவர நீதி?  புதுச் சொல்லாக உள்ளதே?
தாத்தா: ஆமாம்டா.  தேவரநீதி என்றால் கணவனை இழந்த மகவு பெறதா கைம்பெண் சந்ததி விருத்தியின் பொருட்டு தேவரனோடு (கணவனுடன் பிறந்தவன்) உறவு கொண்டு மகவு பெறலாம் என்று அந்தக் காலத்தில் ஒரு விதிவிலக்கு இருந்திருக்கிறது.  அதுவும் கணவன் இறக்கும் போது குழந்தை இல்லாமல் இருந்தால் தான்.
சூர்யா: இந்த காலத்தில் டெஸ்ட் ட்யூப் பேபி என்னு சொல்றாங்களே அந்த மாதிரியா தாத்தா?
தாத்தா: அப்பா எனக்குப் பிரச்சினை விட்டது போ.  உனக்குப் புரிந்து விட்டது.  அதனால் சொல்வதில் கஷ்டம் இல்லை.
சூர்யா: அது தான் பேப்பரில் வருதே தாத்தா.  தொலைக்காட்சியில் கூட காமிக்கிறாங்களே.
தாத்தா: ஆமாம்டா.  சோதனைக் குழாய் குழந்தை மாதிரி - இரவல் தாயார்களைப் பயன்படுத்தி கருதரிப்பது போல - இந்த விஞ்ஞான காலத்தில் உள்ளது போல் அப்போது இல்லை.  அதனால் தேவர நீதி கடைப்பிடித்திருக்கிறார்கள்.  ஆனால் வீடுமன் தனது சத்தியத்தை மீறுவதற்குத் தயாராக இல்லை.  சிந்தித்தான்.  ஏற்கனவே பரசுராமரால் சத்திரிய குலம் சந்ததி இல்லாமல் போன போது பல அரச வம்சத்தினர் முனிவர்களைப் பயன்படுத்தி இப்படி சந்ததி விருத்தி செய்தது அவருக்குத் தெரியும்.  அது தான் நியாயம் என்று கருதி தன் கருத்தை தாயிடம் தெரிவித்தார். 'முனிவரால் மகப் பேறு அடைதலே முறை' என வீடுமன் உரைத்தல்  'மழு எனும் படை இராமனால் மனுகுலம் மடிந்துழி,    அவர் தம்தம்  பழுது இல் மங்கையர் முனிவரர் அருளினால் பயந்தனர் மகவு என்பர்;  எழுது நல் நெறி முறைமையின் விளைப்பதே இயற்கை'   என்று சால்கிறார் வில்-புத்தூரார்.
சூர்யா: இதுக்குமா முனிவர் வேண்டும்? முனிவர் என்றால் தவம் செய்வாங்க என்னு தானே கேள்விப்பட்டிருக்கேன்.
தாத்தா: ஆமாம்டா.  ஆனா அந்த காலத்திலே முனிவர் என்றால் பல பெண்களைத் திருணம் செய்வார்கள்.  காட்டிலே யாகம் மட்டும் பண்ணுவார்கள்.  அவரகளிடம் இறைவனுடைய வரங்கள் இருக்கும்.  அதனாலே அவர்களை அணுகுவது அந்த கால நாகரிகம் போல உள்ளது.  காசு இல்லாதவனுக்கு காசு தானமாத் தர்ரோம்.  தென்புல வழிபாட்டின் போது அந்தணனுக்கு பசு, குடை, செருப்பு போன்றவற்றை தானமாகத் தருகிறோம்.  அது போல அந்தக் காலத்தில் முனிவர்கள் இப்படி கர்ப்ப தானம் கொடுக்கும் பழக்கத்தை வைத்திருக்கிறார்கள்.  அவர்கள் தவபலத்தால் உடனடிக் குழந்தை கிடைத்து உள்ளது.  இது கதையா உண்மையா என்பது நமக்கு தேவையில்லை.  இப்படி ஒரு முறை இருந்து வந்துள்ளது.  நடைமுறையில் இப்படி இருந்தாலும் யோக்கியமான ஒரு முனிவன் வேண்டுமே? எங்கு போவது? என்று வீடுமன் யோசித்த போது அவன் தாயார் சத்தியவதி தனது பழைய கதையைக் கூறுகிறாள்.
சூர்யா: என்ன தாத்தா.  எல்லோருக்கும் ஒரு ப்ளாஷ் பேக் இருக்கும் போல தெரியுதே.
தாத்தா: ஆமாம்டா தன்னுடைய மலரும் நினைவுகளை தன் மகனிடம் எடுத்துச் சொல்லுகிறாள் அந்த தாய்.  சத்தியவதி தன் இள வயதில் யமுனைக் கரையில் போய்க் கொண்டிருந்த போது பராசரர் என்று ஒரு முனிவர் அங்கு வருகிறார்.  அவருடைய ஞானக் கண்ணில் இந்தப் பெண்ணுக்கு பல பேருக்கு நீதி சொல்லக்கூடிய ஒரு மகன் கிடைக்கும் என்பது புரிகிறது.  அவள் வலைஞனின் குழந்தை.  எப்போது மீன் பிடித்து விற்பது அவர்களுக்குத் தொழில்.  அதனால் உடலோடு மீன் நாற்றம் சேர்ந்தே இருக்கும்.  பராசரர் இந்த நாற்றத்தைப் போக்கி பூமணம் உள்ள பெண்ணாக உன்னை மாற்றுகிறேன்.  ஆனால் உனக்கு ஒரு குழந்தை பிறக்கும். என்று உண்மையைச் சொன்னார்.  அவளும் சம்மதிக்க உடன் பிறந்தான் வியாதன்.  இவனைத் தான் சமஸ்கிருத்தில் வியாச முனி என்று கூறுகிறார்கள்.  பராசரருக்குப் பிறந்த முனிகுமாரன் அல்லவா? பிறந்த உடன் பேசினான்.  நீங்கள் எப்போது அழைத்து என்ன கட்டளை இட்டாலும் நான் செய்வேன்.  இப்போது நான் தவம் புரியப் போகிறேன் என்று கூறிவிட்டு காட்டிற்குப் போய்விட்டான்.  பராசரரும் மீண்டும் மச்சகந்தி என்கிற சத்தியவதியை ஒரு கன்னியாக மாற்றும்படி இறைவனை வேண்டினார்.  ப-த்தது அந்த வேண்டுதல்.  இப்போது தெரிகிறதா?  நமக்கு பல புராணங்களைக் கொடுத்த வேத வியாசர் யாருடைய குழந்தை.  தந்தை பராசரர்.  தாய் சத்தியவதி.  இதனால் தான் நமது முன்னோர்கள் அழகான பழமொழியைக் கூறிச் சென்று விட்டார்கள்.  நதிமூலம் - ரிஷி மூலம் பார்க்காதே என்று.  அவர்கள் கூறும் கருத்தைக் கேள்.  நதி நீர் நன்றாக இருக்கிறதா என்று பார்.  உற்பத்தி இடத்தை ஆராயாதே என்று கூறி உள்ளார்கள். 
சூர்யா:  ஆமாம் தாத்தா.  வைகை நதிக் கரையில் இருக்கும் எல்லோருக்கும் இந்த நதி உற்பத்தி ஆகும் இடம் தெரியுமா? பார்த்திருக்கிறார்களா?  கேள்விப்பட்டிருக்கிறார்களா? கிடையாது.  அந்த மாதிரி தான். 
தாத்தா: சரியா சொன்னேடா சூர்யா.  முன்னோர் மொழிகளில் நல்ல கருத்துகள் இருந்தால் எடுத்துக் கொள்ள வேண்டும்.  தீ சுடும் என்றால் சரி என்று சொல்ல வேண்டும்.  விடம் உயிரை போக்கும் என்றால் நம்ப வேண்டும்.  அது உண்மையா பொய்யா என்று சோதித்து  அறிவது சில சமயங்களில் முட்டாள்தனமாகக் கூடப் போய்விடும்.
சூர்யா: கதைக்கு வாங்க தாத்தா.  வியாசர் வந்தாரா?  குழந்தை வரம் கொடுத்தாரா?
தாத்தா: வியாதர் வந்தான்.  தனது கருத்தை தாய் சத்தியவதி அவனிடம் கூறினாள்.  அவனும் சரி என்றான்.  விசித்திர வீரியனின் இரு மனைவியரிடமும் தனது கருத்தை எடுத்துக் கூறினாள் சத்தியவதி.  ஒரு வழியாக சம்மதிக்க வைத்தாள்.  வியாத முனிவன் வந்தான்.  அம்பிகையின் அறையில் நுழைந்தான் வியாதன்.  அம்பிகை தாடியுடன் வந்த முனிவனைக் கண்டு கண்களை மூடிக்கொண்டாள்.  அதனால் அவளுக்கு கண் குருடாக இருந்த ஒரு குழந்தை பிறந்தது.  வியாத முனிவன் தன் தாயிடம் கூறுவான்.  இவனுக்கு ஆயிரம் யானை பலம் இருக்கும்.  ஆனால் கண் பார்வை இருக்காது என்று கூறினான்.  சரி அடுத்த பெண் அம்பா-கைக்கு ஒரு குழந்தையைக் கொடு என்றாள்.  அம்பா-கைக்கு முனிவரைப் பார்த்ததும் உடல் எல்லாம் வெளுத்து விளர்த்திட்டாள்.  அதனால் விளர்த்துப் பிறந்தது குழந்தை.  இரண்டு குழந்தைகளையும் சத்தியவதி பார்த்தாள்.  மூன்றாவது முறை அம்பிகைக்கு ஒரு நல்ல குழந்தையைத் தரவேண்டும் என்று வேண்டினாள்.  வியாதன் சரி என்றான்.  ஆனால் அம்பிகை தனக்குப் பதிலாக தன் தோழியை அனுப்பினாள்.  அப்போது பிறந்தவன் தான் விதுரன்.  கலைஞானம் வியாதனைப்போல் கைவரப் பெற்றவன் இவனே.
'அம்பிகைக்கொடி தோழியை விடுத்தனள்; அவள் புரி
                                       தவம்தன்னால்,
உம்பரில் பெறு வரத்தினால், தருமன் வந்து உதித்திடும்
                                      பதம் பெற்றாள்;
வெம் படைத் தொழில் விதுரன் என்று அவன் பெயர்;
மூவருக்கும் கலை பல கற்றுக் கொடுத்தான் வீடுமன்.   வான்நதித் திருமகன் - அதாவது வீடுமன் அம்பிகைப் புதல்வனை அரியணையில் ஏற்றினான்.  பால்நிறம் உடைய பாண்டுவை சேனையின் அதிபதி ஆக்கினான்.  விதுரனை அமைச்சன் ஆக்கினான்.
சூர்யா நீ கேட்ட மூன்று கேள்விகளுக்கும் பதில் வந்ததா? 
பாரதம் என்று ஏன் பெயர் வந்தது?
கௌரவர் என்று ஏன் பெயர் வந்தது?
பாண்டவர் என்று ஏன் பெயர் வந்தது? சுருக்கமாத் தான் சொல்-யிருக்கேன்.  வில்-பாரதத்தில் வருவதை அப்படியே சொல்ல வேண்டுமென்றால் பல நாட்கள் அந்தக் கதையைக் கூற வேண்டும்.  நீ பெரியவன் ஆனதும் இந்த அழகான வில்-பாரதம் நூலை அமர்ந்து படிக்க வேண்டும்.  இப்போ நான் சொல்றது எல்லாம் திரைப்பட விமர்சனம் மாதிரி சுருக்கமாத் தான் சொல்றேன். சரியா?
சூர்யா: குருகுலத்தில் வந்த பரதன் என்பவனால் பாரதம் வந்தது தாத்தா.
குருகுலத் தோன்றல்கள் என்பதால் கௌரவர்கள் என்று வந்தது.
பாண்டுவின் மைந்தர்கள் என்பதால் பாண்டவர்கள் என்று பெயர் வந்தது.
பாண்டு என்றால் வெளிறிய நிறம்.  பால் போன்ற நிறம்.  அது அவ்வளவு அழகாக இல்லை என்பது அவனது தாய் சத்தியவதி கூறுவதில் இருந்தே தெரிகிறது.
அழகு என்றால் கருப்பா இருக்கணும் இல்லாட்டி
அழகு என்றால் சிவப்பா இருக்கணும்.
தாத்தா: அதானே.  எப்படியாவது சுத்தி சுத்தி கருப்பு சிவப்புக்குத் தானே நீ வருவே.
அடுத்து கதையை நாளைத் தொடர்கிறேன்.
==============================================

சூர்யா: தாத்தா - யாராவது குடும்பத்தைப் பிரித்தால் அல்லது கட்சியைப் பிரித்தால் நீங்கள் அவர்களை இவன் பெரிய வியாசன்டா என்று சொல்றீங்களளே- ஏன் தாத்தா?

தாத்தா: ஆமாம்டா.  முன்னாடி வேதம் என்னு பொத்தாம் பொதுவா ஒண்ணா இருந்ததாம்.  இந்த வியாசர் தான் இதையெல்லாம் நன்றாகப் படித்து ரிக், யசூர், சாமம், அதர்வணம் என்று தனித்தனியாகப் பிரிக்கிற வேலையைச் செய்தாராம்.  அதனாலே அவர் ஞாபகமாக யாராவது எதையாவது பிரிச்சா வேடிக்கையாக நான் அவர்களை வியாசர் என்று சொல்றேன்.  வேறே ஒன்றும் இல்லை.  சரி பாரதக் கதைக்கு வருவோம்.  இன்று திருதராட்டிரன், பாண்டு ஆகியோருக்குத் திருமணம் நடப்பதையும் கன்னன் பிறப்பு பற்றியும் கதை சொல்றேன்.  கேளு.
சூர்யா:  சரிங்க தாத்தா.
தாத்தா:  நதிமகன் அதாவது வீடுமன் திருதராட்டிரன் பருவத்தை அடைந்தவுடன் அரசோச்சும் அவனுக்குத் திருமணம் நடத்தத் திட்டமிடுகிறான்.  காந்தார நாட்டு அரசன் மகள் காந்தாரி அழகானவள் என்று கேள்விப்பட்டிருக்கிறாள்.  எனவே ஒரு தூதனை அனுப்பி பெண் கேட்டு வரச் சொன்னார். 
சூரியா: தரல்லைன்னா தூக்கிட்டு வந்திடுவாரு.  இல்-ங்க தாத்தா?
தாத்தா: முதல்லே கேட்டு அனுப்புறாரு.  அவங்களுக்கும் இவரு வீரம் பத்தி தெரியுமுல்லே.  சொந்தக்காரங்க பூரா பொண்ணுகிட்டே போய் அவருக்குக் கண் தெரியாது என்று சொல்- அச்சமூட்டுகிறார்கள். 'மதி அளித்த தொல் குலத்தவன், விழி இலா மகன்' என்பது வில்-புத்தூரார் வாக்கு. ஆனா காந்தாரியோ அச்சப்படவில்லை.  அந்த காலத்தில் அரச குலத்தினர் தங்கள் அரச வம்சம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக பலம் பொருந்திய இன்னொரு அரச குடும்பத்தில் கொள்ளல்-கொடுத்தல் உறவுகளை வைத்திருப்பார்கள்.  அதன்படி இந்த இராசகுமாரியும் 'விதி அளித்தது' என்று, உளம் மகிழ்ந்தனள், வடமீன்
எனத் தகும் கற்பாள்.  விதி எனக்கு அளித்த இந்த மன்னவனைத் தான்.  எனவே நான் இவரைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று உறுதி கூறினாள்.  அதோடு மட்டுமல்ல.  அவருக்குக் கண் தெரியாது என்றால் நானும் கண் தெரியாதவளாகவே வாழ்வேன் என்று உறுதி பூண்டு அழகிய துணியால் தன் பொன்னான கண்ணை மறைத்துக் கட்டிக் கொண்டாள்.  அப்படி ஒரு அருமையான உள்ளம் கொண்டவள் இந்தக் காந்தாரி.
சூர்யா:  தாத்தா காந்தாரம் என்றால் எங்கே இருக்கு தாத்தா&
தாத்தா: அது தான்டா இப்போதையா ஆப்கானித்தானம்.  ஆங்கே இன்று கூட கந்தகார் என்ற பெயரில் ஒரு நகரம் உள்ளது.  இந்த காந்தாரிக்கு உடன் பிறந்தவன் தான் சகுனி.
திருமணம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
சூர்யா: தாத்தா அந்த வெண்மை நிறம் கொண்ட பாண்டுவுக்கு எப்படி திருமணம் நடந்தது தாத்தா?
தாத்தா: பாண்டுவுக்கு இரண்டு திருமணம்.  ஒன்று குந்தியுடன்.  மற்றொரு திருமணம் மாதுரியுடன்.
சூர்யா: குந்தி என்னு ஏன் பெயர் வந்தது.  மாதுரி என்றால் பொருள் என்ன தாத்தா.  இதுக்கெல்லாம் பழைய காலத்துலே காரணம் ஏதாவது இருக்குமே.
தாத்தா: ஆமாம்டா.  அந்த காலத்திலே பிறந்த ஊர் பெயரை வைத்து சில பெண்களை அழைப்பார்கள்.  மிதிலையில் பிறந்ததால் மைதி-.  கேகய நாட்டுப் பெண் என்பதால் கைகேயி. காந்தார நாட்டுப் பெண்ணுக்கு காந்தாரி.  இந்த குந்தி குந்திபோசர் என்பவர் இல்லத்தில் வளர்ப்பு மகளாக வளர்கிறாள்.  அதனால் அவருடைய பெயராலேயே இவளை குந்தி என்று அழைக்கிறார்கள். ஆனால் இவளது இயற் பெயர் பிரதை என்பதாகும். இவளுடைய தந்தை யது குலத்து சூரன் என்பவன்.  இதனால் தான் யதுகுலத் திலகம் கண்ணன் எப்போதும் இவர்களுக்குத் துணையாக வருகிறான்.  தெரிகிறதா?  யதுகுல சூரனுக்கு குந்திபோசன் உறவினன்.  அவனுக்கு குழந்தை இல்லை.  எனவே இந்தப் பெண்ணை வளர்ப்புப் பெண்ணாகத் தருகிறான் சூரன்.
சூர்யா: தாத்தா நான் கர்ணன் சினிமா - மன்னிச்சுக்கோங்க தாத்தா - கர்ணன் திரைப்படம் பார்த்திருக்கிறேன்.  கர்ணன் என்பவன் குந்தியின் மகன் என்று காட்டுவார்கள்.  அது சரிதானா தாத்தா?
தாத்தா: ஆமாம்டா.  இந்த குந்தி சின்னப் பொண்ணா இருந்தப்போ இந்தப் பிரதை என்பவள் துர்வாச முனிவர் இவர்கள் இல்லத்திற்கு வருகிறார்.  அவருக்கு இந்தப் பிரதை உதவி செய்கிறாள்.  உள்ளம் குளிர்ந்த அவர் பிரதைக்கு ஒரு மந்திரத்தைக் கற்றுத் தருகிறார்.  இந்த மந்திரத்தைக் கூறி ஏதாவது தேவர்களை நினைத்தால் அவர்கள் இவள் முன் தோன்றுவர் எனவும் அவர்கள் மூலம் குழந்தைகள் கிடைக்கும் என்றும் சொல்-ச் சென்று விடுகிறார்.  இவள் வீட்டில் வந்தவுடன் முற்றத்தில் யாருக்கும் தெரியாமல் அமர்ந்து மந்திரம் ப-க்குமா என்று பார்க்க மந்திரத்தைக் கூறி கதிரவனை நினைக்கிறார்.  ஆயிரம் கரங்களை நீட்டிக்கொண்டு ஆதவன் உடனே தோன்றுகிறான். கதிரவன் அணைக்க வருகிறான்.  உடனே இவள் அச்சப்படுகிறாள். 'கன்னி, கன்னி; என் கை தொடேல்; மடந்தையர் கற்பு நீ அறிகிற்றி!'  என்னைத் தொடக் கூடாது நான் கன்னி.  இன்னும் திருமணம் ஆகவில்லை என்று கதறுகிறாள்.  பின் ஏன் என்னை அழைத்தாய்? என்று கேட்கிறான் பகலவன் 'உன்னி என்னை நீ அழைத்தது என்பெற?' என உருத்தனன்'. பின்னர் சமாதானப்படுத்தி கன்னித்தன்மை போகாது என்று உறுதி கூறி ஒரு குழந்தையைத் தருகிறான்.  அதிதியின் புதல்வன் என்று கூறும் அளவுக்கு ஒளிபொருந்திய குழந்தை அது.  உடனே பகலவன் மறைகிறான். மனம் மகிழ்ந்ததும், வந்ததும், மணந்ததும், வரம் கொடுத்ததும்,  எல்லாம் கனவு எனும்படி, கரந்தனன் பெருந்தகை. ஊர்ப்பழிக்கு அஞ்சுகிறாள் பிரதை.  எனவே ஒரு தங்கப் பெட்டியில் பொருள் பல வைத்து கங்கை நதியில் அந்தப் பெட்டியை விட்டு விடுகிறாள்.  அந்தப் பெட்டியைச் சூதபுங்கவன் கண்டெடுக்கிறான். காதிலே குண்டலங்களோடு இருப்பதால் கன்னன் என்று பெயரிடுகிறான்.  கன்னம் என்றால் காது என்று பொருள் தமிழில்.  அதனால் இவன் கன்னன்.  வடமொழியில் கர்ணம் என்றால் காது.  அதனால் வடமொழியினர் இவனை கர்ணன் என அழைக்கிறார்கள்.  நாம் நமது மொழிக்கேற்றவாறு இவனை கன்னன் என்றே அழைப்போம்.  சரியா?  ஒளிபொருந்திய இவன் பல கலைகளை கற்கிறான்.  அப்போது பரசுராமரிடம் போய் வில்வித்தையும் கற்கிறான்.  பரசுராமர் சத்திரியர்களுக்குக் கற்றுத்தர மாட்டார்.  எனவே அந்தணன் என்று பொய் கூறி கல்வி கற்கிறான் அவரிடம்.  அது தெரியும் போது கற்றது அனைத்தும் தேவையான நேரத்தில் நினைவுக்கு வராது என அவர் கொடுமொழி கூறுகிறார்.  அந்தக் காலத்தில் இப்படி குலம் கோத்திரத்திற்கு இவ்வளவு முக்கியத்துவத்தைக் கொடுத்திருக்கிறார் திருமா-ன் அவதாரம் என்று போற்றப்படும் இந்த பரசுராமன்.  பரசுராமனின் தந்தையை ஒரு அரசன் கொல்கிறான்.  அதனால் அத்தனை அரசர்களையும் எதிரிகளாகவே நோக்குகிறார் அவர்.
சூர்யா: தாத்தா நாம் பாண்டுவின் திருமணம் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். கதை திசை மாறி கன்னன் கதைக்கு வந்து விட்டது.
தாத்தா: குந்திக்கு திருமண பருவம் வந்தவுடன் தன்விருப்பத் திருமணம் நடக்கும் ஓலை வருகிறது.
சூர்யா: அது என்னங்க தாத்தா தன் விருப்பத் திருமணம்?
தாத்தா: ஆமாம்டா சுயம்வரம் என்னு சொல்லுவாங்க.  இந்த வடமொழியின் சொல்லை பொருள் தெரியாமல் உபயோகிப்பதால் அந்தக் காலத்து கலாச்சாரமே மறைக்கப்படுகிறது. அந்த காலத்தில் பெண்ணுக்கு தன் கணவனைத் தன் விருப்பப்படி தேர்ந்தெடுக்கும் உரிமை இருந்திருக்கிறது.  இந்த காலம் மாதிரி ஆடுமாடு விற்கிற மாதிரி சீதனம் கொடுத்து பணம் கொடுத்து வாகனம் வாங்கிக் கொடுத்து திருமணம் நடத்தவில்லை. மண வயதில் உள்ளவர்கள் அமர்வார்கள்.  அவர்கள் பெருமை கூறப்படும்.  பெண் பார்த்துக் கொண்டே வருவாள்.  தனக்கு பிடித்தமானவனைத் தேர்ந்தெடுப்பாள்.  அந்தக் காலத்தில் ஆண்பார்க்கும் படலம் நடந்திருக்கிறது.  இப்போது பெண்பார்க்கும் படலம் நடக்குது.  காலம்டா இது க-காலம். தெரியுதா.  சரி கதைக்கு வருகிறேன்.  தன்விருப்பத் திருமணத்தின் போது குந்திக்கு இந்த பாண்டுவைப் பிடித்துப்போய் விடுகிறது.  அதனால் இருவருக்கும் திருமணம் நடக்கிறது.  அந்த காலத்தில் மத்திர தேசம் என்று ஒன்று இருந்திருக்கிறது.  அதை ஆண்ட மன்னன் ருதாயனன் என்பவன்.  இவனுக்கு ஒரு மகள்.  மத்திர நாட்டுப் பெண்ணுக்குப் பெயர் மாத்திரி.  கடைசியில் மாதுரி என்று வந்து விட்டது. மாத்திரி என்றால் ஒரு மாதிரி இருந்தது போலும் எனவே மாதுரி என்று கூறிவிட்டார்கள். இந்த மாதுரிக்கு அண்ணன் தான் சல்-யன்.  பெரிய தேர் வீரன் இவன்.  பாரத யுத்தத்தில் இவன் பங்கு முக்கிய பங்கு.  இப்போ சொன்னா சுவையாக இருக்காது.  எனவே பின்னால் கூறுகிறேன்.  வடநாட்டில் பாலபாரதம் என்று ஒரு பாரதக் கதை உள்ளது.  அதில் வீடுமன் மாதுரியை தன் வில்வ-யால் கவர்ந்து பாண்டுவுக்குத் திருமணம் செய்து வைப்பதாக வருகிறதாம்.  நான் படித்ததில்லை.  ஆனால் வியாசபாரதத்தில் வீடுமன் சென்று பெண் கேட்பது போலவும் மத்திரபதி இசைந்தான் என்றும் உள்ளதாம்.  இதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் நாம்.  ஒரு கதையை எப்படி எல்லாம் ஒரே நாட்டில் திரித்துக் கூறமுடியும் என்பதற்கு இவையெல்லாம் உதாரணங்கள்.  கதையை நாளைக்குத் தொடர்வோமா?

 சூர்யா:  திருதராட்டிரனுக்கும் திருமணம் முடிந்து விட்டது.     பாண்டுவுக்கும் திருமணம் முடிந்து விட்டது.  தாத்தா - பாண்டவர்களும் கொளரவர்களும் எப்போ பிறந்தாங்க?
தாத்தா: திருமணம் முடிந்த பிறகு பாண்டு சிலநாள் அத்தினாபுரத்தில் தங்கிவிட்டு பின்பு இமயமலைக்குச் சென்றான் வேட்டையாடி மகிழ. கானத்தில் உள்ள கலைமான்இனம், காட்சி ஆமா,  ஏனத் திரள், வெம் புலி, எண்குடன், யாளி, சிங்கம், தானப் பகடு, முதலாய சனங்கள் எல்லாம்
மானச் சரத்தால் கொலைசெய்தனன், வாகை வில்லான்.  ஆமாம் காட்டில் மான்களையும், காட்டுப் பன்றிகளையும், பு-களையும், யாளியையும், சிங்கங்களையும், யானைகளையும் வேட்டையாடிக் களித்தான் பாண்டு.  சனங்கள் என்றால் கூட்டங்கள் என்று பொருள்.  முதலாய சனங்கள் என்றால் முத-ய கூட்டங்களை என்று பொருள்.  இந்த காலத்தில் ஜனம் - சனம் - சாதி சனம் என்று சொற்கள் உள்ளன.  ஆனால் நாம் மனிதக் கூட்டத்தை மட்டுமே குறிக்கிறோம்.  ஆனால் கூட்டமாக மிருகம் இருந்தாலும் அது சனம் என்பது வில்-பாரதம் மூலம் நமக்குத் தெரிகிறது.  சரியா சூரியா?
சூர்யா: புரிஞ்சுதுங்க தாத்தா.  அப்புறம் என்ன நடந்துச்சு?
தாத்தா:  அந்த காட்டிலே கிந்தமன் என்ற முனிவன் மான் வேடம் கொண்டு மகிழ்ச்சியாக தன் மனைவியுடன் இருக்கும் நேரத்தில் பாண்டு மன்னன் மான் எனக் கருதி அம்பு தொடுத்து மானைக் கொல்ல அது முனிவம் வடிவம் கொண்டு இறக்கும் தருவாயில் "நீ இது போல மகிழ்ச்சியாக மனைவியுடன் இருந்தால் அன்றே உனக்கு மரணம் வரும்' என்று சுடுமொழி கூறினான்.  அவன் மடிந்தவுடன் அந்த முனிவனின் மனைவியும் மாண்டாள்.  நிலைமையை நன்கு உணர்ந்தான் பாண்டு.  இனி மனைவிகளுடன் மகிழ்ச்சியாக இருக்கக் கூடாது என்பது அவனுக்குப் புரிந்தது. தவக்கோலம் பூண்டான்.  ஒரு முனிவன் போல வாழ்க்கையை நடத்தினான். "காமக்கனலை வளர்க்கின்ற கருத்து மாற்றி, தாமக் குழலார் இருவோரொடு தானும் ஒன்றி, ஓமக் கனலே வளர்த்தான்'' என்கிறார் வில்-புத்தூரார்.  உலகப் பற்றுகளைத் துறந்தான்.  முற்றும் துறந்த முனிவன் ஆனான்.  ஆனால் பாண்டுவின் மனதில் ஒரு குறை.  மகவு இல்லையே.  "மெய், தானம், வண்மை, விரதம், தழல் வேள்வி, நாளும் செய்தாலும், ஞாலத்தவர் நற்கதி சென்று சேரார்'' மனிதனாகப் பிறந்தால் மகவு இருந்தால் தானே அந்த வாழ்க்கை முற்றுப் பெற்ற வாழ்க்கையாக இருக்கும் என்று ஏங்கினான். 'மென் பாலகரைப் பயவாதவர், மெய்ம்மையாகத் தென்பாலவர்தம் பசித்தீ நனி தீர்க்கமாட்டார்;துறக்க பூமி செல்வார் பெறும் பேறு இனி நீ அருள்செய்தி' எப்படியாவது குழந்தையைப் பெற்றுக்கொள் என்று குந்தியை நச்சரித்தான் பாண்டு.  திடுக்கிட்டாள் குந்தி.  கனல் போல அல்லவா கருத்தைச் சொல்கிறான் கணவன்."சொற்பாலவல்லாப் பழிகூருரை சொல்வதென்னே வெற்பார்நதிகள்சிறுபுன்குழி மேவினன்றோ'' என்று கணவனிடம் முறையிட்டு துர்வாச முனிவர் தனக்கு அளித்த வரத்தைக் கூறி அதன்படி குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறுகிறாள்.  பாண்டுவும் ஒத்துக் கொள்கிறான்.  தரும தேவன் தயவால் நல்ல நாளில் தருமன் பிறந்தான்.  இவன் உலகாளப் பிறந்தவன் என்று நிமித்தங்கள் உணர்த்தின. இவனுக்கு உதிட்டிரன் என்று பெயரிட்டனர்.  அத்தினாபுரியில் காந்தாரிக்கு நல்ல குழந்தைகள் பிறக்க வேண்டும் என்பதற்காக வியாத முனிவர் அருள் புரிந்து ஒரு கருவில் நூறு குழந்தைகள் உருவாக வகை செய்திருந்தார்.
சூர்யா: என்ன ஒரு தாய்க்கு ஒரே நேரத்தில் நூறு குழந்தைகளா?  சாத்தியமா தாத்தா?
தாத்தா: இப்போது எல்லாம் நாளிதழ்களில் பார்க்கிறோமே ஒரே பிரசவத்தில் எட்டு குழந்தைகள் பிறக்கின்றன என்று.  அதுபோல அந்த காலத்தில் நடந்திருக்கும்.  கதைக்கு வருவோம்.  உதிட்டிரன் பிறந்த செய்தி காட்டுத்தீ போல அத்தினாபுரம் வரை சென்றது.  கொதித்தாள் காந்தாரி.  ஒரு கல்லை எடுத்து தன் வயிற்றில் அடித்துக் கொண்டாள்.  அவள் கரு கலைந்தது.  வியாத முனிவர் ஞானக் கண்ணால் கண்டார் இந்தக் காட்சியை.  உடனே விரைந்தார் அத்தினாபுரத்திற்கு.  நூறு கலையங்களைக் கொண்டு வரச்சொல்-அதில் அந்தப் பிண்டங்களைப் போட்டார்.  சிந்தியிருந்தவைகளைச் சேர்த்து தனிப் பாத்திரத்தில் இட்டார்.  இவைகளை யாரும் தொடக் கூடாது எனக் கூறி இவை ஒவ்வொன்றாக குழந்தையாக சில நாட்கள் கழித்து மாறும் என்று தெரிவித்து பின் மறைந்தார்.  அங்கே இமயமலைக் காட்டில் காற்றுக் கடவுள் தயவில் வீமன் பிறந்தான்.  அவன் பிறக்கும் முன்தினம் அத்தினாபுரியில் துரியோதனன் பிறந்தான்.  இவனுக்கு பெயர் சுயோதனன். இவன் தருமனுக்குப் பின் ஆனால் வீமனுக்கு முன் பிறந்தவன். சுயோதனன் என்றால் வெற்றி பெறக் கூடியவன் என்று பொருள்.  காந்தாரி பெரு மகிழ்ச்சி கொண்டாள். பங்குனி உத்திரத் திருநாளில் குந்தி மற்றுமொரு குழந்தையைப் இந்திரன் தயவால் பெற்றாள்.  பங்குனியில் பிறந்ததால் இவனுக்குப் பல்குனன் - பங்குனன் என்று பெயர் உண்டு.  பின்னர் பாண்டுவின் வேண்டுகோள் படி மந்திரத்தை மாத்திரிக்குக் கற்றுத் தருகிறாள் குந்தி.  அதன்படி மாத்திரிக்குப் பிறந்தவர்கள் தான் நகுலனும் சகாதேவனும்.  இவர்கள் சூரியனின் இரட்டை மகன்களான அசுவினி தேவர்கள் தயவால் உதித்தவர்கள்.  காட்டில் பிறந்த ஐவரும் வேதியர்கள் கற்றுக் கொடுத்த பல கலைகளைக் கற்றுக் கொண்டே வளர்ந்தார்கள்.  காட்டு விலங்குகளோடு விளையாடினார்கள். "போதகம், மடங்கல், புல்வாய், புலி, முதல் விலங்கொடு ஓடி, வேதியர் முன்றில்தோறும் விழை விளையாடல் உற்றார்.'' போதகம் என்றால் யானைக்கன்று, மடங்கல் என்றால் சிங்கம், புல்வாய் என்றால் மான்.
சூர்யா: ரொம்ப தமிழ்ச் சொற்களைக் கற்றுக் கொடுக்கிறீர்கள் தாத்தா.  ரொம்ப சந்தோஷமா இருக்கு.
தாத்தா: மிக்க மகிழ்ச்சியாக உள்ளது என்று கூற வேண்டும் சரியா.  விதி விளையாடும் நேரம் வந்தது.  வசந்த காலம் வந்தது.  அழகிய ஆடைகளை அணிந்திருந்தாள் மாத்திரி.  மனம் மாறினான் பாண்டு.  முனிவரின் கொடுஞ்சொல்லை மறந்தான்.  மாத்திரியுடன் இன்பமாக இருந்தான்.  முனிவரின் கொடுஞ்சொல் பலன் தந்தது.  பாண்டு இறந்தான்.  மாத்திரி ஒன்றும் புரியாமல் கதறினாள்.  ஓடி வந்தாள் குந்தி.  நடந்ததைத் தெரிந்து கொண்டாள்.  மகன்களை வைத்து ஈமக் கிரியைகளைச் செய்ய வைத்தாள்.  ஆனால் பாண்டுவின் மரணத்திற்குக் காரணமான மாத்திரி தனது இரண்டு குழந்தைகளையும் குந்தியின் கையில் ஒப்படைத்துவிட்டு கணவனோடு உடன்கட்டை ஏறினாள்.  தீப்பாய்ந்தாள்.  காட்டில் இருந்த முனிவர்களுக்குத் தெரிந்தவுடன் சதசிருங்க முனிவர் குந்தியையும் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அத்தினாபுரம் வந்து செய்தியைச் சொல்- அவர்களை ஒப்படைத்தார்.  அப்போது தருமனுக்கு வயது பதினாறு.  வீமனுக்கு பதினைந்து. அருச்சுனனுக்கு பதினான்கு.  இரட்டையரான நகுல சகாதேவர்களுக்கு வயது பதிமூன்று. அத்தினாபுரி அதிபன் இந்தக் குழந்தைகளை அணைத்து மகிழ்ந்தான். மனதில் பாண்டுவின் மரணத்தால் துயரம்.  ஆனால் குழந்தைகளைக் கண்டவுடன் மகிழ்ச்சி.  வீடுமன் மற்றும் விதுரனும் துன்பமும் உவகையும் ஒருங்கே கொண்டனர். இப்படியாக அனுச நிருபன் புதல்வர் ஐவரும் மகீபன் தனயர் ஒரு நூற்றுவரும் வனசமலரும் குமுதமலரும் போன்று வளர்ந்தனர்.  நிருபன் என்றால் அரசன் என்று பொருள்.  இப்போ நிருபர் என்றால் ஊடகங்களுக்காக செய்தி தொகுப்பவர் என்று வழக்கத்தில் வந்து விட்டது.  அவர்கள் அரசர்களைப் போன்று எதையும் சாதிக்க வல்லவர்கள் என்பதால் இப்படிக் கூறுகிறார்களோ.  இருக்கலாம்.
சூர்யா: நிருபர் என்றார் மன்னன் என்று பொருளா தாத்தா.  நன்றி தாத்தா நல்ல தமிழ்ச் சொல் கற்றுக் கொடுத்ததற்கு.
தாத்தா: கதைக்கு வருவோம்.  யாதவகுலத்தினர் செய்தியறிந்து அத்தினாபுரி வந்து குந்தியைச் சமாதானப் படுத்துகின்றனர்.  நிலவுலகின் பாரத்தைக் குறைக்கத் தானே கண்ணன் யாதவ குலத்தில் - யதுகுலத்தில் பிறந்துள்ளார்.  எனவே தருமனிடம் அரசபதவி அடைவது பற்றியும் அதன் சுகபோகங்கள் பற்றியும் எடுத்துக் கூறி விடைபெற்றுச் செல்கிறார்.  அப்போது தானே யார் மன்னர் என்ற கேள்வி வரும்.  சண்டை வரும்.  நிலத்தின் பாரம் குறையும்.  புரிந்ததா.  இராமாயணத்தில் கூனியும் கைகேயும் இல்லாவிட்டால் இராமன் அவதாரம் எடுத்த பயனை அடைய முடியாது.  பாரதத்தில் ஐவர் மற்றும் நூற்றுவர் இல்லாவிடில் கண்ணன் அவதாரம் எடுத்த பயனை அடைய முடியாது.  ஐவரும் நூற்றுவரும் அன்பாக இருந்தால் பூமிபாரம் எப்போது நீங்குவது?  அதனால் தான் கண்ணன் 'அம்புராசிகள் உட்பட்ட அவனிகள் அனைத்தும் நாமே, இம்பர் நோய் அகற்றி, எல்லா எண்ணமும் முடித்தும்' என்று சொல்கிறார்.  பின்னர் முகுரவானனிடம் விடைபெற்றுச் செல்கிறார்.
சூர்யா: முகுரவானன் என்றால் யார் தாத்தா?
தாத்தா: முகுரம் என்றால் கண்ணாடி.  கண்ணாடியில் நாம் முகம் பார்க்கலாம்.  ஆனால் கண்ணாடி எங்கே போய் முகத்தைப் பார்க்கும்?  அதனால் பார்க்க முடியாது.  திருதராட்டிரானால் பார்க்க முடியாது.  எனவே வில்-புத்தூரார் இந்தச் சொல்லைப் பயன்படுத்துகிறார். புரியுதா?  வீடுமன் முத-யோரிடம் விடைபெற்று யாதவகுல திலகங்கள் தங்கள் நகரத்திற்குத் திரும்பினார்கள்.  மீதக் கதையை நாளைப் பார்ப்போம்.


தாத்தா:  சூர்யா காட்டி-ருந்து தருமரும் மற்ற சகோதரர்களும் அத்தினாபுரத்திற்கு வந்ததும் கண்ணன் அவர்களைக் கண்டு பேசியதையும் கண்டோம் நேற்று.  பிரிவினைக்கு அடிக்கல் நாட்டுகிறார் கண்ணன்.  ஏற்கனவே வீமனுக்கு அதிக பலம் இருப்பதால் அவனைக் கண்டு துரியோதனன் சற்று பொறாமையுடனே இருக்கிறான்.  இதுவரை அரசகுமாரன் என்ற மதிப்போடு உலா வந்தவன்  அவன்.  இப்போது ஐவர் கூடுதலாக வந்ததும் தன்னை விட பலசா-யான வீமன் இருப்பதும் அவனுக்குப் பிடிக்கவில்லை.  சிறுவனாக இருக்கும் பொழுதில் இருந்தே வீமனை ஒழித்துக் கட்ட பல தந்திரங்களைக் கையாளுகிறான் துரியோதனன்.
சூர்யா: சின்னவயதிலேயே இந்த விரோதம் துளிர் விட்டுவிட்டதா தாத்தா?
தாத்தா: ஆமாம்டா.  அதனால் தான் துரியோதனன் கன்னனைத் தன் துணைவனாக - விளையாட்டுத் தோழனாக ஏற்றுக் கொள்கிறான்.  தேரோட்டியின் மைந்தன் அவன்.
ஆனால் பலம் உள்ளவன்.  வீரன்.  சந்தர்ப்பத்தை நழுவ விடத் தயாராக இல்லை துரியோதனன்.  ஒரு நாள் பாண்டவர்களும் கௌரவர்களும் கங்கைக் கரையில் நீராடி - உணவு உண்டு - உறங்கும் வேளையில் துரியோதனன் - கன்னன் - சகுனி சேர்ந்து திட்டமிட்டு வீமனைக் கொடிகளால் கட்டி கங்கையில் விட்டு விடுகிறார்கள்.  ஆனால் பெருவ-மை உடைய வீமன் கட்டுகளை அறுத்துக் கொண்டு தப்பிக்கிறான்.  நாகபாசத்தால் கட்டுண்ட இலக்குவன் உயிருடன் திரும்பி வந்ததைப் போல் வீமன் வருகிறான் என்பார் வில்-புத்தூரார்.  கடிக்க வந்த பாம்புகளை பிசைந்து கொல்கிறான் வீமன்.  அதே போன்று இன்னொரு முறை கங்கையில் ஆழமான பகுதியில் வேல்களைக் குத்தி வைத்து துரியோதனன் நீராட அழைக்கிறான்.  நதியில் பாயும் போது வேல் குத்தி கொன்றுவிடும் என்று திட்டமிடுகிறான்.  கண்ணன் தான் ஐவருக்கும் துணைவனாயிற்றே.  வேல்முனைகளில் வண்டுகள் போல் வந்து அமர்கிறான் கண்ணன்.  நதியின் ஆழத்தில் வண்டுகள் இருப்பதைக் கண்டு வண்டுக்குக் கீழே வேல் இருப்பதையும் பார்த்து விடுகிறான் வீமன்.  இலாகவமாகத் தப்பி கரைசேர்கிறான். பின்னும் ஒரு முறை வீமனுக்கு மட்டும் உணவில் நஞ்சு கலந்து மயங்கச் செய்து கயிற்றால் கட்டி மீண்டும் கங்கையில் அமிழ்த்துகிறார்கள்.  கங்கையோ வீமனைக்  கட-ல் கொண்டு போய் சேர்த்தது.  இந்த இடத்தில் பாரதத்தில் வீமன் பாதலம் அடைந்ததாகவும் அங்கு பாம்புகள் கடித்தாகவும் கதை கூறுகிறது.   ஆனால் பாம்புக் கூட்டத்திற்குத் தலைமை வகித்த வாசுகி இவன் காற்றின் மைந்தன் என்பதைத் தெரிந்து கொள்கிறாள்.  காற்று தானே பாம்புகளுக்கு உணவு.  எனவே தங்கள் கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பத்து குடம் நிறைய அமுதத்தைக் கொடுக்கிறாள் வாசுகி.  அது அவனுக்கு ஆயிரம் யானை பலத்தைத் தருகிறது.  இப்படியாக நாகராசன் மாளிகையில் எட்டு நாள் தங்குகிறான் வீமன்.  பலசா- ஆகிறான்
சூர்யா: கங்கை நதியில் விழுந்தவன் பாதாலம் என்னும் பாதாளத்திற்கு வந்தது எப்படி தாத்தா?
தாத்தா: அருமையான கேள்வி.  சிக்கலான கேள்வி.  இதற்கு பதில்  பகவத் கீதை மற்றும் பாகவதம் போன்ற நூல்களில் உள்ளது.  குருவாயூரப்பன் மேல் பாடப்பட்ட நாராயணீயம் என்ற நூல் பாகவதம் போன்றே உள்ளது.  அதிலும் இது குறிப்பிடப்பட்டு உள்ளது.  அதைப் பத்தி விபரமாக பகவத் கீதை சொல்றப்போ சொல்றேன்.  இப்போதைக்கு சுருக்கமா சொல்ல÷ம்னா - உனக்குப் புரிய மாதிரி சொல்லணும்னா நிலப்பரப்புக்கு மேலே உள்ளதை வடமொழிக்காரங்க லோகம் என்னு பிரிக்கிறாங்க.  நிலப்பகுதிக்கு கீழே இருக்கிறதை தளம் என்று பிரிக்கிறார்கள்.  அதனால் தான் பூலோகம், சத்யலோகம், பிரம்மலோகம், இந்திரலோகம் என்னு சொல்றாங்க.  ஆனா பரம்பொருள் இருக்கிற இடத்தை லோகம் என்னு சொல்றதில்லை.  அதை கைலாயம் என்று ஒரு சாராரும் பாற்கடல் என்னு ஒரு சாராரும் சொல்றாங்க.  மகாப-ப் பேரரசன் யாகம் நடத்தின போது திருமால் வாமன அவதாரம் எடுத்து வர்ரார்.  இது நடக்கிற இடம் கேரளம்.  தானமாக மூன்றடி மண் கேட்கிறார்.  ஒன்றை தரையிலும் மற்றொரு அடியை வானத்திலும் வைக்கிறார்.  பூமியை வென்றவன் அவன்.  லோகங்களை வென்றவன் அவன்.  இந்த இரண்டையும் எடுத்துக் கொள்கிறார்.  மூன்றாவது அடியை எங்கே வைப்பது என்ற போது தான் அவன் தலையில் வைத்து அவனை கீழே அமுக்கி விடுகிறார்.  அவன் பாதாளம் போனதாகவும் அங்கே அரசாண்டு கொண்டு இருப்பதாகவும் ஆண்டுக்கு ஒருமுறை திருவோணம் தினத்தன்று வெளிவந்து தான் ஆண்ட இந்த பூவுலகத்தைக் காண்பதாகவும் கதை.  அதனால் தான் ஓணம் பண்டிகையே சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.  இதி-ருந்து என்ன தெரிகிறது என்றால் தளம் என்று சொன்னால் நிலப்பரப்புக்கு கீழே உள்ள இடம் என்று தெரியுது.  உள்ளே பல நிலைகளில் நீர் இருக்கும்.  அப்படி ஆழமான பகுதியில் தான் நாகர் வாழும் பகுதியும் இருப்பதாகக் கருதுகிறார்கள். நான் இன்று ஒரு வலைத் தளத்தில் படித்தேன்.  அதிலே சாகரன் என்று ஒரு பேரரசன் இருந்தானாம்.  அவனுக்கு இரு மனைவிகள்.  இருவருக்கும் குழந்தை இல்லை.  அவன் இட்சுவாகு இன அரசன்.  அயோத்தியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னன்.  உடனே யாகம் நடத்தினான். இரு மனைவிகளின் பெயர் கேசனி மற்றும் சுமதி.  கேசனி என்பவள் அச்மசன் என்று ஒரு குழந்தையைப் பெறுகிறாள்.  சுமதியோ அறுபதாயிரம் மகன்களைப் பெறுகிறார்.  இந்த சாகரன் பின்னாளில் அசுவமேத யாகம் ஒன்று நடத்துகிறான்.  அப்போது ஒரு குதிரையை முன்னால் அனுப்பி பின்னால் வீரர்கள் செல்வார்கள்.  குதிரையை வணங்கினால் விட்டுவிடுவார்கள்.  குதிரையை மடக்கினால் போரிடுவார்கள்.  இப்படி குதிரை பின்னால் 60000 மகன்களும் போய்க் கொண்டிருந்தார்கள்.  விதி விளையாடியது.  திடீரென்று குதிரையைக் காணோம்.  ஆனா அந்தப் பகுதியில் கபில முனிவர் ஆசிரமம் அமைத்து இறைவனைத் தொழுது கொண்டிருந்தார்.  அவர் திருமா-ன் அவதாரம் என்று கூறப்படுகிறது.  இந்த கதை எல்லாம் பாகவதத்தில் வருகிறது.  இப்போதைக்கு என்ன நடக்கிறது என்பதை மட்டும் சொல்கிறேன்.  முனிவர் தான் குதிரையைப் பிடித்து வைத்திருப்பார் என்று தவறாகக் கருதி அவர் தவத்தைக் குலைக்க முயலுகிறார்கள் இந்த 60,000 பேரும்.  கண்விழித்தார் முனிவர்.  அனைவரும் சாம்பலாகிப் போனார்கள்.  இந்த முனிவர் இருந்ததாகச் சொல்லப்படும் ஆசிரமம் தற்போது வங்காள மாநிலத்தில் கங்கைக் கரையில் உள்ளது.  அதுக்கப்புறம் அந்த மன்னர் பேரன் அம்சுமானை அனுப்புகிறார்.  "போனவங்க காணோம் போய் பார்த்துட்டு வா'' என்று சொல்றார்.  அவன் சித்தப்பாமார்கள் போன பாதையில் வந்து அறுபதாயிரம் சாம்பல் மலைகளைப் பார்க்கிறான்.  அவனுக்குத் தெரிந்து விட்டது.  இது கபிலமுனிவரின் கைங்கர்யம் என்று.  கபில முனிவர் கா-ல் விழுந்து வணங்கி நடந்ததை அறிந்து பரிகாரம் கேட்கிறான்.  வானுலகத்தில் உள்ள கங்கை பூவுலகம் வந்தால் அவர்களுக்கு நற்கதி கிடைக்கும்.  இல்லாவிடில் இப்படியே சாம்பலாக இருப்பார்கள் என்று கூறுகிறார்.  காலச்சக்கரம் சுழன்றது.  இந்தப் பேரனால் கங்கையைக் கொண்டு வரமுடியவில்லை.  அடுத்து வருகிறான் பகீரதன்.  அவன் தன் முன்னோர்கள் சாம்பல் குவியலாக உள்ளதைக் கண்டு மிகத் துயரம் அடைகிறான்.  ஆனால் இவர்களுக்கு முன்னோர் கடன் ஆற்ற வேண்டும் என்றால் கங்கை நதி வரவேண்டும்.  பிரம்மனைக் குறித்துத் தவம் செய்யச் சொல்கிறார்.  அவர் "திருமா-ன் அடித்தாமரையில் இருந்து கங்கை வரவேண்டும்.  எனவே அவரை நோக்கித் தவம் புரிவாயாக'' என்று கூறி மறைந்து விடுகிறார்.  திருமாலை நோக்கித் தவம் புரிகிறான்.  அவரும் வருகிறார்.  "உன் தவத்தைக் கண்டு மகிழ்ந்தேன்.  நான் கங்கையை அனுப்பத் தயார்.  ஆனால் அதன் வேகத்தை இந்த உலகம் தாங்காது.  அதைத் தடுத்து நிறுத்த சிவனால் முடியும். எனவே சிவனை நோக்கித் தவம் புரி'' என்கிறார்.  விட்டானா பகீரதன். சிவனைத் நோக்கித் தவம் புரிந்து அவர் மனத்தை உருக்கி ஒப்புக்கொள்ள வைக்கிறான்.  இப்படியாகத் தான் கங்கை பூமிக்கு வருகிறது.  அதனால் தான் தொடர்ந்து கடினமாக முயற்சி செய்து ஒரு வேலையை முடித்தால் பகீரதப் பிரயத்தனம் செய்கிறான் என்று இன்றளவும் பேச்சு வழக்கில் உள்ளது.  வேகமாக வந்த கங்கையின் நீரோட்டம் அது கட-ல் சேரும் இடததில் கடலை ஆழமாக்கியது.  கட-ல் சேரும் இடத்தில் தான் அறுபதாயிரம் எலும்பு மற்றும் சாம்பல் மலை இருந்தது.  அதுவும் கரைந்தது.  அவர்கள் நற்பயன் பெற்றார்கள்.  கங்கை கடலை ஆழமாக மாற்றியதால் அந்தப் பகுதிக்கு கங்கா சாகரம் என்று இந்த அறுபதாயிரம் சகரர்கள் பெயராலேயே அழைக்கப்படுகிறது.   இந்த செய்தி ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ப்ண்ஸ்ங்ண்ய்க்ண்ஹ.ஸ்ரீர்ம்/ஞ்ஹய்ஞ்ஹ/ஞ்ஹய்ஞ்ஹள்ஹஞ்ஹழ்.ட்ற்ம்ப்
என்னும் வலைத் தளத்தில் உள்ளது.  சாகரம் என்றால் கடல் என்று இப்போ சொல்றாங்க. ஒருவன் கல்வியில் நன்றாகத் தேர்ச்சி பெற்றால் கல்விக் கடல் என்போம்.  வடமொழியில் விதயாசாகர் என்பார்கள்.  அதனால் தான் இன்றளவும் வங்கக் கடல் உள்ள பகுதியில் முன்னோர் கடன் செய்ய பல இடங்கள் உள்ளன.  இராமேசுவரம் அதிலே மிகச் சிறப்பானது.  இந்த பகீரதன் ஒருவேளை தன் முன்னோர்களுக்கு இந்த இடத்திலே முன்னோர் கடன் செய்திருக்கலாம்.  இப்படித் தான்  மதிப்பிற்குரிய செயசிறீ சாரநாதன் அவர்கள் அருமையான பதிவினைத் தந்து உள்ளார்கள்.  இராமாயணத்தில் விசுவாமித்திரர் இராகவனுக்குக் கூறுவது போல் இராமாயணத்தின் ஒரு பகுதி அது. "இந்த அறுபதாயிரம் பேரும் பூமியைக் குடைந்து பாதாளம் வரை போய் வென்றதாகவும் ராசதலா என்ற இடம் வரை அறுபதனாயிரம் யோசனை தூரம் குடைந்தார்கள் என்றும் அவர் கூறுகிறார்.  ஒரு யோசனை தூரம் என்றால் 8 மைல் கற்கள் என்று சொல்கிறார் அவர்.  தன்னுடைய பதிவிலே அவர் கங்கையைக் கொண்டு வரச் சொன்னது கருடன் என்று நமக்கு ஒரு கூடுதல் தகவலைத் தருகிறார். பூமிக்கு அடியில் ஏழு நிலைகள் கொண்ட பகுதி உள்ளதாகவும் அதற்கு அதலம், விதலம், சுதலம், தலாதலம், மகாதலம், இராசதலம் மற்றும் பாதலம் உள்ளதாகவும் அறுபதாயிரம் சகரர்களும் ஆறுதலங்கள் வரை தோண்டியதாகவும் வெற்றி கொண்டதாகவும் அதுவரை இந்த கங்கைநதி பாய்ந்ததாகவும் தகவலைத் தருகிறார். 
சூர்யா:  தாத்தா மகாபாரதக் கதையைச் சொல்லச் சொன்னா பகீரதன் கதை, கங்கைக் கதை எல்லாம் சொல்-க்கிட்டிருக்கீங்க. கதைக்கு வாங்க தாத்தா
தாத்தா: பாதாளம் என்றால் என்ன என்று கேட்டதால் இப்படி சுற்ற வேண்டியதாகப் போய் விட்டது.  இருந்தாலும் நான் கடைசியாகச் சொன்ன மதிப்பிற்குரிய  செயசிறீசாரநாதன் அவர்களின் பதிவை அப்படியே நாம் ஆங்கிலத்தில் பதிந்து கொள்வோம்.  பிறகு அதை முழுக்க உனக்குச் சொல்கிறேன்
பட்ங் 60,000 ள்ர்ய்ள் ர்ச் நஹஞ்ஹழ்ஹ ஜ்ங்ழ்ங் ம்ஹக்ங் ஹள் ஹ ம்ர்ன்ய்க் ர்ச் ஹள்ட்ங்ள்!
பட்ங்ஹ் க்ண்ங்க் ஹச்ற்ங்ழ் ங்ஷ்ஸ்ரீஹஸ்ஹற்ண்ய்ஞ் ற்ட்ங் ங்ஹழ்ற்ட் ர்ய் ற்ட்ங் ங்ஹள்ற்ங்ழ்ய் ள்ண்க்ங் ர்ச் ற்ட்ங் ல்ழ்ங்ள்ங்ய்ற் க்ஹஹ் ஒய்க்ண்ஹ,
ற்ர் ஹய் ங்ஷ்ற்ங்ய்ற் ர்ச் ம்ர்ழ்ங் ற்ட்ஹய் 60,000 ள்வ்ன்ஹழ்ங் ஹ்ர்த்ஹய்ஹள் (ஹ்ர்த்ஹய்ஹ = 8 ம்ண்ப்ங்ள்),
- ங்ஹஸ்ரீட் ர்ச் ற்ட்ங்ம் க்ண்ஞ்ஞ்ண்ய்ஞ் ர்ன்ற் 1 ள்வ்ன்ஹழ்ங் ஹ்ர்த்ஹய்ஹ ர்ச் ற்ட்ங் ஞ்ழ்ர்ன்ய்க்
ன்ல் ற்ர் ற்ட்ங் ப்ஹஹ்ங்ழ் ஸ்ரீஹப்ப்ங்க் தஹள்ஹஹற்ஹப்ஹ.
தஹள்ஹஹற்ஹப்ஹ ண்ள் ற்ட்ங் 6ற்ட் ப்ஹஹ்ங்ழ் க்ஷங்ப்ர்ஜ் ற்ட்ங் ங்ஹழ்ற்ட்.
தஹள்ஹஹற்ஹப்ஹ ண்ள் ன்ள்ன்ஹப்ப்ஹ் ஸ்ரீர்ய்ள்ண்க்ங்ழ்ங்க் ஹள் ர்ய்ங் ர்ச் ற்ட்ங் 7 ட்ங்ப்ப்ள்.
ஆஸ்ரீஸ்ரீர்ழ்க்ண்ய்ஞ் ஐண்ய்க்ன் ற்ங்ஷ்ற்ள்,
ற்ட்ங்ழ்ங் ஹழ்ங் 7 ப்ஹஹ்ங்ழ்ள் க்ஷங்ப்ர்ஜ் ற்ட்ங் ங்ஹழ்ற்ட் ஸ்ரீட்ஹழ்ஹஸ்ரீற்ங்ழ்ண்க்ஷ்ங்க் ஹள் ட்ங்ப்ப்ள்
ஆய்க் 7 ப்ஹஹ்ங்ழ்ள் ஹக்ஷர்ஸ்ங் ற்ட்ங் ங்ஹழ்ற்ட் ஸ்ரீட்ஹழ்ஹஸ்ரீற்ங்ழ்ண்க்ஷ்ங்க் ஹள் ட்ங்ஹஸ்ங்ய்ள்.
பட்ர்ன்ஞ்ட் ய்ர்ற் ம்ன்ஸ்ரீட் ஸ்ரீஹய் க்ஷங் ன்ய்க்ங்ழ்ள்ற்ர்ர்க் ஹக்ஷர்ன்ற் ற்ட்ங்ம்
ச்ழ்ர்ம் ர்ற்ட்ங்ழ் ஹய்ஸ்ரீண்ங்ய்ற் ற்ங்ஷ்ற்ள்,
ற்ட்ங் க்ங்ள்ஸ்ரீழ்ண்ல்ற்ண்ர்ய் ச்ர்ன்ய்க் ண்ய் யஹப்ம்ண்ந்ண் தஹம்ஹஹ்ஹய்ஹ
ஞ்ண்ஸ்ங்ள் ஹ க்ஷங்ற்ற்ங்ழ் ல்ண்ஸ்ரீற்ன்ழ்ங்.
ஒற் ண்ள் ற்ட்ஹற் ற்ட்ங் 7 ட்ங்ப்ப்ள் ஹழ்ங் ய்ர்ற்ட்ண்ய்ஞ் க்ஷன்ற்
ற்ட்ங் 7 ப்ஹஹ்ங்ழ்ள் ர்ச் ங்ஹழ்ற்ட் ன்ய்க்ங்ழ்ய்ங்ஹற்ட் ற்ட்ங் ள்ன்ழ்ச்ஹஸ்ரீங் ர்ச் ற்ட்ங் ங்ஹழ்ற்ட்.
பட்ங் ள்ன்ஸ்ரீஸ்ரீங்ள்ள்ண்ஸ்ங் ப்ஹஹ்ங்ழ்ள் ஹழ்ங் ந்ய்ர்ஜ்ய் ஹள்
ஆற்ஹப்ஹ, ஸ்ண்ற்ஹப்ஹ, ள்ன்ற்ஹப்ஹ, ற்ஹப்ஹஹற்ஹப்ஹ, ம்ஹட்ஹஹற்ஹப்ஹ, ழ்ஹள்ஹஹற்ஹப்ஹ ஹய்க் ல்ஹஹற்ஹப்ஹ.
தஹம்ஹஹ்ஹய்ஹ ள்ஹஹ்ள் ற்ட்ஹற் ற்ட்ங் நஹஞ்ஹழ்ஹள் க்ன்ஞ் ன்ல் ற்ர் ற்ட்ங் ள்ன்ழ்ச்ஹஸ்ரீங் ர்ச் தஹள்ஹஹற்ஹப்ஹ, ற்ட்ங் 6ற்ட் ப்ஹஹ்ங்ழ்.
பட்ண்ள் ம்ங்ஹய்ள் ற்ட்ஹற் ற்ட்ங்ஹ் ட்ஹக் ழ்ங்ம்ர்ஸ்ங்க் ற்ட்ங் ற்ர்ல் 5 ப்ஹஹ்ங்ழ்ள்.
யண்ள்ட்ஜ்ஹம்ண்ற்ட்ழ்ஹ ள்ஹஹ்ள்,
"ஞட், தஹம்ஹ, ற்ட்ங் ப்ங்ஞ்ஹற்ங்ங் ர்ச் தஹஞ்ட்ன்'ள் க்ஹ்ய்ஹள்ற்ஹ்,
ற்ட்ன்ள் ள்ண்ஷ்ற்ஹ் ற்ட்ர்ன்ள்ஹய்க் ள்வ்ன்ஹழ்ங் ஹ்ர்த்ஹய்ஹ-ள் ர்ச் ற்ட்ங் ங்ஹழ்ற்ட் ண்ள் க்ன்ஞ் ர்ஸ்ங்ழ்,
ள்ர் ஹள் ற்ர் ம்ஹந்ங் ற்ட்ங் ங்ஹழ்ற்ட்'ள் ர்ன்ற்ங்ழ்ம்ர்ள்ற் ல்ப்ஹய்ங் ஹள் ற்ட்ங் ன்ய்ள்ன்ழ்ல்ஹள்ள்ங்க் ழ்ஹள்ஹஹ ற்ஹப்ஹ,
ற்ட்ங் ள்ண்ஷ்ற்ட் ள்ன்க்ஷற்ங்ழ்ழ்ஹய்ங்ஹய் ஹய்க் ற்ட்ங் ய்ங்ற்ட்ங்ழ்ம்ர்ள்ற் ல்ப்ஹய்ங். ள1-39-21ன”
பட்ங் ல்ஹஹற்ஹப்ஹ ண்ள் ள்ஹண்க் ற்ர் க்ஷங் ற்ட்ங் ண்ய்ய்ங்ழ் ம்ர்ள்ற் ப்ஹஹ்ங்ழ் ஸ்ரீர்ஸ்ங்ழ்ண்ய்ஞ் ற்ட்ங் ம்ஹய்ற்ப்ங்.
பட்ங்ழ்ங் ள்ங்ழ்ல்ங்ய்ற்ள் ப்ண்ந்ங் யஹஹள்ன்ந்ண் ழ்ங்ள்ண்க்ங்.
பட்ங் ஒய்ய்ங்ழ் ம்ர்ள்ற் ர்ச் ஹப்ப் ற்ட்ங்ள்ங், ச்ஹழ் ண்ய்ள்ண்க்ங் ற்ட்ங் ஸ்ரீங்ய்ற்ழ்ங்
ழ்ங்ள்ண்க்ங்ள் ற்ட்ங் 1000 ட்ர்ர்க்ங்க் ள்ங்ழ்ல்ங்ய்ற், ஆய்ஹய்ற்ட்ஹய்.
ஆய்ஹய்ற்ட்ஹய் க்ஷங்ஹழ்ள் ற்ட்ங் ஜ்ர்ழ்ப்க்!
பட்ண்ள் ண்ள் ற்ட்ங் ள்ஹ்ம்க்ஷர்ப்ண்ள்ம் ர்ச் ற்ட்ங் 7 ட்ங்ப்ப்ள் ர்ச் ற்ட்ங் ஐண்ய்க்ன் க்ஷங்ப்ண்ங்ச்
பட்ங் ண்ய்ய்ங்ழ் ம்ர்ள்ற் ண்ழ்ர்ய் ஸ்ரீர்ழ்ங் ர்ச் ற்ட்ங் ங்ஹழ்ற்ட் ண்ள் ஸ்ரீட்ஹழ்ஹஸ்ரீற்ங்ழ்ண்ள்ங்க் ஹள் ஆய்ஹய்ற்ட்ஹய்,
ர்ழ் ஆக்ட்ண் ள்ங்ள்ட்ஹ, ஜ்ட்ர் ண்ள் ல்ண்ஸ்ர்ற்ஹப் ற்ர் ற்ட்ங் ங்ஷ்ண்ள்ற்ங்ய்ஸ்ரீங் ர்ச் ற்ட்ண்ள் ங்ஹழ்ற்ட்.
பட்ஹற் ண்ள் ஜ்ட்ஹ் ட்ங் ண்ள் ள்ஹண்க் ற்ர் க்ஷங்ஹழ் ற்ட்ங் ஜ்ர்ழ்ப்க் ர்ய் ட்ண்ள் ள்ட்ர்ன்ப்க்ங்ழ்ள்.
ஐங் ண்ள் ய்ங்ஸ்ங்ழ் ள்ஹண்க் ற்ர் ள்ட்ஹந்ங் ட்ண்ள் க்ஷர்க்ஹ்.
ஒச் ட்ங் ள்ட்ஹந்ங்ள், ற்ட்ங் ஜ்ர்ழ்ப்க் ஜ்ண்ப்ப் க்ஷங் க்ங்ள்ற்ழ்ர்ஹ்ங்க்!
ரட்ங்ழ்ங்ஹள் ச்ழ்ர்ம் ற்ட்ங் டஹஹற்ஹஹப்ஹ ன்ல்ஜ்ஹழ்க்ள், ற்ட்ங் ள்ட்ஹந்ண்ய்ஞ் ன்ல் ட்ஹல்ல்ங்ய்ள் ர்ய்ஸ்ரீங் ண்ய் ஹ ஜ்ட்ண்ப்ங்.
பட்ங் நங்ழ்ல்ங்ய்ற்ள் ஹற் ற்ட்ங் டஹஹற்ஹப்ஹ,
ற்ட்ங் ப்ஹஹ்ங்ழ் ற்ட்ஹற் ஸ்ரீர்ண்ய்ஸ்ரீண்க்ங்ள் ஜ்ண்ற்ட் ற்ட்ங் ஙஹய்ற்ப்ங் ர்ச் ற்ட்ங் ங்ஹழ்ற்ட்,
ம்ஹஹ் ழ்ண்ள்ங் ன்ல் ண்ய் ச்ன்ழ்ஹ் ர்ய்ஸ்ரீங் ண்ய் ஹ ஜ்ட்ண்ப்ங்
ஹய்க் ங்ழ்ன்ல்ற் ஹள் ஸ்ர்ப்ஸ்ரீஹய்ண்ஸ்ரீ ச்ப்ர்ஜ்ள்.
பட்ங் ப்ஹஹ்ங்ழ் ஹக்ஷர்ஸ்ங் ற்ட்ண்ள் டஹஹற்ஹப்ஹ ண்ள் தஹள்ஹஹற்ஹப்ஹ.
பட்ங் நஹஞ்ஹழ்ஹள் க்ண்க் ய்ர்ற் க்ண்ள்ற்ன்ழ்க்ஷ ற்ட்ண்ள் ப்ஹஹ்ங்ழ் க்ஷன்ற் ங்ஷ்ஸ்ரீஹஸ்ஹற்ங்க் ற்ண்ப்ப் ற்ட்ங் ர்ன்ற்ங்ழ் ள்ன்ழ்ச்ஹஸ்ரீங் ர்ச் ற்ட்ண்ள் ப்ஹஹ்ங்ழ்.
(ஒற் ண்ள் ல்ர்ள்ள்ண்க்ஷப்ங் ற்ர் ஹள்ஸ்ரீங்ழ்ற்ஹண்ய் ற்ட்ங் க்ங்ல்ற்ட் ர்ச் ற்ட்ங் ங்ஷ்ஸ்ரீஹஸ்ஹற்ண்ர்ய்!)
பட்ங்ஹ் ஹப்ள்ர் க்ண்க் ய்ர்ற் க்ண்ள்ற்ன்ழ்க்ஷ ற்ட்ங் ங்க்ஞ்ங்ள் ர்ச் ற்ட்ங் ற்ங்ஸ்ரீற்ர்ய்ண்ஸ்ரீ ல்ப்ஹற்ங்ள்
ஜ்ட்ங்ய்ங்ஸ்ங்ழ் ற்ட்ங்ஹ் ட்ஹக் ங்ய்ஸ்ரீர்ன்ய்ற்ங்ழ்ங்க் ற்ட்ங்ம்.
ரண்ற்ட் ள்ன்ஸ்ரீட் ஸ்ரீஹழ்ங், ற்ட்ங்ஹ் க்ன்ஞ் ஹ ட்ன்ஞ்ங் ற்ழ்ர்ன்ஞ்ட்
க்ஷங்ச்ர்ழ்ங் க்ஹ்ண்ய்ஞ்.
ஞய் ள்ங்ங்ண்ய்ஞ் ய்ர் ள்ண்ஞ்ய் ர்ச் ழ்ங்ற்ன்ழ்ய் ர்ச் ட்ண்ள் ள்ர்ய்ள்,
நஹஞ்ஹழ்ஹ ள்ங்ய்ற் ட்ண்ள் ஞ்ழ்ஹய்க்ள்ர்ய் ஆம்ள்ட்ன்ம்ஹய்,
க்ஷர்ழ்ய் ற்ர் ட்ண்ள் ர்ற்ட்ங்ழ் ள்ர்ய், ஆள்ஹம்ஹய்த்ஹ,
ற்ர் ள்ங்ஹழ்ஸ்ரீட் ச்ர்ழ் ட்ண்ள் ள்ர்ய்ள் ஹய்க் ற்ட்ங் ட்ர்ழ்ள்ங் ஹள் ஜ்ங்ப்ப்.
ஆம்ள்ட்ன்ம்ஹய் ஜ்ங்ய்ற் ற்ட்ழ்ர்ன்ஞ்ட் ற்ட்ங் ங்ஷ்ஸ்ரீஹஸ்ஹற்ங்க் ப்ஹய்க் ஹய்க்
ழ்ங்ஹஸ்ரீட்ங்க் ற்ட்ங் ல்ப்ஹஸ்ரீங் ஜ்ட்ங்ழ்ங் ட்ங் ச்ர்ன்ய்க் ற்ட்ங்ம் ஹள் ஹள்ட்ங்ள்.
பட்ங் ஹஞ்ஞ்ழ்ண்ங்ஸ்ங்க் ஆம்ள்ட்ன்ம்ஹய் ஜ்ஹய்ற்ங்க் ற்ர் ர்ச்ச்ங்ழ் ஜ்ஹற்ங்ழ் ர்க்ஷப்ஹற்ண்ர்ய்ள்
ற்ர் ட்ண்ள் க்ங்ல்ஹழ்ற்ங்க் டஹற்ங்ழ்ய்ஹப் ன்ய்ஸ்ரீப்ங்ள்.
இன்ற் ற்ட்ங்ழ்ங் ஜ்ஹள் ய்ர் ஜ்ஹற்ங்ழ் ஹய்ஹ்ஜ்ட்ங்ழ்ங் ஹழ்ர்ன்ய்க் ற்ட்ஹற் ல்ப்ஹஸ்ரீங்.
ஒற் ஜ்ஹள் ற்ட்ங்ய், ஏஹழ்ன்க்ஹ, ட்ண்ள் ம்ஹற்ங்ழ்ய்ஹப் ன்ய்ஸ்ரீப்ங் ஹய்க் யண்ள்ட்ய்ன்’ள் ஸ்ரீஹழ்ழ்ண்ங்ழ்
ஹல்ல்ங்ஹழ்ங்க் ஹய்க் ஹக்ஸ்ண்ள்ங்க் ட்ண்ம் ற்ர் க்ஷழ்ண்ய்ஞ் ற்ட்ங் ஏஹய்ஞ்ங்ள் ற்ர் ண்ம்ம்ங்ழ்ள்ங் ற்ட்ங் ஹள்ட்ங்ள்,
ள்ர் ற்ட்ஹற் ற்ட்ங்ஹ் ஸ்ரீஹய் ழ்ங்ஹஸ்ரீட் ட்ங்ஹஸ்ங்ய்.
ஏஹழ்ன்க்ஹ ற்ர்ப்க் ஆம்ள்ட்ன்ம்ஹய்,
" 'ஞட், க்ஷங்ள்ற் ர்ய்ங் ஹம்ர்ய்ஞ் ம்ங்ய், தண்ஸ்ங்ழ் ஏஹய்ஞ்ஹ ண்ள் ற்ட்ங் ங்ப்க்ங்ழ் க்ஹன்ஞ்ட்ற்ங்ழ் ர்ச் ஐண்ம்ஹஸ்ஹய்ற்ஹ,
ஹய்க் ர்ட், க்ங்ஷ்ற்ழ்ர்ன்ள் ர்ய்ங், ஹ்ர்ன் ட்ஹஸ்ங் ற்ர் ர்ச்ச்ங்ழ் ஜ்ஹற்ங்ழ்-ர்க்ஷப்ஹற்ண்ர்ய்
ற்ர் ற்ட்ங் க்ங்ல்ஹழ்ற்ங்க் ல்ஹற்ங்ழ்ய்ஹப்-ன்ய்ஸ்ரீப்ங்ள் ர்ச் ஹ்ர்ன்ழ்ள் ண்ய் ட்ங்ழ் ஜ்ஹற்ங்ழ்ள்,
ய்ஹம்ங்ப்ஹ் ற்ட்ங் ட்ர்ப்ஹ் ஜ்ஹற்ங்ழ்ள் ர்ச் தண்ஸ்ங்ழ் ஏஹய்ஞ்ஹ. ள1-41-19ன
'ரர்ழ்ப்க் ல்ன்ழ்ண்ச்ண்ங்ழ் தண்ஸ்ங்ழ் ஏஹய்ஞ்ஹ ஜ்ண்ப்ப் க்ழ்ண்ச்ற் ற்ட்ங்ம்
ஜ்ட்ர் ஹழ்ங் ழ்ங்ய்க்ங்ழ்ங்க் ஹள் ம்ர்ன்ய்க்ள் ர்ச் ஹள்ட்ங்ள் ற்ர் ட்ங்ஹஸ்ங்ய்,
ஹய்க் ஜ்ட்ங்ய் ள்ட்ங் ஜ்ட்ர் ண்ள் ம்ன்ஸ்ரீட் ஹக்ர்ழ்ங்க் க்ஷஹ் ஹப்ப் ஜ்ர்ழ்ப்க்ள் க்ழ்ங்ய்ஸ்ரீட்ங்ள் ற்ட்ண்ள் ஹள்ட்,
ற்ட்ஹற் தண்ஸ்ங்ழ் ஏஹய்ஞ்ஹ ட்ங்ழ்ள்ங்ப்ச் ஜ்ண்ப்ப் ப்ங்ஹக் ற்ட்ங் ள்ண்ஷ்ற்ஹ்-ற்ட்ர்ன்ள்ஹய்க் ள்ர்ய்ள் ர்ச் நஹஞ்ஹழ்ஹ ற்ர் ட்ங்ஹஸ்ங்ய். ள1-41-20ன”
ஆம்ள்ட்ன்ம்ஹய் ஜ்ங்ய்ற் க்ஷஹஸ்ரீந் ஜ்ண்ற்ட் ற்ட்ண்ள் ண்ய்ச்ர்ழ்ம்ஹற்ண்ர்ய்.
ஐங் ஸ்ரீர்ன்ப்க் ய்ர்ற் க்ஷழ்ண்ய்ஞ் ற்ட்ங் ஏஹய்ஞ்ஹ.
சர்ழ் ட்ண்ள் ள்ர்ய் உண்ப்ங்ங்ல்ஹ ஸ்ரீர்ன்ப்க் க்ஷழ்ண்ய்ஞ் ட்ங்ழ்.
இட்ஹஞ்ங்ங்ழ்ஹற்ட்ஹ, உண்ப்ங்ங்ல்ஹ’ள் ள்ர்ய் ள்ன்ஸ்ரீஸ்ரீங்ங்க்ங்க் ண்ய் க்ஷழ்ண்ய்ஞ்ண்ய்ஞ் ட்ங்ழ் க்ர்ஜ்ய் ற்ர் ற்ட்ங் ங்ஹழ்ற்ட்.
பட்ங் ஏஹய்ஞ்ஹ ச்ர்ப்ப்ர்ஜ்ங்க் ட்ண்ம் ண்ய் ற்ட்ங் ப்ஹய்க் ஹய்க்
ரட்ங்ய் ட்ங் ங்ய்ற்ங்ழ்ங்க் ற்ட்ங் ப்ஹய்க் ங்ஷ்ஸ்ரீஹஸ்ஹற்ங்க் ன்ல் ற்ர் தஹள்ஹஹற்ஹப்ஹ,
ள்ட்ங் ற்ர்ர் ச்ங்ப்ப் ண்ய்ற்ர் ற்ட்ஹற்
ஹய்க் ச்ர்ப்ப்ர்ஜ்ங்க் ட்ண்ம்
ற்ட்ழ்ர்ன்ஞ்ட்ர்ன்ற் ற்ட்ங் ங்ஷ்ஸ்ரீஹஸ்ஹற்ங்க் ப்ஹய்க்.
ரட்ங்ய் ட்ங் ழ்ங்ஹஸ்ரீட்ங்க் ற்ட்ங் ல்ப்ஹஸ்ரீங் ர்ச் ற்ட்ங் ம்ர்ன்ய்க் ர்ச் ஹள்ட்ங்ள் ர்ச் ற்ட்ங் நஹஞ்ஹழ்ஹள்,
ற்ட்ங் ஐர்ப்ஹ் ஏஹய்ஞ்ஹ
க்ழ்ங்ய்ஸ்ரீட்ங்க் ற்ட்ங் ஹள்ட்ங்ள் ச்ர்ழ் ற்ட்ங் ச்ண்ழ்ள்ற் ற்ண்ம்ங் ண்ய் ட்ங்ழ் த்ர்ன்ழ்ய்ங்ஹ்!!
ரட்ங்ய் ற்ட்ங் ஹள்ட்ங்ள் ஞ்ர்ற் ண்ம்ம்ங்ழ்ள்ங்க் ண்ய் ற்ட்ங் ஜ்ஹற்ங்ழ்ள் ர்ச் ற்ட்ங் ஏஹய்ஞ்ஹ,
ற்ட்ங் நஹஞ்ஹழ்ஹள் ஸ்ரீழ்ர்ள்ள்ங்க் ற்ட்ங் ள்ங்ஹ ர்ச் ம்ர்ழ்ற்ஹப்ண்ற்ஹ் ஹய்க் ழ்ங்ஹஸ்ரீட்ங்க் ற்ட்ங் ஐங்ஹஸ்ங்ய்ள்.
பட்ங் எர்ன்ழ்-ச்ஹஸ்ரீங்க் ஸ்ரீழ்ங்ஹற்ர்ழ் இழ்ஹட்ம்ஹ ஹல்ல்ங்ஹழ்ங்க் ற்ட்ங்ய் ஹய்க் ள்ஹண்க்,
" 'ஐங்ய்ஸ்ரீங்ச்ர்ழ்ற்ட் ட்ங்ஹஸ்ங்ய்ப்ஹ் ஏஹய்ஞ்ஹ ஜ்ண்ப்ப் க்ஷங் ழ்ங்ய்ர்ஜ்ய்ங்க் ஹள்
'பழ்ண்ல்ப்ங்-ல்ஹற்ட்-ஸ்ரீழ்ன்ண்ள்ங்ழ்'
ஹய்க் 'இட்ஹஹஞ்ங்ங்ழ்ஹற்ட்ண்,' ஹள் ஜ்ங்ப்ப்,
ஹய்க் ஹள் ற்ட்ண்ள் ழ்ண்ஸ்ங்ழ் ண்ள் ள்ஹய்ஸ்ரீற்ண்ச்ஹ்ண்ய்ஞ் ற்ட்ழ்ங்ங் ஜ்ர்ழ்ப்க்ள்,
ய்ஹம்ங்ப்ஹ், ள்ஸ்ஹழ்ஞ்ஹ, க்ஷட்ன்ன், ல்ஹஹற்ஹஹப்ஹ ப்ர்ந்ஹ-ள்,
'ட்ங்ஹஸ்ங்ய், ங்ஹழ்ற்ட் ஹய்க் ய்ங்ற்ட்ங்ழ்ஜ்ர்ழ்ப்க்'
ள்ட்ங் ஜ்ண்ப்ப் க்ஷங் ழ்ங்ம்ங்ம்க்ஷங்ழ்ங்க் ஹள் ற்ட்ங் ற்ழ்ஹஸ்ங்ப்ப்ங்ழ் ர்ய் ற்ழ்ண்ல்ப்ங் ல்ஹற்ட். ள1-44-6ன”
இழ்ஹட்ம்ஹ ற்ர்ப்க் இட்ஹஞ்ங்ங்ழ்ஹற்ட்ஹ ற்ர் ர்ச்ச்ங்ழ் ஜ்ஹற்ங்ழ் ர்க்ஷப்ஹற்ண்ர்ய்ள்
ற்ர் ற்ட்ங் க்ங்ல்ஹழ்ற்ங்க் ஏழ்ங்ஹற் ஞ்ழ்ஹய்க் ல்ஹழ்ங்ய்ற்ள், ற்ட்ங் 60,000 நஹஞ்ஹழ்ஹள்,
க்ஷஹ் ற்ட்ங் ஜ்ஹற்ங்ழ்ள் ர்ச் ற்ட்ங் ஏஹய்ஞ்ஹ.
பட்ங் ச்ண்ழ்ள்ற் பஹழ்ல்ஹசஹம் ஹற் ற்ட்ங் ஏஹய்ஞ்ங்ள்
ஜ்ஹள் ற்ட்ன்ள் க்ர்ய்ங் ஹற் ற்ட்ங் ல்ப்ஹஸ்ரீங் ஜ்ட்ங்ழ்ங் ற்ட்ங் நஹஞ்ஹழ்ஹள் ஜ்ங்ழ்ங் ழ்ங்ய்க்ங்ழ்ங்க் ஹள் ஹள்ட்ங்ள்!
இழ்ஹட்ம்ஹ ஹப்ள்ர் ஹள்ந்ங்க் இட்ஹஞ்ங்ங்ழ்ஹற்ட்ஹ ற்ர் ற்ஹந்ங் ஹ க்ண்ல் ஹற் ற்ட்ங் ஏஹய்ஞ்ஹ ஹற் ற்ட்ஹற் ல்ப்ஹஸ்ரீங்
ள்ர் ற்ட்ஹற் ட்ங் ஜ்ர்ன்ப்க் க்ஷங் ல்ன்ழ்ண்ச்ண்ங்க் ர்ச் ள்ண்ய்ள் ஹய்க் ட்ண்ள் ம்ங்ழ்ண்ற்ள் ஸ்ரீஹய் க்ஷங் ச்ழ்ன்ஸ்ரீற்ண்ச்ண்ங்க்.
இட்ஹஞ்ங்ங்ழ்ஹற்ட்ஹ ஜ்ஹள் ஹள்ந்ங்க் ற்ர் ல்ங்ழ்ச்ர்ழ்ம் ஜ்ஹற்ங்ழ் ர்க்ஷப்ஹற்ண்ர்ய்ள்
ற்ர் ற்ட்ங் ர்ற்ட்ங்ழ் ச்ர்ழ்ங்ச்ஹற்ட்ங்ழ்ள் ஹய்க் ர்ற்ட்ங்ழ் க்ங்ல்ஹழ்ற்ங்க் ள்ர்ன்ப்ள் ற்ர்ர்
க்ஷங்ச்ர்ழ்ங் ஞ்ர்ண்ய்ஞ் க்ஷஹஸ்ரீந் ற்ர் ட்ண்ள் ந்ண்ய்ஞ்க்ர்ம்.
ஆய்க் ஹச்ற்ங்ழ் க்ர்ண்ய்ஞ் ண்ற், ட்ங் ஜ்ங்ய்ற் க்ஷஹஸ்ரீந்.
இன்ற் ற்ட்ங் ஏஹய்ஞ்ஹ ஸ்ரீர்ய்ற்ண்ய்ன்ங்க் ற்ர் ச்ப்ர்ர்க் ற்ட்ங் ங்ஷ்ஸ்ரீஹஸ்ஹற்ங்க் ப்ஹய்க்
நல்ழ்ங்ஹக் ர்ஸ்ங்ழ் ம்ர்ழ்ங் ற்ட்ஹய் 60,000 ள்வ்ன்ஹழ்ங் ஹ்ர்த்ஹய்ஹள்.
எழ்ர்ம் ற்ட்ண்ள் ல்ர்ண்ய்ற் ர்ய் ங்ஹழ்ற்ட்,
ட்ங்ழ் ஞ்ப்ர்ழ்ஹ் ஜ்ங்ய்ற் ற்ர்ஜ்ஹழ்க்ள் ற்ட்ங் ப்ஹய்க், ஜ்ட்ங்ழ்ங் ள்ட்ங் ச்ப்ர்ஜ்ங்க் ச்ழ்ர்ம் ற்ட்ங் ஐண்ம்ஹஸ்ரீட்ஹப்ஹ.
ஆஹ நங்ற்ட்ன் ஐண்ம்ஹஸ்ரீட்ஹப்ஹ -
ற்ட்ண்ள் ங்ஷ்ஹஸ்ரீற்ப்ஹ் க்ங்ல்ண்ஸ்ரீற்ள் ற்ட்ங் ல்ஹற்ட் ர்ச் ஞ்ப்ர்ழ்ஹ் ர்ச் ற்ட்ங் ஏஹய்ஞ்ஹ ச்ழ்ர்ம் நங்ற்ட்ன்
க்ஷஹஸ்ரீந் ற்ர் ட்ங்ழ் ல்ப்ஹஸ்ரீங் ர்ச் க்ஷண்ழ்ற்ட், ற்ட்ங் ஐண்ம்ஹப்ஹஹ்ஹள்!
ஒற் ஜ்ஹள் ர்ய்ப்ஹ் ஹச்ற்ங்ழ் ற்ட்ங் ச்ண்ழ்ள்ற் ற்ஹழ்ல்ஹசஹம் ட்ங்ழ்ங் ஹற் நங்ற்ட்ன்,
ற்ட்ங் ர்ற்ட்ங்ழ் ல்ப்ஹஸ்ரீங்ள் ர்ய் ட்ங்ழ் ஸ்ரீர்ன்ழ்ள்ங் ள்ற்ஹழ்ற்ங்க் ழ்ங்ஸ்ரீங்ண்ஸ்ண்ய்ஞ் ற்ட்ங் ண்ம்ல்ர்ழ்ற்ஹய்ஸ்ரீங் ர்ச் ட்ர்ப்ண்ய்ங்ள்ள்.

பட்ங் வ்ன்ங்ள்ற்ண்ர்ய் ம்ஹஹ் க்ஷங் ஹள்ந்ங்க்,
ஐர்ஜ் ற்ட்ண்ள் ல்ப்ஹஸ்ரீங் ண்ள் ண்க்ங்ய்ற்ண்ச்ண்ங்க் ஹள் நங்ற்ட்ன்?
பட்ங் ச்ர்ழ்ங்ம்ர்ள்ற் த்ன்ள்ற்ண்ச்ண்ஸ்ரீஹற்ண்ர்ய் ண்ள் ற்ட்ஹற் ற்ட்ங் ல்ழ்ங்ள்ங்ய்ற் ள்ங்ஹ ண்ய் ற்ட்ங் ங்ஹள்ற் ர்ச் ஒய்க்ண்ஹ,
ஸ்ரீஹப்ப்ங்க் இஹஹ் ர்ச் இங்ய்ஞ்ஹப் ஜ்ஹள் ற்ட்ங் ர்ய்ங் ங்ஷ்ஸ்ரீஹஸ்ஹற்ங்க் க்ஷஹ் ற்ட்ங் நஹஞ்ஹழ்ஹள்.
ரட்ண்ப்ங் ஹற் ற்ட்ழ்ங்ங் ல்ப்ஹஸ்ரீங்ள் ற்ட்ண்ள் ண்ய்ச்ர்ழ்ம்ஹற்ண்ர்ய் ண்ள் ழ்ங்ஸ்ரீர்ழ்க்ங்க் ண்ய் யஹப்ம்ண்ந்ண் தஹம்ஹஹ்ஹய்ஹ
(ஜ்ழ்ண்ற்ற்ங்ய் ண்ய் ங்ஹழ்ப்ண்ங்ழ் ல்ர்ள்ற்ள் ண்ய் ற்ட்ண்ள் ள்ங்ழ்ண்ங்ள்),
ற்ட்ங் டன்ழ்ஹய்ஹஹய்மழ்ன் ஸ்ங்ழ்ள்ங் ர்ய் டஹய்க்ஹ்ஹய் டஹப் வஹஹஞ்ஹ ள்ட்ஹஹப்ஹண் ஙன்க்ன் ந்ன்க்ன்ம்ண் டங்ழ்ன்ஸ்ஹக்ஷ்ட்ன்ற்ட்ண்,
ஹப்ள்ர் ட்ஹள் ம்ங்ய்ற்ண்ர்ய்ங்க் ண்ற்,
“ ஞ்ன்ய்ஹஹ ஹக்ன் ந்ஹழ்ஹண் ல்ர்ழ்ன் ற்ட்ர்க்ன் ந்ஹக்ஹப் ஞ்ன்சஆந்ந்ன்ம்”
பட்ங் ஜ்ர்ழ்க் “ற்ட்ர்க்ன்” ண்ள் ள்ஹண்க் ற்ர் ள்ண்ஞ்ய்ண்ச்ஹ் ‘பட்ஞசக்ஹல்ல்ஹற்ற்ஹ” (க்ன்ஞ் )
(ள்ஹஞ்ஹழ்ஹழ்ஹஹப் ற்ட்ஞசக்ஹல்ல்ஹற்ற்ஹம்ஹண்ஹ்ண்ய், ‘ற்ட்ர்க்ன் ந்ஹக்ஹப்’ ங்ய்க்ழ்ஹஹழ் -
ற்ட்ண்ள் ங்ஷ்ல்ழ்ங்ள்ள்ண்ர்ய் ண்ள் ஹப்ள்ர் ச்ர்ன்ய்க் ண்ய் யண்ப்ப்ண் இட்ஹழ்ஹற்ட்ஹம் ஜ்ழ்ண்ற்ற்ங்ய் க்ஷஹ் டங்ழ்ன்ய்க்ஊஸ்ஹய்ஹஹழ்)
பட்ண்ள் ந்ஹக்ஹப் ர்ழ் ள்ங்ஹ ஜ்ஹள் ண்ய் ற்ட்ங் ங்ஹள்ற் ர்ச் டஹய்க்ஹ்ஹய் ந்ண்ய்ஞ்க்ர்ம்
ஜ்ட்ங்ழ்ங் ற்ட்ங் ழ்ண்ஸ்ங்ழ்
டஹட்ழ்ன்கண் ஜ்ஹள் ச்ர்ப்ப்ர்ஜ்ண்ய்ஞ்.
பட்ங்ழ்ங்ச்ர்ழ்ங் ற்ட்ண்ள் ள்ங்ஹ க்ழ்ஹண்ய்ங்க் க்ஷஹ் ற்ட்ங் ஏஹய்ஞ்ஹ ஜ்ஹள் ச்ப்ர்ஜ்ண்ய்ஞ்
க்ஷங்ஹ்ர்ய்க் ற்ட்ங் ல்ழ்ங்ள்ங்ய்ற் க்ஹஹ் ள்ர்ன்ற்ட்ங்ழ்ய் ற்ண்ல் ர்ச் ஒய்க்ண்ஹ.
சர்ஜ் ட்ஹஸ்ண்ய்ஞ் ஹள்ஸ்ரீங்ழ்ற்ஹண்ய்ங்க் ற்ட்ஹற் ற்ட்ங் இஹஹ் ர்ச் இங்ய்ஞ்ஹப் ஜ்ஹள்
ண்ய்க்ங்ங்க் ற்ட்ங் ஏஹய்ஞ்ஹ நஹஞ்ஹழ்,
ஜ்ங் ம்ன்ள்ற் ப்ர்ர்ந் ச்ர்ழ் ற்ட்ங் ல்ப்ஹஸ்ரீங் ஜ்ட்ங்ழ்ங் ற்ட்ங் ச்ண்ழ்ள்ற் ற்ஹழ்ல்ஹசஹம் ஜ்ஹள் க்ர்ய்ங்.
பட்ங் ர்ய்ப்ஹ் ல்ப்ஹஸ்ரீங் ண்ய் ற்ட்ங் ங்ஹள்ற் ஸ்ரீர்ஹள்ற் ர்ச் ஒய்க்ண்ஹ
ஜ்ட்ண்ஸ்ரீட் ண்ள் ஸ்ரீர்ய்ள்ண்க்ங்ழ்ங்க் ஹள் ஹ ட்ர்ப்ஹ் ல்ப்ஹஸ்ரீங் ச்ர்ழ் க்ர்ண்ய்ஞ்
ஜ்ஹற்ங்ழ் ர்க்ஷப்ஹற்ண்ர்ய்ள் ற்ர் க்ங்ல்ஹழ்ற்ங்க் ர்ய்ங்ள்
ண்ள் ற்ட்ங் ஆஞ்ய்ண் ற்ட்ங்ங்ழ்ற்ட்ஹம் ஹற் தஹம்ங்ள்ட்ஜ்ஹழ்ஹம்!
பட்ங் ல்ஹற்ட் ற்ஹந்ங்ய் க்ஷஹ் ற்ட்ங் ஏஹய்ஞ்ஹ ச்ழ்ர்ம் ற்ட்ங் ஐண்ம்ஹப்ஹஹ்ஹள்
ற்ர் ற்ட்ண்ள் ல்ப்ஹஸ்ரீங் ற்ழ்ஹஸ்ரீங்ள் ற்ட்ங் ள்ட்ஹல்ங் ர்ச் ஹ உட்ஹய்ன்ள்ட் (க்ஷர்ஜ்)
ஹய்க் ற்ட்ங் ற்ண்ல் ர்ச் ற்ட்ங் க்ஷர்ஜ் ஸ்ரீர்ண்ய்ஸ்ரீண்க்ண்ய்ஞ் ற்ட்ண்ள் ல்ப்ஹஸ்ரீங் ஸ்ரீஹம்ங் ற்ர் க்ஷங் ந்ய்ர்ஜ்ய் ஹள்
உட்ஹய்ன்ள்ட் ந்ர்பண்! (பட்ங் ங்ஷ்ற்ழ்ங்ம்ங் ல்ர்ண்ய்ற் ர்ச் ற்ட்ங் க்ஷர்ஜ்)
பட்ங் ஏஹய்ஞ்ஹ ழ்ஹய் ர்ச்ச்
ஹய்க் ள்ட்ங் ஸ்ரீஹய் க்ஷங் ப்ர்ள்ற் ண்ய்ற்ர் ற்ட்ங் பட்ங்ய் ந்ஹக்ஹப் - ற்ட்ங் ள்ங்ஹ ர்ச் ற்ட்ங் நர்ன்ற்ட்,
ய்ஹம்ங்ப்ஹ் ற்ட்ங் ஒய்க்ண்ஹய் ஞஸ்ரீங்ஹய்.
ஆய்க் ள்ட்ங் ஜ்ஹள் ழ்ன்ய்ய்ண்ய்ஞ் ள்ர் ச்ர்ழ் ஹ்ங்ஹழ்ள்,
ன்ய்ற்ண்ப் ள்ட்ங் ஜ்ஹள் ள்ற்ர்ல்ல்ங்க்
ஹற் ற்ட்ங் ல்ப்ஹஸ்ரீங் ர்ச் ம்ர்ன்ய்க் ர்ச் ஹள்ட்ங்ள்,
க்ஷஹ் ற்ட்ங் க்ங்ள்ஸ்ரீங்ய்க்ஹய்ற் ர்ச் ற்ட்ங் நஹஞ்ஹழ்ஹள்,
ய்ஹம்ங்ப்ஹ், தஹம்ஹ
ஜ்ட்ர் க்ஷன்ண்ப்ற் ஹ க்ஷன்ய்க் (நங்ற்ட்ன்)
- ஹ ஜ்ங்ப்ப்-ல்ஹஸ்ரீந்ங்க் க்ஷன்ய்க் (நங்ற்ட்ன் இட்ஹய்க்ட்ஹய்ஹ)
க்ஷஹ் ஜ்ட்ண்ஸ்ரீட் ட்ங் ய்ர்ற் ர்ய்ப்ஹ் ஸ்ரீழ்ர்ள்ள்ங்க் ற்ட்ங் ள்ங்ஹ,
க்ஷன்ற் ஹப்ள்ர் ச்ஹஸ்ர்ன்ழ்ங்க் ற்ட்ங் ம்ஹய்ந்ண்ய்க் ற்ர் ஸ்ரீர்ம்ங்,
ற்ர் ர்ச்ச்ங்ழ் ற்ட்ங்ண்ழ் ர்க்ஷப்ஹற்ண்ர்ய்ள் ஹற் ற்ட்ங் ஏஹய்ஞ்ஹ ஜ்ஹற்ங்ழ்
ற்ட்ஹற் ஜ்ஹள் ள்ற்ர்ல்ல்ங்க் ற்ட்ங்ழ்ங் க்ஷஹ் ற்ட்ங் நங்ற்ட்ன்!
ஆய்க் ச்ழ்ர்ம் நங்ற்ட்ன் ற்ர் ஐண்ம்ஹப்ஹஹ்ஹள் ட்ங்ழ் ஞ்ப்ர்ழ்ஹ் ஸ்ரீஹய் க்ஷங் ற்ழ்ஹஸ்ரீங்க்!!
ஆய்ஹ் ஹய்ஹப்ஹ்ள்ண்ள் ய்ங்ங்க்ள் ற்ர் க்ஷங் ள்ன்ல்ல்ர்ழ்ற்ங்க் க்ஷஹ் ஸ்ரீழ்ர்ள்ள் ழ்ங்ச்ங்ழ்ங்ய்ஸ்ரீங்ள்.
ரங் ஜ்ண்ப்ப் ஹப்ள்ர் ப்ர்ர்ந் ண்ய்ற்ர் ஸ்ரீழ்ர்ள்ள்-ழ்ங்ச்ங்ழ்ங்ய்ஸ்ரீங்ள்,
ற்ர் ன்ய்ங்வ்ன்ண்ஸ்ர்ஸ்ரீஹப்ப்ஹ் ங்ள்ற்ஹக்ஷப்ண்ள்ட்
ற்ட்ஹற்
ற்ட்ங் நங்ற்ட்ன் ர்ழ் உட்ஹய்ன்ள்ட் ந்ர்பண்
ஹய்க் ஹப்ர்ய்ஞ் ஜ்ண்ற்ட் ண்ற் தஹம்ங்ள்ட்ஜ்ஹழ்ஹம்
ச்ண்ய்க் ஹய் ண்ய்ற்ங்ஞ்ழ்ஹப் ல்ஹழ்ற் ண்ய் ற்ட்ங்
ஜ்ஹஹ் ர்ச் ப்ண்ச்ங் ர்ச் ஹப்ப் ல்ங்ர்ல்ப்ங் ர்ச் ஆழ்ஹ்ஹஸ்ஹழ்ற்ட்ஹ,
ஜ்ட்ண்ஸ்ரீட் ங்ஷ்ற்ங்ய்க்ங்க் ற்ண்ப்ப் ற்ட்ங் டஹய்க்ஹ்ஹய் ந்ண்ய்ஞ்க்ர்ம்
ண்ய் ற்ட்ங் ய்ர்ஜ் ள்ன்க்ஷ-ம்ங்ழ்ஞ்ங்க் ஒய்க்ண்ஹய் ர்ஸ்ரீங்ஹய்!
சூர்யா: சரிங்க தாத்தா.  இதையும் அப்புறம் எனக்கு எடுத்துச் சொல்லுங்க. இவரு தமிழ் இலக்கியத்தைப் பத்தி எல்லாம் ரொம்ப நல்லா சொல்லுவாரு என்னு கேள்விப்பட்டிருக்கேன்.  நீங்கள் அடிக்கடி இவர் கட்டுரைகளைச் சொல்வீர்கள்.
தாத்தா:  வீமனுக்கு நஞ்சு கலந்து உணவைக் கொடுத்து மயக்கமடையச்செய்து கங்கையில் தள்ளிவிட்ட துரியோதனனும் கன்னனும் வீமன் இல்லாமல் வீடு திரும்புகிறார்கள்.  மகன் திரும்பி வராததால் குந்தி மனத்துயரம் அடைகிறாள்.  ஆனால் மனக்கண்ணால் வீடுமன் கண்டு கொள்கிறார்.  பாதாளத்தில் வீமன் சுகமாக இருப்பதையும் பத்து குடம் அமுதம் உண்பதையும் தெரிந்து கொள்கிறார்.  "எனவே ஒன்றும் ஆகாது நீ போம்மா.  அவன் நல்லாத் தான் இருக்கான்'' என்று கூறி அனுப்பி விடுகிறார்.  பின்னர் நாகங்கள் வீமனை கங்கைக் கரையில் கொண்டு வந்து விடுகின்றன.  உற்றாருக்கு மகிழ்ச்சி.  நூற்றுவருக்கு அதிர்ச்சி.  பின்னர் மகிழ்வோடு குந்தி தன் குழந்தைகளுடன் அத்தினாபுரத்தில் வாழ்ந்து வருகிறாள்.  இப்போ கிருபர் மற்றும் துரோணர் கதையைச் சொல்ல வேண்டும்.
சூர்யா: அவங்க யாரு தாத்தா?
தாத்தா: அவங்க தாண்டா ஐவருக்கும் நூற்றுவருக்கும் கல்வி மற்றும் போர்ப்பயிற்சி கொடுக்கிறார்கள்.  ஆனா அவங்க வரலாறு மிக நீண்ட வரலாறு.
சூர்யா: சொல்லுங்க தாத்தா.  தெரிஞ்சுகிட்டா தானே இவங்க எல்லாம் எப்படி வீரர்கள் ஆனாங்க - வாத்தியார் முறையா இருக்கணும் - மாணவனும் படிக்கணும்.  அப்போ தான் கல்வி வரும் என்று தெரியும். 105 பேரில் எல்லோரையும் எல்லா விடயத்திலும் சிறந்தவங்க என்று சொல்ல முடியல்லேயே.  ஒருத்தர் கதையில் எக்ஸ்பர்ட் . ஒருத்தர் வில்-ல் எக்ஸ்பர்ட் இப்படி தனித்தனி ஸ்பெஷ-ஸ்டா இல்லே இருக்காங்க.
தாத்தா: நிபுணன் என்று சொல்லுடா.  வடமொழி வந்தாக் கூட பரவாயில்லை.  அது நமது நாட்டு மொழிகளிலே ஒன்று.  பழமையான மொழி.  ஒத்துக்கொள்ளலாம்.   இந்த ஆங்கிலத்தைத் தவிர்க்கணும்டா.
நிபுணன் என்னு சொல்லு - சிறப்புப் பயிற்சி பெற்றவன் என்று சொல்லு.
சூர்யா: சரிங்க தாத்தா
தாத்தா:  நாம் இன்று கிருபரைப் பற்றியும் துரோணர் பற்றியும் பல தகவல்களை அறியப் போகிறோம்.  ஐவரும் நூற்றுவரும் கலைகள் பல கற்க வேண்டும் என்று வீடுமன் விரும்பினார்.  முத-ல் கிருபரிடம் அவர்கள் பயிற்சி பெற்றார்கள்.  அவர் சந்தனுவுன் கிருபையால் வளர்ந்தவர்.  அதனால் தான் இவர் பெயர் கிருபன்.  இவரது தங்கை பெயர் கிருபி.  இந்தக் கிருபியைத் தான் துரோணர் மணக்கிறார்.  கிருபரைப் பற்றி அறிமுகம் செய்யும் வில்-புத்தூரார்,
" கோதமன் மகன் மகன், குனி வில் ஆதியாம்
மேதகு படைக்கலம் யாவும் வீறொடு அம்
மா தவன்வயின் பயில் வரதன், வன் திறல்
கேதம் இல் சிந்தையான், கிருபன் என்று உளான்.''
என்று நமக்கு அறிமுகம் செய்கிறார்.
சூர்யா:  தாத்தா இந்த கிருபருக்கு ஒரு கதை இருக்கணுமே.  சொல்லுங்க தாத்தா.  இவர் வம்சம் பற்றி சொல்லுங்க.  நேத்து வம்சம் என்னு ஒரு திரைப்படம் பார்த்தேன்.  அதில் வம்சத்திற்காக என்னவெல்லாம் செய்யுறாங்க என்னு காட்டினாங்க தாத்தா.  ஒத்த ஆளா இருந்தாலும் வம்ச வளர்ச்சிக்கு அவன் செய்யும் செயல்களைத் திரைப்படமா ஆக்கியிருந்தாங்க.  நல்லா இருந்துச்சி தாத்தா.
தாத்தா: முன்னொரு காலத்தில் கௌதமர் என்று ஒரு முனிவர் இருந்தார்.  அவரைத் தான் நான் சொன்ன பாட்டிலே கோதமன் என்று வில்-புத்தூரார் சொல்ரார்.  இவரது மகன் பெயர் சரத்வாந்.  இவன் பிறந்த போதே சரம் என்று சொல்லப்படும் அம்புகளுடன் பிறந்தானாம்.  அதனால் இவனுக்கு இந்தக் காரணப் பெயர்.  அவங்க அப்பா முனிவர்.  அதனால் வேதம் ஓதினான்.  அம்போடு பிறந்ததால் வில்வித்தையில் நன்றாகத் தேர்ச்சி பெற்றான்.  பார்த்தான் இந்திரன்.  யாராவது போட்டியாளர் வந்தால் பிடிக்காது இந்த இந்திரனுக்கு.  உடனே சானபதீ என்னும் ஒரு பெண்ணை அனுப்பி தான் நினைத்தது போல் நடனமாட விட்டு சரத்பானின் வித்தையைத் திசை திருப்பினான்.  அவன் சானபதீயை விரும்பியதால் இரண்டு குழந்தைகள் உண்டாகி விட்டன.  அந்தக் குழந்தைகளை கங்கைக் கரை நாணற்காட்டில் விட்டுவிட்டுப் போய்விட்டான்.  அப்போது வேட்டைக்கு வந்த சந்தனு மகராசன் இவர்களைக் கண்டு கிருபையோடு எடுத்து வந்தது வளர்த்தார்.  அதனால் அந்தக் குழந்தைகளுக்கு கிருபன் என்றும் கிருபி என்றும் பெயர் வந்தது. ஒரு காரணப் பெயர்.  குழந்தைகளை போட்டுவிட்டு ஓடிப்போன சரத்வான் பின்னர் திரும்பி வந்தான்.  தான் கற்ற வில்வித்தை முழுவதையும் தன் மகனான கிருபனுக்குக் கற்றுக் கொடுத்தான்.   கௌதமரின் முன்னோர் துவக்கத்தில் அரச பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்று சொல்கிறார்கள்.  அதனால் போர்க்குணத்தோடு கூடிய அந்தணராக விளங்கினார் கிருபர்.  அப்படி இருக்கும் போது வீடுமனுக்கு கிருபனை விட தேர்ந்த ஒரு ஆசிரியரைத் தேடினார்.  துரோணரைப் பற்றி அவருக்குத் தெரியும்.  கிருபரும் கோபித்துக் கொள்ள மாட்டார்.  காரணம் கிருபி துரோணரின் மனைவி.  எனவே ஆள் அனுப்பி தன் விருப்பத்தைத் தெரிவித்தார். அவரும் வந்து கற்றுத்தர சம்மதம் தெரிவித்தார்.
சூர்யா: துரோணருக்கு ஒரு வரலாறு இருக்குமே? சொல்லுங்க.
தாத்தா: ஆமாம்டா.  நான் கடந்த ஆண்டு டேராடூன் போயிருந்தேன்.  அங்கே ஊர் சுற்றிப் பார்த்து விட்டு இரண்டு நாள் தங்கினேன்.  பல ஆப்பிள் தோட்டங்களுக்குச் சென்றுவிட்டு ஒரு சிவன் கோவிலுக்குச் சென்றேன்.  அங்கே தான் துரோணர் தங்கி இருந்து தவம் செய்தார் என்றும் அந்த நகரமே துரோணர் பெயரால் தான் உள்ளது என்றும் கூறினார்கள்.  அந்த கோவில் அருகில் ஒரு சிற்றாறு ஓடுகிறது.  அங்கே தான் துரோணர் இருந்தாராம்.  அங்கே தங்கி இருந்ததால் டஹர்னா என்று இந்தியில் கூறினால் தங்குதல் என்று பொருள்.  துரோணர் டஹரிய இடம்.  அதைத் தான் பின்னால் டேரா போட்டான் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.  டேரா போடுதல் என்றால் தங்கி இருத்தல் என்று பொருள்.  டேராதுரோண் என்று அழைக்கத் துவங்கினார்களாம்.  ஆங்கிலேயன் வந்து இந்த ஊரில் படைப்பயிற்சி வழங்கும் கல்வி நிலையத்தைத் துவக்கினானாம்.  அவன் வாயில் டேராடூன் என்று வந்து விட்டது.  அது தான் இன்று வரை நிலைக்கிறது.  இன்றளவும் இங்கே கல்விக்கூடம் உள்ளது. 
சூர்யா: கதைக்கு வாங்க தாத்தா.
தாத்தா: துரோணரை அறிமுகம் செய்யும் பாடல் மிக அழகான பாடல்.
"பரத நாத வேத பரத்துவாசன் என்பான்,
விரத வேள்விதன்னில், மேனகையால் ஆன
சுரத தாது வீழ்ந்த துரோணகும்பம்தன்னில்,
வரதன் ஒருவன் வந்தான், வசிட்ட முனியை ஒப்பான்.''
அங்கிரசு என்னும் முனிவனது குலத்தில் பரத்துவாசர் என்று ஒரு முனிவர் தோன்றினார்.  கங்கைக் கரையில் அவர் குடில் அமைத்து யாகம் செய்து கொண்டிருந்தார்.  இன்றைக்குக் கூட நாம் அலகாபாத் சென்று நேரு இல்லத்தைப் பார்க்கப் போனால் அருகிலேயே ஒரு சிறிய கோவிலைக் காட்டி இங்கே தான் பரத்துவாசர் தங்கினார் என்று சொல்லுவார்கள். வழக்கம் போல தேவலோகத்தில் இருந்து ஒரு பெண் வந்தாள். மயங்கினார்.  உடனே துரோணகலசத்தில் இருந்து ஒரு குழந்தை பிறந்தான்.  எனவே அவனுக்கு துரோணர் என்று பரத்துவாசர் பெயரிட்டார்.  காரணப் பெயர்.  அந்த தேவமங்கையின் பெயர் கிருதாசி.  பரத்வாசன் என்றால் குடிமக்களைக் காப்பவன் என்று பொருள்.  இப்படியாப்பட்ட துரோணர் அத்தினாபுரம் வருகிறார்.  மந்தாகினியாள் மைந்தன் அதுதான் கங்கையின் மைந்தன் வீடுமன் அவரை வரவேற்கிறார்.  வில்-புத்தூரார் வீடுமனைப் பல பெயர்களைக் கூறி அழைப்பார்.  அப்படிப்பட்ட பெயரில் ஒன்று மந்தாகினி மைந்தன்.  மந்தாகினி என்பது கங்கையின் ஒரு பெயர்.  அரித்துவாரத்தில் இருந்து கங்கை உற்பத்தி ஆகும் இடமான கங்கோத்ரி வரை செல்லும் பொழுது பல வண்ணங்களில் பல நதிகளில் சங்கமம் ஆகும்.  சங்கமம் ஆகும் இடங்களை எல்லாம் வடநாட்டுக்காரர்கள் பிரயாகை என்று அழைப்பார்கள்.  அப்படி மந்தாகினி சங்கமிக்கும் இடத்திற்கும் நான் கடந்த ஆண்டு சென்று வந்தேன். மிக அழகாக இருக்கும்.
சூர்யா: தாத்தா கதைக்கு வாங்க.
தாத்தா: துரோணர் வந்தவுடன் துரபதனுக்கும் தனக்கும் உள்ள பகையை எடுத்துச் சொல்லுகிறார். "தீமைதானே ஒருவடிவமெடுத்தாற் போன்ற, யாகசேனன் என்பான்  போதம் இல்லான் - அறிவில்லாதவன், என்பால் - என்னிடத்தில்,பூட்டும் நண்பு பூண்டான் - தொடர்பையுண்டாக்கும் நட்பைப்பொருந்தினான்''
யாகசேனன் என்பது பாஞ்சால தேசத்து அரசன் பெயர்.  சோமகனது மகனான பிருடதன் என்பவன் மகன்.  பரத்துவாசரும் பிருடதனும் நண்பர்கள். எனவே தான் துரோணரும் யாகசேனனும் நட்பு பூண்டு இருந்தனர்.  நெருங்கிய நண்பர்கள்.  வேடிக்கையாக ஒரு நாள் "நான் அரசன் ஆனால் உனக்கு பாதி அரசைத் தருவேன்'' என்று துரோணரிடம் கூறினான்."யானே இறைவன்ஆனால், உன்னை ஆள வைப்பேன், உலகில் பாதி'' இறைவன் என்றால் இப்போது கடவுள் என்று சொல்கிறோம். நம்மை ஆள்பவனும் இறைவன் தான்.  அரசனை இறைவன் என்றும் சொல்வார்கள். இறை என்றால் சிறிது என்றும் பொருள் உள்ளது.  சொன்னான். சென்றான். மறந்தான்.  ஆனால் துரோணர் 
ஞாபகத்தில் வைத்திருந்தார் இந்த வாய்மை எனப்படும் உறுதிமொழியை.  துரோணர் கிருபையை மணந்தார்.  மகவு பிறந்தான்.  காளகண்டன் அருளால் வந்த மகவும் வளர்ந்தது.  மகவு வளர்ந்தது போல வறுமையும் வளர்ந்தது. "மாவின்பாலேயன்றி மரபுக்குரியமைந்தன் ஆவின்பால்கண்டறியா'' குழந்தையாக இருந்தான்.
சூர்யா: அது என்ன தாத்தா மாவின் பால் ஆவின் பால்.  எனக்கு ஆவின் பால் என்றால் காலையில் போய் பூத்தில் வாங்கும் ஆவின் நிறுவன பால் தான் தெரியும்.
தாத்தா: ஆ என்றால் பசு.  ஆவின் பால் என்றால் பசும்பால்.  மாவின் பால் என்றால் மாவைக் கரைத்துக் காய்ச்சிப் பால் போலச் செய்த உணவு.  ஒருவகைக் கஞ்சி என்று வைத்துக் கொள்ளேன்.  இப்போ கூட அமுல் மாவு கரைத்து குழந்தைகளுக்கு கொடுப்பதில்லையா அந்த மாதிரி.  கதைக்கு வருவோம்.  கிருபி துரோணரிடம் "உங்க நண்பர் அரசாக உள்ளாரே அவரிடம் போய் ஒரு மாடு வாங்கி வர வேண்டியது தானே'' என்று கேட்கிறாள்.  சரி முயற்சிப்போமே என்று துரோணரும் போகிறார்.  அரசன் ஆனவுடன் யாகசேனன் எல்லாவற்றையும் மறந்துவிட்டான்.  துரோணர் யார் என்று தெரியாத மாதிரி பேசினான். எல்லோரும் கண்ணன் மாதிரி குசேலர் மாதிரி இருக்க முடியுமா என்ன?'மன்னன் யான்; நீ முனிவன்; மரபால் எனக்கும் உனக்கும் என்ன நண்பு உண்டு?' என்று கேட்டான். நொந்து நூலாப் போயிட்டாரு துரோணர்."சொன்ன வாய்மை நீயே சோர்ந்தா யானோ சோரேன்.'' என்றார்.  "வார்த்தை தவறிவிட்டாய் யாகசேனா நான் தவற மாட்டேன்.  உன்னிடம் பாதி அரசை வாங்கியே தீருவேன்'' என்று சபதம் செய்தார்.'புகன்றபடி நீ ஆளும் புவியும் பாதி கொள்வேன்; இகன்ற சமரில் உன்னை இரதத்துடனே கவர்வேன்; அகன்ற மெய்ம்மை உடையாய்! அறிதி' என்றார்.  சபதத்துடன் வந்தவர் தான்.  அந்த நேரம் பார்த்து வீடுமன் சொல்- அனுப்பினார்.  வந்தவுடன் தன் மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் வீடுமனிடம்.  வீடுமனும் "நீங்கள் அரசகுமாரர்களுக்கு வித்தையைச் சொல்-க் கொடுங்கள். அப்படியே உன் வஞ்சினமும் முடித்துக் கொள்''.  பொருள் பொதிந்த வார்த்தை இது.  அப்போது துரோணருக்குப் புரியவில்லை.  வீடுமன் ஞானக் கண் படைத்தவராயிற்றே.  பின்னால் நடக்கப் போவதை முன்கூட்டியே அறிவார் அவர். படைப்பயிற்சி நன்றாகப் பெற்றனர் அனைவரும்.  ஆனால் விசயன் மிக அருமையாக வில்வித்தையைக் கற்றான்.  வியந்தார் துரோணர் 'வெஞ் சிலையினால் இவன் இராகவனை ஒக்கும்'     என்றார்.  மற்றவர்களுக்கு பொறாமை.  என்னடா அர்ச்சுனனுக்கு மட்டும் தனிப் புகழ்ச்சி.  அதற்கெல்லாம் காரணம் இருந்தது. இப்போதான் ஏகலைவன் வருகிறான்.  அவன் இரண்யதனுசு என்னும் ஒரு வேடுவத் தலைவனின் மகன்.  ஆசையோடு வருகிறான் வில்வித்தை கற்க.  துரோணருக்கோ அர்ச்சுனன் போல யாரும் வரக்கூடாது என்று எண்ணம்.  எனவே அவனுக்குக் கற்றுத் தர மறுத்து அருளாசி மட்டும் வழங்கி திருப்பி அனுப்பி விடுகிறார்.  ஆனால் அவன் துரோணர் போல ஒரு மண்சிலையை நிறுவி அதற்கு மதிப்பு கொடுத்து - தினமும் பூசை செய்து வில்வித்தையை அந்த சிலைமுன் கற்கிறான்.  ஒப்பற்ற வீரனாக உருவாகிவிடுகிறான். ஆனால் துரோணர் அடிக்கடி அர்ச்சுனனிடம் "உன்னினும் மேம்பட்ட மாணாக்கர் எனக்கு எவரும் இல்லை'' என்று சொல்-க் கொண்டே இருக்கிறார்.  இப்படி இருக்கையில் ஒரு நாள் ஐவர் வேட்டைக்குச் செல்கிறார்கள்.  அப்போது உடன் ஒரு வேட்டைநாயை அழைத்துச் செல்கிறார்கள்.  கானகத்தில் ஒரு வீரன் இந்த வேட்டைநாய் குரைக்க முடியாதபடி ஏழு அம்புகளைப் பிரயோகித்து வாயைக் கட்டி விடுகிறான்.  "உனக்கு யார் ஆசிரியார்''  அர்ச்சுனன் கேட்சிறான்.   ஏகலைவனோ துரோணர் தான் ஆசிரியர் என்று சொல்கிறான். இதைக் கேட்ட அர்ச்சுனனுக்கு நாணமும் கோபமும் வந்தது.  அடிக்கடி இப்படி அர்ச்சுனனுக்குக் கோபம் வரும். தன்னை விட வித்தையில் யாராவது அனுபவம் பெற்று இருந்தால் உடனே கோபம் வரும்.  நாணுவான். திரும்பி வந்த அர்ச்சுனன் தனியாக இருக்கையில் இந்த நிகழ்ச்சியை தன் ஆசிரியரான துரோணரிடம் கூறுகிறான்.  உடனே துரோணர்
ஏகலைவனை வரவழைத்து குருதட்சணை கேட்கிறார்.  "நீங்கள் எது கேட்டாலும் தருகிறேன்'' என்கிறான்.  வலதுகை கட்டைவிரலைக் காணிக்கையாகக் கேட்கிறார்.  ஏனென்றால் அதன்பிறகு அவனால் திறமையாக அம்பு எய்ய முடியாது.  அர்ச்சுனனுக்கு நிகராக அல்லது மேலாக விளங்க முடியாது என்பது தான் காரணம். கோடுதல் என்னும் ஒருபக்கம் சாய்தல் தவறான கொள்கை.  துரோணரிடம் அது இருந்தது.  அதனால் தான் அவர் துயரங்களைப் பின்னாளில் சந்திக்க நேரிடுகிறது. இதற்கு அடுத்து வருகிறது அரங்கேற்றம்.  நாமெல்லாம் பரத நாட்டியம் ஆடுபவர்கள் அரங்கேற்றம் செய்வதைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.  ஐவரும் நூற்றுவரும் வித்தைகளைக் கற்றபின் தாங்கள் கற்றதை எல்லோர் முன்னிலையிலும் காண்பிக்க வருகிறார்கள்.  மேடை அமைக்கப்பட்டு விட்டது.  ஒவ்வொருவராக வருகிறார்கள்.  தாங்கள் கற்றதை அரங்கேற்றுகிறார்கள்.  துரியோதனும் வீமனும் கதைப் போர் நடத்த வருகிறார்கள்.  இருவருக்குமே காலம் காலமாக உட்பகை உள்ளதே.  அவர்கள் அரங்கேற்ற மேடையிலேயே கடுமையாக மோதிக் கொள்கிறார்கள்.  விடயம் விபரீதமாகப் போவதைக் கண்ட துரோணரின் மகன் அசுவத்தாமன்.  இவன் ஏழு சிரஞ்சீவிகளில் ஒருவன்.  இவன் வந்து போரை விலக்குகிறான்.  விசயன் வந்து தன் வில்வித்தையைக் காண்பிக்கிறான்.  அனைவரும் அதிசயிக்கிறார்கள்.  அருமையான வில்லாளியாக உள்ளானே என்று வியக்கிறார்கள்.  இப்போது தான் அரங்கத்தில் கன்னனின் அட்டகாசமான அறிமுகம் வருகிறது.  அவன் எழுந்து நின்று "இதெல்லாம் ஒன்றும் பிரமாதமான வித்தை அல்ல.  அனுமதி தந்தால் நானும் இதைச் செய்து காட்ட முடியும்'' என்று கூறுகிறான்.  அசட்டுத் தைரியத்தில் அனுமதி வழங்கப்படுகிறது.  விசயனை விட வில்வித்தையில் பல அதிசயங்களை நிகழ்த்துகிறான் கன்னன்.  உடனே விசயனுக்கு நாணமும் கோபமும் வருகிறது. வில்-புத்தூரார் அதிசயிக்கிறார் பாருங்கள்
"இந்திரன் குமாரன் முன் யாது யாது இயற்றினான்,  அந்த அந்த நிலையும் ஏவும் அவனின் விஞ்சல் ஆயினான்.''  அதோடு நின்றிருந்தால் ஒன்றுமில்லை.  ஆனால் விசயன் கோபப்பட்டு வார்த்தைகளை விட்டதும் கன்னன் விசயனைப் போருக்கு அழைக்கிறான்.  கன்னன் துரியோதனின் தோழன் ஆயிற்றே.  துரியோதனனுக்கு தலைகால் புரியவில்லை.  மேடைக்கு வந்து கன்னனைக் கட்டித் தழுவுகிறான்.  இப்போது நிலைமை விபரீதமாகிறது.   விசயன் வெகுண்டு பேச கன்னனும் துரியோதன் கொடுத்த தைரியத்தில் வெகுண்டு பேசுகிறான்.  உடனே ஆசிரியர் கிருபன் எழுந்து, 'சூதன் மகனான கன்னன் வெகுண்டு உரைத்தது தக்கது அன்று' என்று நீதியைச் சொல்கிறார்.  அது அவருக்கே உரித்தான நீதி.  துரியோதனன் எழுந்து மறுப்பு தெரிவித்து போட்டி என்று வந்தால் சாதிபேதம் பார்க்கக் கூடாது என்கிறான். வில்-பாரதத்தில் உள்ளதை அப்படியே நாம் படித்தால் இந்த இடம் மிக அற்புதமாக இருக்கும். பெரியார் இன்று சொல்லுகிறார் என்று நாம் நினைக்கிறோம்.  காலம் காலமாக வாதப்பிரதிவாதங்கள் இருந்திருக்கத் தான் செய்துள்ளன.
'சூதன் மைந்தன் - தேர்ப்பாகனது மகன், வேலை ஏழு சூழும்
மேதினிக்கு எலாம் நாதன் மைந்தனுடன் - ஏழுகடல்கள் சூழ்ந்த பூமி
முழுதுக்கும் அரசனது குமாரனோடு, வெகுண்டு நவிலுதற்கு நண்ணும் ஓ -
கோபித்து வீரவாதம் பேசுதற்குத் தகுமோ?
துரியோதனன் யார்யாரிடம் சாதிபேதம் பார்க்கக் கூடாது என்று விளக்குகிறான்.  விளக்குவதோடு நின்றிருந்தால் ஒன்றும் இல்லை.  தகுதிப்பாடு தான் இங்கு பிரச்சினை என்றால் நான் இப்பொழுதே கன்னனை அங்கநாட்டு அதிபதி ஆக்குகிறேன் என்று கூறி மணிமுடி கொடுத்து தனக்குச் சமானமாக ஆசனமும் தருகிறான்.  கன்னன் கடைசி வரையில் இவனுக்கு நண்பனாக இருந்ததில் தவறே இல்லை. சரி துரியோதனன் கூறிய மொழிகளுக்கு வருவோம்.  ஏனென்றால் இந்த ஏற்றத்தாழ்வுகள் இன்றுவரை மறையவில்லை. தொடரும் கதையாகத் தான் உள்ளது.
கற்றவர்க்கு நலனிறைந்த கன்னியர்க்கும் வண்மைகை உற்றவர்க்கும் வீரரென்றுயர்ந்தவர்க்கும் வாழ்வுடைக் கொற்றவர்க்கு முண்மையான கோதின்ஞானசரிதராம் நற்றவர்க்குமொன்றுசாதி நன்மைதீமையில்லையால்.
(கற்றவர்க்குஉம் - படித்தவர்களுக்கும், நலன் நிறைந்த
கன்னியர்க்குஉம்- அழகுநிறைந்த கன்னிகைகளுக்கும், வண்மைகை உற்றவர்க்குஉம்
-ஈகைக்குணம் கைவந்தவர்களுக்கும், வீரர் என்று உயர்ந்தவர்க்குஉம் -
வீரர்களென்று சிறப்பாக மதிக்கப்பட்டவர்களுக்கும், வாழ்வு உடைகொற்றவர்க்கும்உம்
- செல்வவாழ்க்கையையுடைய அரசாட்சி பூண்டவர்களுக்கும், உண்மை ஆனகோது
இல் ஞானசரிதர் ஆம் நல் தவர்க்குஉம் - உண்மையானகுற்றமற்ற தத்துவ
ஞானத்தையும் (அதற்குஏற்ற) ஒழுக்கத்தையும் உடையவர்களாகிய நல்ல
தவஞ்செய்யும் முனிவர்களுக்கும், ஒன்று சாதி - சாதி ஒன்றே;  நன்மை தீமை
இல்லை - (அதில்) உயர்வு தாழ்வு என்னும் பகுப்பு இல்லை
எந்தச் சாதியில் பிறந்தாலும் கற்றவர் மேன்மை அடைவர்.  கல்லாதவர் கீழ்மையுறுவர் என்பது இதன் கருத்து.  பிறப்பின் காரணமாக இழிவை எந்தக் காலத்திலும் சொல்லக் கூடாது என்பதற்கு இன்னொரு பாட்டு.
"அரிபிறந்ததன்றுதூணி லரனும்வேயிலாயினான்
பரவையுண்டமுனியுமிப் பரத்துவாசன்மைந்தனும் ஒருவயின்கண்முன்பிறந்த தொண்சரத்தினல்லவோ
அரியவென்றிமுருகவேளு மடிகளும்பிறந்ததே.''
    
திருமால் நரசிம்மனாகத் தோன்றியது ஒரு தூணில்.  சிவபெருமான் மூங்கி-ல் தோன்றியதாக ஒரு வரலாறு.  கடலை வற்றச் செய்து உண்ட தமிழ் முனிவன் பிறந்ததும் பரத்துவாசன் மைந்தன் துரோணன் பிறந்ததும் ஒரு குடத்தில்.  முருகப் பெருமானும் கிருபனும் பிறந்தது நாணல் காட்டில்.  பிறந்த இடத்தை வைத்து இவர்களைக் குறைவாக எண்ணக் கூடாது என்கிறது இந்தப் பாடல்.
சூர்யா: சிவபெருமான் மூங்கி-ல் தோன்றிய கதை - அகத்தியில் கும்பத்தில் வந்த கதை கூறுங்கள் தாத்தா.
தாத்தா: சுருக்கமா சொல்றேன்.  வேதங்கள் எல்லாம் முன்னொரு காலத்தில் ஊழிக்காலத்தில் தமக்கும் அழிவு வரும் என்று அஞ்சி தவம் புரிந்து சிவனிடம் "பிரளய காலத்தில் தாங்கள் தாமிரசபையில் நின்று செய்யும் திருநடனத்தை நாங்கள் கண்டு களிக்க வேண்டும்.  ஊழிக்காலத்திலும் நாங்கள் அழிவில்லாமல் நெல்லையில் மூங்கிலாய் இருக்க வேண்டும். அதிலே தாங்கள் முத்தாய்த் தோன்றி எங்களுக்குக் குழந்தையாக வரவேண்டும்'' என்று கோரினார்கள். அதற்கு இணங்கி சிவபெருமான் நெல்லையில் மூங்கில் காட்டில் முத்தாகி எழுந்தருளிகிறான்.  இதனால் சிவபெருமானுக்கு வேணுவனநாதன் என்று வடமொழிக்காரர்கள் கூறுவார்கள்.  இதேபோல ஊர்வசியைக் கண்டு கிறங்கிய வருணனும் மித்திரனும் ஏககாலத்தில் காதல் கொள்ள இருவரது விருப்பத்தால் அருகிலுள்ள குடத்தில் பிறந்தவர் தான் அகத்தியர்.  அதனால் தான் அவரை வடமொழியில் கும்பசம்பவர்.  சம்பவம் கும்பத்தில் நடந்து உள்ளது.  இப்படியாக கன்னனுக்காக துரியோதனன் வக்காலத்து வாங்குவதோடு இன்றைய கதையை முடித்துக் கொள்வோம்.  நாளைத் தொடரலாம்.  சரியா?
==================================================================================================================
தாத்தா: நேற்று அரங்கேற்றம் பற்றி கேட்டோம்.  கடைசியில் கன்னனுக்காக துரியோதனன் தலையிட்டு அவனை அரசனாக்கியது பற்றி கேட்டோம்.  இன்று துரோணர் தன் பகைவனான யாகசேனனை வென்று அவனைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அதுவே தனக்கு அளிக்கப்படும் குருதக்கிணையாக அமையும் என்று தன் மாணாக்கர்களிடம் கூறினான்.  எமக்கு அளிக்க நின்ற தக்கிணை;
எம் இனான் ஒருத்தன், வேறு, யாகசேனன் என்று உளான்;
நும்மின் நாடி, அவனை இம்பர் நோதல் செய்து, கொணர்மினே.'
துரியோதனன் "இது என்ன பெரிய விடயமா? நான் போய் துருபதனை தேரில் கட்டி இழுத்து வருகிறேன்' என்று தன் தம்பிமார்களுடன் உடனே புறப்பட்டான்.  தருமனும் தன் தம்பிகளுடன் சூளுரைத்து குருகாணிக்கையைத் தர தன் முயற்சியை மேற்கொண்டான்.  இப்படியாக இரண்டு குழுக்களாகப் பாஞ்சால நாடு நோக்கிக்  கிளம்பினர். பாஞ்சாலத்தை முற்றுகையிட்டனர்.  நூற்றுவர் பாஞ்சால நாட்டுப் படைகளுடன் போரிட முடியாமல் நாடு திரும்பினர்.  ஆனால் விசயன் போரிட்டு அவர்களை வென்று தேரில் கட்டி, தன் குருவின் முன்னர் கொண்டு வந்து சேர்த்தான்."நூறு கொண்ட குமரர் தங்கள் நகரி மீள நோக்கினார்; மாறு கொண்டு விசயன் வீசு வண்ண வாளி வலையினால், வீறு கொண்டு எதிர்ந்த மன் விலங்கர் ஈடுபட்டதே. 'என்பார் வில்-பாரதத்தார்.  யாகசேனனைப் பார்த்து துரோணர் எள்ளி உரையாடினார்.  ஆனால் ஏற்கனவே ஒத்துக் கொண்டபடி உயிர் வாழ்வும் பாதி அரசும் கொடுத்து திருப்பி அனுப்பினார்.  யாகசேனன் என்னும் துருபதன் வெட்கி - தலைகுனிந்து ஊர் திரும்பினான்.  முனிவர்களுடன் ஆலோசித்தான்.  துரோணரைக் கொல்ல ஒரு மகனையும் விசயனை மணக்க ஒரு மகளையும் யாகம் செய்து பெற தன் விருப்பத்தைத் தெரிவித்தான்.  அப்போது யாசன்-உபயாசன் என இரு உடன்பிறப்புகள் இப்படிப்பட்ட சடங்குகளைச் செய்வதில் வல்லவர்களாக இருந்தார்கள்.  அவர்களை அழைத்து வர ஆளை அனுப்பினான்.  சடங்கு என்பது ஷடங்கு என்ற வடமொழிச் சொல்-ன் விகாரம்.  இந்த சடங்கில் முத-ல் திட்டத்துய்மன் என்ற வீரவா-பன் வந்தான்.  அடுத்து வேள்வித்தீயில் மிக அழகிய பெண் வந்தாள்.  ஒரு வானொ- வந்தது.  "மண்மேல் ஒருத்தி அரக்கர் குலம் மாளப் பிறந்தாள்;   வாமன் நுதல் கண்மேல், இன்றும் இவள் பிறந்தாள், கழல் காவலர்தம் குலம் முடிப்பான்'.  இந்த இரு மகவுகளைப் பெற்றதும் மன்னன் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான்.  சரி மகனுக்கு நல்ல ஆசிரியரிடம் பயிற்சி தரவேண்டும்.  தந்தை துருபதன் தனது மகன் துரோணரிடம் பயிற்சி பெற வேண்டும் என்று விரும்பினார்.  திட்டத்துய்மன் நேரில் துரோணரைப் பணிந்து பயிற்சி வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டான். இவன் தான் தன்னைக் கொல்லப் பிறந்தவன் என்று துரோணருக்குத் தெரியும்.  மறுத்திருக்கலாம்.  ஆனால் அவ்வாறு செய்யவில்லை.  இசைந்தார்.  இந்த இடத்தில் வில்-புத்தூரார் அருமையாகச் சொல்வார்: "மரணம், இவனால் தனக்கு' என்பது உணர்ந்தும், குருவும் மறாது, அளித்தான்;- அரணியிடத்தில் செறிந்து அன்றோ அதனைச் செகுப்பது அழல்'' . அரணிக்கட்டையில் இருந்து - (சிக்கிமுக்கிக் கல்)
உற்பத்தி ஆகும் தீ அந்த கட்டையையே எரிக்கும்.  அதுபோல இவன் கற்கும் வித்தை தன்னை மாய்க்கும் என்று தெரிந்தும் வித்தையைக் கற்றுக் கொடுத்தார் அந்த ஆசிரியர்.  காலம் சுழன்றது.  திருதராட்டிரன் - விதுரன் - வீடுமன் ஆகியோரும் சுற்றத்தாரும் தருமன் மீது அளவற்ற பாசத்தைக் கொட்டினார்கள்.  இறுதியில் வீடுமன் தருமனுக்கு இளவரசு முடி சூடினான்.  கொதித்தான் துரியோதனன்.  தன் தந்தையிடம் தன் மனக்குமுறலை தனி இடத்தில் கொட்டினான்.  அவர்களுடன் சேர்ந்து இருக்கமுடியாது என்று திட்டவட்டமாக எடுத்துக் கூறினான்.  இந்தச் செய்தி குந்தி, விதுரன், வீடுமன் ஆகியோருக்கு எட்டியது. அவர்கள் இச்செய்கையினால் மனம் வருந்தினார்கள்.  ஆனால் புரோசனன் என்னும் அமைச்சன் திருதராட்டிரனிடம் பாண்டவர்களை வாரணாவத நகரத்திற்கு அனுப்பி வைக்கும்படியும் அங்கே அவர்களைக் கொன்று விடுவதாகவும் உத்தரவாதம் கொடுத்தான். வாரணாவத நகரம் என்பது காசி மாநகரம்.  அந்த அரசு அத்தினாபுரியின் கீழ் அப்போது இருந்தது.  ஆம் அந்த அரசரின் மூன்று பெண்களில் இருவர் இந்த வீட்டின் மருமகள்கள் ஆயிற்றே.
"ஆர ணாதிப ராரும் புகழ்வது நார ணாதியர் நண்ணுஞ் சிறப்பது தோர ணாதி துலங்குபொற் கோபுர வார ணாவத மாநக ரங்கணே.''
வேதங்களுக்குத் தலைவர்களான அந்தணர்கள் அதிகம் உள்ளதும் உலகத்தாரால் புகழப்படுவதும் திருமால் முத-ய தேவர்கள் வாழும் நகர் காசி மாநகரம். அமைச்சர் புரோசனன் கண்டவர் மயங்கும் வண்ணம் ஒரு மாளிகையைப் படைத்தான் ஐவர் தங்க. மீண்டும் கண்ணன் வந்தான்.  ஐவர் எப்படி அரசு அமைத்து ஆளவேண்டும் என்று திட்டமிட்டுப் பேசினான்.  ஐவரும் தாய் குந்தியுடன் காசி சென்றனர்.  சிவதரிசனம் செய்தனர்.  தங்களுக்காக அமைக்கப்பட்ட மாளிகையில் தங்கினர்.  துவக்கத்தி-ருந்தே அவர்களுக்கு அமைச்சன் புரோசனன் மீது ஒரு சந்தேகக் கண்.  அரக்கினால் - மெழுகினால் மாளிகை அமைக்கப்பட்டதற்கு ஏதோ காரணம் இருக்க வேண்டும்.  நம்மைக் கொல்ல சதி நடக்கிறது.  விழிப்புடன் செயல்பட வேண்டும் என முடிவு செய்தனர்.  வீமன் சிற்பி ஒருவனைப் பிடித்து மாளிகை அமைப்பினை ஆய்ந்து ஆபத்து காலத்தில் தப்பிக்க ஒரு தனிவழி அமைக்க ஆணையிட்டான்.  அது மந்தனமாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான்.  பாதை தயார்.  அதுவரை பாண்டவர்கள்  பக-ல் வேட்டையாடுவார்கள். இரவில் முழிப்பார்கள்.  உறங்கினால் ஒழித்து விடுவார்கள் என்று அஞ்சினார்கள்.  ஒரு நாள் அமைச்சன் புரோசனனை அழைத்து மிகப் புகழ்ந்து பேசி தங்களுடன் மாளிகையில் உறங்கும்படி கேட்டுக் கொண்டார்கள்.  அவனும் விவரமில்லாமல் தங்கினான்.  அவன் உறங்கியவுடன் வீமன் தனது சகோதரர்களுடனும் தாயுடனும் மாளிகையி-ருந்து சுரங்கப் பாதை வழியாக வெளியேறி அந்த அரக்கு மாளிகைக்கும் தீயிட்டான்.  மாளிகை எரிந்தது.  மாண்டு போனான் அந்த மந்திரி. கத்தி எடுத்தவன் கத்தியால் மடிவான் என்பது போல அரக்கு மாளிகையில் ஐவரைக் கொல்லத் திட்டமிட்டவன் அதே அரக்கு மாளிகையில் தீக்கிரையானான். செய்தி திருதராட்டிரனுக்கு எட்டியது.  மனதுக்குள் மகிழ்ச்சி அவனுக்கும் நூற்றுவருக்கும்.  ஆனால் வெளியே அழுது தீர்த்தார்கள்.  வீடுமனும் விதுரனும் விவரம் தெரிந்தவர்கள்.  இவர்கள் தப்பிய விபரம் அவர்களுக்கு மட்டும் முன்னமே தெரியும்.
சூர்யா: தப்பிப் போனவங்க என்ன ஆனாங்க தாத்தா?
தாத்தா: நாளைக்குச் சொல்றேன்.  இப்போ தூங்கு.







தாத்தா: நேத்து அரக்கு மாளிகையில் இருந்து ஐவரும் குந்தியும் தப்பியது பற்றிக் கேட்டோம்.  இன்றைக்குத் தொடர்வோம் கதையை.  நீண்ட மலைப் பாம்பு போல வளைந்து வளைந்து சென்ற சுரங்கப் பாதையைக் கடந்தனர் ஐவரும்.  அவர்கள் இப்போது ஒரு மலைச்சாரலை நெருங்கினர்.  அந்த மலைப் பகுதியிலே தான் இடும்பி என்னும் அரக்கி வாழ்ந்து வந்தாள்.  அவள் வீமனைப் பார்த்து அவனைத் திருமணம் செய்து கொள்ள விருப்பம் கொண்டாள்.  வீமனுக்கும் ஆசை தான்.  ஆனால் அண்ணன் இருக்கிறானே.  அவனுக்குத் திருமணம் ஆகாமல் தான் திருமணம் செய்து கொண்டால் அது தகாத செயல் என்று கருதினான்.   எனவே மறுத்தான்.  முத-ல் அவள் யார் என்று கேட்டான்.  அவள் இடும்பனின் தங்கை என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்.  இடிம்பன் இராவணன் மகன் போன்று வ-மையானவன் என்று கூறினாள். மனிதர்கள் வந்துள்ள வாடை வந்ததால் பிடித்துவர தன்னை அனுப்பி உள்ளதாகக் கூறி தான் வீமனை விரும்புவதால் கொல்லவில்லை என்றும் கூறினாள்.  வீமன் பலம் பாவம் அவளுக்குத் தெரியாது.  இதற்குள் இடும்பன் வருகிறான்.  தங்கை இடும்பியைக் கடிந்து கொள்கிறான்.  கொல்ல வருகிறான்.  வீமன் அவனுடன் பெரும்போர் நடத்துகிறான்.  தாயார் குந்தி பார்க்கிறாள்.  வீமனின் வீரத்தால் மகிழ்கிறாள்.  உடன்பிறந்தோர் மகிழ்ச்சி அடைகின்றனர்.  இறுதியில் இடும்பனை வென்று கொன்று விடுகிறான் வீமன்.  ஐவர் வாழ்வில் தலையிட்ட முதல் அரக்கன் இவன்.  குந்திக்கு இடும்பியின் காதல் தெரியவர அவள் காதலை மறுக்கக் கூடாது என்று அறிவுரை கூறி தருமரின் சம்மதத்தின் பேரில் திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறாள்.  தருமனும் நீதி அறிந்தவன் அல்லவா.  உடன்படுகிறான்.  எனவே வீமனும் இடும்பியும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.  இந்த நேரத்தில் பழமறை முனி வியாதன் அங்கு வருகிறார்.  அவரைப் பணிந்து வணங்கினர் ஐவரும் தாயாரும்.   அவர் இந்த கொடிய வனத்தை விட்டு சா-கோத்திர முனிவன் காட்டில் சிறிது நாள் தங்கி வேத்திரகீயம் போக வேண்டும் என்றார்.  அங்கு போகும் போது அந்தணர் போல அனைவரும் வேடம் தாங்கிச் செல்ல வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.  அவ்வாறே ஐவரும் சா-கோத்திரவனம் சென்றனர்.
சூர்யா: சா-கோத்திரம் என்றால் என்ன தாத்தா? அடிக்கடி குலம் கோத்திரம் பார்க்காமல் நட்பு கொள்ளக் கூடாது என்று எல்லோரும் சொல்கிறார்களே? ஏன்?
தாத்தா: முத-ல் வந்தவர்கள் முனிவர்கள் தான்.  ஏழு முனிவர்கள் கதை சொன்னேனே.  எவ்வளவு பேúருக்கு அவர்கள் முன்னோராக உள்ளனர்.  பார்த்தாய் அல்லவா.  தேவர்கள், அரக்கர்கள், நாகர்கள், ஆதித்தர்கள் இப்படி பல இனங்களுக்கு முன்னோடி ஒரு முனிவர் தான்.  இப்படித் தான அந்த ஏழு முனிவர்கள் கதையை ஒவ்வொன்றாகப் பார்த்தால் அவர்கள் மூலம் மேலும் முனிவர்கள் வர அவர்கள் வம்சமாக மானிடம் தொடர்ந்தது.  அதனால் நாங்கள் இன்ன முனிவர் வம்சம் என்று சொல்-க் கொள்வது வழக்கம்.  அதைத்தான் கோத்திரம் என்று கூறுகிறார்கள்.  கடவுளே இல்லை என்று சொல்பவனும் ஏதோ ஒரு வழியில் ஒரு முனிவரின் பரம்பரையில் தான் வந்திருப்பான். இதைத் தான் குலம் கோத்திரம் என்று சொல்கிறார்கள்.  சா-கோத்திரம் என்பது என்னவென்றால் ஒரு முனிவர் சா- என்று சொல்லப்படுகிற நெல் கொண்டு ஓமம் செய்தவர் அந்த முனிவர். எனவே தான் அந்த முனிவர் வழி வந்தவர்களை சா-கோத்திரம் என்று அழைக்கிறார்கள்.  சா- கொண்டு வேள்வி செய்த பரம்பரை இது.  திருமா-ன் அருளினால் அந்த யாகத்தின் போது பிறந்த முனிக்கு சா- என்றே பெயரிட்டுள்ளனர்.  இடும்பியும் வீமனும் மகிழ்வுடன் குடும்பம் நடத்தியதில் ஒரு மகன் பிறந்தான்.  அவன் தலையில் முடி இல்லை.  எனவே கடோர்கசன் என்று பெயரிட்டார்கள். பானைத் தலையன் என்று நாம் தமிழில் கூறலாம்.  அரக்கர்கள் பிறந்த உடனேயே பேசுவார்கள்.  வெகுவிரைவில் வளர்ந்து விடுவார்கள்.  அது தான் இங்கேயும் நடந்தது.  கடோற்கசன் தன் தாயை அழைத்துக் கொண்டு தங்கள் காட்டுக்குத் திரும்பினான்.  பின்னர் ஐவரும் அந்தண வேடம் பூண்டு வேத்திரகீய நகரம் சேர்ந்தார்கள்.  அங்கே ஒரு அந்தணர் இவர்கள் தங்க இல்லம் கொடுத்தார்.  உண்டியும் கொடுத்தார்.  அவருக்குத் துணையாக இருந்து அவர் வீட்டிலேயே இவர்கள் காலம் கழித்தார்கள்.  ஒருநாள் அந்த இல்லத்தரசி - பார்ப்பனத்தி அழுது புலம்பிக் கொண்டிருந்தாள்.  குந்தி உடனே உள்சென்று காரணத்தைக் கேட்டாள்.  அவள் பகன் என்னும் அரக்கன் அந்த ஊரில் இருப்பதாகவும்.  மிகக் கொடியவன் என்றும் அவன் நகருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து கையில் அகப்பட்டதை எல்லாம் சுருட்டித் தின்றான் என்வும் எனவே அந்த ஊர் மக்கள் போய் அவனிடம் விண்ணப்பித்து அவனுக்குத் தேவையான உணவை தினமும் ஒரு குடும்பம் தருவது என்று ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் நாளை இவர்களது முறை என்றும் தெரிந்தது.  இவர்கள் வீட்டில் ஒரு மகன் - ஒரு மகள்.  மகள் திருமணமானவள்.  எனவே அடுத்த வீட்டுப் பெண்ணை இரையாகத் தரமுடியாது.  ஒரே மகன்.  நாளை பெற்றோருக்கு நீர்க்கடன் கொடுக்க ஒரு மகன் வேண்டும்.  அதனால் தான் அழுவதாகத் தெரிவித்தாள் அந்த இல்லத்தரசி.  குந்தி அவளைச் சமாதானப்படுத்தி தன் மகன் வீமனை அனுப்பலாம் என்றும் தனக்கு ஐந்து புதல்வர்கள் இருப்பதால் கவலை என்றும் சமாதானப்படுத்தினாள். 
அடுத்தநாள் ஒரு வண்டி நிறைய உணவு ஏற்றிக் கொண்டு வீமன் புறப்பட்டான்.  பகன் இருந்த இடம் வந்ததும் உணவை வீமன் உண்ண ஆரம்பித்தான்.  பகனுக்குக் கோபம் வந்தது.  மிரட்டினான்.  பின்னர் போரிட்டான்.  வீமனிடம் தோற்றான்.  மாண்டான்.  அவன் உடலை வண்டியில் ஏற்றி மாலை சூரியன் மறையும் நேரத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருந்த ஈமக்காட்டில் எரியூட்டி அருகில் இருந்த ஆற்றில் குளித்து பின்னர் வீட்டுக்குத் திரும்பினான் வீமன்.  அந்த நகர மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.  அனைவரும் வீமனை நேரில் வந்து இவர்கள் பல்லாண்டு வாழ வேண்டும் என வாழ்த்தினர்.  ஒருவேளை இப்படி வாழ்த்தினை பெற வேண்டுமென்று தான் வியாதன் அனுப்பியிருப்பாரோ?


தாத்தா: நேற்று பகாசுரனை வீமன் வென்ற கதையைக் கூறினேன்.  இன்று திரௌபதியின் திருமணம் குறித்த கதையைக் கூறுகிறேன்.  கேள் சூர்யா.
இவர்கள் காடு- மலை என்று சுற்றிக் கொண்டிருந்த காலகட்டத்தில் துருபத மன்னன் தன் மகளுக்குச் தன்விருப்பத் திருமணம் நடத்த முடிவு செய்து நாடெங்கும் உள்ள மன்னர்களுக்கு ஓலை அனுப்பினான்.  அந்த காலத்திய நடைமுறையை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறார் வில்-புத்தூரர்ர். "தான் வரித்தவற்கே எய்த உரியள் என் தனயை' என்று, கான் வரிச் சுரும்பு உண் மாலைக் காவலர்க்கு ஓலை போக்க'' என்று சொல்லுகிறார்.  இந்தச் செய்தியை ஐவரும் கேட்டு துருபதனுடைய நாட்டை நோக்கி விரைந்தார்கள்.  வழியிலே வியாத முனி தோன்றி அடுத்து நிகழ இருக்கும் செய்திகளை ஐவருக்குக் குறிப்பால் கூறுகிறார்.  செல்லும் வழியில் கங்கைத் துறையில் சித்திரரதன் என்பவன் விசயனுடன் போரிட்டுத் தோற்கிறான்.  பின்னர் நண்பன் ஆகிறான்.    சித்திரரதன் சில மாய வித்தைகளை விசயனுக்குக் கற்றுக் கொடுக்கிறான்.  நீங்கள் செல்லும் வேலைக்கு ஒரு புரோகிதன் அவசியம் வேண்டும் என்று அவன் கூறி அவன் கூறியபடி பின்னர் தௌமிய முனியைக் கண்டு அவருடன் பாஞ்சால நகருக்குச் செல்கிறார்கள்.  அந்த நகரில் இருந்த ஒரு குலாலன் மனையில் தங்குகிறார்கள்.
சூர்யா:  தாத்தா குலாலன் என்றால் யார் தாத்தா?
தாத்தா: குலாலன் என்றால் குயவன்.  மறு நாள் சுயம்வர மண்டபத்திற்குச் செல்கிறார்கள் ஐவரும்.  ஏற்கனவே சோதிடர் ஒருவர் திரௌபதி குந்தி மைந்தர் ஐவர்க்கும் உரியவள் என்று குறிப்பிட்டிருந்தார்.  விதியின் வழியில் செல்வது என ஏற்கனவே திரௌபதி முடிவெடுத்திருந்தாள்.  தோழியர் திரௌபதியை அழகுபடுத்தி மண்டபத்திற்கு அழைத்து வருகிறார்கள். புனல் பல கொண்டு ஆட்டி, செழுந் துகில் தொழுது சேர்த்தி பூண்பன இசையப் பூட்டி, புகை கமழ் தாமம் சூட்டி, காண்பவர் ஆண்மை தேய  அழைத்து வந்ததாக வில்-புத்தூரார் கூறுவார்.  மண்டபத்தில் எதிர்பார்ப்போடு பல ம்ன்னர்கள் வந்திருந்தனர்.  றூற்றுவர், கன்னன், சல்-யன், கண்ணன், பலராமன், கன்னன், சிசுபாலன், சாத்தகி, பகதத்தன் -  இப்படி ஏராளமான மன்னர்கள் கலந்து கொள்ள வந்திருந்தார்கள்.  அப்போது திட்டத்துய்மன் வந்து சுழலும் எந்திரத் திகிரியின் நடுவிலுள்ள இலக்கை எய்பவருக்கே மாலை சூட்டுவாள் திரௌபதி என்று அறிவித்தான். அதிர்ந்தார்கள் பல மன்னர்கள்.  கண்ணனுக்குத் தெரியும் விசயன் அந்தணர்களுக்கு நடுவில் அமர்ந்திருக்கிறான் என்று.  எனவே தன் சுற்றத்தாரை இதில் கலந்து கொள்ள வேண்டாம் என்று தடுத்து விட்டான். அண்ணன் பலராமனிடம் உடனே தகவலைத் தெரிவித்தான். செவி-த் தாயார் ஒவ்வொரு மன்னனுடைய பராக்கிரமத்தைக் கூறிக் கொண்டே வருகிறாள்.  கன்னன் முறை வரும் போது ,
உண்மைக்கு இவனே; வலிக்கு இவனே; உறவுக்கு இவனே; உரைக்கு இவனே;
திண்மைக்கு இவனே; நெறிக்கு இவனே; தேசுக்கு இவனே; சிலைக்கு இவனே;
வண்மைக்கு இவனே;- எனும் மன்னன் கண்டாய் மற்று இவனே!  என்று அறிமுகப் படுத்துகிறாள். ஆனால் இதில் எல்லாம் திரௌபதியின் நினைவு இல்லை.  அவள் கண்கள் அர்ச்சுனன் யார் என்று தேடியாது?  எங்கே என்று தேடியது?  மன்னர் வரிசையில் மன்னவன் அவன் இல்லையே என்று கவலை. தேர்வு துவங்கியது.  ஆனால் சுழலும் திகிரியில் உள்ள இலக்கை யாரும் எட்ட முடியவில்லை.  அந்தணர் கூட்டத்தி-ருந்து கட்டழகன் ஒருவன் எழுந்தான்.  நான் முயற்சி செய்யலாமா? என்று கேட்டான்.  மன்னர்களால் முடியவில்லை.  மாவீரன் எங்கிருந்தால் என்ன?  அரசர் ஒப்புதல் அளித்தார். வந்தான். வளைத்தான். இலக்கைத் தொட்டான். வெற்றி பெற்றான். மகிழ்ச்சி அடைந்தாள் திரௌபதி. இவன் தான் விசயன் என்றாள் உறுதியுடன்.  மாலையிட்டாள் அந்த மங்கை தன் மணாளனுக்கு.  நூற்றுவர் தலைவன் துரியோதனன் மன்னவர் மத்தியில் அந்தணன் ஒருவனுக்குப் பெண் கொடுப்பதா என்று கொக்கரித்தான்.  'பார்ப்பான் வந்து, ஒரு கோடி அரசைச் சேரப் பரிபவித்து, பாஞ்சாலன் பயந்த தெய்வச் சீர்ப் பாவைதனை வலியால் கொண்டுபோக, செயல் இன்றி இருந்தீர்! என் செய்தீர்?' சில மன்னர்களுக்கு உடனே உணர்வு வந்தது.  போரிட வந்தார்கள்.  வீமனும் விசயனும் எதிர்த்தார்கள்.  அந்தணர்கள் எல்லாம் எழுந்தார்கள்.  ஆர்ப்பரித்து அவர்களும் போரிட்டார்கள். விசயன் அவர்களை விலக்கினான்.  "நானே பார்க்கிறேன் ஒரு கை.  நீங்கள் அச்சப்பட வேண்டேன். இவர்களை வெல்வேன்.''அனைவரையிம் புறமுதுகிட்டு ஓடச் செய்தார்கள்.  எஞ்சி இருந்த அனைவரையும் கண்ணனும் பலராமனும் சமாதானப்படுத்தி அனுப்பினர். திரௌபதியை மன்னன் ஒப்புதலுடன் அழைத்துக் கொண்டு தங்கள் இல்லத்திற்குச் சென்றார்கள்.  ஐவரும் இப்போது இருப்பது மறையவர் வேடத்தில்.  மறையவர் என்றால் இரந்து உண்ண வேண்டும்.  கற்றுத் தர வேண்டும். வேள்வி நடத்த வேண்டும்.  இப்படித் தான் அந்த காலத்தில் இருந்தது.  அந்த முறைப்படி வீட்டிற்கு வந்ததும் தருமன்," இன்று ஓர் ஐயம் பெற்றோம்; என்
செய்வது?'' என்று கேட்டான் தாயார் குந்தியிடம்.  அவள் அடுப்படியில் ஏதோ வேலையில் இருந்தாள்.  வந்தது யார் என்று திரும்பிப் பார்க்கவில்லை.  பிச்சை எடுத்துத் தானே வந்துள்ளார்கள்.  'ஐவ ரும் ஒருசேர அருந்தும்'  என்றாள். திரும்பிப் பார்த்தால் மாலையும் கழுத்துமாய் விசயனும் திரௌபதியும்.  திடுக்கிட்டாள். இப்படிக் கூறி விட்டோமே என்று அயர்ந்தாள்.  ஆனால் தருமன் மனதில் இப்படி ஒரு எண்ணம் இருந்திருக்கிறது.  அவன் சொல்கிறான். 'நின்சொல் ஆரணப் படியது ஆகும்;
நின் நினைவு அன்றால்; எங்கள் நெஞ்சிலும் நினைவு உண்டு' .  உன் சொல் வேதம் மாதிரி.  எங்களுக்கும் அப்படி ஒரு எண்ணம் உண்டு என்றான். துருபதனின் ஒற்றர்கள் இந்த செய்திகளை எல்லாம் தொகுத்து தலைவனிடம் சொன்னார்கள்.  மிக்க மகிழ்ச்சி அடைந்தான் துருபதன். முறைப்படி திருமணம் நடத்த இசைந்தான்.  அரண்மனைக்கு வரும்படி ஆள் அனுப்பினான்.  மறுநாள் அனைவரும் அரண்மனை அடைந்தார்கள்.  தருமன் ஐவரும் திரௌபதியை மணக்கப் போகும் முடிவைச் சொன்னான்.  அதிர்ந்தார் துருபதன்.  சிக்கலான நேரத்தில் வியாதர் வந்து விடுவார் மகாபாரதத்தில்.  அவருக்குத் தான் ஞானக் கண் இருக்கிறதோ.  இதெல்லாம் அவருக்குத் தெரிந்து கொண்டே இருக்கும்.  இறைவனை நினைத்து தவம் புரியும் முனிவருக்கு இவர்கள் மேலும் ஒரு கண்.  அதனால் உடனே வந்தார்.  துரௌபதியின் பழைய கதையை சொன்னார்.  இவள் முற்பிறப்பில் சிவனைத் துதித்து ஐந்து தடவை நல்ல கணவன் வேண்டும் என்று திரும்பத்திரும்பக் கேட்டாள்.  சிவனும் திரும்பத்திரும்ப அப்படியே ஆகட்டும் என்று சொல்-விட்டார்.  அதனால் ஐந்து பேரையும் மணப்பது தான் இறைவன் சித்தம் என்று ஒரு விளக்கவுரை தந்தார். ஐந்து முகங்களை உடைய சிவனிடம் ஐந்து முறை கேட்டதால் -அப்படியே ஆகட்டும் என்று அவர் ஐந்து முறையும் கூறியதால் ஐந்து கணவர்களை மணப்பது தெய்வ சித்தம் என்றார்.
ஐந்தானனத்தோனருள்செய்ய வழகின்மிக்காள்
ஐந்தானசொல்லால்கணவற்றருகையவென்றாள் ஐந்தானசொல்லானளித்தான்மற்றவனுமுன்னாள்
ஐந்தானபோகமிவளெய்திய வாறறிந்தே.
என்று சொல்லுவார் வில்-புத்தூரார்.  இப்படியாக திரௌபதியின் திருமணம் வியாதன் விளக்கத்துடன் நடைபெற்றது.  சூர்யா கதையை நாளைத் தொடர்வோமா? -
சூர்யா: தாத்தா எனக்கு ஒரு ஐயம்.  அதாவது சந்தேகம்.  ஐயம் என்றால் சந்தேகம் என்று நான் படித்திருக்கிறேன்.  தருமர் ஐயம் பெற்றோம் என்று கூறியவுடன் அவருக்கும் சந்தேகம் போல என்று நினைத்தேன்.  ஆனால் விடயம் வேறுவிதமாக உள்ளதே?  ஐயம் என்றால் என்ன?
தாத்தா ஐயம் என்றால் பிச்சை.  ஐயம் இட்டு உண் என்று ஔவையே கூறி உள்ளார்.  நாம் படித்து உள்ளோம்.  அந்த காலத்தில் உண்ணும் முன் யாருக்காவது ஐயம் இடுவது வழக்கமாக இருந்திருக்கிறது.
சூர்யா: அடிக்கடி கண்ணனுடன் பலராமன் என்று ஒருவர் வருகிறாரே?  யார் அவர்.
தாத்தா: பலராமன் தான் கண்ணனுடைய அண்ணன்.  அது ஒரு பெரிய கதை.  இருந்தாலும் உனக்கு இப்போ சுருக்கமாக சொல்றேன்.  பலராமன் திருமா-ன் எட்டாவது அவதாரம் என்று சொல்கிறார்கள்.  இவர் வசுதேவரின் மனைவியான தேவகியின் கருப்பையில் ஆறுமாதமும் ரோகிணி என்னும் யாதவ குலப் பெண்ணின் வயிற்றில் ஆறு மாதமும் இருந்து பிறந்தவர்.  இவர் நீலநிற ஆடையுடன் இருப்பார். சிலர் வெள்ளை ஆடை தான் உடுத்துவார்கள்.  சிலர் சிவப்பு ஆடை தான் உடுத்துவார்கள்.  சில மஞ்சள் துண்டைத் தான் போடுவார்கள்.  அது போல இவர் நீலநிற ஆடை தான் உடுத்துவார்.  இவர் ஆதிசேடனின் அம்சம் என்றும் சொல்வார்கள் இந்த நீலநிறத்தை விருப்பத்தை வைத்து சொல்வார்கள்.  இராம அவதாரத்தில் இவர் இலக்குவனாக இருந்தார் என்றும் சொல்வார்கள். இவருக்கு ஆயுதம் கலப்பை.  கலப்பை வைத்து உழுவார் என்று நினைக்காதே.  அவர் அதை வைத்து போரிடுவார்.  ஒரு தடவை இவர் துவாரகையில் இருந்து கோகுலத்திற்கு வந்தார். வந்த இடத்தில் மது அருந்தினார்.  மகளிருடன் ஆடினார்.  மதுவைக் கொடுததது வருணன்.  மதுவின் பெயர் வாருணி. அப்படி மது அருந்திய மயக்கத்தில் மப்புடன் இருக்கும் போது யமுனை நதியை இவர் குளிக்கும் இடத்திற்கு வரக் கட்டளையிட்டார்.  குடிகாரன் பேச்சு கேட்க வேண்டியதில்லை என்று யமுனை நினைத்தாள்.  கோபம் வந்தது இவருக்கு.  கலப்பையை வைத்து யமுனை நதியின் திசையை மாற்றி தான் இருக்கும் இடத்திற்கு இழுத்து விட்டார்.  பிறகு நீல ஆடை நீல மலர்மாலை இப்படியெல்லாம் கொடுத்து யமுனை நதி மன்னிப்புக் கேட்க தன்னிலைக்கு வந்த பலராமர் தவறை உணர்ந்து நதியை அதன் பழைய போக்குக்கு மாற்றினார் என்று கதை.  அப்படி நினைத்தபடி எல்லாம் செய்யக்கூடிய வல்லமை.  முற்காலத்தில் இவரை முக்கியத் தெய்வமாக வழிபட்டிருக்கிறார்கள்.  இப்போது சில இடங்களில் - சில இனத்தவர் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்.
சூர்யா: அந்த காலத்தில் டாஸ்மார்க் வேலையை வருண பகவானே செய்திருக்கிறார் போல.   இப்போ எல்லாம் பலராமர் இருந்திருந்தா பாரதியார் சொன்ன மாதிரி கங்கையையும் காவிரியையும் எளிதா இணைத்திருக்கலாம்.  இல்லையா தாத்தா?
தாத்தா: ஆமாம்டா. மீதிக்
 கதையை நாளை பார்ப்போம்.

சூர்யா: தாத்தா நேற்று திரௌபதியின் திருமணத்தோடு கதையை முடித்தீர்கள்.  அடுத்தது என்ன?
தாத்தா: திருமணம் முடிந்து ஐவரும் பாஞ்சாலத்தில் சிறிது காலம் சிறப்புடன் வாழ்ந்தார்கள்.  நூற்றுவர் போட்டியில் தோற்றதும் - பின்னர் நடந்த போரில் தோற்றதும் - திருமணம் நடந்ததும் கேட்டார் திருதராட்டிரன்.  ஐவரும் உயிரோடு இருப்பதைக் கேட்டு மகிழ்ந்தார்.  அவர்கள் வீரம் அவருக்கு மிக்க மகிழ்ச்சியைக் கொடுத்தது.  எனவே தன் தம்பிக்கு உரிய பங்கை இவர்கள் வசம் ஒப்படைப்பதே சிறந்தது என முடிவெடுத்தார்.  வீடுமரிடமும் விதுரனிடமும் தனது கருத்தை வெளியிட்டார்.  உடனே ஆட்களை அனுப்பி ஐவரையும் அத்தினாபுரிக்கு வரும்படி அம்பிகேயன் அழைத்தார். (வில்-யார் ஒவ்வொருவரையும் பல பெயர்களில் அழைப்பார்.  திருதராட்டிரனை இவ்வாறு இந்த கட்டத்தில் அறிமுகம் செய்கிறார்).  திருதராட்டிரன் தருமனுக்கு முடிசூட்ட நிச்சயிக்கிறார்.  நூற்றுவரும் ஐவரும் ஒற்றுமையாக இருந்தால் எதிரிகள் அச்சப்படுவர் என்று காரணம்.  எதிரிகள் வந்தால் இந்த ஐவரும் பார்த்துக் கொள்வார்கள் என்று ஒரு கருத்து.  அத்தினாபுரியை அடைகிறார்கள் ஐவரும்.  தம்பியர் சூழ யானை மீது நகர் வலம் வருகிறார் தர்மர்.  வெளியில் இவ்வாறு எல்லாம் திருதராட்டிரன் பேசினாலும் மகுடம் சூட்டியவுடன் காண்டவப்பிரத்தம் என்னும் இடத்திற்குத் தான் நீ அரசன்.  அத்தினாபுரிக்கு அல்ல.  அந்த இடம் ஒருகாலத்தில் சிறந்த நகரமாக இருந்தது.  இப்போது ஆள்அரவம் இல்லாமல் காடு மாதிரி உள்ளது.  அந்தப் பகுதி தான் உனக்கு.  என்று கூறுகிறார்.  எல்லாம் வல்ல கண்ணன் தான் பாண்டவருடன் உள்ளாரே.  அவர் மறுப்பெதுவும் கூறாமல் வாங்கிக் கொள்.  பின்னர் பார்த்துக் கொள்ளலாம். என்று கூறி எல்லோரும் காண்டவப்பிரத்தத்தை நோக்கிப் பயணமாகிறார்கள்.  உலகம் முழுவதையும் தருமருக்கு வழங்க வேண்டும் என்ற உயரிய நோக்கோடு கண்ணனனும் யாதவ குலமும் போனதாகக் கூறுகிறார் வில்-யார். "அங்கண்மாஞாலமுழுவதுங்கொடுத்தற்காயர்தம்பதியினங்குரித்த செங்கண்மான்முதலாங்கிளைஞரும்
காண்டவப்பிரத்தம் என்னும் அ தழல்வனம் போய் அடைந்தார் ''   
அந்தக் காட்டை அடையும் முன்னரே கண்ணன் இந்திரனையும் விச்சுவகன்மாவையும் அழைத்து அற்புதமான ஒரு புதிய நகரை நிர்மாணிக்கும்படி கேட்டுக் கொண்டார்.  இந்திரனுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி.  தன் மகன் விசயன் தங்கி இருக்கப் போகும் இடமல்லவா.  இதற்கு இணையாக எந்த உலகமும் இருக்கக் கூடாது என்று கருதும் படி நகர் அமைய வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து உடனடியாக ஒரு நகரை நிர்மாணித்தார்.ம்.  அவனுடைய திறமையை மெச்சும் வண்ணம் கண்ணன் அப்படி அழகாக நிர்மாணிக்கப்பட்ட நகரத்திற்கு இந்திரப்பிரத்தம் என்று பெயரிடுகிறார். நன்றி மறக்கக் கூடாது அல்லவா.  அந்த நகரத்தின் சிறப்பைச் சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால் இமையவர்பதியான இந்திரலோகத்தில் உள்ளவை எல்லாம் இங்கு இருக்கும்.  ஆனால் இந்திரப்பிரத்தத்தில் உள்ளது முழுவதும் இந்திரலோகத்தில் இருக்குமா என்றால் இருக்காது.  அவ்வளவு  சிறப்புடையது.  வில்-யார் அழகாகக் கூறுவார்: 'இமையவர் பதியில் உள்ளன யாவும் இங்கு உள; இங்கு மற்று உள்ள அமைவுறு பொருள்கள் அங்கு இல'.    :காடு இருக்கும் என்று போனவர்கள் அங்கு ஒரு அதிசய உலகம் இருப்பதைக் கண்டார்கள். விச்சுவகன்மா அதன் சிறப்பை எல்லாம் எடுத்துச் சொல்கிறார்.  உயரிய கோபுரங்கள் மேல் ஏறி தங்கள் நகரை சுற்றுமுற்றும் பார்க்கிறார்கள் பாண்டவர்கள்.  ஒரே மகிழ்ச்சி.  அந்த நகரில் நுழைந்து தங்கள் மாளிகையில் இறைஎரிவலம் வந்து இளமயிலோடு குடியேறுகிறார்கள். தருமர் விச்சுவகன்மாவுக்கு நன்றி கூறி புதுமனைப்புகு விழாவின்போது செய்ய வேண்டிய மரியாதைகளை எல்லாம் செய்கிறார்.  கண்ணன் மற்றும் இந்திரன் பின்னர் தத்தம் ஊர்களுக்குத் திரும்புகிறார்.  அந்த நாட்டை தருமர் அரசாளத் தொடங்குகிறார்.  அத்தினாபுரியில் இருந்து இந்த நகரின் சிறப்பைக் கேட்ட மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து இங்கு தங்குகிறார்கள்.  ஒருநாள் பாடல்தண்டினை கையில் கொண்ட நாரதர் அங்கு வருகிறார்.
சூர்யா: தாத்தா நாரதர் வந்தால் கலகம் பண்ணுவார் என்று சொல்வார்களே.  என்ன நடந்தது?
தாத்தா: இல்லேடா.  கலகம் வரக்கூடாது என்பதற்காகத் தான் அவர் வருகிறார்.  ஐவரும் ஒரு பெண்ணை மணந்துள்ளதால் ஒரு நெறிமுறையுடன் வாழ்வது எப்படி என்றும் அதன் அவசியம் குறித்தும் விளக்குகிறார்.  இந்த நேரத்தில் தான் அவர் சுந்தன்-உபசுந்தன் கதையை அவர்களுக்குக் கூறுகிறார்.
சூர்யா: என்னங்க தாத்தா - நெடுந்தொடரில் கதை திசைமாறுவது போல் அடிக்கடி மூலக்கதையில் இருந்து கிளைக்கதைக்குப் போறீங்க?
தாத்தா: இன்னிக்கு கதை சொல்றவங்களே இவ்வளவு கிளைக்கதையைக் கூறி ஆண்டுக்கணக்கில் நெடுந்தொடர்களைத் தரும்போது தவமுனிவர் வியாதனுக்கு எவ்வளவு கதை தெரியும்.  அவர் சொல்ல வேண்டாமா?  சொல்லத் தான் செய்வார்.  இரணியகசிபு என்று ஒரு அரக்கன் இருந்தான்.  இறைஉணர்வு கொண்டவன்.  கடுமையாகத் தவம் செய்தான் வரம் பல பெற்றான்.  வரம் பெற்றவுடன் அகந்தை வந்தது.  அட்டூழியம் செய்தான்.  பின்னர் திருமால் அழித்தார்.  இப்படி இந்த வம்சத்தினர் தொடர்ந்து வருவார்கள். தவம் புரிவார்கள்.  பின்னர் அகந்தை கொள்வார்கள். அழிவார்கள்.  அகந்தை வந்தால் அழிவு பின்னாடியே வரும் என்பதைச் சொல்லத் தான் இவர்கள் கதை.  இரண்யகசிபு வம்சத்தில் நிகும்பன் என்பவனது மகனாக சுந்தன்-உபசுந்தன் என்ற இருவர் பிறந்தார்கள்.  இருவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள்.  இறைவனை வேண்டி வரம் பல பெற்றார்கள்.  பொறுக்குமா இந்திரனுக்கு?  பல பெண்களை அனுப்பி இவர்களின் தவங்களை அவ்வப்போது கலைக்க முயன்றான் முடியவில்லை.  இந்த இருவரும் அரன்-அரி-அயன் இந்த மூவரையும் நோக்கிக் கடுந்தவம் புரிந்தார்கள்.  இவர்கள் தவத்தை மெச்சி அவர்கள் வந்து என்ன வரம் வேண்டும என்று கேட்ட போது "நாங்கள் எவரால் வெல்லப்படக் கூடாது - கொல்லப்படக் கூடாது'' என்று கேட்டார்கள். கொடுததார்கள் வரத்தை அந்த மூவரும்.  தேவர்களை இம்சைப்படுத்தினார்கள்.  எல்லோரும் அடிமைப்பட்டார்கள்.  அகந்தையுடன் நடந்து கொண்டார்கள்.  முனிவர்களும் தேவர்களும் முறையிட்டார்கள் மூவரிடமும்.  "இப்படி ஒரு வரத்தைக் கொடுத்து விட்டீர்களே?  இவர்களை எப்படி வெல்வது?  இனி வருங்காலம் முழுவதும் இப்படியே இடர்ப்பட வேண்டுமா'' என்று கேட்டார்கள்.  "அவர்கள் கேட்டதைக் கொடுத்தோம்.  ஆனால் அவர்கள் அழிவுக்கு அவர்கள் கேட்ட வரத்திலேயே வழி இருக்கிறது.'' என்று கூறி அவர்களை வெல்லும் வழிமுறையைக் கூறினார்கள்.  மூவரும் கூறியபடி விச்சுவகர்மாவைக் கொண்டு ஒப்பற்ற அழகி ஒருத்தியைப் படைத்தார்கள்.  அவள் பெயர் திலோத்தமை.  விந்தியமலையில் தாழ்வரையில் அவர்கள் தங்கி இருந்தார்கள்.  இருவரும் பார்த்தார்கள் இந்த அழகிய மங்கையை.  இருவரும் மயங்கினார்கள்.  இருவரும் இருபுறம் வந்து கைபிடித்தார்கள்.  "இருவருமா'' இழுத்தாள் அந்தப் பேரழகி.   அண்ணன் சொல்கிறான் "இவள் உனக்குத் தாய் முறை.  நீ கையைப் பிடிக்காதே'' என்று.  தம்பி சொல்கிறான் " இல்லை இல்லை இவள் உனக்கு மருமகள் முறை நீ இவள் கையைப் பிடிக்கக் கூடாது.  பேச்சு முற்றியது.  கைகலப்பு துவங்கியது.  பிறரால் தான் இவர்களுக்கு மரணமில்லை.  இவர்களால் இவர்களுக்கு மரணம் உண்டு.  மரணதேவன் வந்தான்.  அணைத்தான் இருவரையும்.  மாண்டார்கள் இருவரும்.  எனவே மனவொற்றுமை கெட பல வாய்ப்புகள் வரும் என்பதை இப்படிக் கதை மூலம் நாரதர் விளக்கினார்.  பின்னர் ஒவ்வொரு ஆண்டும் ஒருவர் திரௌபதியுடன் குடும்பம் நடத்த வேண்டும் என்றும் மற்றவர் அந்த நேரத்தில் திரௌபதியை எக்காரணம் கொண்டும் காணக்கூடாது என்றும் அவ்வாறு காண நேர்ந்தால் கானகம் சென்று தவம் செய்து ஓராண்டிற்குப் பின் வரவேண்டும் என்றும் தனது வழிமுறையைச் சொன்னார்.'எண் உறக் காணில், ஓர் ஆறு இருதுவும் வேடம் மாறி, புண்ணியப் புனல்கள் ஆடப் போவதே, உறுதி' :நாரதர் கூறியபடி ஐவரும் மகிழ்வுடன் குடும்பம் நடத்தி மக்களைப் பாதுகாத்து வந்தனர்.  சூர்யா மீதக் கதையை நாளைக்குக் கூறுகிறேன்.  நான் சுகிசிவம் அவர்களின் சொற்பொழிவைக் கேட்கப் போகிறேன். சரியா?
சூர்யா: இதே கதையைத் தானே அவர் கூறுவார்.  ஏன் அங்கே போகிறீர்கள்.
தாத்தா: நான் ஒரு நூலைப் படித்தே இவ்வளவு கதையை உனக்குச் சொல்கிறேன்.  அவர் பல நூல்களைப் படித்து பல அருமையான கருத்துகளை நமக்குத் தருவார். அவரைக் கண்டு அவர் கூறுவதைக் கேட்க நாம் பண்டிதராகலாம்.  கண்டு அது கேட்கப் பண்டிதன் ஆகலாம்.  சரியா. நாளைக்குப் பார்க்கலாம்.

================================================================================================================================