Monday, October 18, 2010

MRUGAN PUGAZH - SILA PAADALGAL

இன்று முருகனின் புகழ் பாடும் சில பாடல்ககளைப் படிக்க எண்ணினேன்.  நமக்கு முருகன் குறித்த அத்தனை தோத்திரங்களையும் சாத்திரங்களையும் தருவதற்கே ஒரு தளம் உள்ளதே.  அது தான் http://www.kaumaram.com/ 
சென்று படித்தேன் உங்களுக்கும் தருகிறேன்.  படித்து மகிழுங்கள்.  நான் மதுரையைச் சேர்ந்தவன் என்பதால் மதுரைக்கு அருகில் உள்ள இடத்தில உள்ள முருகன் தலம் குறித்து உள்ள பாடல்களைத் தேடினேன்.
சோலைமலை முருகன் குறித்தும் சிலம்பாறு குறித்தும் இருந்த ஒரு பாடலைக் கண்டேன்.  படித்தேன்.  கேட்டேன் அந்தப் பாடலை.  இதோ பாடல்.
(இன்னும் ஏன் உறக்கம்?
ஏனிந்த பொய்த்தூக்கம்?
இருளும் அகன்றது பொழுது புலர்ந்தது
மலர்கள் மலர்ந்தனவே)
(இன்னும் ஏன் ... )
சூ¡¢யன் ரதம் உந்தன் கோயில் வாசலிலே
சேவல் கூவுவதும் செவிகள் கேட்கலையோ?
பறவைகளும் பாட்டிசைக்கும் ... அருவியின் ஆடல்களே
இயற்கையெலாம் அழைத்திடுதே ... எழுந்திடு எழுந்திடய்யா
(இன்னும் ஏன் ... )
அழகன் வாழும் மலை ... அழகர் மலை என்றார்
கனிகள் உதிரும் சோலை அதனால்
பழமுதிர்ச்சோலை என்றார்
(2)
அம்மா அருகினிலே ... பிள்ளை அமர்ந்தாயோ?
அங்கையர் கன்னியவள் ... அன்பில் நனைந்தாயோ?

குறவள்ளி மனமகிழ ... குன்றில் நின்றாயோ?
குஞ்சா¢யைக் கொஞ்சிடவே ... இங்கே வந்தாயோ?
(இன்னும் ஏன் ... )
நூபுர கங்கை எனும் ... சிலம்பு நதி தவழும்
கோபுரம் இல்லை ஓருரு இல்லை
வேலாய் வீற்றிருப்பாய் (2)
அருவாய் நானிருப்பேன் ... குருவாயும் வருவேன்
உன்னை நீ உணர்ந்தால் ... என்னையும் நீ உணர்வாய்
என்பாயே கந்தய்யா ... என்னில் கலந்தாயே
என்றென்றும் உன் பாதம் ... கண்ணுக்குள்ளய்யா
(இன்னும் ஏன் ... )
பாட்டி ஒளவையிடம் ... பாட்டு கேட்கயென
மாட்டுக்காரன் வேடம் போட்டாய்
தமிழே வா என்றாய் (2)
நாவற் பழம் தருவேன் ... தாகம் தீர்த்திடுவேன்
சுடுமே அது என்றாய் ... கிழவி சி¡¢த்தாளே
மண்ணினிலே விழுந்த கனி ... ஊதியே பார்த்தாளே
சுடுகிறதா என்றாயே ... முருகனைக் கண்டாளே
(இன்னும் ஏன் ... ) (2)
சூ¡¢யன் ரதம் உந்தன் கோயில் வாசலிலே
சேவல் கூவுவதும் செவிகள் கேட்கலையோ?
பறவைகளும் பாட்டிசைக்கும் ... அருவியின் ஆடல்களே
இயற்கையெலாம் அழைத்திடுதே ... பழமுதிர்ச்சோலை குகா
(இன்னும் ஏன் ... ) (2).

நாளை மீண்டும் தொடர்வேன்.

No comments:

Post a Comment