Sunday, October 31, 2010

MAHABHARATH - SISUBALAN KILLED BY SRIKRISHNA

தாத்தா: இன்றைக்கு எண்திசை சென்று ஐவரில் நால்வரும் கடோத்கசனும் வென்று வந்த கதையைச் சொல்லப் போகிறேன்.  சராசந்தனைத் தோற்கடித்தபின் இந்திரப்பிரத்தம் மீள்கிறார்கள் பாண்டவர்கள்.  பின்னர் கண்ணன் தன் நகரான துவாரகை செல்கிறான்.  தன் பகைவன் சராசந்தனை ஒழித்து விட்ட மகிழ்ச்சி அவருக்கு.  பின்னர் தருமரும் விசயனும் யார்யார் எந்தெந்த திசையில் சென்று ராசசூய வேள்விக்கான வெற்றிப்பணிக்கு ஈடுபடுவது எனத் திட்டமிடுகிறார்கள். இந்த வேள்வியை மாமகம் என்கிறார் வில்-யார்.  விசயன் சொல்கிறான்," குணபாலெம்முன்னும்
வடபால்யானுங்
காற்றிசைக்கு நிருதித்திசைக்குநடுவெம்பியிவனுஞ்
சிலைவேணிரைமணித்தேர்வருதிக்கினிலிவ்விளையோனுமலைவானெழுகவருகவெனா.''  கிழக்கில் வீமன் - வடக்கில் விசயன் - மேற்கில் நகுலனும் - தெற்கில் சகாதேவனும் போய் வருவதெனவும் இலங்கைத் தீவிற்கு கடோத்கசனை அனுப்புவது என்றும் முடிவெடுத்து வருகிறார்கள்.  சென்றவர் எல்லாம் பகை வெல்கிறார்கள் அல்லது நட்பு பூண விரும்புபவர்களிடம் பொருள் கேட்டு கொண்டு வருகிறார்கள்.  மேற்கில் சென்ற நகுலன் துவாரகைக்குச் சென்று தான் வென்ற விபரங்களைக் கூறி வாழ்த்து பெருகிறான். "மீனங் கமட மேனநர வரியாய் நரராய் மெய்ஞ் ஞான  வானந் தமுமா கியநாத னன்றேதுவரா பதியடைந்தான்''.
சூர்யா: மீனம், கமடம், ஏனம், நரவரி, நரர் என்றால் என்ன தாத்தா?
தாத்தா: இதெல்லாம் திருமால் எடுத்த அவதாரங்கள்.  முன்னொரு காலத்தில் பிரமதேவன் கண்துயில்கையில் சோமகன் என்னும் அசுரன் வேதங்களை எல்லாம் கவர்ந்து கொண்டு கட-ல் போய் ஒளித்து வைக்கிறான்.  பிரமன் வேண்டுதலுக்காக திருமால் மீன் உருவம் கொண்டு கட-ல் போய் அந்த அசுரனைத் தேடிப்பிடித்துக் கொன்று வேதங்களை மீட்டு வருகிறார்.  பின்னர் அன்னப் பறவை வடிவங்கொண்டு வேதங்களை உபதேசிக்கிறார்.  கமடம் என்றால் ஆமை.  திருப்பாற்கடலைக் கடையும் போது மந்தரகிரியை கட-ல் சுற்ற வசதியாக திருமால் ஆமை வடிவம் கொண்டு அந்த மலைக்கு ஆதாரமாகக் கட-ல் நிற்கிறார்.  ஒரு மலையின் சுமையை இறைவன் தவிர வேறு யார் தாங்க முடியும்.  இதைத் தான் கூர்ம அவதாரம் என்கிறார்கள்.  ஏனம் என்றால் பன்றி. இரண்யனது உடன்பிறப்பான இரணியாக்கன் என்பவன் பூமியைப் பாயாகச் சுருட்டி கட-ல் கொண்டு போய் வைக்கிறான்.  திருமால் ஏனம் வடிவம் கொண்டு கட-ல் புகுந்து தன் கொம்பில் பூமித்தாயைத் தூக்கிக் கொண்டு வருகிறார்.  இந்த பன்றி அவதாரத்தைத் தான் வராக அவதாரம் என்று சொல்கிறார்கள்.  நரஅரி என்றால் மனித உருவமும் சிங்க முகமும் கொண்ட நரசிம்ம அவதாரம்.  தமிழில் நரஅரி. இந்த அவதாரத்தில் இரண்யனைக் கொல்கிறார் திருமால். பின்னர் நரன் என்பது வானமன் என்னும் குள்ள உரு கொண்ட கள்ளபிரானை.  இவன் தான் செருக்குடன் இருந்த மகாப- அரசனைத் திருத்தி மூன்றடி மண்கேட்டு அவனைப் பாதாளத்திற்கு அனுப்புகிறார்.  பின்னர் மனித உருவில் வருபவன் பரசுராமன் மற்றும் இராமர்.  இப்படி நீ ஒவ்வொரு கதைக்கும் விளக்கம் கேட்டால் மகாபாரதக் கதை முடிந்து விடும்.  தெரிகிறதா?  இந்தக் கதையை எல்லாம் விளக்கமாக இப்போதைக்குக்  கூற முடியாது. எனவே சுருக்கமாகக் கூறி உள்ளேன்.  நாற்புறமும் சென்றவர்கள் வெற்றியுடன் வருகிறார்கள்.  இலங்கைக்குச் சென்ற கடோத்கசன் கப்பம் கேட்டவுடன் விபீடணன் கொதித்து எழுகிறான்.  பின்னர் ஐவர் அனுப்பியதால் வந்ததாகக் கூறியவுடன் நட்பு பூண்டு வேள்விக்காக பத்து தங்கத்தூண்களைத் தருகிறான்.  கடோத்கசன் அவற்றுடன் திரும்புகிறான்.  பின்னர் மகம் என்று அழைக்கப்படும் வேள்விக்கான நாளைக் குறித்து எல்லா நாட்டு மன்னர்களையும் அந்தணர்களையும் அழைக்க முறையாக அழைப்பினை அனுப்பிகிறார் தருமர்.  வேள்விச்சாலையை மிக அழகாக வடிவமைக்கிறார்கள்.  அனைவரும் வந்தால் அவர்கள் தங்குவதற்கு இடத்தினையும் உணவிற்கும் உபசாரத்திற்கும் முறையான ஏற்பாடுகளைச் செய்து தம்பிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமையை நிர்ணயிக்கிறார் தருமர்.  வரவேற்க ஒரு தம்பி - உபசாரம் செய்ய ஒரு தம்பி- உணவளிக்க ஒரு தம்பி - கொடை வழங்க ஒரு தம்பி இப்படி கடமைகளை நிர்ணயம் செய்த பின் வேள்விக்கான நாள் நெருங்குகிறது.  பலராமனும் கண்ணனும் முத-ல் வருகிறார்கள். அவர்களை தருமன் சென்று எதிர்கொள்கிறான்.  அவர்கள் ஐவரையும் வாழ்த்தி குந்திதேவியைப் பார்த்து அளவளாவுகிறார்கள். அழ-ல் வந்த பொற்கொடி - திரௌபதி இருவரையும் வணங்குகிறாள்.
கொற்றவர் ஐவர்தம்மைக் குருகுலம் விளங்குமாறு
பெற்றவள் பாதம் போற்றி, பிறப்பு இறப்பு அறுக்க வல்லோன்,
மற்று அவள் வாழ்த்த வாழ்த்த, மனம் மகிழ்ந்து, அழலின் வந்த
பொற்றொடி பணிவும், ஏனைப் பூவையர் பணிவும், கொண்டான்.
இவர்களைத் தொடர்ந்து சராசந்தன்மகன் - மகத மன்னன், வீடுமன், நூற்றுவர் வருகின்றனர்.  அதேபோல பல நாட்டு அந்தணர்கள் வேள்வி நடத்த வந்து குழுமுகிறார்கள்.  இந்த நேரத்தில் வியாத முனிவர் வருகிறார்.  ஐவரும் அவரைப் பணிந்து வணங்குகிறார்கள்.
'மைந்தர் நீர் நால்வரும்; மகம் செய் வேந்தனே
தந்தையும்; தாயும், இத் தரும வல்லியே;
இந்த வான் பிறப்பினுக்கு, இற்றை நாள் முதல்,
குந்தியும் பாண்டுவும் என்று கொண்மினே.'
மகம் செய்யும் வேந்தனான தர்மனே ஐவருக்கும் தந்தையும் அழ-ல் வந்த பெண் திரௌபதியே தாய் என்றும் மற்ற நால்வருக்கும் எடுத்துரைத்து - அவர்களைப் பாண்டுவும் குந்தியும் என்று கருத வேண்டும் எனவும் அவர்களே இந்த வேள்வியில் அமர வேண்டும் என்றும் கூறுகிறார்.  வேள்வியில் மிகச் சிறப்பாக வானோருக்கு அவி உணவு அளிக்கப்படுகிறது. இந்த உலகத்தவருக்குச் சுவையான உணவு வழங்கப்படுகிறது.  வேள்வி முடிந்தவுடன் தான தருமங்கள் வழங்கப்படுகின்றன.  இந்த தான தருமங்கள் செய்யத் தான் நாற்புறமும் படைநடத்தி செல்வத்தைத் தம்பிகள் கொண்டு வந்துள்ளார்கள்.  இந்த ஐவரும் துய்ப்பதற்காக அல்ல.  ஏழு நாட்கள் இப்படித் தொடர்ந்து வேள்வி நடக்கிறது.  பின்னர் நாரதர் முதலானோர் மங்கலம் பாடினார்கள்.  இறுதியில் முதல் பூசை நடத்த வேண்டும்.  யாரைப் பூசை செய்வது?  அறன் மகன் தருமர் புனல் மகன் வீடுமனை அணுகி யாருக்கு முதல் மரியாதை தரவேண்டும் என்று அவர் கருத்தைக் கேட்கிறார்.  வீடுமன் முனிவர்களைக் கேட்க, வியாதமுனிவர் எழுந்து 'கண்ணனே முதற்பூசைக்கு உரியான்' என்று உரைக்கிறார்.  முனிவர் உரையை எல்லா மன்னர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள்.  ஆனால் சிசுபாலன் என்பவன் எழுந்து இந்த முன்மொழிவை மறுக்கிறான்.  அவன் கண்ணனை ஏராளமாகப் பழித்தும் இழித்தும் பேசுகிறான்.
சூர்யா: யார் இந்த சிசுபாலன் தாத்தா?  ஏன் இவனுக்கு கண்ணன் மீது இவ்வளவு கோபம்?
தாத்தா: இப்போ ஒரு கதையைச் சொல்-த் தான் ஆகவேண்டும்.  சிசுபாலன் கண்ணனின் அத்தை மகன்.  அதாவது வசுதேவன் உடன்பிறந்தவள் கருதசிரவை என்பவள்.  அவள் தமகோஷன் என்பவனின் மனைவி.  இவர்களுக்குப் பிறந்தவன் தான் அத்தை மகன் தான் இந்த சிசுபாலன். இவன் பிறந்த பொழுது மூன்று கண்களையும் நான்கு கைகளுடனும் பிறந்தான்.  கழுதை போல குலல் இருந்தது இவனுக்கு.  பெற்றோரும் சுற்றத்தினரும் அந்தக் குழந்தையைக் கண்டு. இவனை அப்புறப்படுத்தி விடுவது என முடிவெடுத்த போது வானி-ருந்து வானொ- ஒன்று வந்தது. "இவனைக் கண்டு அஞ்ச வேண்டாம்.  இவனைக் காப்பாற்றுங்கள்.  இவனைக் கொல்லாதீர்கள்.  இவன் இப்பொழுது இறக்கப் பிறந்தவன் அல்லன். இவனைக் கொல்பவனும் பிறந்துள்ளான்.  அவன் சக்கரத்தை வைத்து இவனைக் கொல்வான்.  யார் இவனை மடியில் வைத்துக்கொள்ளும்போது இவனது இரண்டு கைகளும் நெற்றிக்கண்ணும் மறைகின்றனவோ அவனால் இவன் மரணமடைவான்''.  இதைக் கேட்டு உறவினர் எல்லோரும் தங்கள் மடியில் அவனைக் கிடத்திக் கொண்டார்கள்.  இறுதியில் தான் வந்தான் கண்ணன்.  கண்ணனுக்குத் தெரியும் என்ன நடக்கும் என்று. கண்ணபிரான் இவனைத் தொட்ட அளவில் இரண்டு கரங்களும் நெற்றிக்கண்ணும் மறைந்தன.  குரலும் சீரானது.  உடனே கண்ணனின் அத்தை இந்தக் குழந்தையைக் கொல்லக் கூடாது என்று வரம் கேட்டாள்.  "வானி-ருந்து வந்த செய்தியின்படி தான் எல்லாம் நடக்கும்.  நம் கையில் எதுவும் இல்லை அத்தை.  இருந்தாலும் இவன் செய்யும் நூறு குற்றங்களை நான் பொறுத்துக் கொள்வேன்'' என்று கண்ணன் உறுதி அளித்தான்.  இளமையிலேயே இந்த சிசுபாலனுக்குத் தெரியும் கண்ணனால் தனக்கு மரணம் என்ற செய்தி.  அதனால் துவக்க முதலே கண்ணன் என்றால் அவனுக்குப் பிடிக்காது.  இவனுக்குத் தான் ருக்மணி நிச்சயம் செய்யப்பட்டிருந்தாள்.  ஆனால் கண்ணபிரான் அவளைக் கடத்தி தான் திருமணம் செய்து கொள்கிறான்.  அப்போது முதல் கண்ணன் என்றாலே சிசுபாலனுக்கு எரிச்சல்.  கண்ணன் எண்ணிக் கொண்டே வந்தான் - நூறு தடவை தூற்றியவுடன் போருக்கு அழைத்தான் சிசுபாலனை.  வில்-யார் இந்தப் பகுதியில் சிசுபாலன் துற்றுவதாகக் கூறும் அனைத்துச் செய்திகளும் கண்ணனின் வீரவரலாறு தான்.  வில்-யார் கண்ணனைப் போற்ற வாய்ப்பு கிடைத்தால் விடமாட்டார்.  தூற்றுவது போல கண்ணனின் லீலைகளை நமக்கு உரைக்கிறார்.  இவர் ஒரு கண்ணதாசன் என்பதை நமக்குப் புலப்படுத்துகிறார்.  சேனைகளுடன் இருவரும் பொருதுகிறார்கள்.  கண்ணன் தன் ஆழியை விடுகிறார்.  சிசுபாலன் மடிகிறான்.  ஆனால் அவன் ஆவி சோதி வடிவாய்க் கண்ணன் திருவடி அடைகிறது.  அனைவரும் வியக்கிறார்கள்.  அப்போது தான் வியாத முனிவர் சிசுவாலனின் முற்பிறப்பு பற்றி எடுத்து உரைக்கிறார். துர்வாச முனிவர் ஒருதடவை பாற்கடலுக்கு வந்து திருமாலைக் காண முயல வாயிற்காப்பாளர்களான சயனும் விசயனும் அவரைத் தடுத்து நிறுத்தி "சற்று பொறுக்க வேண்டும்' என்று சொல்கிறார்கள்.  வெகுண்டெழுகிறார் துர்வாசர்.  தன்னைப் போகவொட்டாது விலக்கியவர்கள் அந்த இடத்தையும் அந்த அதிகார பதவியையும் உடனே இழப்பார்கள் என்றும் கீழுள்ள பூலோகத்தில் பிறக்க வேண்டும் என்றும் சபித்தார்.  எப்போதுமே இப்படி அறவோர்கள் - துறவிகள் சபித்தால் அது உடனே ப-க்கும்.  அதை ஆண்டவன் கூட தடுத்து நிறுத்த முடியாது.  ஓடோடி வருகிறார் திருமால்.  இதற்குப் பரிகாரம் என்ன என்று கேட்கிறார்."எழுமுறை அன்பராய்ப் பிறந்து சாபந் தொலையக் கருதுகின்றீரோ?மும்முறை பகைவராய்ப்பிறந்து சாபந் தொலையக் கருதுகின்றீரோ? இவ்விருவகையில் நுமது விருப்பம் யாது?'' என்று வினவுகிறார் துர்வாசர்.  ஏழு பிறப்பை விட மூன்று பிறப்பில் பகைவராய்ப் பிறந்து விரைவில் இறைவன் பணிக்கு வருவதையே விரும்புகிறோம் என்கிறார்கள் சயனும் விசயனும்.  இதைக் கேட்ட வீடுமன் முத-யோர் கண்ணன் திருமால் வடிவம் என்பதைப் புரிந்து கொண்டு வணங்குகிறார்கள்.  இத்துடன் வேள்வி முடிகிறது.  பின்னர் அனைவரும் தத்தம் ஊருக்குத் திரும்புகிறார்கள்.  மீதிக் கதையை நாளை பார்ப்போமா?

No comments:

Post a Comment