- நாம (नाम) – Noun – பெயர்ச் சொல். உதாரணம்: राम: कृष्ण: माला
இது தவிர வினைச் சொற்களையும், பெயர்ச் சொற்களாக உபயோகிக்க முடியும். விளையாடுதல், குளித்தல் போன்றவை स्नानम्, दर्शनं என்று அமையும். இது பொதுவாக பெயர்களைக் குறிக்கும். உதாரணமாக ராமன், சீதை, கண்ணன், ராதை போன்ற பெயர்கள். சில வினைகள் கூட பெயர்சொல்லாக வரலாம். குளித்தல் ஆரோக்யதைத் தரும் என்றால் இங்கு குளித்தல் ஒரு பெயர்ச் சொல்லே. - ஸர்வநாம (सर्वनाम) – Pronouns – பிரதி பெயர்ச் சொல், உதாரணம்: स: सा, अयं, इयं, अहम्, त्वं
பெயர்ச் சொல்லுக்கு பதிலாக, அவன், இவன் என்ற சொற்கள் सर्वनाम என்று அழைக்கப் படுகிறது. தெனோ, எனோ, எல்லே போன்றவை பெயர்ச் சொல்லுக்குப் பதிலாக உபயோகிக்கப் படுகின்றன. - விஸே²ஷண (विशेषण) – Adjectives – உரிச்சொல். உதாரணம்: सुन्दरम्, रमणीयं
பெயர்ச்சொல்லைப் பற்றி சிறப்பித்து கூறுபவை विसेषणम् என்று அழைக்கப் படுகிறது. சுந்தர சௌராஷ்ட்ரம், சிங்கார் பெட்கி போன்றவற்றில் சுந்தர - சிங்கார் போன்றவை உரிச்சொல் ஆகும். - க்ரியாபத³ (क्रियापद) – Verbs – வினைச்சொல். உதாரணம்: पतति, चलति, पिबन्ति
செயலைக் குறிக்கும் சொற்கள் क्रियापद ஆகும். சம்ஸ்க்ருதத்தில் வினைச் சொற்களைக் கொண்டே, யார் ஒரு செயலை செய்தது, அந்த செயலை எத்தனை பேர் செய்தார்கள், அந்த செயல் செய்யப் பட்டது கடந்த, நிகழ், எதிர் காலங்களில் எப்போது, என்ன வகையான செயல் அது – விருப்பமா, ஆணையா போன்ற பல விவரங்களை ஒரே வினைச்சொல்லைக் கொண்டு அறியமுடியும். சலத்தே, தமத்தே, வெடிசாத்தே, தாத் மஞ்சத்தே, அசத்தே, ரொடதே எல்லே பூராக் கிரியா பதம் மெனி மெனரியோ - க்ரியாவிஸேஷணம் (क्रियाविसेषणम्) – Adverb – வினை உரிச்சொல் உதாரணம்: शीघ्र मन्दम् सम्यक् வினைச்சொல்லைப் பற்றி விளக்கும் சொற்கள் क्रियाविसेषणम् . வேகமாக ஓடினான், நன்றாக பாடினால் போன்றவை क्रियाविसेषणम्. தெனோ பிச்சோ தமறேஸ். எல்லாம் தமறேஸ் மேநேதே கிரியா. பிச்சோ மேநேதே கிரியாக் விசேசு.
- ஸ்வர (स्वर) - vowels – உயிரெழுத்துக்கள் – अ आ इ ई… வேறெந்த ஒலியின் துணையின்றி ஒலிக்கக் கூடியவை.
- வ்யஞ்ஜந: (व्यञ्जन:) – consonants – மெய்யெழுத்துக்கள் – क का प मा உயிரெழுத்துக்களின் ஒலியுடன் இணைந்து ஒலிப்பவை व्यञ्जन என்று அழைக்கப் படுகிறது.
- விஸர்க³ (विसर्ग) – சம்ஸ்க்ருத வார்த்தைகளின் முடிவில் அமையும் ‘:’ எழுத்து विसर्ग என்று அழைக்கப் படுகிறது. இது சொல்லின் இறுதி எழுத்துடன் இணைந்தே ஒலிக்கும். राम: = रामह, गुरु: = गुरुहु
எல்லே மாதிரி வதானுக் தாது காயோ மெனி அமி கள்ளல்லுனோ.
- தா⁴து (धातु) – root word – வேர்ச்சொல் – உதாரணம்: पठ् for पठति, खाद् forखादति வேர்ச்சொற்கள் பத்து வகையாக பிரிக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு வகிக்கும் பெரும்பாலும் உபயோகப்படுகிற சொல்லையே அந்த வகையின் பெயராக கொடுக்கப்பட்டிருக்கிறது.
- ப்ரத்யய (प्रत्यय) – suffix – பின்னொட்டு – உதாரணம்: கவதே மேனதேமாம் காவ் மேநேதே. எல்லே மாதிரி.
- இவ்வாறு प्रत्यय சேர்ப்பதன் மூலம், பல்வேறு காலங்களை, வேற்றுமைகளை குறிக்க முடியும்.
- உபஸர்க³(उपसर्ग) – prefix – முன்னொட்டு – உதாரணம்: இவ்வாறு उपसर्ग சேர்ப்பதன் மூலம், எதிர்மறையாகவோ, அதிகப் படுத்தியோ ஒரு சொல்லின் பொருள் மாறி விடும்.
- விப⁴க்தி (विभक्ति) – declension – வேற்றுமை உருபுகள் – தமிழில் ஐ, ஆல், கு, இன், அது, கண் என்ற வேற்றுமை உருபுகள் இருப்பது போல, நமது மொழியிலும் உள்ளன. ராமனை, ராமனால், ராமனுக்கு, ராமனின், ராமனது, ராமன்கண் என்று அமைவது போல் இங்கும் வேற்றுமை உருபுகளும் உபயோகப் படுத்தப்படுகின்றன.
- புருஷ (पुरुष) – இடங்கள் (தன்மை, முன்னிலை, படர்க்கை போன்றவை)
- வசந (वचन) – singular,plural etc – ஒருமை, பன்மை போன்ற எண்ணிக்கை
- லகார (लकार) – Tense – காலம் (நிகழ் காலம், எதிர் காலம்)
- லிங்க³ (लिङ्ग) – Gender – பால் (ஆண்பால், பெண்பால் போன்றவை)
இப்படியாக அடிப்படையாக சில விஷயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். நாளை பார்ப்போமா?
No comments:
Post a Comment