Friday, October 1, 2010

WEB BLOGS IN TAMIL - RELATING TO TRAVEL AND TREATMENT

இன்று சுற்றுலா மற்றும் மருத்துவம் பற்றிய சில வலைத் தளங்களில் சுற்றினேன்.  மிக அருமையான தளங்கள்.  நாம் நேரில் சென்றாலும் இப்படி எல்லாம் ஒரு ஊரை - நாட்டைச் சுற்றிப் பார்க்க முடியுமா என்று தெரியவில்லை.  மிக அற்புதமாகப் படம் பிடித்து அதன் முக்கியத்துவத்தைப் பற்றியெல்லாம் சொல்லி உள்ளார்கள்.
இந்த தளத்தில் எழில் உலா என்ற தலைப்பில் பல வெளி நாட்டு நகரங்களைப் பற்றி அற்புதமான தகவல்கள் உள்ளன.  உதாரணமாக.
"தீவுக்கூட்டங்களைப் படகிலிருந்து பார்த்துக்கொண்டே செல்லும் ஒரு படகுச் சுற்றுலா தயாராய் இருக்கவே படகிலேறி அமர்ந்தோம்.
பெல்ஜியத் தலைநகர் ப்ரஸ்ஸல்ஸ் நகரின் முக்கியச் சுற்றுலாத் தலம் குட்டி ஐரோப்பா (Mini Europe).ஐரோப்பியச் சுற்றுலா செல்ல நினைப்பவர்கள் வந்து செல்ல வேண்டிய இடம் இது. அல்லது ஐரோப்பா முழுவதும் சுற்றிப் பார்க்க நேரம் இல்லாதவர்கள் இந்த இடத்திற்கு மட்டுமாவது வந்து சென்றால் ஐரோப்பிய நகர்களுக்குச் சென்ற திருப்தி நிச்சயம். ஐரோப்பிய நாடுகளின் முக்கியமான் கட்டிடங்களையும் பழமையான சின்னங்களையும் இங்கு காணலாம். அனைத்து சின்னங்களும் அதே வடிவத்தில் அல்ல, சிற்றளவாக்கப் பட்ட (Miniature) வடிவத்தில் காணலாம். பெரும்பாலான சின்னக்கள் 1:25 என்ற விகிதத்தில் சிற்றளவாக்கப் பட்டவை. ஒன்றிரண்டு சின்னங்கள் மேலும் குறைந்த விகிதத்தில், உதாரணமாய் இத்தாலி நாட்டில் எரிமலைத் தொடரான வெசுவியஸ் 1:1000 என்ற விகிதத்தில் சிற்றளவாக்கப் பட்டிருக்கிறது. முன்னூறுக்கும் மேற்பட்ட மாதிரிகள் இங்கு வைக்கப்பட்டுள்ளன.
ப்ரஸ்ஸல்ஸ் நகரின் பாதாள இரயிலில் (மெட்ரொ) பிரயாணித்து நகரின் சற்றே வெளிப்பகுதியில் அமைந்த இந்தக் குட்டி ஐரோப்பாவிற்கு நானும் எனது நண்பனும் வந்தடைந்தோம். இதற்கருகே மிகப்பெரிய உருவில் அடாமியம் (Atomium) அமைந்திருந்தது. நேரப்பற்றாக்குறையினால் இந்த அணுவகத்தினுள் செல்ல இயலவில்லை. அணுவின் அமைப்பு போல் வடிவமைத்திருந்தார்கள். 1958-ல் ப்ரஸ்ஸல்ஸ் நகரில் நடந்த ஒரு பொருட்காட்சியின் போது உருவாக்கப்பட்டதென்கிறார்கள்."
இப்படி விவரித்துக் கொண்டே போகிறார்.  நேரில் பார்த்தது போல உள்ளது.  அருமையான புகைப்படங்கள் உள்ளன.  தயவு செய்து பார்த்து மகிழுங்கள்.
அடுத்து பெங்களூரு நகரத்தில் உள்ள ஒருவர் அலைதல் என்ற பெயரில் ஒரு தளத்தில் தனது பயணத்தைப் பற்றி பதிவு செய்து உள்ளார்.  வட இந்திய சுற்றுலாத் தளங்கள் கேரளா மாநில நகரங்களுக்கு நேரில் போய்வந்தது போல் உள்ளது.  பார்த்து-படித்து மகிழுங்கள். தளத்தின் பெயர்:
இதை எழுதுபவர் பெயர் - மோகன்தாஸ் வேலை - பொட்டி தட்டுவது
செய்வது - பெங்களூரில்
பிறந்தது - திருச்சி
சரி.  மருத்துவ உலகத்திற்கு வருவோமா? 
இது ஒரு நலவியல் இணைய இதழ்
ஹாய் நலமா என்று தளத்தின் பெயர்.  இது மருத்துவத்தைப் பற்றி அருமையாக விளக்குகிறது. இவரது தாரக மந்திரம்.மருத்துவத்தில் கற்றதைச் செய்கிறேன். அனுபவித்தைத் சொல்கிறேன்  இந்த தளத்தைப் பற்றி இவரது விளக்கம் "முடிந்தவரை எளிய மொழியில்.முற்று முழுதாக உடல் நலம் சம்பந்தப்பட்ட விடயங்களுக்காகான தளம்"  சென்று பாருங்கள்.  பல தலைப்புகளில் உங்களுக்கு வேண்டிய தகவல்களைத் தருகிறார்.  அடுத்த தளம்
இப்படி பயன் உள்ள விஷயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.  அன்னப் பறவை போல் உலா வாருங்கள்.  வேண்டியதை மட்டும் தேர்ந்து எடுங்கள்.  உங்கள் மொழி அறிவும் வளரும்.  சொல் வளம் கூடும்.  நமக்குத் தெரியாத பல விடயங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
தமிழ் மருத்துவம் என்னும் தலைப்பில் கீழே கொடுக்கப்பட்ட பல தலைப்புகளில் தகவல்கள் வருகின்றன.  வேண்டிய தகவலைப் பெறலாம்.  நல்ல தளம்.  தமிழில் உள்ளது இதன் சிறப்பு.



No comments:

Post a Comment