அரெ மொந்நு தூ கரொரி:யெ காமுனஸ்கி
மொரநுஜ்வானுகு ஹொயெஸ்தெ
பு2ரொ தொர ஸெர மொகொ பு2ரொ [அரெ]
மனமே நீ செய்யும் செயல் எல்லாம்
மரணத்தை நோக்கி எனை இட்டுச் செல்கின்றன
போதும் மனமே போதும் உன் விளையாட்டு என்னுடன்
உஜ்வாவ் மொரநுமங்கு3ன் தைநொகொரே--தொர
ப4ஜனானந்தமுர்த பரமபத3ம் மொக ஸநொமெந் லக3ஸ் ஏ -உஜ்வா
ஏதி3ந்நு தொர தி3ந்நு
பிறப்பு இறப்பு என்னும் பிறவிச் சுழலில் என்னை சிக்க விடாதே - ஈசா
உன் புகழ் பாடி உன் பரம பதம் காண ஆவல் மேளிடுதே - கண்ணா
பிறந்த இந்த தினம் உன் தினமே
ஏ ப2ல்லா தி3ந்நு கோனக்கி மொந்நு
ஏ பி2த்தரும் ஹரிக் க3வ்லே
ஹரிக்ருப கரொய் தூ ஜிவ்லே
மோஸ் ஜானோகோ (ஏ)
எதிர் வரும் நாட்கள் எப்படியோ - எனவே
மனமே அதற்குள் அரியைப் போற்று மனமே
அள்ளித் தருவான் பேரானந்தத்தை அந்த அரி
ஏமாறாதே மனமே ஏமாந்து விடாதே
இறைவன் அரியைப் பாடு மனமே
ஓ ரெங்க3ஸாயி தூ கொங்கஸாயி---தொக
பொங்கெக3 க3வி பொ3வெத் தெங்கஸாயி
தெங்க உன்னகாயி தூஸ் பா3பு மாயி---தி3வ்ய
ஸெங்கு செக்குருநு ஸேவ தே3யி தே3யி
அரங்கநாதா நீ யாரை நோக்குவாய்
அன்புடன் மெய்யுருகி அழைப்பவனை நோக்குவாய்
அவருக்கென்ன குறை கண்ணா
நீயே அவர்களுக்கு தாயும் தந்தையும்
சங்கமும் ஆழியும் உடனிருக்க அவர்களுக்கு
காட்சி தருவாய் அரங்கத்து அம்மனே நீ காட்சி தருவாய்
நாம் எப்படிப்பட்ட உணவை உன்ன வேண்டும் - இறைவனுக்கு எப்படிப்பட்ட உணவு இன்பத்தை அளிக்கும் எனறு இப்போது தம் கருத்தைச் சொல்கிறார் நாயகி சுவாமிகள்.
கந்தொ3 லொஸன் முளொ ஹந்த3னூஸ் ஹோனா
ஹந்தொ3 கஸ்தந்து3 கோ3விந்தா3க் ஆனந்த3ம் ஹோய்
மானுடர்கள் - வெங்காயம் - பூண்டு - முள்ளங்கி அகியவற்றை
சேர்க்க வேண்டாம் உங்கள் உணவில்
பச்சரிசி கொண்டு உணவு சமையுங்கள்
கோவிந்தனுக்கு அது தான் பிடிக்கும்
ஹிந்த3ரெ:ய் ஸொட்3டு3வோ மந்த3ம் கொ3ரு தூ3த்
நந்த3கோ3பாலுக் பொந்தை3 கா3யி தூ3த்
ஹரிக் ப4ஜனகரோ துமி
எருமைப் பாழ் வேண்டாம் - அது மந்த மனதைப் படைக்கும்
பசும்பால் நந்த கோபாலனுக்குப் பிடிக்கும்
அரியைப் போற்றித் துதியுங்கள் பக்தர்களே அரி நாமம் கூறுங்கள்
க3வெதி ஸ்ரீ ரெங்கா3க் கௌ3நொ
பொ3வெதி ஸ்ரீ ரெங்கா3க் பொ3வ்நொ
ஸியெதி ஸ்ரீ ரெங்கா3க் ஸநொ அமி
ஜிவெதி ஸ்ரீ ரெங்கு3மூஸ் ஜிவ்நொ
பாடினால் அரங்கநாதனைப் பாடவேண்டும்
அழைத்தால் அரங்கநாதனை அழைக்கவேண்டும்
கண்டால் அவனது கோலத்தைக் காண வேண்டும்
வாழ்ந்தால் திருவரங்கத்தில் வாழ வேண்டும்
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா மீ ஸெஜ்ஜெ கே4ர் கெரி நா:
தொர கொ4ம்மாதெனோஸ் மீ ஸெய்லே
ஸெய்லே ஸிள்ள தொ3ளொஹோர் மொகொ ஸெய்லே
கண்ணனே நான் அயலான் அல்லவே
அடுத்த வீட்டுக்காரன் அல்லவே
உன் பாதங்களைப் பற்றி
உன் காலடியில் உன்னுடன் உள்ளேன்
உன் கடைக்கண் பார்வையை
என் பக்கம் திருப்பு அரங்கநாதா
கெட்டெம் துரி ரி:யேஸ் ஹரி
ஹெட்டைனாமுல்லாம்தூ தெக தே4ரி
பு2ட்டி ஜேடை3 ஸரிர் தூ கோரி
மொ:ட்டொ தெனோஸ் அம்கொ ஹரி
ஸாக்ஷி ப்ரஹ்லாது சரிதும
காலன் வந்து நம்மை பற்றும் முன்னர்
கட்டிற்கு நம் உடலைச் சுமந்து செல்லும் முன்
இந்த உடல் அழிந்து போகும் முன்
இறைவனை நாடு மனமே
பெரியவன் அவனே
நம்மை காக்கும் தெய்வம் அவனே
அரியல்லால் தெய்வம் வேறில்லை
பிரகலாதன் வரலாறே இதற்கு சாட்சி
மோக்ஷி தெ3னார் ஹரிஸ் பரத்வம்
கேஸவ மாத4வ ஸீதாராம்
கெ3ங்கா3 துளசி ஸாலக்3ராம்
கே2ளுந் கெ2ள்நக மொந்நு-ஹரிக்
க3வஸ்தெமாக் ஸிந்நக மொந்நு---யோக்
வேளும் அவை தொக புந்நு-பி4த்தர்
மூளுன் கடி ஸொடை3 ஏ தி3ந்நு
நமக்குப் பிறவாமை வரத்தை அளிப்பன் அரங்கன்
மோட்சத்தில் கொண்டு சேர்க்கும் அவனது திருநாமம்
விளையாடாதே மனமே - அரங்கனைத் துதிப்பதில்
தளர்வு கொல்லாதே மனமே தளர்வு கொள்ளாதே
அரங்கனின் திருநாமம் சொன்னால் புண்ணியம் வரும்
வேருடன் அறுப்பான் பிறவிச் சுழலை
என்றும் இருக்கலாம் அரங்கனுடன் - அரியுடன்.
உள்ளதை உருக்கும் நாயகியாரின் பாடல்களை நம் மொழியில் உள்ளம் உருகி பாடும் போது சில வார்த்தைகளுக்குப் பொருள் முதலில் விளங்கவில்லை என்றாலும் பாடப் பாட நீர் கொக்கும் கண்களில். நெக்குருகும். பாடுங்கள் உங்கள் இல்லங்களில் அவரது பாடல்களை தினமும். குறுந்தகடுகளில் அருமையான பாடல்கள் கிடைக்கின்றன. வலைத் தளங்களில் உள்ளது அவரது பாடல். புத்தகம் தேடி அலையை வேண்டாம்.
முடிந்தால் முயற்சி செய்யுங்கள் - பிறவிச் சூழலிருந்து விடுபடலாம்.
Amarnath Sir, You may like this blog: http://nadanagopalanayaki.blogspot.com/
ReplyDelete