Tuesday, October 19, 2010

SIRUVARGALUKKAGA BAGAVATH GEETHAI

 சூரியாவும் தாத்தா அமர்நாத்தும் மாலையில் பேசிக்கொண்டே அமர்ந்திருந்தார்கள்,
சூர்யா: தாத்தா தொலைக்காட்சி பார்க்கப் பிடிக்கவில்லை.  எனக்கு ஏதாவது கதை சொல்லுங்களேன்.
தாத்தா: சரி சூர்யா.  பகவத் கீதையைச் சில கதைகளுடன் உனக்குக் கூறுகிறேன்.  கேள்.  பாரதப் போர் குருசேத்திரத்தில் துவங்க இருக்கும் நேரத்தில் கௌரவப் படைகளுக்கும் பாண்டவர் படைகளுக்கும் நடுவில் தனது தேரைச் செலுத்தும் படி கண்ணனிடம் பார்த்தன் கூறுகிறான்.  அப்படிச் கண்ணன் தேரைச் செலுத்திய போது தனது தாத்தா, வித்தைகள் கற்றுக் கொடுத்த குருக்கள் ஆகியோர் எதிரணியில் இருந்தார்கள்.  அதைப் பார்த்து பார்த்தன் கலங்கினான்.
 அப்போது கண்ணன் கலங்காதே பார்த்தா, நியாயங்கள் மோதும் போது பாவம் வராத வகையில் தான் நாம் நடந்து கொள்ள வேண்டும்.  இப்போது அப்படிப்பட்ட சமயம் தான்.  உனக்கு உதாரணமாக ஒரு கதையைக் கூறுகிறேன்.  கேள்.
 ஒரு வணிகள் அடுத்த ஊரில் திருவிழாவின் போது வியாபாரம் செய்து நன்றாக பொருள் ஈட்டினான்.  ஈட்டிய பொருளுடன் அவன் ஒரு காட்டுப்பாதையைக் கடக்க வேண்டி இருந்தது.  அந்த கானகத்தில் பழிக்கு அஞ்சாத பாதகர்கள் சிலர் இருந்தார்கள்.  அவர்கள் வழிப்போக்கர்களை ¢வழிமறித்து பொருள் பறித்து பிழைப்பு நடத்தினார்கள்.  அவர்கள் கண்ணில் இந்த வியாபாரி தென்பட்டான்.
 கள்ளர்களுக்கு மகிழ்ச்சி.  ஆனால் வியாபாரிக்கோ அச்சம் தொற்றிக் கொண்டது.  வியாபாரிக்குத் தெரியும்.  அருகில் ஒரு முனிவர் தவம் செய்யும் குடில் உள்ளது என்று.  எனவே அந்த குடிலை நோக்கி ஓடினான். முனிவர் காப்பாற்றி விடுவார் என்ற அபரிமிதமான நம்பிக்கை அவனுக்கு.
 முனிவரோ தவத்தில் அமர்ந்திருந்தார் அந்தக் குடிலின் முன்னால்.  பார்த்தான்.  ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் முனிவரின் குடிலில் போய் அமர்ந்தான்.  ஓசை கேட்ட முனிவர் கண் திறந்து பார்த்து வணிகன் தன் குடிசையில் நுழைவதைக் கண்டார்.  ஆனால் தவ இருக்கையில் இருந்து எழாமல் தியானம் செய்தார்.
 பின்னாலேயே திருடர்கள் ஓடி வந்தார்கள்.  அந்த திருடர் தலைவனுக்கு ஒரு நம்பிக்கை.  முனிவர் பொய் கூற மாட்டார் என்று. "முனிவரே, இந்த பகுதியில் ஒருவன் எங்கள் நகையைப் பறித்துக் கொண்டு ஓடி வந்தான்.  அவன் எங்கு சென்றான் என்று தங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டான்.
 முனிவருக்குத் தெரியும் வந்திருப்பது கள்ளன் என்று. அவன் பொய் பேசுகிறான் என்றும் தெரியும்.  ஆனால் பொய் சொல்வது பாபம் என்றும் அந்த முனிவருக்குத் தெரியும்.  வாய்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்தவர் அவர்.  பொய் சொல்லவே மாட்டார்.  ஆனால் பொய் சொன்னால் வணிகனை அடித்து கொள்ளை அடித்துப் போய் விடுவார்கள் - கொலையும் செய்ய அஞ்ச மாட்டார்கள் என்பதும் தெரியும்.
ஆனாலும் யோசித்தார்.  பொய் சொல்லவது பாபம் அல்லவா எனவே பொய் சொல்லக் கூடாது என்று முடிவெடுத்தார்.  வாணிகன் ஒளிந்திருந்த இடத்தைச் சுட்டிக் காட்டினார்.  கொள்ளையர்கள் வாணிகனை அடித்து உதைத்து பொருளைப் பறித்ததோடு நிற்காமல் கொன்றும் விட்டார்கள்.
 இப்போது கொலைக்குக் காரணமான பழி மற்றும் பாவம் இந்த முனிவனைச் சூழ்ந்து கொண்டது.  பொய் சொல்லக் கூடாது என்ற பாபத்துக்கு அஞ்சி அதைவிட கொடுமையான கொலைப்பழிக்கு ஆளாகிவிட்டார் அந்த முனிவர். கொள்ளிக்குப் பயந்து கொடுமையான எண்ணைக் கொப்பரையில் விழுந்த கதையாகி விட்டது.  முனிவர் பொய் சொல்லியிருந்தால் ஒரு உயிரைக் காப்பாற்றி இருக்க முடியும்.  அதைப் போன்று தான் இந்தப் போரும்.  ஆசிரியரும் பாட்டனாரும் சிறந்தவர்கள் தான்.  போரால் பல உயிர்கள் போகும் என்பதும் உண்மை தான்.  ஆனால் எதிர் அணியில் உள்ளவர்கள் கொடூரமானவர்கள்.  கொலைகளுக்கு அஞ்சாதவர்கள்.  தர்மத்தைப் பற்றிக் கவலையே படாதவர்கள்.  திரௌபதியின் மானத்தைக் காக்க அங்கிருந்த நல்லவர்கள் கூட முன்வரவில்லை.  எனவே இவர்களை போரில் தோற்கடித்து தர்மத்தை - நீதியை நிலைநாட்டுவதே சிறந்தது.
எனவே தான் இந்த கதையை  பார்த்தனுக்குக் கூறி கண்ணன் போரிடுவதே சிறந்தது என்று தைரியமூட்டினார்.
அடுத்த கதையை நாளை பார்ப்போமா?

No comments:

Post a Comment