மொழி வளர்ச்சியில் ஆர்வத்தைத் தூண்டுவது ஒரு வகை. ஆர்வம் உள்ளவர்களுக்கு நூல்களைத் தயாரித்துக் கொடுப்பது ஒருவகை. படிக்க விரும்புவர்களுக்கு அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து கொடுத்து படிக்க வைப்பது ஒரு வகை. நான் சௌரட்டிர மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் போது படிக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு வசதி செய்து கொடுக்கும் வகையில் - மதிய உணவு வழங்குவார்கள் நமது சமுதாய ஆர்வலர்கள். அவர்கள் எல்லாம் நன்கு படித்தவர்கள் என்று சொல்ல முடியாது. புதிய தலைமுறை படிக்க தூண்டுகோலாக இருக்க வேண்டும் என்று நினைத்தவர்கள் அவர்கள். படிக்கும் மாணவர்களுக்கு நூல்கள் வாங்கிக் கொடுத்தல் - உடை வாங்கிக் கொடுத்தல் - மதிய உணவு அளித்தால் -இப்படி ஒரு பங்களிப்பை அவர்கள் செய்ததால் தான் படிக்காமலேயே இருந்த சமூகத்தில் பள்ளிப் படிப்பு வரை படிக்கும் வசதி பலருக்குக் கிடைத்தது. அப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்து படித்தவன் நான். கிடைத்த வாய்ப்பை பயன் படுத்தினேன். படித்து முடித்தேன். கல்லூரியில் படித்துக் கொண்டே பள்ளி மாணவர்களுக்கு என்னால் முடிந்த வரை கற்றுக் கொடுத்தேன். படித்த பிறகு வேளை கிடைக்க வில்லை. எனவே சுருக்கெழுத்து கற்றேன். அப்போது தமிழில் சுருக்கெழுத்து கற்றுக் கொடுக்க ஆசிரியர்கள் இல்லை. ஒரு மலையாள நண்பர் எனக்கு தமிழ் சுருக்கெழுத்து கற்றுக் கொடுத்து - உன்னால் முடிந்த அளவுக்கு பிறருக்கு கற்றுக்கொடு என்று கூறினார். தமிழ் சுருக்கெழுத்து நூல்களே கிடைக்காது படிக்க. எனவே ஸ்டென்சில் உபயோகம் செய்து தமிழில் முழு நூலையும் ஸ்டென்சில் செய்து படிக்க விருப்பம் உள்ளவர்கல்க்கு வழங்கி - பல நண்பர்கள் அரசு வேலையில் சேர எங்கள் நண்பர் குழுவால் முடிந்தது. சுருக்கேழுதிலே கீழ்நிலை - உயர்நிலை படிப்பார்கள். பெரும்பாலும் கீழ்நிலை படித்தாலே வேளை கிடைத்து விடும். ஆனால் வேலை கிடைத்தும் விடாமல் பயிற்சி செய்து ஆங்கிலம் - தமிழ் இரண்டிலும் உயர் வேகம் அதாவது நிமிடத்திற்கு 150 வார்த்தைகள் எழுதும் பயிற்சியில் வெற்றி பெற்றும் அரசுச் சான்றிதழும் கிடைத்தது. பல பேருக்கு அந்த இடைப்பட்ட காலத்தில் பயிற்சியும் கொடுக்க முடிந்தது. எல்லாம் முடியும் வயது அது. அது பிறருக்கும் பயன்பட வேண்டும் என நினைக்க முடிந்தது. என்னுடைய அனுபவத்தைக் கொண்டு விதி மீறல்கள் எனக் கட்டுரை எழுதி தமிழ் சுருக்கெழுத்தில் மிக வேகமாக குறிப்பு எடுக்க உதவி செய்ய முடிந்தது.
பள்ளியில் படிக்கம் போது - நமது பள்ளியில் - நமது மொழியக் கற்க ஆர்வம் உள்ளவர்களுக்கு - வகுப்புகள் நடத்தி வழி காட்டி இருந்தால் - எவ்வளவோ பேர் படித்து - அதன் மூலம் எவ்வளவு பெருக்கோ கற்றுக் கொடுத்து இருக்கலாம். இப்போதும் நமது பள்ளியில் - ஆர்வம் உள்ளவர்களுக்கு - ஆர்வம் உள்ளவர்கள் வகுப்பு நடத்திக் கற்றுக் கொடுத்தால் - மொழியைப் பரப்ப முடியும். ஆனால் மொழியத் திணித்தால் வளராது. முடங்கி விடும். 1965 களில் நானாக ஹிந்தி படித்துக் கொண்டிருந்த நேரம். ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். ஹிந்தி திணிப்பு என்று வந்த போது அதிலிருந்து விலகினேன்.
No comments:
Post a Comment