INRU NAAN srimannayagi.org என்ற தளத்தில் உலா வந்தேன். மிக அருமையான தளம். அருமையாக நமது குல குரு நடன கோபால நாயகி அவர்களைப் பற்றி பல தகவல்களை - படங்களை - பாடல்களை தொகுத்துத் தந்து உள்ளார் இந்த குடுவா என்னும் குடும்பத்தைச் சேர்ந்த நண்பர். பல்லாண்டு பல்லாண்டு அவரும் அவர் குடும்பத்தினரும் அனைத்து வளங்களும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்.
http://srimannayagi.org/nsouindex.htm
அப்பை 3 கி கோ 3 விந் த 3 நமம்
கொப்பு 3 ஸொம்மர் அத்3தி3 கு3ள்ளே
அப்பை3 கி மெனிகு ஜெலும்
கொ2ப்பா3க் ஹிப்பி3ரா:ஸ்தேரப்பா3
மொந்நு மீ பாய்ம்பொடு3ஸ் தொகொ
மொர போடும் தூ3த் கா4ல் ஆவ்
புந்நவை தொகொ (அப்பை3கி)
தாய்மொழியில் இந்தப் பாடலைக் கேட்டதுமே உடல் புல்லரிக்கிறது.
இந்த பாடலை சாதாரணமாகப் படித்தாலே பொருள் விளங்கி விடும். இருந்தாலும் நான் கொண்டா பொருளைத் தருகிறேன். குறை இருந்தால் பொறுத்துக் கொள்ளவும்.
இவ்வுலகில் கோவிந்தா நாமத்தைப் போன்ற ஒரு திவ்ய நாமம் கிடைக்குமா
இந்த மானுடப் பிறவி தான் இனி நமக்குக் கிடைக்குமா
இந்த நாமத்தில் எப்போது நினையாக நிற்கப் போகிறேனோ
என் உள்ளதால் - மனத்தால் உன்னையே எண்ணுகிறேன் எந்நாளும்
என் வயிற்றில் பால் வார்க்க வேண்டும் - என்னை ஆட்கொள்ள வேண்டும்
புண்ணியம் கிடைக்கும் உனக்கு
எனவே மானுடர்கள் கோவிந்தா நாமத்தை எப்போதும் சொல்லுங்கள். கோவிந்தன் என்றால் இந்த உலகத்தையே மீட்டு எடுத்து காப்பாற்றியவன் எனறு பொருள். உலகையே கடலில் இருந்து மீட்ட அந்த பூவராகன் நம்மைக் காக்க மாட்டாரா என்ன? மனம் உருகிப் படுங்கள். பிறவிக் கடலில் இருந்து விடுபடலாம்.
No comments:
Post a Comment