Friday, October 8, 2010

original sourashtra words - self test

இன்று வீட்டில் இருந்த போது சில வார்த்தைகளைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தோம்.  உதாரணமாக சில வார்த்தைகளை கடந்த தலைமுறையில் உபயோகத்தில் இருந்தவை இப்போது எப்படி மறுக்கப்படுகின்றன எனறு பேசிக் கொண்டிருந்தபோது நெல் என்றால் சாள் - தவிடு என்றால் கொண்டோ - உமி என்றால் உண்கோ - இவை எல்லாம் போன தலைமுறையில் தேவை இருந்த போது பேசப்பட்ட - வார்த்தைகள்.  இப்போது தவிட்டு சந்தை என்றே நாமும் சொல்கிறோம். முன்னால் கொண்டாசாத்  எனறு சொல்வார்கள்.  அப்போது கொண்டா என்றால் தவிடு என்பது நடைமுறையில் இருந்தது.  சந்தை என்பதற்கு சாத் எனறு நடைமுறையில் இருந்தது.  வீட்டில் சமையல் வேலைக்கு - சாணி தட்டுவதற்கு எல்லாம் இந்த பொருட்கள் தேவைப்பட்டன.  சரி, இன்றைக்கு தவிட்டு சந்தையில் தவிட்டயா விற்கிறார்கள்.  பூக்கடையும் பொங்கல் கடையும் தானே உள்ளன.
இதே போல கிரைண்டர் வந்த பிறகு ஹோகள் - படோ - வோர்குலோ போன்ற வார்த்தைகள் உபயோகத்தில் இல்லாமல் போய் விட்டன.  நாமும் மறக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டோம்.  சரி.  இனி நமக்கு வார்த்தைகள் தெரிகிறதா எனறு அடிக்கடி சுய சோதனை செய்ய வேண்டும் போல் இருக்கிறது.   நான் சில வலைத் தளங்களைப் பார்வை இட்ட போது தமிழ் மொழியில் உறவினர் பெயர்கள், பழங்கள், மிருகங்கள் பெயர், வினைசொற்கள் இப்படி விபரமாக கொடுத்து இருந்தார்கள்.  நான் அதை பிரதி எடுத்து நம் மொழியில் எழுத முயற்சி செய்து கொண்டு உள்ளேன்.  உங்களால் முடிந்தால் நீங்களும் முயற்சி செய்யுங்களேன்.
sorkalai adutha pathivil thodargiren.

1 comment: